பாமியன் வாலி எனும் இடத்தின்
புராதான சின்ன இடிபாடுகள்
(Read Original Article in
Cultural Landscape and Archaeological Remains of Bamiyan Valley)
புராதான சின்ன இடிபாடுகள்
(Read Original Article in
Cultural Landscape and Archaeological Remains of Bamiyan Valley)
2003 ஆம் ஆண்டு ‘பாமியன் வாலி’ (Baamiyan Valley) எனும் இந்த புராதான சின்னமும் அதை சுற்றி உள்ள இடமும் உலக புராதான சின்னமாக (World Heritage Site) அறிவிக்கப்பட்டது. இந்த இடம் ‘ஆப்கானிஸ்தானின்’ ‘பாமியன்’ (Bamiyan Province) மாகாணத்தில் உள்ளது. சுற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ள இடங்களையும் சேர்த்து 341.95 ஹெக்டர் (Hectare) பரப்பளவில் உள்ள மொத்த நிலப் பகுதியில் உள்ள ‘பாமியன் வாலி’ புராதான சின்னம் 158.9265 ஹெக்டர் (Hectare) நிலப்பரப்பில் அமைந்து உள்ளது.
2001 ஆண்டுக்கு முன்னால் இருந்த
பாமியன் வாலியில் புராதான புத்தர் சிலை
Author: David C. Thomas (Creative Commons Attribution ShareAlike 2.5)
பாமியன் வாலியில் புராதான புத்தர் சிலை
Author: David C. Thomas (Creative Commons Attribution ShareAlike 2.5)
‘பாமியன் வாலி’யில் புத்தர் சிலைகளும் (Budha Statues), மடாலயங்களும் (Monasteries), மற்றும் குகைகளும் (Caves) உள்ளன. 2001 ஆம் ஆண்டு உலகிலேயே அதிக உயரமான அதாவது 55 மீட்டர் (Meter) மற்றும் 37 மீட்டர் (Meter) உயரமான இரண்டு புத்தர் சிலைகளை (gigantic Buddhist statues) ‘தாலிபான்’ (Taliban) அமைப்பினர் நாசப்படுத்தினார்கள் (Destroyed) . அதைக் கண்டு உலகமே அதிர்ச்சி (Shocked) அடைந்தது.
‘பாமியன் வாலியில்’ புத்தர் சிலைகளைத் தவிர இஸ்லாமிய மன்னர்களின் (Islamic Periods) பல்வேறு காலத்திய அரண்மனைகளும் (Forts) காணப்படுகின்றன. ‘பாமியன் வாலிக்கு செல்பவர்கள் ‘பண்டே அமீர்’ (Bande Amir) என்ற இடத்தில் உள்ள ஐந்து ஏரிகளின் அழகையும் பார்க்க வேண்டும்.
பாம்யன் வால்லி உள்ள இடம் (Location)
‘பாம்யன் வாலி’ என்பது பாம்யன் மாகாணத்தில் உள்ளது. முன் காலத்தில் இது ‘சில்க் சாலை’ (Silk Road) எனப்படும் பகுதியில் இருந்தது. அப்போதுதான் இங்கு ‘கிரேக்க’ (Greek) மற்றும் ‘பெர்சிய’ (Persian) நாடுகளின் கலையின் தாக்கமும் (influence) செல்வாக்கும் பரவ அதனால் மூன்று இடங்களையும் சேர்ந்த கிரிக்கோ- புத்தக் கலை (Greco-Buddhist art) துவங்கியது .
பெயர் வந்த வரலாறு (Etymology)
‘பாமியன்’ (Bamiyan) என்பது சமிஸ்கிருத மொழியான (Sanskrit) 'வார்மயானா' (varmayana) என்பதில் இருந்து வந்துள்ளது. அதன் அர்த்தம் 'வர்ணம் தீட்டப்பட்டது' (Coloured) . ‘பாமியனை’ மற்றும் ‘பாம்யன்’ (Bamyan) என்றும் ‘பாமியன்’ (Bamian) என்றும் கூறுகிறார்கள். ‘பாமியானின்’ வரலாறு 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டை (Century) சேர்ந்தது என்கிறார்கள்.
உலக புராதான சொத்து (சின்னம் ) விவரம்
(World Heritage Site Inscription Details)
இருப்பிடம் : N34 50 48.984 E67 49 30.9
ஏற்கப்பட்ட வருடம் : 2003
பிரிவு : கலை
தகுதியின் விவரம் : I, II, III, IV, VI
அபாய நிலையில் அந்த சின்னம்- விவரம்
(Threats & Issues)
‘ஆப்கானிஸ்தான்’ நாட்டின் அரசியல் நிலையை ஆராய்ந்த உலக புராதான சின்னங்களின் மேற்பார்வை மையம் 2008 ஆம் ஆண்டில் இதை அபாயத்தில் உள்ள சின்னம் எனக் கருதப்பட்ட 100 சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது.
ஆப்கானிஸ்தானிற்கு செல்ல வேண்டுமா
(Getting there )
‘ஆப்கானிஸ்தான்’ பயணங்களுக்கு ஏற்ற இடம் அல்ல, அது ஒரு ஆபத்தான இடம். ஆகவே நீங்கள் நல்ல சுற்றுலாப் பயண மையத்தை அணுகி அங்கு செல்ல ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment