பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
நவீன கற்கால ஸ்பின்னேர்ஸ் சுரங்கங்கள்
(Read Original Article in :- Neolithic Flint Mines at Spiennes)
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
நவீன கற்கால ஸ்பின்னேர்ஸ் சுரங்கங்கள்
(Read Original Article in :- Neolithic Flint Mines at Spiennes)
ஐரோப்பியாவில் 'பெல்ஜிய' (Belgium) நாட்டின் 'மோன்ஸ்' (Mons) எனும் பகுதியில் உள்ள 'ஸ்பின்னேர்ஸ்' ( Spiennes) எனும் இடத்தில் நியோலிதிக் (Neolithic) எனப்படும் புதிய கற்காலத்தில் (Stone-age) அமைக்கப்பட்டு இருந்த மிகப் பெரிய சுரங்கங்கள் (Mines) பழமையானது. சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன் அபூர்வ வகை சிக்கி முக்கிக் கல்லை (flint nodules) தோண்டி எடுக்க இந்த சுரங்கம் அமைக்கப்பட்டது. இரும்பு போன்ற குணத்தைக் கொண்ட இந்த சிக்கி முக்கிக் கல்லைக் கொண்டு ஈட்டிகளை (flint axes.) செய்தார்கள். 100 ஹெக்டயர் நிலப்பரப்பில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் பல வழிமுறைகளைப் பின்பற்றி சுரங்கம் அமைத்து உள்ளார்கள். சுமார் 1800 ஆண்டுகள் இந்த சுரங்கத்தில் இந்தப் பணி நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான சிக்கி முக்கிக் கற்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
இந்த சுரங்கம் யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World Hertage Site) ஏற்றுக் கொள்ளப்பட்ட இடம். 2000 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூடிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த புதிய கற்காலத்திலேயே மனிதர்களின் கண்டு பிடிப்புத் திறமை எந்த அளவு உயர்ந்து இருந்து கலாச்சாரம் மற்றும் தொழில் நுட்ப திறமைக்கு (cultural and technological development) வழி வகுத்தது என்பதைக் காட்டுவதாக உள்ளது இந்த சுரங்கங்கள் என்பதினால் இந்த மையம் யுனெஸ்கோ புராதான சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஸ்பின்னேர்ஸ் சிக்கி முக்கிக் கல் சுரங்கம்
Author: Donarreiskoffer (Creative Commons Attribution ShareAlike 3.0)
இங்கு என்ன பார்க்கலாம்
(What to See in Neolithic Flint Mines at பிஎனெஸ்)
இந்த இடத்தில் இரண்டு வகைகளான சுரங்கங்கள் உள்ளன. ஒன்று பூமிக்கு அடியிலும் மற்றது திறந்த வெளியிலும் உள்ளன. இந்த சுரங்கங்களில் அந்தக் கற்களை வெட்டி எடுக்க உலோகம் போன்று வலிமையான மான் கொம்புகளைப் (deer antlers as pick axes) பயன்படுத்தி உள்ளார்கள்.
புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : N 50 25 50.8 E 3 58 43.6
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2000
பிரிவு : கலை
தகுதி : I, III, IV
இங்கு செல்ல வேண்டும் எனில் நீங்கள் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கி இருக்க வேண்டும். 'ப்ருச்ஸ்சில்ஸ்'சிற்குச் சென்றப் பின் அங்கிருந்து ரயில் அல்லது பஸ் மூலம் இந்த இடத்துக்கு செல்லலாம். 'மோன்ஸ்' எனும் பகுதியில் இருந்து தெற்கில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'ஸ்பின்னேர்ஸ்' என்ற இந்த இடத்துக்கு செல்ல எக்ஸ்பிரஸ் பாதை E 19 தில் (expressway E19) செல்லவும். 'ப்ருச்சில்ஸ்சில்' சர்வதேச விமான நிலையம் (Brussils International Airport) உள்ளது. ப்ருச்சில்ஸ்சில் உள்ள ஹோடல்களைக் காண ஹோட்டல் மீது கிளிக் செய்யவும்
மார்ச் (March) மாதம் முதல் நவம்பர் (November) மாதம் முடிய ஒவ்வொரு மாதத்திலும் முதலாம் ஞாயிற்றுக் கிழமை (Sunday) அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த சுரங்கம் பார்வையாளர்களுக்கு (Visitors) திறந்து விடப் படுகின்றது. நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு €2.50, பெற்றோர்களுடன் வரும் 12 வயதான சிறுவர்களுக்கு €1.25 ஆகும்.
நீங்கள் 12 வயதுக்கு மேல் ஆனவர், மற்றும் ஒரு குழுவாக இங்கு செல்ல வேண்டும் என்றால் முன் பதிவு செய்து கொள்ள விலாசம் reservations@minesdespiennes.org இல்லை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுமதி பெற எண் +32 (0) 65 35 34 78.
சுரங்கத்தில் உள்ளே 8° முதல் 10°C வரையில் சீதோஷ்ண நிலை இருக்கும் என்பதினால் அதற்கு தகுந்த அளவு துணிமணிகளை உடுத்திக் கொள்வது அவசியம். மேலே ஏற ஸ்போர்ட்ஸ் ஷூவை பயன்படுத்தவும்.

No comments:
Post a Comment