(Read Original Article in :- Gobustan-rock-art_azerbaijan)
'அஜர்பைஜானில்' (Azerbaijan) பாறைகள் மீது அற்புதமாக செதுக்கப்பட்டு உள்ள சிற்பங்களைக் கொண்ட 'கோபுஸ்தான் ராக் ஆர்ட் கல்சரல் லாண்ட்ஸ்கேப்' (Gobustan Rock Art Cultural Landscape) என்பது 40,000 வருடங்களுக்கு முற்பட்டது. 'நியூசிலாந்தில்' (New Zealand) 'கிரிஸ்ட் சர்ச்' (Christchurch) எனும் இடத்தில் 2007 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 2 ஆம் தேதிவரை நடைபெற்ற 31 வது உலக பாதுகாப்பு சின்ன அமைப்பினர் (World Heritage Committee) விவாதக் கூட்டத்தில் (session) அங்குள்ள குகைகள் மற்றும் கல்லறைகள் போன்றவை 'அஜர்பைஜானின்' யுனேஸ்கோ உலக புராதான சின்ன மையமாக ஏற்கப்பட்டது.
'கோபுஸ்தான்' (Gobustan) அல்லது 'குவோபுஸ்தான்' (Qobustan) என்ற அந்த இடம் அடர்ந்த பாறைகள் மீது மிருகவகை (Fauna) , தாவர வகை (Flora) , வேட்டையாடுதல் (Hunting) மற்றும் கற்கால மனித வாழ்கை (Prehistoric lifestyle) போன்ற அற்புதமான சித்திரங்களை செதுக்கி உள்ளதற்காகவே உலக புராதான சின்னமாக ஏற்கப்பட்டு (recognised) உள்ளது. இந்த இடத்தை ஏதேற்சையாகவே கண்டு பிடித்து உள்ளார்கள். மலைகள் மீது நீண்டு இருந்த பாறைகள் (cliffs) உடைந்து ஒன்றன் மீது ஒன்றாக விழுந்து குகைப் போன்ற பகுதிகளையும் (Caves) சுவர்போன்ற இடங்களையும் உருவாக்கி உள்ளது என்றும் அந்தப் பாறைகளில்தான்(Boulders) இந்த சிற்பங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன என்றும் கூறிகிறார்கள்.
'கோபுஸ்தான் ராக் ஆர்ட்
Gobustan Rock Art, Azerbaijan
Author: Bruno Girin (Creative Commons Attribution 2.0)
Gobustan Rock Art, Azerbaijan
Author: Bruno Girin (Creative Commons Attribution 2.0)
கோபுஸ்தானில் ஒன்றன் மீது ஒன்றாக முட்டிக் கொண்டு
உள்ள பாறைக் காட்சி
Author: Bruno Girin (Creative Commons Attribution 2.0)
உள்ள பாறைக் காட்சி
Author: Bruno Girin (Creative Commons Attribution 2.0)
கோபுஸ்தானில் பாறைகளின் இடையே ஏரிமலைக் குழம்பு உள்ள காட்சி
Author: Bruno Girin (Creative Commons Attribution 2.0)
'கோபுஸ்தான் ராக் ஆர்ட் கல்சரல் லாண்ட்ஸ்கேப்' பில் என்ன பார்க்கலாம்
(What to See in Gobustan Rock Art Cultural Landscape)
கோபுஸ்தான் பாறைகளில் உள்ள சித்திரங்கள் வரையப்பட்டவை அல்ல. மாறாக அந்த சித்திரங்கள் பாறைகள் மீது செதுக்கப்பட்டு உள்ளன. அது போல அங்கு பாறைகளின் மத்தியில் சிறு குளங்களைப் போல காணப்படும் ஏரிமலை தீப் பிழம்பினால் ஏற்பட்டுள்ள மணல் குழம்புகள் பார்க்க வேண்டியவை.
யுனேஸ்கோ உலக புராதான சின்ன மைய விவரம்
இது உள்ள இடம்:-N 40 7 30 E 49 22 30
அங்கீகரிக்கப்பட்ட காலம் 2007
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம்: III
'கோபுஸ்தான்' உள்ள இடம்
(Location Gobustan)
'அஜர்பைஜானின்' உள்ள 'பாகு' எனும் மாகாணத்தில் இருந்து தென்மேற்குப் பகுதியில் 64 கிலோ தொலைவில் ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் உள்ளது 'கோபுஸ்தான்'
'கோபுஸ்தானைக்' காண வேண்டுமா
(Visiting Gobustan Rock Art Cultural Landscape)
'கோபுஸ்தானைக்' காண வேண்டும் எனில் 'ஹைதர் அலியேவ்' சர்வதேச விமான நிலையத்திற்கு (Heydar Aliyev International Airport (GYD)) சென்று விட்டு அங்கிருந்துதான் செல்ல வேண்டும். அந்த விமான நிலையத்திற்கு 'ஆஸ்திரியா ஏர்லயின்ஸ்' (Austrian Airlines) , 'துர்கி ஏர்லயின்ஸ்' (Turkish Airlines) , 'லுப்தான்சா' (Lufthansa) , 'ஏர் பசுபிக்' (Air Pacific) போன்ற விமான சேவைகள் உள்ளன.
No comments:
Post a Comment