தெற்கு 'இத்தாலி'யின் புகழ் பெற்ற இடம் 'பாரி' என்பது. 'பாரி' மாகாணம் (Bari province) மற்றும் 'அபுலியா' பகுதியின் (Apulia region) தலை நகரமே (Capital) 'பாரி'. இதை துறைமுக நகரம் (Port city) அல்லது யூனிவர்சிட்டி டவுன் (University town) என்றும் 'செயின்ட் நிக்கோலஸ்' (St. Nicholas) என்ற துறவியின் நினைவாகவும் பெருமையுடன் பார்க்கிறார்கள்.
'பாரி'யின் (Bari) பரப்பளவு (Area) 116.2 சதுர கிலோ மீட்டர் (44.9 sq mi) ஆகும் . இந்த நகரத்தின் ஜனத்தொகை (Population) 320,000 (2011 estimate) என்றாலும் அதை சுற்றி உள்ள புறநகர் பகுதியில் உள்ள நகரத்தின் ஜனத்தொகை 655,000 என உள்ளது.
'பாரி'க்குச் செல்ல வேண்டும் எனில் விமானம் (Air) , ரயில் (Train) மற்றும் சாலை (Road) வழியேயும் செல்ல முடியும். 'போப் ஜான் பால் II' (Pope John Paul II) பெயரில் அமைந்து உள்ள விமான நிலையத்துக்கு (Airport) செல்ல கட்டணக் குறைவான விமான சேவைகள் (Budget Airlines) உள்ளன. 'நேபில்ச்ஸ்' (Naples) அல்லது 'ரோமில்' (Rome) இருந்து ரயிலில் செல்லலாம். சாலை வழியே சென்றால் A14 ஹைவே (Highway) சாலையில் செல்லவும். அது 'போலோக்னா' (Bologna) முதல் 'தரன்டோ' (Taranto) வரை செல்லும் 'அட்ரியாடிக் கடற்கரை' (Adriatic coast) சாலை ஆகும்.
No comments:
Post a Comment