வரலாற்று சிறப்பு மிக்க கிராஸ் நகரம்
( Read Original Article in :-Graz_austria)
( Read Original Article in :-Graz_austria)
கிராஸ்
Author: Diliff (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Diliff (Creative Commons Attribution 3.0 Unported)
'ஆஸ்ட்ரியா'வில் (Austria) 'வியன்னா'விற்கு (Vienna) அடுத்தப் பெரிய நகரம் 'கிராஸ்' (Graz ) என்பது. 'ஆஸ்ட்ரியா'வில் உள்ள 'ஸ்டைரியா' (Styria) எனும் மாகாணத்தின் தலை நகரமே 'கிராஸ்'. இந்த நகரத்தை யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site) உலக புராதான சின்ன அமைப்பினர் (World Heritage Committee) அங்கீகரித்து உள்ளார்கள். அதற்குக் காரணம் ஜெர்மானியர்கள் (Germanic), பால்கனியர்கள் (Balkans) மற்றும் மத்திய தரைப் கடல் (Mediterranean) பகுதியினர் என அனைவருடைய கலாசாரம், கட்டிடக் கலை போன்றவற்றை எடுத்துக் காட்டும் விதத்தில் பல நூற்றாண்டுகளாக இருந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் இதன் ஜனத்தொகை 300,000 ஆகும்.
மத்திய ஐரோப்பியாவில் மிக அருமையாக பாதுகாக்கப்பட்டு வரும் பழைய நகரமே 'கிராஸ்'. இந்த மையத்தில் பலரது காலங்களிலும் பலவகையான கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தாலும் அவற்றில் காணப்படும் கலைகள் ஒன்றிணைந்தே (harmonious integration) உள்ளன என்பதே இதன் மிக முக்கியமான அம்சம். அங்கு பல வேறுபட்ட காலங்களில்( successive periods) கட்டப்பட்ட கட்டிடங்கள் இருந்தாலும் அனைத்தும் அனேகமாக ஒரே பாணியில் அமைந்து உள்ளது ஒரு சிறப்பு அம்சம் ஆகும்.
உலக புரதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)
உள்ள இடம் : N 47 04 23 E 15 26 19
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1999
பிரிவு : கலை
தகுதி : II, IV
இங்கு என்ன பார்க்கலாம்
(What to See in City of Graz)
வரலாற்று சிறப்பு மிக்க 'கிராஸ்' நகரத்தில் உள்ள பல புராதான கட்டிடங்கள் பார்க்கப்பட வேண்டியவை. அவற்றில் முக்கியமான சிலவற்றை கீழே தந்து உள்ளேன். அவை உள்ள இடத்தை தரைபடத்தில் (See Map for location) காணலாம்.
ஸ்லோஸ்பர்க் (Schlossberg)
கிராஸ் கதீட்ரல் ( Graz Cathedral (Dom)
பிரான்சிஸ்கன் தேவாலயம் (Franciscan Church (Franziskanerkirche)
டவுன் ஸ்கொயர் (Town Square (Hauptplatz)
லந்த்ஹாஸ் (Landhaus)
லான்டிஸ் மியூசியம் ஜோயன்னியும் ( Landesmuseum Joanneum (Universalmuseum Joanneum)
மியுசோலினியம் (Mausoleum)
பலைஸ் அட்டேம்ஸ் (Palais Attems)
க்ரேசெர் காங்கிரஸ் (Grazer Congress)
லேன்டேஸ்ஜுகாஸ் (Landeszeughaus (Armoury)
இது உள்ள இடம்
(Location)
'கிராஸ்' என்பது 'வியன்னாவில் இருந்து 200 கிலோ தொலைவில் உள்ளது. மூர் (Mur) எனும் நதியின் இருபக்கங்களிலும் 'கிராஸ்' நகரம் வியாபித்து உள்ளது. 'கிராஸ்' உள்ள இடத்தை தரைப் படத்தில் பார்க்க ( View location on map) இங்கே கிளிக் செய்யவும். .
அங்கு எப்படி செல்லலாம்
(Getting there)
விமானம் மூலம் (By Plane)
வியன்னா (Vienna), ஜுரிச் (Zurich), பெர்லின் (Berlin), டஸ்சல்டோர்ப் (Dusseldorf), பிரான்க்புர்ட் (Frankfurt), ஸ்டுட்கார்ட் (Studgaurd) மற்றும் லண்டன் (London) போன்ற இடங்களில் இருந்து கிராஸ் விமான நிலையத்திற்கு விமான சேவைகள் உள்ளன. அந்த விமான நிலையத்தில் (Airport) இருந்து ஒரு பஸ்ஸைப் (Bus) பிடித்து நகருக்குள் (City) செல்லலாம். அதற்கான கட்டணம் €1.70 . இல்லை எனில் விமான நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள ரயில் நிலையம் (Railway station) சென்று அங்கிருந்து ஒரு ரயிலைப் பிடித்து நகருக்குள் செல்லலாம். அதற்கான கட்டணம் €1.70.
ரயில் மூலம் (By Train)
'வியன்னா'வில் இருந்தும் 'கிராஸ்' நகரம் செல்ல நேரடி ரயில் சேவை உள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு ரயில் புறப்படுகின்றது. 'வியன்னா'வில் இருந்து 2½ மணி நேரத்தில் இங்கு செல்லலாம். யுனெஸ்கோ புராதான மையமாக (UNESCO World Heritage Site) அங்கீகரிக்கப்பட்டு உள்ள 'செம்மரிங்' (Semmering Railway) ரயில்வே நிலையம் வழியாக இந்த ரயில் செல்லும்.
No comments:
Post a Comment