துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, September 10, 2011

பெல்ஜியம் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் - ப்ருக்கீ

பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ப்ருக்கீ
(Read original article in : Brugge)



'ப்ருக்கீ
Author: Markdhammond (Creative Commons Attribution ShareAlike 3.0)


பிரென்ச் (French) மொழியில் 'ப்ருக்கேச்ஸ்' (or Bruges in French) அல்லது 'ப்ருக்கீ ' எனப்படும் இடம் யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World Hertage Site) ஏற்றுக் கொள்ளப்பட்ட இடம். 2000 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.முட்டை வடிவில் (oval in shape) சுற்றிலும் உள்ள வாய்கால்களுக்கு இடையே (Canal) அமைந்து உள்ள இந்த இடம் 410 ஹெக்டயர் பரப்பளவில் உள்ளது. அதை சுற்றி 168 ஹெக்டயர் வெற்றிடமும் உள்ளது.
இந்த இடம் மத்திய கால ஓவியங்கள், கோத்திக் கட்டிடக் கலையில் அமைக்கப்பட்டு உள்ள வீடுகள், வியாபார மற்றும் கலாசாரத்தின் மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய நிலையில் ஐரோபியாவின் மத்தியக் கால கட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த இடம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் 'ஜான் வான் ஐக்' (Jan van Eyck) மற்றும் 'ஹான்ஸ் மேம்ப்ளிங்' ( Hans Memling)போன்ற ஓவியர்கள் வரைந்த ஓவியங்களுக்கு வழிகாட்டியாக இருந்த மத்தியக் காலத்தை சேர்ந்த ப்லேமிஷ் பண்டை கால ஓவியக் கலையை (Flemish Primitives art style) பிரதிபலிக்கும் வகையிலும் சித்திரங்களைக் கொண்ட கட்டிடங்கள் உள்ளன. ஆகவே அவை அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்த இடத்தை யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக அங்கீகரித்தார்கள்.

டவுன் ஸ்கொயர்
Author: Horst (Creative Commons Attribution 2.0)



ப்ருக்கீ டவுன் ஸ்கொயர்
Author: DiaBaBurMElha (Creative Commons Attribution ShareAlike 3.0)



ப்ருக்கீ மணிக் கூண்டு கோபுரம்
Author: L. Ellis (Creative Commons Attribution 1.0)



ப்ருக்கீ டவுன் ஹால்
Author: Armont (public domain)

 
ப்ருக்கீ தேவாலயங்கள்
Author: Lin ChangChih (public domain)



செயின்ட் சல்வடார் மாதா கோவில்
Author: Wolfgang Staudt (Creative Commons Attribution 2.0)



சின்ட் -அன்னகேர்க் தேவாலயம் 
Author: Wolfgang Staudt (Creative Commons Attribution 2.0)



ஜெருசலேம்கேர்க் தேவாலயம் 
Author: LimoWreck (Creative Commons Attribution ShareAlike 3.0)



ஹெய்லிக் ஹர்த்கேர்க் தேவாலயம் 
Author: LimoWreck (Creative Commons Attribution ShareAlike 3.0)

 
ப்ருக்கீ யின் மத்தியக் கால நுழை வாயில்
Author: Marc Ryckaert (Creative Commons Attribution ShareAlike 2.5)



க்ரூஸ்பூர்ட்- உள் பக்கத்தில் இருந்து
காணப்படும் ப்ருக்கீயின் தோற்றம்

Author: Ph.winy (Creative Commons Attribution ShareAlike 3.0)



வெளிப்புறத்தில் இருந்து காணப்படும் க்ரூஸ்பூர்ட்டின் தோற்றம்
Author: Wolfgang Staudt (Creative Commons Attribution 2.0)


ஓல்ட் லேடி தேவாலயத்தின்
பக்கத்தில் ப்ருக்கீயின் சாலை

Author: Wolfgang Staudt (Creative Commons Attribution 2.0)



ட்வீர்ஸ்டார்ட்
Author: Ellywa (Creative Commons Attribution ShareAlike 3.0)


 
ப்ருக்கீயை சுற்றி  வாய்கால்
Author: Elke Wetzig (Creative Commons Attribution ShareAlike 3.0)



ச்பிநோலரெய்  என்  ஸ்பிகேல்ரேய் வாய்க்கால்கள்
Author: Richardfabi (public domain)



ப்ருக்கீ வாய்க்காலின் இன்னொரு தோற்றம்
Author: Jean-Christophe BENOIST (Creative Commons Attribution ShareAlike 3.0)



ரோசன் ஹோத்காய் வாய்க்கால்  
Author: Jean-Christophe BENOIST (Creative Commons Attribution ShareAlike 3.0)


ப்ருக்கீயில் என்ன பார்க்கலாம்
(What to See in Historic Centre of Brugge)

(1) க்ரோயெனிங்கே மியூசியம்
(Groeninge Museum )
ப்ருக்கீயில் 14 முதல் 20 அம நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஓவியர்களின்  ஓவியங்களைக் கொண்ட மியூசியம்
(2) ஹெய்லிக் ப்ளுட் பேசிலேக் 
(Heilige Bloed Basiliek )
பர்க் மைதானத்தில் உள்ள ரோமன் தேவாலயம் - இங்கு வைக்கப்பட்டு உள்ள ஒரு குப்பியில்  ஏசு கிறிஸ்துவின் ரத்தம் உள்ளதாக கூறுகிறார்கள்.
(3) ஓன்சீ  லைவீ  வ்ரோவ்வேர்க் 
(Onze Lieve Vrouwkerk )
அவர் லேடி தேவாலயம் எனப்படும் இங்குதான் டியூக் சார்லஸ் போல்ட் (1433-1477) மற்றும் அவருடைய மகள் மேரி தி ரிச் (1457-1482) என்பவர்களின் கல்லறைகள் உள்ளன. 
(4) ஜெருசலேம் தேவாலயம்
(The Jerusalem Church )
இத்தாலியை சேர்ந்த ஜெனோவா என்பவர் கட்டிய  தேவாலயம்.  இது  ஜெருசலத்தில்  உள்ள  சர்ச்  ஆப்  தி  ஹோலி  செபுல்செர்   என்பதைப் போலவே கட்டப்பட்டு உள்ளது.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )

உள்ள இடம்: N 51 12 32.076 E 3 13 30.972
அங்கீகாரம் பெற்ற வருடம் : 2000
பிரிவு : கலை
தகுதி : II, IV, VI

இந்த இடம் பெல்ஜியத்தின் (Belgium)  மேற்குக் கடற்கரைப் பகுதியில் நெதர்லாந் (Netherlands) எல்லையை தொட்டபடி உள்ளது. இங்கு செல்ல வேண்டும் எனில் நீங்கள் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils)  தங்கி இருக்க வேண்டும். 'ப்ருச்ஸ்சில்ஸ்'சிற்குச் சென்றப் பின் அங்கிருந்து ரயில் ஆல்லது பஸ் மூலம் இந்த இடத்துக்கு செல்லலாம். 'ப்ருச்சில்ஸ்சில்' சர்வதேச விமான நிலையம் (Brussils International Airport) உள்ளது.
ப்ருச்சில்ஸ்சில்  உள்ள ஹோடல்களைக் காண ஹோட்டல் மீது கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment