'வால்டெஸ் தீபகற்பம்'
(Read Original Article in Peninsula-valdes_argentina)
'வால்டெஸ் தீபகற்பம்' (Península Valdés) 'அர்ஜென்டைனா'வின் (Argentina) மிக முக்கியமான இடம். இதுவே 'மாமல்ஸ்' (Mammals) எனப்படும் பாலூட்டி வளர்க்கும் பிராணிகளை பாதுகாக்கும் இடமாக உள்ளது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 4 காம் தேதி வரை, 'மொரோக்கோ' (Morocco) நாட்டின் 'மாரகேஷ்' (Marrakesh) நகரில் நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் (World Heritage Committee) கூட்டத்தில் இதை யுனெஸ்கோவின் உலக புராதான சின்ன அமைப்பாக (UNESCO World Heritage Site) அறிவித்தார்கள்.
'வால்டெஸ் தீபகற்பம்' வறண்ட பூமியாக இருந்தாலும் சில வகைக்கான ஆடுகளை அங்கு மேய விடுகிறார்கள். ஆனால் கடல்கரை இயற்கையான இடமாக அவைகளுக்கு உள்ளன.
'வால்டெஸ் தீபகற்பத்தில்' என்ன பார்க்கலாம்
(What to See in Península Valdés)
'வால்டெஸ் தீபகற்பத்தில்' நிறைய பாலூட்டும் பிராணிகளான மம்மல்களும் திமிங்கிலங்களும் உள்ளன. இவற்றைத் தவிர இங்கு அழிந்து வரும் யானை சீல்களும் (elephant seals), கடல் யானைகளும் (sea lions) உள்ளன. மேலும் மிகப்பெரிய உயிர் கொல்லி திமிங்கிலங்களும் (Killer Whales) , பென்குயின் (Penguin) மற்றும் பிற பறவைகளும் (Birds) உள்ளன.
சாவோ மிகுல் டோஸ் மிஸ்சோயுஸ்
Author: Reinhard Jahn, Mannheim (Creative Commons Attribution ShareAlike 2.0 Germany)
உயிர் கொல்லி திமிங்கிலம்
Author: Michaël CATANZARITI (public domain)
உயிர் கொல்லி திமிங்கிலம்
Author: Michaël CATANZARITI (public domain)
இந்த தீவின் உள்ளே உள்ள மற்ற விலங்கினங்கள் 'ரியாஸ்' (Rheas), 'குவானகோஸ்' எனும் கடல் பறவைகள் (Guanacos) மற்றும் 'மராஸ்' (Maras) எனப்படுபவை. 'வால்டேஸ்' தீபகற்பத்தில் 181 வகையான இனங்கள் (Species) உள்ளன, அவற்றில் 66 இடம் பெயர்ந்து (Migratory) செல்பவை.
இது உள்ள இடம்
'வால்டேஸ்' தீபகற்பம் 'அர்ஜென்டைனா'வின் 'சுபுட்' (Chubut) மாகாணத்தில் உள்ளது.
உலக புராதான சின்ன விவரம்
உள்ள இடம் : S42 30 0 W64 0 0
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1999
பிரிவு : இயற்கை
தகுதியின் விவரம் : X
இந்த இடத்திற்கு செல்வது எப்படி
வால்டேஸ் தீபகர்பத்திற்குச் செல்ல வேண்டும் எனில் 'புயினோஸ் ஐரேஸ்' விமான நிலையம் சென்று அங்கிருந்து 'புயேர்டோ மெட்ரின்' சென்று அங்குள்ள ஏதாவது ஒரு ஹோட்டல்களில் தங்கிக் கொண்டு அங்கிருந்து இந்த இடத்திற்குச் செல்லலாம். 'புயினோஸ் ஐரேஸ்'சில் நிறைய சுற்றுலாப் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யும் நிறுவனங்கள் உள்ளன.
இங்கு கிளிக் செய்து 'புயினோஸ் ஐரேஸ்'சில் (Hotels in Buenos ஐரேஸ்) உள்ள ஹோட்டல்களின் விவரங்களைப் பார்க்கலாம். இதைத் தவிர 'புயேர்டோ மெட்ரினில்' ( Hotels in Puerto Madryn) உள்ள ஹோட்டல் விவரங்களையும் இங்கே கிளிக் செய்து பார்க்கலாம் .
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்.
No comments:
Post a Comment