அரண் அமைக்கப்பட்ட பாகு எனும் நகரம்
(Read Original Article in :- walled-city-of-baku_azerbaijan)
அரண் அமைக்கப்பட்ட 'பாகு' எனும் நகரம், 'ச்ரீவன்ஷா'வின் அரண்மனை மற்றும் 'மைடின் டவர்' போன்ற அனைத்துமே 'அஜர்பைஜானில்' யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையங்கள் என அறிவிக்கப்பட்டு உள்ள இடங்கள் ஆகும். அதற்கான அங்கீகாரம் யுனேஸ்கோ உலக புராதான சின்ன அங்கத்தினர்கள் 2000 ஆம் ஆண்டு 27 நவம்பர் (November) முதல் 2 ஆம் தேதி டிசம்பர் (December) வரை கூடிய கூட்டத்தின் இறுதியில் கிடைத்தது.
நகர்புறத்தில் உள்ள புராதான சின்னமாக அரண் அமைக்கப்பட்ட 'பாகு' நகரம் பெற்ற இந்த அங்கீகாரம் பெருமைக்குறிய விஷயம். அந்த சுவர்களில் காணப்படும் கலை அமைப்புக்களில் 'ஜோரோஸ்ட்ரியன்' (Zoroastrian), 'ஸசானியன்' (Sassanian), 'அராபியன்' (Arabic), 'பெர்சியன்' (Persian), 'ஷிர்வாணி' (Shirvani), 'ஓட்டமன்' (Ottoman) மற்றும் 'ரஷ்சியன்' (Russian) போன்ற நாடுகளின் கலைவண்ணம் தெரிகின்றது. இந்த சுவர் கட்டப்பட்டதின் காலம் 12 ஆம் நூற்றாண்டு (12th Century) எனக் கருதுகிறார்கள். மேலும் அதன் சில பாகங்கள் 7 ஆம் நூற்றாண்டில் (7th Century) கட்டப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிகின்றது.
அரண் அமைக்கப்பட்ட 'பாகு' நகரம்
Author: Самый Древний (public domain)
'மைடின் டவர்'
Author: Самый Древний (public domain)
'ச்ரீவன்ஷா'வின் அரண்மனை
Author: Nick Taylor (Creative Commons Attribution 2.0)
'ச்ரீவன்ஷா'வின் அரண்மனையில் உள்ள டவர்
'ச்ரீவன்ஷா'வின் அரண்மனையில் உள்ள மசூதி
Author: Самый Древний (public domain)
அரண் அமைக்கப்பட்ட 'பாகு' நகரில் என்ன பார்க்கலாம்
(What to See in Walled City of Baku)
(1) அரண்மனை சுவர்கள்
(The city walls)
இந்த சுவர்கள் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டு உள்ளது. அதற்குள் உள்ள உட்புற நகரம் என்ற அர்த்தம் தரும் 'இச்சேரி ஷேஹெர்' (Icheri Sheher) என்ற இடம் நன்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ளன.
(2) மைடின் டவர்
(Maiden Tower)
'அஜர்பைஜானின்' மிக முக்கியமான முத்திரைப் (Icon) சின்னம் இது. பல நாடுகளின் காகித நாணயங்களில் (Bank Notes) இதன் உருவம் உள்ளதைக் காணலாம். இது 12 ஆம் நூற்றாண்டு (Century) அல்லது அதற்கும் முன்னால் கட்டப்பட்டு இருக்கலாம் என நம்புகிறார்கள். அதற்க்கு அந்தப் பெயர் வந்ததற்கு ஒரு கதை உள்ளது. அந்த கோபுரத்தின் தலைப் பகுதியில் இருந்து ஒரு மணமாகாத பெண் ( a maiden) கீழே கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதினால் அதன் பெயரை அப்படிக் கூறுகிறாகள். 12 ஆம் நூற்றாண்டுவரை அந்த டவர் எனப்படும் கோபுரம் கடலை ஒட்டியே இருந்தது. அதன் பின்னரே அதன் கரைப் பகுதிகளை உருவாக்கினார்கள்.
'ச்ரீவன்ஷா'வின் அரண்மனை
(Shirvanshah's Palace)
பதினைந்தாம் நூற்றாண்டில் (15th Century) 'ச்ரீவன்ஷா' வம்சத்தை சேர்ந்த இப்ராகிம் I என்பவர் ஆண்டபோது இது கட்டப்பட்டு உள்ளது. அரண்மனைத் தவிர கல்லறைக் கட்டிடம் (mausoleum), மசூதி (mosque), விளையாட்டுக் கூடத்தில் ரசிகர்கள் அமரும் கூடாரம் (Pavilion) போன்ற இடம் , மற்றும் குளிக்கும் இடங்கள் (Bath House) போன்றவையும் கட்டப்பட்டன. இவை அனைத்தும் 'ஸுபி முஸ்லிம் துறவி'யான (Sufi Muslim saint) 'சையத் யாயாஹ் பகுவி' (Seyyid Yahya Bakuvi) எனபவரின் கல்லறையை (Tomb) சுற்றி அமைக்கப்பட்டு உள்ளன.
யுனேஸ்கோ உலக புராதான சின்ன மைய விவரம்
இது உள்ள இடம்:-N 40 22 0 E 49 49 60
அங்கீகரிக்கப்பட்ட காலம் 2000
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம்: IV
'பாகு' நகரம் உள்ள இடம்
(Location Baku)
'அஜர்பைஜானின்' தலைநகரமான 'பாகு' எனப்படும் கடற்கரையில் உள்ள நகரம் 'அப்ஷேரோன்' தீபகற்பத்தின் (Absheron Peninsula) தென்கோடிப் பகுதியில் உள்ளது.
'அஜர்பைஜானில்' உள்ள பாகு உள்ள இடத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
அபாயம்
2000 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தினால் (earthquake) அந்த இடம் சரிவர சீரமைக்கப்படவில்லை என்பதைக் கண்டு கவலைக் கொண்ட யுனேஸ்கோ உலக புராதான சின்ன மைய அமைப்பு 2003 ஆம் ஆண்டில் அந்த இடத்தை பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் (in Danger list) வைத்தது. ஆனால் 'அஜர்பைஜானின்' அரசு நடவடிக்கைகளைக் கண்ட அந்த அமைப்பு 2009 ஆம் ஆண்டு அதை பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இருந்து நீக்கியது (removed).
அங்கு செல்ல வேண்டுமா
'பாகுவிற்குச்' செல்ல வேண்டும் எனில் 'ஹைதர் அலியேவ்' சர்வதேச விமான நிலையத்திற்கு (Heydar Aliyev International Airport (GYD)) சென்று விட்டு அங்கிருந்துதான் செல்ல வேண்டும். அந்த விமான நிலையத்திற்கு 'ஆஸ்திரியா ஏர்லயின்ஸ்' (Austrian Airlines) , 'துர்கி ஏர்லயின்ஸ்' (Turkish Airlines) , 'லுப்தான்சா' (Lufthansa) , 'ஏர் பசுபிக்' (Air Pacific) போன்ற விமான சேவைகள் உள்ளன.
No comments:
Post a Comment