துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, September 13, 2011

பொனைர் - சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

பொனைர் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read original Article in : Bonaire)


அடிமைகளின் வீடுகள்
Author: V.C. Vulto (Creative Commons Attribution 3.0 Unported)

'பொனைர்' (Bonaire ) என்பது 'தென் ஆப்ரிக்கா'வின் கரீபியன் தீவில் (Caribbean island) உள்ள ஒரு நாடு. 'அரூபா' மற்றும் 'கூர்கவா' (Curaçao) போன்ற இரண்டையும் இதனுடன் சேர்த்து 'லீவார்ட் அண்டிலீசின்' (Leeward Antilles) ABC தீவுகள் என்கிறார்கள். ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடான இது நெதர்லாந்தின் ( Netherlands) நகராட்சி பகுதியாகும்.

ஸ்கியூபா நீச்சல்
Author: janderk (public domain)

'பொனைர்' நாட்டின் பரப்பளவு 294 சதுர கிலோமீட்டர் (113 மைல்கள் ) மற்றும் 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி ஜனத்தொகை 16,000 . இதன் தலை நகரம் க்ரலேண்டிஜெக் (Kralendijk). நாட்டின் நாணயம் அமெரிக்க டாலர் (US dollar). உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட நான்கு மணி நேரம் அதிகம். சாலையில் வாகனங்கள் வலது புறம் செல்ல வேண்டும். சர்வதேச தொலைபேசி எண் கோடு +599. 'பொனைர்' நாட்டின் அரசாங்கத்தின் தலைவரான அரசி (Monarch) நெதர்லாந்தை சேர்ந்த ராணியே (Queen).
இந்த நகரசபையில் 288-கிலோ மீட்டர் (111 சதுர மைல்) 'பொனைர்' தீவு மற்றும் 'க்ளீன் பொனைர்' (Klein Bonaire) என்ற சிறிய மக்கள் குடியில்லாத தீவும் (uninhabited) அடக்கம்.இந்த தீவுகளில் பவளப் பாறைகள் (coral reefs) நிறைந்து உள்ளன. அந்த தீவுகளின் கடற்கரைகள் முழுவதுமே காக்கப்பட்ட இடம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 'பொனைர்' தீவு முழுவதுமே பெரிய நாரைப் பறவை வகை (flamingo) நிறைந்தப் பகுதியாக உள்ளன.
இந்த தீவு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்த இடம். இங்கு கடலில் நீந்தவும், தக்கைகள் மீது மிதந்தபடி கடல் அலை மீது விளையாடவும் (snorkeling and diving) சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இந்த தீவில் முதலில் வந்து குடியேறியவர்கள்
'காக்விடியோஸ் இந்தியர்கள்' (Caquetios Indians). இங்கு முதலில் 1499 ஆம் ஆண்டு வந்த ஐரோப்பியர் 'அலோன்சோ டி ஒஜிடா' (Alonso de Ojeda) என்பவரே. அவர் அமெரிகோ வெஸ்புக்கி அண்ட் ஜுவான் டி லா கோசா என்ற (Amerigo Vespucci and Juan de la Cosa) அலுவலகத்தில் பணிபுரிந்தபோது இந்த இடத்தின் தரைப் படத்தை 'பிரேசில்வூட் தீவு' என்ற பெயரில் வெளியிட்டார்கள்.
'பொனைரில் ஓவியத்தின் முன்னால் ஒரு இரு சக்கர சைக்கிள்'
Author: Moebiusuibeom-en (Creative Commons Attribution 2.0 Generic)

'பொனைர்' வரலாற்றில் அது பல ஐரோப்பிய ஆட்சியினர் கையில் இருந்தது. 1526 ஆம் ஆண்டு 'ஸ்பானிஷ்' அரசு ABC தீவுகளை நிர்வாகிக்க 'ஜுவான் டி அம்பைஸ்' (Juan de Ampies ) என்பவரை நியமித்தது. 1568 முதல் 1648 'டட்ச்' (Dutch) மற்றும் 'ஸ்பானிஷ்' நாடுகள் இடையே நடந்த சண்டையில் 'பொனைர்' தீவு 'டட்ச்' ஆட்சியினரிடம் சென்றது. அவர்கள் அங்கு தமது பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள கோட்டையை அமைத்துக் கொண்டார்கள். 'நேபோலி' (Napoleonic Wars) சண்டையில் இந்த தீவை இரண்டு முறை 'டட்ச்' ஆட்சி இழக்க அதை ஆங்கிலேயர் (British) கைபற்றினார்கள். ஆனால் 1814 ஆம் ஆண்டு ஏற்பட்ட 'ஆங்கிலோ- டட்ச்' (Anglo-Dutch Treaty) ஒப்பந்தத்தினால் இந்த தீவின் ஆட்சி மீண்டும் 'டட்ச்' வசம் சென்றது.
'நெதர்லாந் அண்டில்லேஸ்' (Netherlands Antilles) 10-10- 2010 அன்று கலைக்கப்பட்டப் பின்னர் இந்த தீவினர் தம்முடைய அரசினரை தேர்ந்து எடுத்துக் கொள்ள தேசிய பொது வாக்கெடுப்பு (referendum) 17-12-2010 அன்று நடைபெற்றபோது 84% நெதர்லாந்து நாட்டுடனேயே இருக்க விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் நடந்த வாக்கெடுப்பில் 35% மக்களே கலந்து கொண்டதினால் அந்த பொது வாக்கெடுப்பு செல்லாது (Invalid) என அறிவிக்கப்பட்டது.

குராகவோவில் வில்லேம்இஸ்டட் நீர்நிலை இடம்
Author: janderk (public domain)

இங்கு செல்வது எப்படி
(Visiting Bonaire )

நீங்கள் இந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் எனில் 'ஆம்ஸ்டர்டாம்' (Amsterdam) விமான நிலையத்துக்குச் KLM விமான சேவை மூலம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டும். அல்லது 'சான் ஜுவான்' (SanJuan), 'பெயூர்டோ ரிகோ' ( Puerto Rico) போன்ற இடங்களில் இருந்து 'அமெரிக்கன் ஈகிள்' (American Eagle) விமானத்திலும் செல்லலாம். அதைத் தவிர 'ஹூஸ்டன்' (Houston' ) மற்றும் 'னேவார்க்' (Newark) போன்ற இடங்களில் இருந்தும் செல்லலாம். 
'பொனைர்' தீவின் பெரிய நகரங்கள்
(Major Cities in Bonaire )

(1) க்ரலேன்டிஜ்க் - தலைநகரம்
(Kralendijk - capital)
(2) போவேன் பொலிவியா
(Boven Bolivia)
(3) ரின்கான்
(Rincon)

பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Bonaire)

வாஷிங்டன் ச்லாக்பாய் நேஷனல்  பார்க்
( Washington-Slagbaai National Park)
 

No comments:

Post a Comment