ரேவன்னா
( Read Original Article in :- Ravenna)
( Read Original Article in :- Ravenna)
'இத்தாலி'ய தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள 'எமிலா ரோமக்னா' (Emila Romagna) எனும் மாவட்டத்தில் உள்ள நகரமே 'ரேவன்னா' (Ravenna) என்பது. கடற்கரையைத் தாண்டி உள்ள இங்கு செல்ல ஒரு வாய்க்கால் (Canal) அமைக்கப்பட்டு உள்ளது.
ரேவன்னாவில் பியாசா டெல் பொபோலோ
Author: Velvet (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Velvet (Creative Commons Attribution 3.0 Unported)
ரோமானியர்கள் இங்கு வந்து குடியேறும் முன்னரே இங்கு மக்கள் வாழ்ந்து வந்து உள்ளார்கள். 'வெனிஸ்' (Venice) நகரைப் போலவே ஆழமில்லாத ஒரு கடல்பரப்பின் (Lagoon) ஈரமான பூமியில் (Marshy land) உள்ள இந்த பூமியில் குடியேற்றம் துவங்கியது. 'ரேவன்னா' 89 BC யில் ரோம குடியரசில் (Republic of roma) இணைந்தது. 402 முதல் 476 AD வரை இது கிழக்கு ரோம மன்னர்களின் ராஜ்ய தலை நகரமாக (Capital) ஆயிற்று. அதன் பின் 751 வரை அது 'ஓஸ்ரோகோத்' (Ostrogoths) மன்னர்களின் தலைநகரமாக ஆயிற்று. 1796 ஆம் ஆண்டுவரை 'ரேவன்னா' கிருஸ்துவ மதக் குருக்களின் ஆட்சியின் கீழ் இருந்துவிட்டு 'சிசல்பைன்' குடியரசின் (Cisalpine Republic) ஒரு பாகம் ஆயிற்று. மீண்டும் 1861 ஆம் ஆண்டு இந்த நகரம் ஒன்றிணைந்த (unified) 'இத்தாலி'யக் குடியரசின் கீழ் வந்தது.
ரேவன்னாவின் போர்டா சான் மாமன்டே
Author: Eponimm (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Eponimm (Creative Commons Attribution 3.0 Unported)
'ரேவன்னா'விற்கு சாலை வழி மூலமோ அல்லது ரயிலிலோ (by road or by train) செல்வதே சிறந்தது. 'இத்தாலி'யின் அனைத்து நகரங்களுக்கும் அங்கிருந்து பஸ்களில் செல்ல முடியும். நீங்கள் ஒரு வண்டியில் சென்றால் எக்ஸ்பிரஸ் ஹைவே எண் A14 னில் செல்ல வேண்டும். 'ரேவனா'விற்கு விமானத்தில் செல்ல வேண்டும் எனில் அங்கிருந்து இருபது கிலோமீட்டர் (20 KM) தள்ளி உள்ள 'போர்லி' (Forli) எனும் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு (Airport) சென்று அங்கிருந்து 'ரேவன்னா'விற்கு செல்ல வேண்டும்.
படத்தின் மீது கிளிக் செய்து பெரியதாகப் பார்க்கவும்
No comments:
Post a Comment