துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, July 19, 2011

ஆஸ்ட்ரியா - வியன்னா நகரம்

சரித்திரப் புகழ் பெற்ற வியன்னா
( Read Original Article In :-Vienna_austria )


‘பின்லாந்தில்’ (Finland) 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 முதல் 16 ஆம் தேதி வரைக் கூடிய உலக புராதான சின்ன மைய அங்கத்தினர்கள் (World Heritage Committee) 371 ஹெக்டயர் நிலப்பரப்பில் மேலும் அதை சுற்றி இன்னும் 462 ஹெக்டயர் நிலப்பரப்பு உள்ள இடத்தில் அமைந்து உள்ள ‘ஆஸ்ட்ரியா’வின் (Austria) தலை நகரமான ‘வியன்னா’வின் (Vienna) வரலாற்று மிக்க மையத்தை (Historic Centre of Vienna) யுனெஸ்கோ உலக புராதான சின்னமாக (UNESCO World Heritage Site) அங்கீகரித்து உள்ளார்கள்.


இந்த இடம் உள்ள தரை படத்தை பெரிய அளவில் பார்க்க
இங்கே கிளிக் செய்யவும். 

Peterskirche, Vienna
பீட்டர்கிற்சே
Author: Alexander Mayrhofer (Creative Commons Attribution ShareAlike 3.0)


‘பெராக்’ (Baroque period), ‘க்ருன்டேர்ஜிட்’ (Gründerzeit) ஆட்சி காலங்கள் மற்றும் மத்திய காலத்தில் ஐரோபியாவில் ஏற்பட்ட கலை மற்றும் அரசியல் வளர்ச்சியைக் காட்டும் விதத்தில் ‘வியன்னா’வில் எழுப்பப்பட்டு உள்ள கட்டிடங்களின் கலை வண்ணத்தைக் கண்டே ‘ வியன்னா’வை புராதான சின்ன மையமாக உலக புராதார சின்ன மையம் ஏற்றுக் கொண்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டு முதல் ஐரோபிய இசையின் தலைமையகமாக (musical capital of Europe) விளங்கியது ‘வியன்னா’.
இந்த புராதான சின்ன மையத்தில் பல புராதான கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் ‘ஆஸ்ட்ரியா’வின் மிகப் பழைமை மடாலயமான ‘ஷோட்டேன்க்லோஸ்டர்’ (Schottenkloster), ‘மரியா ஆம் கெஸ்டெட்’ (Maria am Gestade), ‘மிசியாலேர்கிற்சி’ (Michealerkirche), ‘மைனோரிடென்கிற்சி’ (Minoritenkirche), ‘மைனோரிடென்க்லோஸ்டர்’ (Minoritenkloster) மற்றும் ‘செயின்ட் ஸ்டீபன்ஸ் கதீட்ரல்’ (St Stephen's Cathedral) போன்ற தேவாலயங்கள் (Churches) போன்றவை ஆகும்.
இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்க்கூடிய இடங்களை வரிசையாகக் காட்டி உள்ளேன். அவை அனைத்துக்கும் கொடுக்கப்பட்டு உள்ள எண் மேலே உள்ள தரை படத்தில் அவை உள்ள இடத்தைக் காட்டும்.

செயின்ட் ஸ்டிபென்ஸ் கதீட்ரல்
(St Stephen's Cathedral)

இந்த தேவாலயமே (Church) ‘வியன்னாவின் ஆர்ச் பிஷப் (Archbishop) மற்றும் ஆர்ச்டியோசிஸ் (Archdiocese of Vienna) தேவாலயங்களின் முதன்மை தேவாலயம் (Mother Church) ஆகும். 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘கோதிக்’ கட்டிட (Gothic Style) நடையில் கட்டப்பட்டு உள்ள இதை கிறிஸ்துவர்களில் முதலாம் தியாகியாகிய (martyr) ‘செயின்ட் ஸ்டிபென்ஸ்’ (St Stephen) என்பவருக்கு அர்பணித்து உள்ளார்கள்.
இந்த தேவாலயத்தின் கலைக் காட்சியரங்கத்தில் மத சம்மந்தமான ஓவியங்களும் , கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள பல சிற்பங்களும் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ‘டியூக் ருடோல்ப் IV’ என்பவரால் தரப்பட்டு உள்ளது. இங்குள்ள கலை அரங்கில் பார்க்க வேண்டியவை மன்னன்’ டியூக் ருடால்ப் IV’ (Duke Rudolf IV) மற்றும் ‘எல்ராச்செர் மடோன்னா’ (Erlacher Madonna) போன்றவர்களின் ஓவியங்கள். இங்குள்ள மற்ற சில குறிப்பிடத்தக்க ஓவியங்கள் மடோன்னா தன் குழந்தையை (Madonna and Child) வைத்துக் கொண்டு உள்ளது போன்ற உண்மையான உடல் அளவில் செய்யப்பட்டு உள்ள சிலை போன்றவை.

செயின்ட் பீட்டர்ஸ் சர்ச்
(St Peter's Church)

‘வியட்நாமில்’ (Vietnam) உள்ள மிகப் பழைய (Oldest) தேவாலயமே இது. ‘சார்லிமாக்னி’ (Charlemagne) என்பவர் இதை 792 AD யில் அமைத்ததாக கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாக அந்த சர்ச்சின் நுழை வாயில் கட்டிடத்தில் காணப்படும் ஒரு அமைப்பு (marble relief) இருந்தாலும் 12 ஆம் நூற்றாண்டில் இந்த இடம் ரோமன் பேசிலிகாவாக (Roman basilica) இருந்துள்ளதற்கு ஆதாரம் உள்ளது.

க்ராபேன்
(Graben)

‘வியன்னா’வின் நவீன நாகரீக கடைகள் உள்ள இடம் இது. இங்கு பல உணவகங்கள் மற்றும் கபேக்கள் உள்ளன. மேலும் ஒரே மாதிரியாக அமைந்துள்ள இரண்டு பாவுண்டன் எனப்படும் நீர் ஊற்றுக்கள் (Fountain) உள்ளன. அவை ‘செயின்ட் ஜோசப்’ நீர் ஊற்று (St Joseph Fountain) மற்றும் ‘செயின்ட் லிபோல்ட்’ நீர் ஊற்று (St Leopold Fountain) என்பன.
Graben, Vienna
க்ராபேன்
Author: Gryffindor (Creative Commons Attribution ShareAlike 3.0)


மொஷார்ட்ஷுஸ், வியன்னா
(Mozartshaus Vienna)

1784-1787 ஆண்டுகளில் ‘டோம்கஸ்சி 5’ ( Domgasse 5 ) என்ற இசைக் கலைஞ்சர் வாழ்ந்த வீடே மொஷார்ட்ஷுஸ் (Mozartshaus) என்பது. 2006 ஆம் ஆண்டு அதை பழுது பார்த்து (restored) அந்த வீட்டை அவருடைய காட்சியகமாக மாற்றி உள்ளார்கள்.

தி சர்ச் ஆப் டியோடனிக் ஆர்டர் ஆப் செயின்ட் எலிசிபத்
(Church of the Teutonic Order of St. Elisabeth)

சிங்கர்ஸ்ராப்பி 7 ல் (Singerstraße 7) உள்ள ‘கோதிக்’ தேவாலயம் (Gothic Church) 15 ஆம் நூற்றாண்டில் ‘டியோடனிக்’ வழி வந்த போர் தலைவரால் (knights of the Teutonic Order) கட்டப்பட்டது. அவர்கள் ‘வியன்னா’வுக்கு 13 ஆம் நூற்றாண்டில் வந்தார்கள். அந்த தேவாலயமே ‘தி சர்ச் ஆப் டியோடனிக் ஆர்டர் ஆப் செயின்ட் எலிசிபத்’ எனப்படுவது. இன்று அந்த மூல தேவாலயத்தின் கோபுரம் மட்டுமே மிஞ்சி உள்ளது.

பிரான்சிஸ்கன் சர்ச்
(Franciscan Church)

1601-11 ஆம் ஆண்டுகளில் பிரான்சிஸ்கன் சர்ச் (Franciscan Church) அல்லது பிரான்ஸ்கானிர்கிற்சே (Franziskanerkirche) என்பதை ‘வியன்னா’வின் விலைமாதுக்களின் (prostitutes) மறுவளர்ச்சி வாழ்கைக்காக தெற்கு ஜெர்மனியை சேர்ந்த ‘போனவெண்டுரா டயும்’ (Bonaventura Daum) என்பவர் ஏற்படுத்தினார்.

டாக்டர் இக்னஸ் சைபல் பிளாட்ஸ்
(Dr.-Ignaz-Seipel-Platz)

‘வியன்னா’வின் அற்புதமான சதுக்கம் (Square) ‘டாக்டர் இக்னஸ் சைபல் பிளாட்ஸ்’ என்பது . அதை சுற்றி உள்ள புகழ் பெற்ற கட்டிடங்களில் ‘ரொகோகோ’ (Rococo-style) கலையில் கட்டப்பட்டு உள்ள ‘ஆஸ்ட்ரியன் அகடம்மி ஆப் சயின்ஸ்’ (Österreichische Akademie der Wissenschaften) மற்றும் ‘போராக்யூ’ கலையில் (Baroque style) கட்டப்பட்டு உள்ள ஜெசுட் சர்ச் (Jesuitenkirche) போன்றவை உள்ளன.
Jesuitenkirche, Vienna
ஜெசூட்டென்கிற்சே
Author: Werckmeister (Creative Commons Attribution ShareAlike 2.5)


டொமினிகன் சர்ச்
(Dominican Church)

1631 மற்றும் 1674 ஆம் ஆண்டுகளில் போஸ்ட்கஸ்சே 4 லில் (Postgasse 4) கட்டப்பட்டுள்ள டொமினிகன் தேவாலயம் அல்லது ‘டொமினிகானிர்கிற்சே’ (Dominikanerkirche) என்பது ‘டியூக் லிபோல்ட் VI’ (Duke Leopold VI) என்ற மன்னனின் வேண்டுகோளை ஏற்று 1226 ஆம் ஆண்டு ‘வியன்னா’வுக்கு வந்த ‘டொமினிகன்’ துறவிகளுக்காக (Dominican monks) ஏற்படுத்தப்பட்டது. அந்த தேவாலயத்தின் உள்ளே மிக உயர்ந்த கலையில் வேலைபாடுகள் (richly ornate interior) அமைந்து உள்ளன.
Dominikanerkirche, Vienna
டொமினிகானிர்கிற்சே
Author: Welleschik (Creative Commons Attribution ShareAlike 3.0)


ஆஸ்ட்ரியன் கலை காட்சியகம்
(Austrian Museum of Applied Arts)

ஸ்டுபென்ரிங் 5 ல் (Stubenring 5) 1864 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள ‘ஆஸ்ட்ரியன் கலை காட்சியகம்’ (Österreichische Museum für Angewandte Kunst) ஐரோப்பியாவில் முதன்மையானது . அங்கு ‘வைனேர் விக்ஸ்டட்டின்’ (Wiener Werkstätte) பல அற்புதமான வேலைபாடுகள் உள்ளன.

யுரானயா
(Urania)

1910 ஆம் ஆண்டு ‘மாக்ஸ் பாபியான்’ (Max Fabian) என்பவர் வடிவமைத்தபடிக் கட்டப்பட்டுள்ள வட்ட வடிவிலான கட்டிடத்தின் (round building) தனித்தன்மை வாய்ந்த கோபுரக் கூறையைக் (Dome) கொண்ட ‘யுரானியா’ என்பது பள்ளிக் கூடம் (not a school) அல்ல. ஆனால் அது உண்மையில் மிகப் பழமையான பெரிய கல்வி நிலையம். அதில் ‘யுரானியோ கினோ’ (Urania Kino), திரை அரங்கம் (Cinema) மற்றும் வானசாஸ்திரத்தைக் காட்டும் ‘ப்ளானடேரியம்’ (planetarium) போன்றவை உள்ளன.

ஸ்ஷ்வீடன்பிளாட்ஸ்
(Schwedenplatz)

‘ஸ்ஷ்வீடன்பிளாட்ஸ்’ அல்லது ‘ஸ்வீடிஷ் ஸ்கொயர்’ (Swedish Square) என்பது ‘தனுபி வாய்க்கால்’ (Danube Canal) அருகில் கட்டப்பட்டு உள்ள இடம். அதன் அருகில் உள்ள ‘லாரேன்ஸ்பெர்கில்’ (Laurenzberg) குதிரைகளைக் (Horses) கட்டும் சங்கிலிகளை (metal rings) உள்ளடக்கிய பழைய கட்டிடத்தைக் காணலாம்.
Schwedenplatz, Vienna
ஸ்ஷ்வீடன்பிளாட்ஸ்
Author: Werckmeister (public domain)


செயின்ட் ரூபர்ட்ஸ் சர்ச்
(St Rupert's Church)

‘செயின்ட் ரூபர்ட்ஸ் ஸ்கொயரின்’ (St Rupert's Square) எதிரில் உள்ள செங்குத்தான மலை முகட்டின் மீது அமைந்துள்ள இந்தப் பழைமையான தேவாலயம் 740 AD யில் ‘சால்ஸ்பெர்கை’ (Salzburg) சேர்ந்த பிஷப்பான ‘செயின்ட் ரூபர்ட்டின்’ சீடர்களினால் கட்டப்பட்டதாம்.

ஜுவிஷ் குவார்டர்
(Jewish Quarter)

‘ஆஸ்ட்ரியா’வின் (Austria) ஜியூஸ் (Jews) எனப்படும் யூத இன மக்கள் வசித்து வந்த ஒரு இடமாக முன்னர் இருந்த இங்குதான் அவர்கள் பள்ளிகூடங்கள், குளிக்கும் இடங்கள், மருத்துவ மனை மற்றும் மத சம்மந்தமான போதனை மையங்களை வைத்து இருந்தார்கள். ஆனால் அது தற்போது இசை நடன கேளிக்கை விடுதிகள் (Discotheques) மற்றும் யூதர்கள் சம்மந்தப்பட்ட உணவுகளை விற்கும் இடமாக (Kosher restaurants) மாறிவிட்டன.

மரியா எம் கெஸ்டேட்
(Maria am Gestade)

இது ‘வியன்னா’வின் மிகப் பழமையான தேவாலயம் ஆகும். 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இதன் நுழை வாயிலில் உள்ள கதவுகளில் அற்புதமான வண்ணக் கண்ணாடிகள் (stained glass) பொருத்தப்பட்டு உள்ளன. இதனுள் உள்ள கூரான (steeple) கோபுரத்தின் உயரம் 50 மீட்டர் ஆகும்.
Maria am Gestade interior, Vienna
மரியா எம் கெஸ்டேட்டின் உட்புறம்
Author: Gryffindor (public domain)

பழைய டவுன் ஹால்
(Old Town Hall)

பழைய டவுன் ஹால் என்பது ‘ஹப்ஸ்புர்க்’ (Habsburg) என்பவரை எதிர்த்து கிளர்ச்சி செய்த இரண்டு சகோதரர்களான ‘ஓட்டோ’ (Otto) மற்றும் ‘ஹெய்மோ நுபார்க்’ (Heymo Neuburg) என்பவர்களுக்கு சொந்தமானது. ‘பிரெட்ரிச்’ (Prince Friedrich) எனும் இளவரசர் அந்த சொத்துக்களைப் பிடுங்கி அந்த நகரத்திற்கு அர்பணித்து விட்டார். ஆகவே அந்த இடம் நகர டவுன் ஹாலாக 1883 ஆம் ஆண்டுவரை இருந்து வந்தது.

ஹோயேர் மார்கெட்
(Hoher markt)

‘வியன்னாவின் மிகப் பழைய சதுக்கமாக ‘ரோமர்கள்’ காலத்தில் (Roman times) இருந்த இடம் இது. ‘ரோமன்’ நாட்டினரின் ராணுவ தளவாடங்கள் (Military Structures) இங்கு கிடைத்துள்ளன என்பதினால் இது சுற்றுலாப் பயண இடமாக உள்ளது. மேலும் 1911 ஆம் ஆண்டு ‘பிரான்க் வான் மாஸ்ச்’ (Franz von Matsch) என்பவர் வடிவமைத்த ‘ஆங்கர் கடிகாரம்’ (Anker Clock) பார்க்க வேண்டியது.

பொஹிமியன் கோர்ட் தூதராலயம்
(Bohemian Court Chancellery)

‘பொஹிமியாவை’ (Bohemia) ஆண்டு வந்த மன்னனான ‘பெர்டினன்ட் II’ (Emperor Ferdinand II) என்பவர் தனது அரசாங்க நிர்வாகத்தை ‘வியன்னா’விற்கு மாற்றி அமைத்தபோது இதை ‘ஜோஹன் பெர்னார்ட் பிஷேர் வான் எர்லாச்’ (Johann Bernhard Fischer von Erlach) என்பவர் மூலம் கட்டினார். இங்கு இருந்தவாறுதான் ‘ஆஸ்ட்ரிய’ மன்னர்கள் ‘பொஹெமியா’வை ஆண்டு வந்தார்கள்.

ஷுல்ஹோப்
(Schulhof)

‘ஷுல்ஹோப்’ எனும் குறுகிய சந்து (alley) ‘அம் ஹோல்ப் ஸ்கொயர்’ (Am Hof square) மற்றும் ‘குரன்ட்கஸ்சே’ (Kurrentgasse) என்பதின் பக்கத்தில் உள்ள ‘போர்க்கியூ’ குடியிருப்புடன் (Baroque residential neighbourhood) இணைகின்றது. 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல விதமான கடிகாரங்கள் (Clocks) இங்கு உள்ள கடிகார காட்சியகத்தில் (Uhr-Museum) வைக்கப்பட்டு உள்ளன.

அம் ஹோல்ப்
(Am Hof)

இங்குதான் மத்திய (medieval) காலத்தை (8 முதல் 14 ஆம் நூற்றாண்டு) சேர்ந்த ‘வியன்னா’வின் இளவரசர்கள் தமது இல்லங்களை (Residences) வைத்து இருந்தார்கள். ‘அம் ஹோல்ப்’ என்றால் அரசு நிறுவியது ("by the Court") என்று பொருள். இங்கு ‘நயன் ஏஞ்சல் கோர்ஸ்’ (Nine Angel Choirs) எனப்படும் ‘ஒன்பது பாடல் குழுவினர்’ தேவாலயம் உள்ளது. அந்த சதுக்கத்தில் பல கட்டிடங்கள் உள்ளன என்றாலும் அவற்றில் முக்கியமானது ‘கொலோட்டோ அரண்மனை’ (Colotto Palace) என்பது. அதில்தான் ஆறு வயதே (Six year) ஆன ‘மொஜார்ட்’(Mozart) என்பவர் தனது இசை பயணத்தின் முதல் (first) அரங்கேற்றம் செய்தார்.

பிரெயுங்
(Freyung)

‘பிரெயுங்’ என்றால் அகதிகளின் புகலிடம் என்று பொருள். இந்த சதுக்கத்தின் எண் 6 இல் ‘ஸ்காட்டன்கிற்சே’ (Scottish church) எனும் தேவாலயம் உள்ளது. இங்கு தஞ்சம் கேட்டு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தரப்பட்டது. இங்கு ‘போர்க்கியூ ஹர்ரச்’ அரண்மனை (Baroque Harrach Palace), ‘கின்ஸ்கி’ அரண்மனை (Kinsky Palace) மற்றும் ‘போர்ஷியா’ அரண்மனை (Porcia Palace) போன்றவையும் உள்ளன.
Schottenkirche, Freyung, Vienna
ஸ்காட்டன்கிற்சே
Author: Andreas Praefcke (Creative Commons Attribution 3.0 Unported)


ஹேர்ரங்கஸ்சே
(Herrengasse)

மத்திய காலத்தில் (8-14 நூற்றாண்டுகளில்) இதுவே பெரும் கொடையாளியான செல்வந்தர்கள் (nobility) தங்கிய இடமாக இருந்தது. இன்று இந்த இடத்தில் அரசாங்க அலுவலங்கள் (government offices) உள்ளன. இங்குள்ள ‘லந்த்ஹஸ்’ (Landhaus) எனும் கட்டடத்தில் ‘ஆஸ்ட்ரியாவின் மாவட்ட அரசு (provincial government) இயங்குகின்றது.

மைனாரிடேன்ப்லாஸ்
(Minoritenplatz)

இது ஒரு சதுக்கம் (Square) . இங்குள்ள ‘மைனாரிடேன்கிற்சே’ (Minoritenkirche) எனும் தேவாலயம் முதலில் 1224 ஆம் ஆண்டில் ‘மைனர் பிரியாஸ்’ (Minor Friars) என்பவரால் கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள கட்டிடம் 14 ஆம் நூற்றாண்டில் ‘பிரான்சிஸ்கன்’ (Franciscan) என்ற தேவாலயமாக (church) மாற்றிக் கட்டப்பட்டு உள்ளது.

மைகேலர்ப்லாஸ்
(Michaelerplatz)

அன்றைய ராஜாங்கத்தினர் வாழ்ந்த வீடுகளின் நுழை வாயிலான ‘மைகேலிடார்’ (Michaelertor) என்பதிற்கு எதிரில் உள்ளதே ‘மைகேலர்ப்லாஸ்’ எனப்படும் இந்த சதுக்கம். ‘மைகேலிடாரின்’ இரு புறமும் சுவர் மீதிருந்து பீறிட்டுப் பாயும் நீர் ஊற்று (Wall Fountains) உள்ளன. இவை 19 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டவை. ‘செயின்ட் மைகேல்ஸ் சர்ச்’ எனப்படும் (St Michael's Church) ‘மைகேலர்கிற்சே’ (Michaelerkirche) எனும் தேவாலயம் அன்றைய ராஜாங்கத்தினரின் (imperial court) தேவாலயம் ஆகும்.
Michaelerplatz, Vienna
மைகேலர்ப்லாஸ்
Author: Andrew Bossi (Creative Commons Attribution ShareAlike 2.5)


வோல்க்ஸ்கார்டன்
(Volksgarten)

மன்னன் ‘நெப்போலியன்’ (Napoleon) இந்த இடத்தில் இருந்த சுவர்களை தகர்த்து எறிந்துவிட்டு அதை ‘பிரான்ஸ்’ நாட்டு (French style) பாணியிலான பூங்காவாக மாற்றியப் பின் ‘வோல்க்ஸ்கார்டன்’ எனும் பெயரில் மக்களுக்கான பூங்காவாக (People's Garden) அது அமைந்தது.
Volksgarten, Vienna
வோல்க்ஸ்கார்டன்
Author: Danielsp (Creative Commons Attribution ShareAlike 3.0)


ஹெல்தேன்ப்லாஸ்
(Heldenplatz)

வீரர்களின் சதுக்கம் (Heroes' Square) எனப்பட்டது இந்த சதுக்கம். 19 ஆம் நூற்றாண்டில் ராஜாங்க சதுக்கமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில்தான் 1938 ஆம் ஆண்டில் ‘அடால்ப் ஹிட்லர்’ (Adolf Hitler) ‘ஜெர்மன் ரிச்சுடன்’ (German Reich) ‘ஆஸ்ட்ரியா’வை (Austria) இணைப்பதான அறிவிப்பை செய்தார்.

அல்டி புர்க்
(Alte Burg)

‘அல்டி புர்க்’ எனப்படுவது பழைய கோட்டையில் (old Castle) அன்றைய ராஜாங்கத்தின் அரண்மனை (Imperial Palace) வளாகம். 1913 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட புதிய கோட்டையான (New Castle) ‘நியூ புர்க் ‘(Neue Burg) என்பதின் பக்கத்தில் இது உள்ளது. இங்கு பல காட்சியகங்களும் மன்னர்கள் வீடுகளும் உள்ளன.

ஸ்பானிஷ்சே ரியிட்ஷுலி
(Spanische Reitschule)

குதிரையேற்றப் பயிற்சி தரும் இடமே ஸ்பானிஷ்சே ரியிட்ஷுலி என்பது . இங்கு குதிரைகளுக்கு (Horses) பயிற்சி தரப்பட்டது. ‘ஜோசப் பென்ஹர்ட் பிஷெர் வான் எர்லச்’ (Joseph Bernhard Fischer von Erlach) என்பவர் ‘வின்டர்ரியிட்ஷுலி’ (Winterreitschule) அதாவது குளிர்கால பயிற்சி இடம் எனப்பட்ட இந்த இடத்தில் குதிரையேற்ற பயிற்சிக்கான காட்சிகளை (Shows) நடத்திக் காட்டி வந்தார்.

ஜோசெப்ஸ்ப்லாஸ்
(Josefsplatz)

‘ஜோசெப்ஸ்ப்லாஸ்’ எனப்படும் இந்த சதுக்கத்தில் மன்னன் ‘ஜோசப் II’ (Joseph II) என்பவர் குதிரை மீது ( horseback) அமர்ந்து உள்ள சிலை உள்ளது. அதற்குப் பின் புறத்தில் ‘ஜோசப் பென்ஹர்ட் பிஷெர் வான் எர்லச்’ (Joseph Bernhard Fischer von Erlach) என்பவர் நிறுவி இருந்த ‘நேஷனல் லைப்ரரி ஆப் ஆஸ்ட்ரியா’ (National Library of Austria) எனும் வாசகசாலை உள்ளது. ‘ஐரோபியாவிலேயே’ மிக அழகான (most beautiful) ‘ஹால் ஆப் ஹானர்’ (Hall of Honour) எனப்படும் வாசகசாலைக் கூடம் இங்குள்ளது.
Josefsplatz, Vienna
ஜோசெப்ஸ்ப்லாஸ்
Author: UrLunkwill (Creative Commons Attribution ShareAlike 3.0)


ஆகஸ்டினேர்கிற்சே
(Augustinerkirche)

14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘கோதிக் ஆகஸ்டினேயன்’ (Gothic Augustinian) தேவாலயம் இது. இந்த தேவாலயத்திற்குள் ‘மரியா தெரிசா’வின் (Maria Theresa) அன்பிற்குரிய மகளான ‘மேரி க்ரிஸ்டியானா’வின் (Marie-Christina) கல்லறை (Tomb) உள்ளது.

ஆல்பர்டினா
(Albertina)

‘மரியா தெரிசா’வின் (Maria Theresa) அன்பிற்குரிய மகளான ‘ஆர்ச்டுசெஸ் மேரி க்ரிஸ்டியானா’ (Marie-Christina) மற்றும் அவர் கணவரான ‘டியூக் ஆல்பர்ட்’ (Duke Albert) என்பவர்களின் ‘ஹப்ஸ்புர்க்’ (Habsburg) எனும் அரண்மனை இருந்த இடம் ‘ஆல்பர்டினா’. அங்குள்ள வரலாற்று சிறப்பு மிக்க கூடம் (Historic State Room) அற்புதமான கலையழகில் கட்டப்பட்டு உள்ளது.

கபுசினர்கிற்சே
(Kapuzinerkirche)

புதிய கடைவீதி எனப்படும் ‘நியூ மார்கெட்டின்’ (Neuer Markt) தென்கிழக்குப் பகுதியில் உள்ள ‘கபுசினர்கிற்சே’ எனும் இந்த இடத்தில்தான் ‘ஹப்ஸ்புர்க்’ (Habsburg) குடும்பத்தினரின் ‘கைசெர்க்ரப்ட்’ (Kaisergruft) எனப்படும் நிலவறைக் கண்ணாடி கல்லறை (crypt) உள்ளது.

ஸ்டட்பலாச்சிஸ் தேச ப்ரின்ஸ்சென் யுகேன்
(Stadtpalais des Prinzen Eugen)

1694 ஆம் ஆண்டு
‘ஸ்டட்பலாச்சிஸ் தேச ப்ரின்ஸ்சென் யுகேன்’ எனப்படும் இந்த மாளிகையை ‘சவாய்’ (Savoy) நாட்டை சேர்ந்த இளவரசர் ‘யுகேன்’ (Prince Eugene) கட்டினார். இதை வடிவமைத்தவர் ‘ஜோசப் பென்ஹர்ட் பிஷெர் வான் எர்லச்’ (Joseph Bernhard Fischer von Erlach) என்பவர். இந்த அரண்மனைக்குள் சென்றுப் பார்க்க எவரும் அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் அங்குள்ள அற்புதமான நீர் ஊற்றையும் (Fountain) அதன் உள் அழகையும் வெளியில் இருந்து காண முடியும்.
‘கர்ட்னேர் ஸ்ராபே’ எனும் இது ஒரு காலத்தில் ‘வியன்னா’வின் முக்கியமான வீதியாக (main road in Vienna) இருந்தது. இது தற்போது உயர்தரமான கடைகளை உள்ளடக்கிய வீதியாக உள்ளது . இந்த சாலையில் நடந்துதான் செல்ல முடியும். மேலும் இதனுள் ‘சர்ச் ஆப் தி நைட்ஸ் ஆப் மால்டா’ (Church of the Knights of Malta) எனும் ‘மால்டா’ வீரர்களின் தேவாலயம் உள்ளது.
Kärtnerstraße at night, Vienna
இரவில் கர்ட்னேர்ஸ்ராபே
Author: Michael Schmid (Creative Commons Attribution ShareAlike 2.5)


நியூ டவுன் ஹால்
(New Town Hall)

நியூ டவுன் ஹால் எனப்படும் ‘நெயிஸ் ரதவுஸ்’ (Neues Rathaus) ‘நியோ கோதிக்’ நடையில் (Neo Gothic Style) 1872 -1883 யில் ‘பெட்ரிச் ஷ்மிட்ச்’ (Friedrich Schmidt) என்பவரால் கட்டப்பட்டு உள்ளது. இது ‘வியன்னா’வின் (Vienna) மிக முக்கியமான (Land மார்க்) இடம் ஆகும். இங்குள்ள மத்திய கோபுரத்தின் உயரம் 98 மீட்டர்.
Neues Rathaus, Vienna
நியூ டவுன் ஹால் எனப்படும் நெயிஸ் ரதவுஸ்
Author: Gryffindor (Creative Commons Attribution ShareAlike 3.0)


பார்லமெண்ட்
(Parlament)
பார்லமென்ட் என்பது ‘ஆஸ்ட்ரியா’வின் (Austria) பாராளு மன்றம் (Parliament). 1883 ஆம் ஆண்டில் இதை ‘டச்’ (Dutch) நாட்டை சேர்ந்த ‘தியோபில் ஹென்சன்’ (Theophil Hansen) என்பவர் கட்டினார்.
Parlament, Vienna
பார்லமெண்ட்  எதிரில் அதெனாவின் சிலை
Author: Gryffindor (public domain)


புர்க் தியேட்டர்
(Burgtheater)

1888 ஆம் ஆண்டு ‘ஜெர்மானிய’ மக்களுக்காக கட்டப்பட்ட இந்த பெருமை வாய்ந்த திரை அரங்கம் (prestigious theaters) தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் உலகப் போரில் (Second World War) நாசம் அடைந்த இந்த அரங்கத்தின் பாதிப்படைந்த பகுதிகளே தெரியாத அளவில் இந்த திரை அரங்கம் புதுப்பிக்கப்பட்டு (well restored) விட்டது. இந்த அரங்கை வடிவமைத்தவர் ‘கார்ல் வான் ஹசெநேயூர்’ (Karl von Hasenauer) மற்றும் ‘கோட்டிபைடு செம்பர்’ (Gottfried Semper) என்பவர்கள் .
Burgtheater, Vienna
புர்க் தியேட்டர்

வியன்னா பலகலைக் கழகம்
(Vienna University)

‘ஜெர்மன்’ உலகில் மிகப் பழமையான பல்கலைக் கழகமான இதை 1365 ஆம் ஆண்டில் ‘ருடால்ப் IV’ (Rudolf IV) என்பவர் ஆரம்பித்தார். இந்த பல்கலைக் கழகத்தின் கட்டிடம் 1883 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதை ‘இத்தாலிய’ நடையழகில் (Italian style) ‘ஹைன்றிச் பெஸ்டல்’ (Heinrich Festel) என்பவர் வடிவமைத்து உள்ளார்

வோடிவ்கிற்சே
(Votivkirche)

‘வோடிவ்கிற்சே’ எனும் தேவாலயம் (Church) ‘நியோ கோதிக்’ (Neo-Gothic) நடையழகில் 1853 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதனுடன் சேர்ந்த இரண்டு 99 மீட்டர் உயர கூர்மையான கோபுரங்கள் (Steeples) 26 ஆண்டுகளுக்குப் பின் கட்டப்பட்டு உள்ளன. மன்னர் ‘பிரான்க் ஜோசப் I’ (Emperor Franz Joseph I) என்பவரை ஒரு மன நோயாளி (Deraged man) கொல்ல முனைந்த அதே இடத்தில்தான் இந்த தேவாலயம் கட்டப்பட்டு உள்ளது.

பிரியுத் மியூசியம்
(Freud-Meseum)

19 ,பெர்கச்ஸ்சி என்ற இடத்தில் உள்ள மியூசியம் மன நோயாளிகளை குணப்படுத்த வழி காட்டிய முன்னோடியான (Father of psychoanalysis) ‘சிக்முண்ட் பிரியுத்’ (Sigmund Freud) என்பவர் வாழ்ந்து வந்த இடம். அவர் நோயாளிகளை குணப்படுத்தி வந்த அறை, அவர் சேர்த்து வைத்துள்ள புராதானப் பொருட்கள் (archaeological stuff) போன்றவற்றை அங்கு காணலாம்.

ஜோசப்பீனம்
(Josephinum)

‘ஜோசப்பீனம்’ என்பது வியன்னாவின் உடற்கூறு சம்மந்தப்பட்ட(Anatomy Institute) பல்கலைக் கழகத்தின் முயூசியம் (Museum) ஆகும் . அங்கு மருத்துவர்களுக்கு உடற்கூறு சம்மந்தமான மருத்துவத்தைப் போதிக்க நிஜ அளவிலான (life-sized) உடற்கூறு மாதிரிப் பொருட்கள் (Models) வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை மன்னன் ‘ஜோசப் II’ (Emperor Joseph II) என்பவர் திறந்து வைத்தார்.

உலக புராதான சின்ன விவரம்
(World Heritage Site Inscription Details)

உள்ள இடம் : N 48 13 0 E 16 23 0
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2001
பிரிவு : கலை
தகுதி : II, IV, VI

உள்ள இடம்
(Location)

‘ஆஸ்ட்ரியா’வின் (Austria) கிழக்குப் பக்கத்தில் உள்ளது ‘வியன்னா’ (Vienna) . இது ‘ஸ்லோவாகியா’ (Slovakia) நாட்டின் தலை நகரான ‘பிராடிஸ்லவா’ (Bratislava) என்ற நகரின் அருகில் உள்ளது. ‘வியன்னா’வைப் போல உள்ள ‘ஆஸ்ட்ரியா’வின் மற்ற நகரங்கள் ‘கிராஸ்’ (Graz) மற்றும் ‘சல்ஸ்புர்க்’ (Salzburg) என்பவை.

இந்த புராதான சின்ன மையத்துக்கு எப்படிச் செல்லலாம்
(Visiting Historic Centre of Vienna)

நீங்கள் இந்த புராதான சின்னங்கள் உள்ள இடத்துக்கு செல்ல வேண்டும் எனில் ‘வியன்னா’வில் தங்க வேண்டும். ‘வியன்னா’வில் உள்ள நல்ல ஹோட்டல்களைப் (hotels in Vienna) பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அங்கு செல்வது எப்படி
(Getting there)
விமானம் மூலம் (By plane)

‘வியன்னா’விற்கு விமானம் மூலம் செல்ல வேண்டும் எனில் அங்குள்ள ‘வியன்னா’ சர்வதேச விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து டாக்சி அல்லது உள்ளூர் ரயிலில் ஏறி நகருக்குள் செல்லலாம். அந்த விமான நிலையம் ‘வியன்னா’வில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அந்த விமான நிலையத்திற்கு ‘ஆஸ்ட்ரியா’ மற்றும் குறைந்தக் கட்டண விமான சேவை தரும் ‘ப்ளை நிகி’ (Fly Niki) போன்ற விமான சேவை அமைப்புக்கள் விமானங்களை இயக்குகின்றன. அங்கிருந்து உள்ளூருக்கு செல்ல டாக்சி வண்டிக் கட்டணம் €40 ஆகும். ஆனால் அந்த விமான நிலையத்தில் இருந்து ரயிலில் சென்றால் அதற்கான கட்டணம் €10 மட்டுமே ஆகும். அது 16 நிமிஷங்களில் நகருக்குள் சென்று விடும்.

ரயில் மூலம் (By Train)
‘வியன்னா’விற்கு பக்கத்தில் உள்ள நாடுகளில் இருந்தும் ரயில் மூலம் செல்ல முடியும். அதற்கான ரயில் பயண நேரம் ‘ப்ராடிஸ்லாவாவில்’ (Bratislava) இருந்து 2 மணி நேரம், ‘புத்தபெஸ்ட்டில்’ (Budapest) இருந்து 3 மணி நேரம் மற்றும் ‘பிராக்கில்’ (Prague) இருந்து 4 1/2 மணி நேரம் ஆகும். பல ‘ஐரோப்பிய’ நாடுகளில் (European Cities) இருந்தும் இங்கு செல்ல ரயில் சேவை உள்ளது.

காரில் செல்ல (By Car)

‘வியன்னா’வில் கார் ஓட்டிக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் ஹைவே சுங்கவரி ஸ்டிக்கர் (Highway Toll Sticker) தேவை. அங்கு கார்களின் 3.5 டன் வண்டிக்கான வாடகைக் (Rent) கட்டணம் 10 நாட்களுக்கு €7.70. இரண்டு மாதத்திற்கான கட்டணம் €22.20 மற்றும் ஒரு வருடத்திற்கு கட்டணம் €73.80 ஆகும்.

No comments:

Post a Comment