'கரீபியன் கடலில்' (Caribbean Sea) உள்ள சிறிய நாடே 'அரூபா' (Aruba) என்பது. சுமார் 180 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த நாடு 'வெனின்சுலா'வின் (Venezuela) வடக்கில் 27 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லெஸ்செர் ஆண்டிலிஸ்'சின் (Lesser Antilles) தீவுகளில் ஒன்றாகும். 'அரூபா', 'போனைர்' (Bonaire) மற்றும் 'குராகொவோ' (Curaçao) போன்ற மூன்று தீவுகளையும் ஒன்றாக சேர்த்து 'லெஸ்செர் ஆண்டிலிஸ்'சின் ABC தீவுகள் என அழைப்பார்கள்.
'அரூபா'வின் ஜனத்தொகள் 100,000 (2011 ஆம் ஆண்டு கணக்கின்படி). இதன் தலை நகரம் மற்றும் மிகப் பெரிய நகரம் 'ஓரன்ஜெஸ்டாத்' (Oranjestad) என்பதே. 'டச்' (Dutch) மற்றும் 'பாபியமென்டோ' (Papiamento) என்பவை இதன் தேசிய மொழிகள் ஆகும். 'அரூபா' என்ற இந்த நாடு 'நெதர்லாந்', 'குராகவோ' மற்றும் 'சின்ட் மார்டின்' (Netherlands, Curaçao and Sint Maarten) போன்ற மூன்று இடங்களையும் உள்ளடக்கி தனி நாடாகவே நெதர்லாந்து அரசாட்சியின் (Kingdom of the Netherlands) கீழ் உள்ளது. இதன் மகராணி 'குயீன் பியாட்ரிக்ஸ்' (Queen Beatrix) என்பவர். 'அரூபா'வின் நேரம் உலக நாடுகளின் நேரத்தைவிட நான்கு மணி நேரம் (Four Hours behind) பின் தங்கியது. இதன் நாணயம் 'அரூபன் பிலோரின்' {Arupan florin(AWG)} மற்றும் மின்சார வினியோக அளவு 120V/60Hz. வண்டிகளை சாலையின் வலதுபுறம் ஓட்ட வேண்டும்.
தலை நகரமான 'ஓரன்ஜெஸ்டாத்'
Author: David et Magalie (Creative Commons Attribution 2.0 Generic)
Author: David et Magalie (Creative Commons Attribution 2.0 Generic)
'அரூபா'வின் சீதோஷ்ண நிலை (Climate) வருடம் முழுவதும் அநேகமாக ஒரே மாதிரியாகவே உள்ளது. சூரிய குளியல் (sun seekers) செய்ய விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடம் 'அரூபா'. கரீபியன் கடல் பகுதியில் உள்ள இந்த நாடு சுற்றுலாப் பயணிகள் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டுகின்றது. 2007 ஆம் ஆண்டின் கணக்கின்படி இதன் GDP $2.4 பில்லியன் மற்றும் பெர் காபிடா (Per capita) GDPயின் அளவு $23,83.
'அரூபா'விற்குச் செல்வது எப்படி
(Visiting Aruba)
'அரூபா'விற்குச் செல்ல வேண்டும் எனில் 'ரெய்னா பியாட்ரிக்ஸ் என்ற ச்ரவதேச விமான நிலையத்திற்கு' (Reina Beatrix International Airport (AUA)) சென்று அங்கிருந்தே 'அரூபா'விற்கு செல்ல வேண்டும். இந்த விமான நிலையத்திற்குச் செல்ல தேசிய விமான சேவை கிடையாது. ஆனால் அட்லாண்டா (Atlanta), அம்ஸ்டர்டாம் ( Amsterdam), போஸ்டன் (Boston), சிகாகோ (Chicago), லண்டன் (London), மியாமி (Miami), நியூயார்க் சிட்டி (New York City), சான் ஜுவான் (San Juan) மற்றும் வாஷிங்டன் DC (Washington, DC) போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
No comments:
Post a Comment