துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Thursday, September 15, 2011

பல்கேரியா - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : புராதான நகரமான நெஸ்சிபார்

பல்கேரியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
புராதான நகரமான நெஸ்சிபார்
(Read Original Article in :- Ancient city of Nessebar )


'நெஸ்சிபார்' (Nessebar) அல்லது 'நெசிபூர்' (Nesebur) என்பது 'பல்கேரியா'வின் (Bulgaria) கரும்கடல் (Black Sea) கடற்கரைப் பகுதியில் உள்ள மிகப் பழைய நகரம் ஆகும். இந்த நகரத்தின் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இன்று இது கடற்கரையில் பொழுது போக்கு மற்றும் ஓய்வு எடுக்கும் இடமாக உள்ள நகரம். இந்த நகரை சுற்றி உள்ள பல மலைகளை நல்ல முறையில் பராமரித்து வருகிறார்கள்.
புராதான நகரமான நெஸ்சிபார்
Author: www.vacacionesbulgaria.com (Creative Commons Attribution ShareAlike 3.0)

மிகப் பழைய நகரமான இதன் சுவையான வரலாற்றினால்தான் இது யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site)  ஏற்கப்பட்டது.  இதற்கான  முடிவு  1983 ஆம் ஆண்டு  டிசம்பர்  (December) மாதம் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 'இத்தாலி ' (Italy) நாட்டில் நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில்  எடுக்கப்பட்டது.
புராதான நகரமான நெஸ்சிபார்
Author: Izvora (public domain)

வரிசைப்படி நெஸ்சிபார் நகர 
வரலாற்றுச் செய்தி
(Chronology of the History of Nessebar)


6th நூற்றாண்டு BC: 'மேகராவில்' (Megara) இருந்து வந்த 'டொரியன்' எனும் (Dorians) இனத்தவர் வந்து குடியேறினார்கள். இதை முக்கியமான வியாபாரக் கேந்திரமாக மாற்றி அமைத்தார்கள். இந்த இடத்தில் மட்டுமே அப்போது ' டொரியன்கள்' குடியேற்றம் இருந்தது.
71 BC: இந்த நகரம் 'ரோம' (Romans)  அரசிடம் வீழ்ந்தது.
5th நூற்றாண்டு  AD: 'பைசண்டைன்' மன்னர் ஆட்சியின் (Byzantine Empire) கீழ் வந்தது.
812 AD: 'பைசண்டைன்' மன்னர் ஆட்சியிடம் இருந்து இதை பல்கேரிய (Bulgarian) அரசனான 'கான் க்ரும்' (Khan Krum ) என்பவர் இதைக் கைப்பற்றி முதலாம் 'பல்கேரியா' நாட்டு அரசை அமைத்தார்.
864:  'க்னாஸ் போரிஸ்' (Knyaz Boris) என்ற மன்னன் இதை மீண்டும் 'பைசண்டைன்' மன்னர் வசம் ஒப்படைத்தார். ஆனால் அவருடைய மகனும் பேரரசனுமான  'ஜார் சிமியான்' என்பவர் மீண்டும் இந்த நகரை தன் வசம் பிடித்துக் கொண்டார். அதன் பின் இந்த நாடு 'ஜார் அலெக்ஸாண்டர்' {(tsar Ivan Alexaqnder (1331-1371)} தலைமையில் பெரும் வளர்ச்சி பெற்றது .
1366: அறப்போர் வீரரான (Crusader) 'கவுன்ட் ஆப் சவாயின் அமடியூஸ் VI' (Amadeus VI, Count of Savoy) இந்த நகரை கைப்பற்றினார்.
1453: துர்கியர்கள் இந்த நாட்டை கைப்பற்றிக் கொள்ள இந்த நாட்டின் பெருமை கீழே விழத் துவங்கியது.
1878: 'ஓட்டமான்' அரசிடம் இருந்து இந்த நாடு மீண்டும் கைபற்றப்பட்டப் பின் சுயாட்சி உரிமையுடன் இருந்த அன்றைய  'ஓட்டமான்' அரசின் கிழக்கு 'ருமிலியா' என்ற  மாகாணத்தின் ஒரு அங்கமாயிற்று. 
1925: பழைய நகரத்தை  புதுப் பொலிவோடு சீரமைத்தாலும், இங்கு புதிய நகரத்தை உருவாக்கினார்கள்.
புராதான நகரமான நெஸ்சிபார்
Author: Izvora (public domain)

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)

உள்ள இடம் : N 42 39 21.996 E 27 43 48
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1983
பிரிவு : கலை
தகுதி : III, IV

சுற்றி உள்ள 1245.6 ஹெக்டயர் வெற்றிடங்களையும் சேர்த்து இந்த இடம்  27.1 ஹெக்டயர்  நிலப்பரப்பில் அமைந்து உள்ளது. உலகில் நெஸ்சிபாரில் மட்டுமே மிக அதிக அளவில் தேவாலயங்கள் உள்ளன. அவை கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:-
(1) செயின்ட் சோபியா சர்ச்
(Church of St Sophia, also known as the Old Bishopric)
(2) பேசிலிக்கா ஆப் தி ஹோலி மதர் கோட் எலியூசா
(Basilica of the Holy Mother of God Eleusa )
(3) பேப்டிஸ்ட் ஜான் சர்ச்
(Church of John the Baptist)
(4) செயின்ட் ஸ்டீபன் சர்ச்
(Church of St Stephen, also known as the New Bishopric)
(5) செயின்ட் தியோடோர் சர்ச்
(Church of St Theodore)
(6) செயின்ட் பெரச்கிவா சர்ச்
(Church of St Paraskeva)
(7) ஹோலி அர்செங்கேல்ஸ் மிகேல் அண்ட் கேப்ரியல் சர்ச்
( Church of the Holy Archangels Michael and Gabriel)
(8) கிரிஸ்ட் பென்டோக்ரேடர் சர்ச்
(Church of Christ Pantocrator)
(9) செயின்ட் ஜான் யெலிதுர்கிதோஸ் சர்ச் 
(Church of St John Aliturgetos)
(10) செயின்ட் ஸ்பாஸ் சர்ச்
(Church of St Spas)
(11) செயின்ட் க்ளெமென்ட் சர்ச்
(Church of St Clement)
புராதான நகரமான நெஸ்சிபார்
Author: Nenko Lazrov (Creative Commons Attribution ShareAlike 2.5)
இந்த மையம் உள்ள இடம்
(Location Map ) 

இந்த மையம் உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

புராதான நகரமான நெஸ்சிபார் உள்ள
இடத்திற்குச் செல்ல வேண்டுமா 

(Ancient city of Nessebar )

நீங்கள் இந்த இடத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) மூலம் இங்கு போகலாம். 'சோபியா'வின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
'பல்கேரியா'வின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels world wide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment