பெல்ஜியம் சுற்றுலாப்
பயணக் குறிப்புக்கள்
பயணக் குறிப்புக்கள்
(Read Original Articles in :- Belgium)
அன்ட்வெர்பில் இரவில் கிரோடி மார்கெட்
மேற்கு ஐரோப்பியாவில் (Europe) மிகச் சிறிய நாடே 'பெல்ஜியம்' (Belgium) . இது ஐரோப்பியாவின் மத்தியப் பகுதியில் உள்ளதினால் இந்த நாட்டின் தலை நகரமான 'ப்ருச்சில்ஸ்' (Brussels) என்பது NATO நாடுகளின் மற்றும் ஐரோப்பிய கூட்டுறவு நாடுகளின் (Europian Union) ஒரு இடமாகவும் உள்ளது. 'பெல்ஜியத்தின்' வடக்கு எல்லை (Border) 'நெதர்லாந்' (Netherlands ), கிழக்கு எல்லை 'ஜெர்மனி' ( ஜெர்மனி), தென்கிழக்கு எல்லை 'லசேம்போர்க்' (Luxembourg ) மற்றும் தென் மேற்கு எல்லை 'பிரான்ஸ்' ( France ) போன்ற நாடுகளுடன் உள்ளன.
'பெல்ஜியம்' இரண்டு பிரிவுகளாக உள்ளது. வடக்கில் உள்ள பகுதி 'ப்லான்டர்ஸ்' (Flanders) என்றும் தென் பகுதி 'வல்லோனியா' (Wallonia) என்றும் அழைக்கப்படுகின்றது. வடக்குப் பகுதியில் உள்ளவர்கள் 'ப்ளெமிஷ்' (Flemish) என்ற பாஷையைப் பேசுகிறார்கள். தென் பகுதி மக்கள் 'பிரான்ஸ்' நாட்டு மொழியைப் பேசுகிறார்கள். ஆக இந்த நாட்டின் இரண்டு பகுதிகளும் மொழியினால் பிரிக்கப்பட்டு உள்ளன. 'ப்ருச்சில்ஸ்' நகரில் பெரும்பாலோனோர் பேசுவது பிரஞ்ச் மொழியே.
ச்ப்ருஜெஸ் வாய்க்கால் எனும் கனால்
பெல்ஜியம் பற்றிய சில செய்திகள்
(Fast Facts about Belgium)
அதிகாரபூர்வமான பெயர் : பெல்ஜிய ராஜ்ஜியம் தலை நகர் : ப்ருஸ்செல்ஸ் (1,750,000 மக்கள் )
மொத்த மக்கள் தொகை : 10,339,000 மக்கள் நாணயம் : யூரோ
பேசும் மொழிகள் : டச் , பிரெஞ்சு , ஜெர்மன் மதம் : ரோமன் கத்தோலிக் , ப்ரோடேஸ்டன்ட்
பரப்பளவு : 32,820 சதுர கிலோ மீட்டர் (12,672 சதுர மைல்)
பெல்ஜிய நாட்டிற்கு போவதற்கு சிறந்த காலம் எது.
(When to visit Belgium )
இந்த நாட்டின் சீதோஷ்ண நிலை எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே கூற முடியாது என்றாலும் 'மே' மற்றும் 'செப்டம்பர்' (May and September) மாதங்கள் அங்கு செல்ல சிறந்த மாதங்களாகும். ஆகவே அந்த நேரத்தில் அந்த நாட்டில் கூட்டம் அதிகம் இருக்கும்.
அந்த நாட்டிற்கு செல்லும்போது வெய்யலுக்கு ஏற்றபடி மெல்லிய துணிகளையும், குளிர்காலத்தில் சென்றால் சிறிது தடிமனான துணிகள் மற்றும் குடை அல்லது மழைக் கோட்டை கையில் வைத்து இருப்பது அவசியம்.
அங்கு செல்வது எப்படி
விமானம் மூலம்
(Getting into Belgium By Flight )
'ப்ருச்செல்ச்ஸ்' நகரின் வெளியில் 'ஸவென்டம்' (Zaventem) என்ற ஊரில் உள்ளது 'பெல்ஜிய சர்வதேசிய விமான நிலையம்' {(Brussels International Airport, www.brusselsairport.be, (BRU)}. இந்த விமான நிலையத்துக்கு 'லண்டனில்' (London) இருந்து 50 நிமிடங்களில் போய் சேர்ந்து விட முடியும். இந்த விமான நிலையத்துக்கு 'பெல்ஜியன் தேசிய விமான சேவை' உள்ளது. அதன் இணைய தளம் , www.brusselsairlines.com . விமான நிலையத்தில் இருந்து நகருக்குச் செல்ல எக்ஸ்பிரஸ் ரயில்கள் உள்ளன. அதில் ஏறினால் 25 நிமிடங்களில் நகருக்குள் சென்று விடலாம். அதற்கான கட்டணம் 2.80 யூரோ . ரயிலைத் தவிர பஸ் எண்கள் #12 and 13 போன்றவை விமான நிலையத்தில் இருந்து 'லக்சம்போர்கிற்கு' (Luxembourg) செல்ல 20-30 நிமிடத்துக்கு ஒரு பஸ் உள்ளது. அதன் கட்டணம் 3 யூரோ ஆகும். டாக்ஸி மூலம் சென்றால் கட்டணம் 30 யூரோ, ஆனால் அதே டாக்ஸிக்கு முன் பதிவு செய்து கொண்டால் கட்டணம் 20 யூரோ .
'ப்ருச்செல்ஸ்' 02 411 4142
'வேர்ட்ஸ்' : 02 349 4343.
சில டாக்ஸி சேவை மைய எண்கள் :
'ப்லேயுஸ்' 02 268 0000'ப்ருச்செல்ஸ்' 02 411 4142
'வேர்ட்ஸ்' : 02 349 4343.
மேலே கூறப்பட்டு உள்ள விமான சேவையைத் தவிர பெல்ஜியத்திற்குச் செல்ல 'ப்ருச்செல்ச்ஸ்'சில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் குறைந்தக் கட்டணத்தில் 'ராய்நேர்' (www.ryanair.com) மற்றும் 'விசைர்' ( www.wizzair.com) போன்ற விமான சேவைகள் உள்ள 'சார்லிரோய்' விமான நிலையம் {(Charleroi Airport, www.charleroi-airport.com, (CRL)} மற்றும் அன்த்வேர்ப் டிரேன் விமான நிலையம் {(Antwerp Deurne Airport (ANR)},போன்றவை உள்ளன. மேலும் 'ஆம்ஸ்டெர்டாம் ஷிபோல் விமான நிலையத்துக்கும்' {Amsterdam Schiphol Airport (AMS)} சென்று அங்கிருந்து 'ப்ருச்செல்ச்ஸ்' அல்லது அண்ட்வேர்பிற்கு (Antwerp) செல்லலாம்.
ரயில் மூலம்
(By Train )
நீங்கள் ரயில் மூலம் 'ப்ருச்செல்ச்ஸ்' செல்ல நிறைய வழிகள் உள்ளன. அவை 'லண்டனில்' (London) செல்லும் 'யூரோஸ்டார்' ரயில் (www.eurostar.com), 'கோலனில்' (Colone) இருந்து 'ஹைஸ்பீட் தலிச்ஸ்' ( www.thalys.com), 'பாரிஸ்' (Paris) மற்றும் 'ஆம்ஸ்டர்டாமில்' (Amsterdam) இருந்தும் ரயில் சேவைகள் உள்ளன.
அதுபோல 'ஜெர்மனி'யின் 'பிராங்க்பர்டில்' (Franfurt) இருந்து ஒரு நாளைக்கு ஒருமுறை செல்லும் ரயிலில் கட்டணம் 93 யூரோ ஆகும்.
எஸ்பேஸ் லியோபோல்ட், ஐரோப்பிய பாராளுமன்றம்
பெல்ஜியத்திற்குள் செல்ல
(Belgium Entry Requirement )
ஐரோப்பிய யூனியனை சார்ந்தவர்களுக்கு விசா தேவை இல்லை. 'ஆஸ்திரேலியா' (Australia), 'கனடா' (Canada) மற்றும் 'அமெரிக்க' (Americans) நாட்டவர்கள் ஆறுமாத காலத்துக்குள் மூன்று மாதம் 'பெல்ஜியத்தில்' இருக்க வேண்டும் என்றால் விசா (Visa) தேவை இல்லை.
பெல்ஜியத்திற்குள் சுற்றிப் பார்க்க
(Tour Inside Belgium )
'பெல்ஜியம்' சிறிய நாடு என்பதினால் உள்ளூரில் பயணிக்க விமானங்கள் இல்லை. அங்கு சிறந்த முறையில் ரயில் சேவைகள்(Belgium National Railway, www.b-rail.be ) உள்ளன. அவை பல இடங்களுக்கும் செல்கின்றன.
பெல்ஜிய நாணயம்
(Money )
'பெல்ஜியத்தின்' நாணயம் மற்றும் நாணய நோட்டுக்கள் (Currency Notes) யூரோ' €500, 200, 100, 50, 20, 10 போன்ற மதிப்பில் உள்ளன. உலோகத்திலான சில்லறை நாணயம் யூரோ €2 and 1, and 50, 20, 10, 5, 2 மற்றும் 1 சென்ட்ஸ் போன்றவை ஆகும். சாதாரணமாக வங்கிகள் பணி நேரம் திங்கள் கிழமை முதல் வெள்ளிக் கிழமை வரை (Mon-Fri ) காலை 9:00 am முதல் மாலை 4:00 pm வரை மட்டுமே.
பெல்ஜியத்தின் முக்கிய நகரங்கள்
(Main Cities in Belgium)
(1) ப்ருச்செல்ஸ் (Brussels)
தலை நகரம் மற்றும் மிகப் பெரிய நகரமும் கூட
(2) அன்ட்வேர்ப்
(Antwerp)
பெல்ஜியத்தின் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் ப்லாண்டார்ஸ் என்ற மாகாணத்தில் உள்ள அன்த்வேர்ப் மாவட்டத் தலை நகரம்
( Ghent )பெல்ஜியத்தின் மூன்றாவது பெரிய நகரம்.
(4) ப்ருஜெச்ஸ்
( Bruges )
வெனிஸ் நகருக்கு அடுத்தபடியாக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரும் ஐரோபியாவின் மிகப் பெரிய ஆனால் பழைய நகரம்.
(5) லைகே ( Liège )
மலைகள் சூழ்ந்த 'வல்லோனியா' மாகாணத்தின் பெரிய நகரம்
(6) நமூர்
( Namur )
'வல்லோனியா' மாகாணத்தின் நமுர் மாவட்டத்தின் தலைநகரம்
(7) டினன்ட்
( Dinant )
பல அற்புதமான இயற்கை காட்சிகள் கொண்ட சிறிய நகரம்
(8) லியூவேன்
( Leuven )
வரலாற்று சிறப்பு மிக்க மிகப் பழமையான பல்கலைக் கழகம் உள்ள, இரவு வாழ்க்கை அற்புதமான நகரம்.
(9) ஏப்ரேஸ் (Ypres )
இன்னும் ஒரு பெரிய நகரம்
பெல்ஜியத்தின் சிறப்பான அம்சங்கள்
(Top Attractions in Belgium )
(1) சாக்லேட் மற்றும் கோலா மியூசியம்சாக்லேட் சாப்பிட அருமையான இடம்
(2) மணிக்கேன் பிஸ் ஸ்டாச்சியூ
ப்ருச்சில்ஸ் நகரத்தின் சின்னமான சிறிய பையன்
(3) வாட்டர்லூ பாட்டால் பீல்ட்
மன்னன் நெபோலியன் தோல்வி பெற்ற இடம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Belgium )
(1) ப்லேமிஷ் பிகுநேஜெஸ் (Flemish Béguinages)
(2) லா கிராண்ட் பிலேஸ்
(La Grand-Place, Brussels)
(3) தி போர் லிப்ட்ஸ் ஆன் தி கனால் டியூ செனட்டர்
(The Four Lifts on the Canal du Centre and their Environs, La Louvière and Le Roeulx (Hainault)
(4) பெல்பிராய்ஸ் ஆப் பெல்ஜியம் அண்ட் பிரான்ஸ்
( Belfries of Belgium and France)
(Historic Centre of Brugge)
(6) மேஜர் டவுன் ஹவுசெஸ் ஆப் தி அர்கிடேக்ட் விக்டர் ஹோர்டா
(Major Town Houses of the Architect Victor Horta (Brussels)
(7) நியோலெதிக் பிளின்ட் மைன்ஸ்
(Neolithic Flint Mines at Spiennes)
(8) நோட்ரி தாமே கதீட்ரல்
(Notre-Dame Cathedral in Tournai)
(9) பிலாண்டின் மோரிடச்ஸ் ஹவுஸ் வொர்ஷாப்ஸ் மியூசியம்
(Plantin-Moretus House-Workshops-Museum Complex)
(10) ஸ்டோக்லேட் ஹவுஸ்
(Stoclet House)
No comments:
Post a Comment