ஹால்ஸ்டட்-டச்ஸ்டைன் /சால்ஸ்கம்மேர்கேட் இயற்கை வளம்
(Read Original Article in :-
(Read Original Article in :-
The 'ஆஸ்ட்ரியா'வில்' உள்ள 'சால்ஸ்கம்மேர்கேட்' (Salzkammergut) மாகாணம் கற்காலம் தொட்டு மனிதர்கள் வாழ்ந்த இடம். பொற்காலம் எனப்படும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு உப்புக் கல் வற்றாமல் கிடைக்கும் இடமாக அமைந்து உள்ளது. இந்த மாகாணம் இத்தனை செழிப்பாக வளர்ச்சி பெற்றுள்ளதற்குக் காரணமே உப்புக் கல்லினால்தான். இதை மத்திய காலத்திலேயே அந்த மாகாணத்தின் 'ஹால்ஸ்டட்' (Hallstatt) எனும் நகரில் கட்டப்பட்டுள்ள பெரிய பெரிய கட்டிடங்களைப் (fabulous buildings) பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
'ஹால்ஸ்டட்-டச்ஸ்டைன் /சால்ஸ்கம்மேர்கேட்' (Hallstatt-Dachstein/Salzkammergut) எனும் இந்தப் பகுதியை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள இயற்கை வளம், அங்கு இயற்கையை ஒட்டி வளர்ந்து வந்த பொருளாதார நிலைமை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 முதல் 6 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பினரின் (World Heritage Committee) கூட்டத்தில் ஹால்ஸ்டட்-டச்ஸ்டைன் /சால்ஸ்கம்மேர்கேட் எனும் இந்த இடத்தை யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக ( UNESCO World Heritage Site) அங்கீகரித்தார்கள்.
ஹால்ஸ்டட்
Author: Pedroserafin (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Pedroserafin (Creative Commons Attribution ShareAlike 3.0)
இங்கு என்ன பார்க்கலாம்
(What to See in Hallstatt-Dachstein/Salzkammergut Cultural Landscape)
'ஹால்ஸ்டட்-டச்ஸ்டைன்/சால்ஸ்கம்மேர்கேட்' முழுவதுமே ஏரிகளும் அதன் பக்கங்களில் காணப்படும் இயற்கை காட்சிகளும் அற்புதமானவை. இங்கு வந்து அமைதியாக காலம் கழிக்கலாம், தண்ணீரில் விளையாடலாம், படகுகளில் செல்லலாம், மலையில் ஏறலாம் மற்றும் சைக்கிளில் சுற்றலாம்.
'சால்ஸ்கம்மேர்கேட்ட்டில் உள்ள நகரங்கள் ஹால்ஸ்டட் (Hallstatt), குண்டேன் (Gmunden), அல்ட்முன்ஸ்டர் (Altmünster), ட்ருன்கிற்சென் (Trunkirchen) , எப்பின்சீ (Ebensee), ஓபர்றவுன் (Obertraun), கொசுவா (Gosau), பாட் இஸ்சில் (Bad Ischl), பாட் கோய்செர்ன் (Bad Goisern), பாட் ஆஸ்சீ (Bad Aussee), ஸ்ட்ரோபெல் (Strobl), செயின்ட் வொல்ப்காங் (St. Wolfgang), செயின்ட் கில்ஜென் (St. Gilgen) மற்றும் புஸ்சில் (Fuschl) போன்றவை . அவை அனைத்தையும் விட மிகவும் பிரபலமானது 'ஹால்ஸ்டட்' தான் இது 'ஹால்ஸ்டட்' ஏரியின் பக்கத்தில் 'டச்ஸ்டைன்' மலைகளை பின்னணியில் கொண்டுள்ளதாக இருக்கின்றது. இங்குள்ள முக்கியமான இடம் 'பார்கிற்சே' (Pfarrkirche) எனும் தேவாலயம் (Church).
உலக புராதான சின்ன மைய விவரம்
உள்ள இடம் : N 47 33 34 E 13 38 47அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 1997
பிரிவு : கலை
தகுதி : III, IV
'சால்ஸ்கம்மேர்கேட்' என்பது 'சால்ஸ்பர்கில்' இருந்து 'டச்ஸ்டைன்' மலைப் பகுதி வரை உள்ளது. அதில் ஆஸ்ட்ரியாவின் மானிலங்களில் 80 % சால்ஸ்கம்மேர்கட், 7 % சால்ஸ்பார்க் மற்றும் 13 % ஸ்டைரியா போன்றவைகளுமாக அடங்கி உள்ளன. சால்ஸ்கம்மேர்கேட் என்றால் உப்புப் பள்ளப் பண்ணை என்று அர்த்தம்.
வியன்னாவில் இருந்து சென்றால் கிழக்கு 'ஆடோபானில்' (Autobahn) இருந்து (E 60) 'லகீர்சென்' (Laakirchen) செல்லும் பாதையில் சென்று ஆடொபானை விட்டு வெளியேறியதும் குண்டென் சாலை எண் 144 வழியே சென்று சாலை எண் 120 என்பதின் கிழக்குப் பகுதியை பிடித்து 'சால்ஸ்கம்மேர்கேட்-புண்டஸ்றபி' (Salzkammergut-Bundesstraße) 145 எண் சாலையை பிடிக்கவும். அதில் சென்று ஸ்டாம்பச்(Stambach) எனும் இடத்தை அடைந்து மீண்டும் சாலை எண் 166 உள்ள 'பப் ஜிஸ்டுட்-புண்டஸ்றபி' (Paß Gschütt-Bundessttraße) வழியே சென்று ஹால்ஸ்டட்டை அடையலாம்.
1900 ஆம் ஆண்டில் ஹால்ஸ்டட்
Author: anonymous (public domain)
No comments:
Post a Comment