அஜர்பைஜான் சுற்றுலாக் குறிப்புக்கள்
அஜர்பைஜான் மலைப் பகுதி
'அஜர்பைஜான்'னின் எல்லையில் உள்ள (exclaved landlocked part) நிலப்பகுதி 'ஆர்மேனியாவின்' வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையேயும், 'இரானின்' தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையேயும் சிறிதளவு ஊடுருவி உள்ளது. அதாவது 'ஆர்மேனியா' மற்றும் 'இரான்' நாடுகளுடனான அதன் எல்லை கூம்பு போல அந்த நாடுகளுக்கு உள்ளே நீண்டு உள்ளது. அது போலவே 'துர்கி ' (Turkey) நாட்டின் வட மேற்குப் பகுதியிலும் 'அஜர்பைஜான்'னின் எல்லைப் பகுதி புகுந்து உள்ளது.
பாகுவில் பீபி ஹெய்பாட் மசூதி
கொய்டேபேயில் ரஷ்யன் ஆர்தடாக்ஸ் சர்ச்
Author: Emin Bashirov (Creative Commons Attribution 3.0 Unported)
'அஜர்பைஜானில்' மனிதர்கள் வாழ்கை கற்காலம் (stone age) தொட்டு இருந்து உள்ளது என்கிறார்கள். இந்த நாட்டை மாமன்னன் 'அலேக்சாண்டர்' (Alexander) முதல் 'செலியூசிட் மன்னர்' (Seleucid Empire) வரை ஆண்டு வந்து உள்ளார்கள். நான்காம் நூற்றாண்டில் (4th century) 'காகசியன் அல்பேனியர்கள்'தான் (Caucasian Albanians) முதன் முதலாக இந்த நகருக்கு வந்தவர்கள். மேலும் அதே நூற்றாண்டில்தான் மன்னன் 'ஊர்னியார்' (King Urnayr) என்பவர் கிருஸ்துவ மதத்தை அந்த நாட்டு அரசின் மதமாக்கினர்.
ஆனால் அதன் பின் 667 AD யில் 'உமாயாட் கலிபேட்' (Umayyad Caliphate) என்பவர் அந்த நாட்டை முஸ்லிம் நாடாக மாற்றினார். AD 1030 ஆம் ஆண்டில் மத்திய ஆசியாவின் 'துர்கிக் ஓகுஸ்' (Turkic Oghuz ) என்ற பழங்குடி இனத்தவர் அந்த நாட்டை ஆக்ரமித்துக் கொள்ள நாளடைவில் அவர்களின் ஜனத்தொகை பெருகிக்கொண்டே போயிற்று. அவர்கள் பேசிய மொழியான 'துர்கிக்' (Turkic) என்பதே 'அஜிரி' (Azeris) எனப்படும் தற்போதைய 'அஜர்பைஜானின்' மொழியாகும்.
1813 ஆம் ஆண்டுவரை 'அஜர்பைஜானை 'கனேடேஸ்' (khanates) என்பவர்கள் ஆண்டு வந்தார்கள். அதன் பின் அந்த நாடு ருஷ்யர்கள் வசமாகியது. அதை 'ஆர்மேனியா' (Armenia) மற்றும் 'ஜார்ஜியா'வுடன் (Georgia) சேர்ந்து 'திரான்ஸ்காகசியன் ஜனநாயக கூட்டு பிரதேசமா'க்கினார்கள் (Transcaucasian Democratic Federative Republic) . அதன் பின் 1918 ஆம் ஆண்டு 'அஜர்பைஜான்' தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டாலும் அடுத்த 23 மாதங்களில் சோவியத் யூனியனின் 11 வது சிவப்பு ராணுவத்தை (11th Soviet Red Army ) சேர்ந்த 'போல்ஷெவிக்' (Bolshevik) அதன் மீது படையெடுத்து பிடித்துக் கொண்டு 28 -04 -1920 ஆம் தேதி 'அஜர்பைஜான் சோவியத் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக்' (Azerbaijan Soviet Socialist Republic) என அந்த நாட்டை பிரகடனம் செய்தது.
ஆனால் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதற்கு முன்னால் மீண்டும் 'அஜர்பைஜான்' 18-10-1991 ஆம் தேதியன்று தன்னை அதில் இருந்து விலக்கிக் கொண்டு தனி நாடாக பிரகடனம் செய்து கொண்டது. 'ஆர்மெனியா'வுடனான நோகோர்னோ-கரம்பக் (Nagorno-Karabakh War) சண்டையில் 'அஜர்பைஜான்' நோகோர்னோ-கரம்பக்கையும் சேர்த்து 16 % பிரதேசத்தையும் பல மக்களின் உயிர்களையும் இழந்தது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம், லஞ்ச ஊழல் மற்றும் நிர்வாகத் திறமை இல்லாமை போன்றவை நாட்டின் வளர்ச்சியை பெரிதும் பாதித்து வந்தாலும் இப்போது அந்த நாடு மெல்ல மெல்ல சீரடைந்து வருகின்றது.
குபா எனும் இடம்
Author: Gulustan (Creative Commons Attribution 3.0 Unported)
'அஜர்பைஜான்' செல்ல வேண்டுமா
(Visiting Azerbaijan)
'அஜர்பைஜான்' செல்ல விசா (Visa) பெற வேண்டும். ஆனால் பாஸ்போர்டில் (Passport) நோகோர்னோ-கரம்பக்கிற்குச் செல்ல அனுமதி வாங்கி இருந்தால் 'அஜர்பைஜானில் நுழைய அனுமதி தரப்படுவது (barred ) இல்லை. அது போல ஆர்மெனியாவை சேர்ந்தவர்களுக்கும் 'அஜர்பைஜானில் நுழைய அனுமதி தரப்படுவது இல்லை.
விமானப் பயணம்
(By Plane )
‘பாகு’ எனும் இடத்தில் உள்ள ஹைதர் அலியேவ் சர்வதேச விமான நிலையம் (Heydar Aliyev International Airport (GYD)) சென்று அங்கிருந்து 'அஜர்பைஜான்' nagarukkul chellalaam. 'அஜர்பைஜான்' தேசிய விமான சேவை 'லண்டன்' (London) , 'மிலன்' (Milan), 'பாரிஸ்'(Paris) போன்ற பல இடங்களுக்கு விமான சேவையை வைத்துள்ளது.
அஜர்பைஜானின் முக்கியமான நகரங்கள்
( Major Cities in Azerbaijan )
தலை நகரம் - பாகு
(Baku - capital )
கஞ்சா
(Ganja)
லன்காரன்
(Lankaran )
மின்ஜிசிவிர்
(Mingechivir)
நப்டலான்
(Naftalan)
நாக்கிசேவன் நகரம்
(Nakhichevan City)
ஷேக்கி
(Sheki)
சும்கயிட்
(Sumqayit)
ஸச்மாச்ஸ்
(Xachmaz)
அஜர்பைஜானில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Azerbaijan)
கினாலுக்
(Khinalug)
கோபுஸ்தானின் பெரோகிளிப்ஸ்
(Petroglyphs of Gobustan)
அஜர்பைஜானில் யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Andorra)
(1) அரண் அமைக்கப்பட்ட ‘பாகு’ எனும் நகரம், ச்ரீவன்ஷாவின் அரண்மனை மற்றும் ‘மைடின் டவர்’ {(Walled City of Baku with the Shirvanshah's Palace and Maiden Tower (2000) }
(2) கோபுஸ்தான் ராக் ஆர்ட்கல்சரல் லாண்ட்ஸ்கேப்
{(Gobustan Rock Art Cultural Landscape (2007) }
எனக்கு உதவி செய்யுங்கள்
(Help Me Get It Right)
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள விவரங்களில் தவறு இருந்தால் அல்லது மேலும் வேறு தகவல்களை தந்தால் அதையும் பிரசுரிக்கின்றேன்
No comments:
Post a Comment