2005 மற்றும் மீண்டும் 2008 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ள புராதான சின்ன மையங்களே (UNESCO World Heritage Sites) ‘அல்பானியாவில் (Albania) உள்ள ‘பிராட்’ (Berat) மற்றும் ‘ஜிரோகஸ்ட்ரா’ (Gjirokastra) என்ற இரண்டு இடங்கள். அங்குள்ள மொத்தப் பரப்பளவான (including Buffer zone) 136.2 ஹெக்டர் நிலத்தில் இவை இரண்டும் 58.9 ஹெக்டேர் நிலப்பரப்பில் (Core zones) அமைந்து உள்ளன.
‘பிராட்’ மற்றும் ‘ஜிரோகஸ்ட்ரா’வில் என்ன பார்க்க முடியும்
(What to See in Berat and Gjirokastra)
‘பிராட்’ நகரைப் பொறுத்தவரை அங்கு உள்ள 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள ‘கலா’ (Kala) எனும் அரண்மனைக் கோட்டையின் (castle) வரலாறு 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாம். மேலும் அந்த நகரில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ‘பைசண்டயின்’ (Byzantine) காலத்தை சார்ந்த தேவாலயங்கள் (Churches) மற்றும் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஓட்டமான் (Ottaman) காலத்தை சேர்ந்த மசூதிகளும் (Mosques) உள்ளன.'மொலிஸ்ட் நதியுடன்' (Molisht river) 'ஒஸும் நதி' (Osum river) இணையும் இடத்தின் சற்று முன்புறம் வலது பக்கத்தில் அமைந்து உள்ள 'பிராட்' நகரத்தின் ஜனத்தொகை 45,000 ஆகும்.
அது போல 'ட்ரினோஸ் நதி வால்லியி'ல் (Drinos river valley) உள்ள 'ஜிரோகஸ்ட்ரா' நகரில் இன்றும் நல்ல முறையில் உள்ள 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு மாடிக் கட்டிடங்கள் (two-storey houses), 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மசூதி மற்றும் இரண்டு தேவாலயங்கள் உள்ளன. இந்த நகரில்தான் 'அல்பானியா' நாட்டு கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியான (Communist dictator) 'என்வர் ஹோக்ஸ்லா' (Enver Hoxha) என்பவர் 1908 ஆம் ஆண்டு பிறந்தார்.
உலக புராதான சின்ன மைய விவரங்கள்
(World Heritage Site Inscription Details)
இருப்பிடம் : N40 4 10 E20 7 60
அங்கீகரிக்கப்பட்ட காலம் : 2005
என்ன பிரிவு : கலை
தகுதியின் விவரம் : III, IV
இந்த இடத்திற்கு உலக புராதான சின்ன மையமாக அங்கீகாரம் தர 2005 மற்றும் 2008 ஆம் ஆண்டில் உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 முதல் 17 ஆம் தேதிவரை 'தென் ஆப்பிரிக்கா'வின் (South Africa) 'டர்பன்' (Durban) நகரில் நடைபெற்ற கூட்டத்தில் 'பிராட்' மற்றும் 'ஜிரோகஸ்ட்ரா' நகரங்கள் புராதான சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டன.
இந்த இடங்களுக்கு எப்படி செல்லலாம் (Visiting this Site)
முதலில் 'அல்பானியா'வின் தலை நகரமான 'திரானாவிற்கு' வந்து விட்டே அங்கு செல்ல வேண்டும். 'திரானா'வில் இருந்து 'புர்கான்' (furgon) என அழைக்கப்படும் பயணக் கட்டண பங்கீட்டு முறையில் பலர் செல்லும் வாடகை வண்டியில் (Share Taxi) ஏறி அங்கு செல்லலாம். அல்லது பஸ்சிலும் (Bus) செல்லலாம்.

'திரானாவில்' உள்ள ஹோட்டல்கள்
(1) பரன் ஹோட்டல்
(Baron Hotel)
(2) சிட்டி ஹோட்டல்
(City Hotel)
(3) பிரிட்டிஸ் ஹாஸ்டல்
(Freddy's Hostel )
(4) ஹக்ஸ்யு ஹோட்டல்
(Haxhiu Hotel)
(5) ஹாஸ்டல் அல்பானியா
(Hostel-Albania)
(6) ஹோட்டல் பிரில்லியண்ட் ஆண்டிக்
(Hotel Brilant Antique )
(7) லோரிணி ஹாஸ்டல்
(Loreni Hostel)
(8) நோபில் ஹோட்டல் டிரானா
(Nobel Hotel Tirana )
(9) ஒரேஸ்டி ஹோச்டல்
(Oresti Hostel )
(10) செக்கோ இம்பிரியல் ஹோட்டல்
(Xheko Imperial Hotel)
இங்கு கிளிக் செய்து 'திரானா'வில் உள்ள அனைத்து ஹோட்டல்களின் (hotels in Tirana) விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
கீழ் கண்ட தளங்களிலும் சென்று நீங்கள் தங்கும் இடத்திற்கான முன் பதிவு செய்யலாம்.
(1) அல்பானியாவின் ஹோட்டல்கள் (hotels in Albania)
(2) உலகின் பல்வேறு ஹோட்டல்கள் (hotels worldwide)
(3) உலகின் பல்வேறு ஹாஸ்டல்கள் (hostels worldwide)
அல்பானியா தேவாலயம்
Author: Joonas Lytinen (Creative Commons Attribution 2.0)
Author: Joonas Lytinen (Creative Commons Attribution 2.0)
பேராத் ஆர்த்தடாக்ஸ் தேவாலயம் Author: Decius (Creative Commons Attribution ShareAlike 3.0)
No comments:
Post a Comment