'ஆஸ்ட்ரியா' (Austria) என்பது மேற்கு ஐரோப்பியாவில் உள்ள ஒரு நாடு. இதன் எல்லைகளில் வட மேற்குப் பக்கம் ஜெர்மனி (Germany), வடக்கில் செக்கோஸ்லோவாகியா (Czech Republic), வடகிழக்கில் ஸ்லோவாக்கியா (Slovakia), கிழக்கில் ஹங்கேரி (Hungary) மற்றும் தெற்கில் ச்லோவானியா (Slovakia) மற்றும் இத்தாலி (Italy) உள்ளன. இவற்றைத் தவிர மேற்குப் பக்கத்தில் சுவிட்சர்லாந்து (Switzerland) மற்றும் லிச்ட்டேன்ஸ்டீன் (Liechtenstein) போன்றவை உள்ளன. இந்த நாடு ஒரு மலைப் பிரதேசம் (Mountenous) . ஆகவேதான் இந்த நாட்டின் 68 % பகுதிகள் கடல் மட்டத்தில் (Above sea level) இருந்து 500 மீட்டர் உயரத்தில் உள்ளன. அங்குள்ள மலையில் மிக உயர்வானது 3797 மீட்டர் ஆகும். இங்கு பேசப்படும் மொழிகளில் (Languages) முக்கியமானது ஜெர்மன் (German) மொழி என்றாலும், கிரோஷியன் (Crotian) , ஸ்லோவேன் (Slovene) , மற்றும் ஹங்கேரிய (Hungarian) மொழியையும் மக்கள் பேசுகிறார்கள். வருடத்தின் எந்த நேரத்தில் அங்கு பயணம் செய்தாலும் அவர்களுக்கு ஏதாவது முக்கியமான நிகழ்ச்சியைக் காண சந்தர்பம் கிடக்கின்றது. குளிர் காலத்தில் ஆகாய தங்கும் (Ski resorts) இடங்களில் இருந்து பொழுதைக் கழிக்கலாம். மற்ற நாட்களில் இந்த நாட்டின் பல இயற்கை காட்சிகளைக் கண்டு களிக்கலாம். 'வியன்னா' ( vienna) என்பது அந்த நாட்டின் தலை நகரம். அங்கு இசை பிரபலமானது. அது போல 'சால்ஸ்புர்க்' எனும் நகரம் மிகவும் செழிப்பானது. அங்கு பல தேவாலயங்கள் உள்ளன. 'ஆஸ்ட்ரியா'வின் அல்ப் (Alps) மலைப் பகுதி பார்க்க வேண்டிய அற்புதமான இடம்.
ஆஸ்ட்ரியா பற்றிய விவரங்கள்
(Fast Facts about Austria)
அதிகாரபூர்வமான பெயர் : ஆஸ்ட்ரியா குடியரசு
தலை நகரம் : வியன்னா (வின் )
ஜனத்தொகை : 8,037,000 (2003)
நாணயம் : யுரோ
பேசும் மொழி : ஜெர்மன்
மதம் : ரோமன் காதொலிக் 78%, ப்ரோடேஸ்டன்ட் 5%, மற்றவர்கள் 17%
பரப்பளவு : 83,858 சதுர கிலோ மீட்டர் (32,377 சதுர மைல்)
ஐரோப்பாவில் மிக உயரத்தில் டொப்ரட்சில் உள்ள டியூட்சி கிற்சி தேவாலயம்
Author: Markus Steiner (public domain)
Author: Markus Steiner (public domain)
ஆஸ்ட்ரியா பற்றிய விவரங்கள்
(Fast Facts about Austria)
அதிகாரபூர்வமான பெயர் : ஆஸ்ட்ரியா குடியரசு
தலை நகரம் : வியன்னா (வின் )
ஜனத்தொகை : 8,037,000 (2003)
நாணயம் : யுரோ
பேசும் மொழி : ஜெர்மன்
மதம் : ரோமன் காதொலிக் 78%, ப்ரோடேஸ்டன்ட் 5%, மற்றவர்கள் 17%
பரப்பளவு : 83,858 சதுர கிலோ மீட்டர் (32,377 சதுர மைல்)
சால்ஸ்புர்கில் உள்ள பிரான்ஸ்சி கனீர் கிற்சி
Author: MatthiasKabel (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: MatthiasKabel (Creative Commons Attribution ShareAlike 3.0)
ஆஸ்ட்ரியா சுற்றுப் பயணம்
(Budget Travel to Austria)
'ஆஸ்ட்ரியா' நாட்டிற்குச் செல்ல ஐரோப்பியா மற்றும் EFTA நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா தேவை இல்லை. அந்த நாட்டை சேர்ந்தவர்களிடம் அவரவர் நாட்டு புகைப்பட சான்று இருந்தால் ( ID card) போதும் . அதற்குக் காரணம் 'ஷாங்கேன்' ஒப்பந்தமே (Schengen Agreement) . மற்ற நாட்டவர்கள் பாஸ்போர்டை (Passport) வைத்து இருக்க வேண்டும்.
அல்பானியா (Albania) அன்டோரா (Andorra), ஆன்டிகுவா (Antigua), பார்புடா (Barbuda), அர்ஜென்டினா (Argentina), ஆஸ்ட்ரேலியா (Australia), பஹமாஸ் (Bahamas) பார்படோஸ் (Barbados) போஸ்னியா (Bosnia), ஹெர்ஸிகோவினா (Herzegovina), பிரேஸில் (Brazil), ப்ருனி (Brunei), கனடா (Canada), சிலி (Chile), கோஷ்ட ரிகா (Costa Rica), கிரோஷியா (Croatia), எல் சவடார் (El Salvador), குயட்மாலா (Guatemala), ஹோண்ட்ருஸ் (Honduras), ஹாங்காங் (Hong Kong), இஸ்ரேல் Israel, ஜப்பான் (Japan), மகாவு (Macau), மலாசியா (Malaysia), மொருஷியஸ் (Mauritius), மக்சிகோ ( Mexico), மொனோகோ (Monaco), நியூசிலாந் (New Zealand), நிகாரகுவா (Nicaragua), பனாமா (Panama), பராகுவே (Paraguay), செயின்ட் கிட்ஸ் (Saint Kitts), நெவிஸ் (Nevis), சான் மரினா (San Marino), சிசெல்லிஸ் (Seychelles), சிங்கபூர் (Singapore), தென் கொரியா (South Korea), தைவான் (Taiwan), யுனைடெட் ஸ்டேட்ஸ் (United States), உருகுவே (Uruguay), வாடிகன் சிட்டி (Vatican City), மற்றும் வெனின்சுலா (Venezuela) போன்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா (No Visa) தேவை இல்லை.
விமானம் மூலம் செல்ல
(By Plane)
வியன்னாவில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வியன்னா சர்வதேச விமான நிலையம் (Vienna International Airport (VIE)) சென்று அங்கிருந்து போகலாம். இந்த விமான நிலையத்திற்கு பல நாடுகளில் இருந்தும் விமான சேவைகள் உள்ளன. அல்லது 'முனிச்' (Munich) என்ற நகருக்குச் சென்று அங்கிருந்து பஸ் (Bus) அல்லது ரயிலில் (Train) ஏறி வியன்னாவிற்குச் செல்லலாம்.
ரயில் மூலம்
(By Train)
அண்டை நாடுகளில் இருந்து வியன்னா வருவதற்கு நிறைய ரயில்கள் உள்ளன. ICE என்ற இன்டெர் சிட்டி எக்ஸ்பிரஸ் (Inter-City Express) எனப்படும் ரயில் ஜுரிச் (Zurich), முனிச் (Munich), பிரான்க்புர்ட் (Frankfurt), புத்தபெஸ்ட் (Budapest) மற்றும் பச்சாவு (Passau) போன்ற இடங்களுக்கு செல்லவும் ரயில்கள் உள்ளன.
'ஆஸ்ட்ரியா' வில் பயணம்
(Budget Travel within Austria)
'ஆஸ்ட்ரியா' வில் உள்நாட்டில் பயணம் செய்ய ரயிலே சிறந்தது. அவை மிகவும் சௌகரியமாக இருக்கும். கட்டணமும் குறைவு. ரயில் டிக்கட்டுக்களை ஒஸ்டேர்றேய்ச்சிச்சே புண்டேச்பஹ்னேன் (ÖBB) (Österreichische Bundesbahnen), மற்றும் ஆஸ்திரியன் பெடரல் ரயில்வேஸ் என்ற நிறுவனங்களும் விற்பனை செய்கிறார்கள்.
அவற்றின் ஜனத்தொகை பிரேக்கட்டுக்களில் தரப்பட்டு உள்ளது.
(1) வியன்னா (1,700,000)
ஆஸ்ட்ரியா நாட்டின் மிகப் பெரிய நகரமும், அதன் தலை நகரமும் ஆகும்
(2) கிராஸ் (260,000)
ஆஸ்ட்ரியா நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரம் ஆகும்
(3) லினஸ் (190,000)
ஆஸ்ட்ரியா நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய நகரம் மற்றும் செக்கோஸ்லோவாகியா நாட்டின் எல்லையை தொட்டபடியும் உள்ள நகரம் ஆகும்
(4) சால்ஸ்பர்க் (150,000)
'சால்ஸ்பர்க்' பராக் கட்டிடக் கலையில் பெருமை வாய்ந்தது. இங்குதான் 'மொஸார்ட்' (Mozart) எனும் இசைக் கவிஞ்சன் பிறந்தார்.
(5) இன்ஸ்பர்க் (120,000)
இரண்டு மலைகளின் இடையே உள்ள இடம். 'தைரோல்' என்பதின் தலை நகர்
(6) கிளகேன்பர்ட் (90,000)
'வொர்த்சீ ஏரி' மற்றும் 'கிளான் நதி'யின் இடையே உள்ள இது 'கரிந்தியா' என்பதின் தலை நகரம் ஆகும்
(7) வில்லாச் (60,000)
கரிந்தியா மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரம். இங்கு 3500 BC யிற்கு முன்னிருந்தே மனிதர்கள் இருந்து உள்ளார்கள் எனத் தெரிகின்றது.
(8) ப்ரிகேன்ஸ் (28,000)
மத்திய ஐரோபியாவின் மூன்றாவது மிகப் பெரிய ஏரியான கான்ச்டன்ச்ஸ் என்பதின் கரையை தொட்டபடி உள்ள ஆஸ்ட்ரியா நாட்டின் ஒரு நகரம்.
(9) இசென்ஸ்டட் (12,000)
முன்னர் இருந்த எஸ்டேர்ஹசி ஹங்கேரி நாட்டு உயர் குடும்பத்தினர் வாழ்ந்த இடம்
ஆஸ்ட்ரியா நாட்டின் யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(1) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சால்ஸ்புர்க்
(2) அரண்மனை மற்றும் ஷோன்ப்ருன் தோட்டங்கள்
(3) 'ஹால்ஸ்டட்-டச்ஸ்டைன் /சால்ஸ்கம்மேர்கேட்' இயற்கை வளம்
(4) செம்மெரிங் ரயில் நிலையம்
(5) வச்சாவு பள்ளத்தாக்கு
(6) வரலாற்று சிறப்பு மிக்க கிராஸ் நகரம்
(7) பெர்டோ - 'நியூசிட்லர்சீ'
(8) சரித்திரப் புகழ் பெற்ற வியன்னா
(1) சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சால்ஸ்புர்க்
(2) அரண்மனை மற்றும் ஷோன்ப்ருன் தோட்டங்கள்
(3) 'ஹால்ஸ்டட்-டச்ஸ்டைன் /சால்ஸ்கம்மேர்கேட்' இயற்கை வளம்
(4) செம்மெரிங் ரயில் நிலையம்
(5) வச்சாவு பள்ளத்தாக்கு
(6) வரலாற்று சிறப்பு மிக்க கிராஸ் நகரம்
(7) பெர்டோ - 'நியூசிட்லர்சீ'
(8) சரித்திரப் புகழ் பெற்ற வியன்னா
No comments:
Post a Comment