திரேஸ்டி
(Read Original Article in :-Trieste )
(Read Original Article in :-Trieste )
'திரேஸ்டி' (Trieste ) எனும் நகரம் 'இத்தாலி'யின் (Italy) வட கிழக்குப் பகுதியில் உள்ளது. இந்த நகரின் மூன்று எல்லைகளும் - வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கில் (south, east and north) - ஸ்லோவினியா (Slovenia) எனும் நாட்டினால் சூழப்பட்டு உள்ளது. 'திரேஸ்டி' நகரம் 'திரேஸ்டி' மாகாணத்தில் உள்ள 'பிரயுலி வெனேசிய கிலிய' (Friuli-Venezia Giulia) என்ற மாவட்டத்தின் தலை நகரம் (Capital) ஆகும் . இந்த நகரத்தின் ஜனத்தொகை சுமார் 205,000 ஆகும்.
'ரோமானியர்கள்' (Rome) இங்கு வரும் முன்னரே இங்கு 'இல்லிரியன்' (Illyrian settlement) என்ற இன மக்கள் வாழ்ந்து கொண்டு இருந்தனர். 177 BC யில் ரோமர்கள் காலத்தில் 'தெர்கேஸ்டே' (Tergeste) என்ற குடியிருப்பு தோன்றியது. அது கிருஸ்துவர்கள் ஆதிக்கம் இருந்தபோது செழித்து வளர்ந்தது என்றாலும் பின்னர் அது 'பைசன்டையின்' (Byzantine ) அரசின்போது ராணுவ எல்லைப் பகுதியாக (military outpost) ஆயிற்று.
1382 முதல் 1918 வரை 'திரேஸ்டி' நகரம் 'ஹப்ஸ்பர்க்' முடியாட்சியின் (Habsburg Monarchy) கீழ் இருந்தது. 'வியன்னா' (Vienna) , 'புத்தபெஸ்ட்' (Budhapest) மற்றும் 'ப்ராக்' (Prague) போன்ற நகரங்களை அடுத்து 'திரேஸ்டி' நான்காவது பெரிய நகரமாக இருந்தது. முதலாவது உலக யுத்தம் (First World War) முடிந்தப் பிறகு இந்த நகரம் இத்தாலியுடன் இணைய அதன் கலாசாரம் மற்றும் வர்த்தக செழிப்பு கீழே விழத் (cultural and commercial decline) துவங்கியது.

இன்று 'திரேஸ்டி' மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டு இத்தாலியின் பணக்கார நகரமாக ( richest regions) மாறி உள்ளது. இந்த நகரம் கப்பல் கட்டும் தொழில் (shipbuilding) , மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறையில் (shipping) முன்னணியில் உள்ளது.
'திரேஸ்டி'க்கு விமானம் மூலம் செல்ல
(Going to Trieste)
'ரோஞ்சி டெய் லேகியோனறி' சர்வதேச விமான நிலையமே (Ronchi dei Legionari International Airport) 'திரேஸ்டி'க்கு செல்ல சிறந்த மார்க்கம். இந்த விமான நிலையம் 'திரேஸ்டி' மற்றும் வெனிஸ் செல்லும் A4 சாலையில் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து 33 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள 'திரேஸ்டி' பஸ் நிலையத்திற்குச் செல்ல பஸ்கள் உள்ளன. 'திரேஸ்டி' பஸ் நிலையம் 'திரேஸ்டி' ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் உள்ளது.
படத்தின் மீது கிளிக் செய்து திரேஸ்டியை பெரிய அளவில் பார்க்கவும்
திரேஸ்டியில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Trieste)
(1) அக்வாரியோ மரினோ
(Acquario Marino)
(2) பேசிலிக்கா பேலியோகிறிஸ்டியானா
(Basilica Paleocristiana)
(3) காஸ்டில்லோ டி சான் ஜியுச்டோ
(Castello di San Giusto)
(4) காஸ்டில்லோ டி மிராமரே
(Castello di Miramare)
(5) துயொமோ
(Duomo)
(6) க்ரோட்டா டெல் ஜிகண்டே
(Grotta del Gigante)
(7) மியுசியோ டி ஸ்டோரியா இட் ஆர்டி இட் ஒர்டோ லபிடரியோ
(Museo di Storia ed Arte ed Orto Lapidario)

No comments:
Post a Comment