டிப்பாஸா
(Read Original Article in :-Tipasa_algeria)
'அல்ஜீரியா'வின் (Algeria) கடற்கரையில் உள்ள ஒரு பட்டிணமே 'டிப்பாஸா' (Tipasa) அல்லது 'டிபசா' (Tipaza) என்பது. 1982 ஆம் ஆண்டு பாரிஸ்சில் (Paris) டிசம்பர் மாதம் (December) 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee) கூடி விவாதித்த கூட்டத்தில் இந்த சிறப்பான முறையில் கட்டப்பட்டு இருந்த 'டிப்பாஸா'வை அதன் வரலாற்றுக்காகவும் (human history) அங்கு நிலவிய கலாச்சார நடைமுறைகளுக்காகவும் (Cultural Tradition) உலக புராதான சின்னமாக அங்கீகரித்தார்கள்.
'டிப்பாஸாவில்' என்ன பார்க்கலாம்
(What to See in Tipasa)
இந்த இடத்தில் 'போனிஷியர்கள்' (Phoenicians), 'ரோமன்' (Romans) , 'பலியோகிருஸ்துவர்' (Baliochristians) மற்றும் 'பைசண்டையின்' (Byzhantine) போன்றவர்கள் காலத்தைய சிதைவுகளையும், 'மவரிடானியாவின்' (Mauritania) அரச கல்லறைகளின் (Mausoleum) சிதைவுகளையும் காணலாம். மலை மீது தங்கி இருந்த ரோமானியர்கள் கட்டி இருந்த மூன்று முக்கியமான தேவாலயங்கலான 'கிரேட் பேசிலிக்கா' (Great Basilica), 'அலேக்சாண்டர்' பேசிலிக்கா (Alexander Basilica) மற்றும் 'செயின்ட் சல்சா பேசிலிக்கா' (St Salsa Basilica) போன்றவை மற்றும் டிப்பாஸாவில் பண்டைக் காலத்தில் கட்டப்பட்டு இருந்த சுடுகாடுகள் (Cemetry) , குளியல் அறை (Bath) , கலைஅரங்கம் (Theatre), போட்டி அரங்கம் (ampitheatre) போன்றவையும் உள்ளன. மேலும் அங்கு சிதைந்த நிலையில் உள்ள துறைமுகமும் (Harbour) காணப்படுகின்றது.
'செயின்ட் சல்சாவின் பேசிலிக்கா'வில் மொசைக் (Mosaic) போட்ட தரைகள் உள்ளன. அங்குள்ள இடம் அவற்றின் இடையே ஏழு நடைபாதைகளை (seven aisles) கொண்டதாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக அது இருந்த இடம் பாறைகளை வெட்டி எடுக்கும் சுரங்கமாக உபயோகத்தில் இருந்ததினால் அதன் உண்மையான அமைப்பு சிதைந்துவிட்டது.
வரலாறு
(History)
'போனிஷியர்களே' 'டிப்பாஸாவை' உருவாக்கியவர்கள். அதன் பின் அந்த இடத்தின் மீது படையெடுத்து 'ரோமானியர்கள்' கைப்பற்றிக் கொண்டு அதை ராணுவ தளமாக (Military Base) ஆக்கிக் கொண்டார்கள். 'ரோமானியர்கள்' தங்கி இருந்த மூன்று மலை பகுதிகளும் அங்கு உள்ளன. 'டிப்பாஸாவில்' இருந்துதான் 'ரோமானியர்கள்' 'மவரிடானியா' ராஜ்யத்தின் மீது படை எடுத்தார்கள்.
யுனேஸ்கோ உலக புராதான சின்ன மைய விவரம்
உலக புராதான சின்னம் உள்ள இருப்பிடம் : N36 32 60 E2 22 60
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 1982
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம் : III,IV
அபாயம்
2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை இந்த இடம் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் (in Danger list) இருந்தது.
டிப்பாஸாவின் சிதைந்த பகுதிகள்
Author: Keith Miller (Creative Commons Attribution 2.0)
டிப்பாஸாவில் உள்ள பேசிலிக்காவின் சிதைந்த பகுதிகள்
Author: Dalbera / J.P. Dalbéra (Creative Commons Attribution 2.0)
டிப்பாஸாவில் ரோமானியர்களின் சிதைந்த பகுதிகள்
Author: Jean-Pierre Dalbéra (Creative Commons Attribution 2.0)
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 1982
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம் : III,IV
அபாயம்
2002 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டுவரை இந்த இடம் பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் (in Danger list) இருந்தது.
டிப்பாஸாவின் சிதைந்த பகுதிகள்
Author: Keith Miller (Creative Commons Attribution 2.0)
டிப்பாஸாவில் உள்ள பேசிலிக்காவின் சிதைந்த பகுதிகள்
Author: Dalbera / J.P. Dalbéra (Creative Commons Attribution 2.0)
டிப்பாஸாவில் ரோமானியர்களின் சிதைந்த பகுதிகள்
Author: Jean-Pierre Dalbéra (Creative Commons Attribution 2.0)
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
No comments:
Post a Comment