பல்கேரியா -சுற்றுலாப்
பயணக் குறிப்புக்கள்
(Read original Article in :- Bulgaria)
'ஐரோபியா'வின் (Europe) தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய நாடே 'பல்கேரியா' (Bulgaria ). இதன் எல்லைகள் வடக்கில் 'ரோமானியா' (Romania), மேற்கில் 'செர்பியா' (Serbia), 'மெசிடோனியா' ஜனநாயகக் குடியரசு (Macedonia), தெற்கில் 'கிரீஸ்' (Greece) மற்றும் 'துர்கி' (Turkey) போன்ற நாடுகளுடன் இருக்க இதன் கடற்கரை கிழக்குப் புறத்தில் கருங்கடலை (Black sea) நோக்கி அமைந்து உள்ளது.
'பல்கேரியா'வின் பரப்பளவு 110,994 சதுர கிலோ மீட்டர் (42,855 சதுர மைல்). இதன் ஜனத்தொகை 7.5 மில்லியன் . தலை நகரம் 'சோபியா' (Sofia) என்பது. 'சோபியா' இந்த நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். நாட்டின் நேரம் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட (Coordinated Universal Time) உலக நாடுகளின் நேரத்தை விட இரண்டு மணி நேரம் அதிகம். சாலையில் வாகனங்களை வலப்புறமே ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் சர்வதேச தொலைபேசி எண் கோடு: +359. கிட்டத்தட்ட 'ருஷியா' (Russian) மொழி போலவே எழுதப்படும் எழுத்து வரிசைகளைக் (Cyrillic alphabet) கொண்ட 'பல்கேரிய' மொழியே இந்த நாட்டின் தேசிய மொழியாகும். மேலும் நாட்டின் அதிகாரபூர்வ நாணயம் 'லேவ்' { Lev (BGN)} என்பது .
2010 ஆம் ஆண்டு கணக்கின்படி 'பல்கேரியா'வின் GDP $44.8 பில்லியன். 2007 ஆம் ஆண்டு ஜனவரி (Januvary) மாதம் முதல் தேதியில் இருந்து இந்த நாடு ஐரோப்பிய யூனியனின் ஒரு அங்கத்தினராக ஆகியது.
'பல்கேரியாவின்' சீதோஷ்ண நிலை ஆசிய கண்டத்தைப் போலவே உள்ளது. குளிர்காலத்தில் குளிரும் அதிகம், பணியும் (Snow) மிகவும் அதிகம். அதே போல வெயில் காலத்தில் (Summer) வெய்யிலும் வேர்க்கும் நிலையும் (Humid) உள்ளது.ஆனால் கடலோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் வெயில் மற்றும் குளிர் காலங்களில் மிதமான சீதோஷ்ண நிலை (mild autumns and cool winters) உள்ளது. வெயில் காலத்தில் இதமான காற்று (Breezy wind) வீசும்.
20 ஆம் நூற்றாண்டின் முன் பகுதியில் உள்நாட்டுக் குழப்பம் நிலவியது. அதனால் 'ஜார் போரிஸ் III' என்பவர் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி அமைப்பு அமைந்தது. இரண்டாம் உலக யுத்ததின்போது வல்லரசு நாடுகளின் படைகளுடன் (Axis forces) சேர்ந்து போரிட்டாலும் அந்த நாட்டில் தங்கி இருந்த யூதர்களின் நலனை பாதுகாக்க ஜெர்மானியர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தது . 1943 ஆம் ஆண்டு 'ஜார் போரிஸ் III' மரணம் அடைந்ததும் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் கம்யூனிஸ்ட்டுகள் (Communist) கிளர்ச்சி செய்து ஆட்சியைக் கைபற்றிக் கொள்ள இங்கு சோவியத் நாட்டைப் (Soviet-style) போன்ற ஆட்சி அமைந்தது.
சோவியத் யூனியன் வீழ்ந்தப் பிறகு 1989 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 10 ஆம் தேதியன்று கம்யூனிஸ்ட்டுகள் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ள 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பல்கேரியாவின் சோஷியலிச கட்சி (Socialists) வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் 1991 ஆம் ஆண்டு புதிய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு சோஷலிச பாணி பொருளாதாரக் கொள்கை மாற்றி அமைக்கப்பட்டது. பல்கேரியா NATO நேச நாடுகளின் படை அமைப்பில் 2004 ஆம் ஆண்டில் சேர்ந்து கொண்டு 2007 ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனிலும் ஒரு அங்கத்தினராகியது. இந்த நாட்டில் பேச்சுரிமை மற்றும் மனித உரிமைகள் பெரும் (speech and human rights) அளவில் பாதுகாக்கப்படுகின்றன.
அலெக்சாண்டர் நெவ்ஸ்கி தேவாலயம், சோபியா
Author: MrPanyGoff (Creative Commons Attribution 3.0 Unported)
Author: MrPanyGoff (Creative Commons Attribution 3.0 Unported)
பல்கேரியாவுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Bulgaria Bulgaria)
செங்கன் நாடுகளின் உடன்பாட்டினால் (Schengen Agreement) அல்பானியா , அன்தோரா , அன்டிகுவா மற்றும் பர்புடா , அர்ஜென்டினா , ஆஸ்திரேலியா , பஹமாஸ் , பார்படோஸ் , போஸ்னியா மற்றும் ஹெர்சகோவின , பிரேசில் , ப்ருனெய் , கனடா , சிலி , கோஸ்டா ரிகா , கிரோஷியா, எல் சல்வடோர் , குயடமலா , ஹோண்டுராஸ் , ஹாங் காங் , இஸ்ரேல் , ஜப்பான் , மகாவு , மலேசியா , மொருஷியஸ் , மெக்ஸிகோ , மொனாகோ , நியூசிலாந்து , நிக்கராகுவா, பணமா , பெருகுவே , செயின்ட் கிட்ட்ஸ் மற்றும் நெவிஸ் , சண் மரினோ , சிசெல்லெஸ் , சிங்கப்பூர் , சவுத் கொரியா , தைவான் , யுனைடெட் ஸ்டேட்ஸ் , உருகுவெ , வாடிகன் சிட்டி மற்றும் வெனுன்சிலா போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கு இந்த நாட்டிற்குச் செல்ல விசா (Visa) தேவை இல்லை.
இந்த நாட்டின் முக்கியமான விமான நி��ையம் 'சோபியா' விமான நிலையமே {Sofit Airport (SOF)}. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் எளிதில் இங்கு வருவதற்காக 25 விமான சேவை நிறுவனங்களின் அமைப்புக்கள் (25 airlines) உள்ளன. 'சோபியா'வைத் தவிர 'வர்னா' (Varna), போர்கஸ் (Bourgas) 'ப்லோவ்டிவ்' (Plovdiv) போன்ற நகரங்களிலும் விமான நிலையங்கள் உள்ளன. 'கிவ்' (Kiev ) 'இஸ்தான்புல்' (Isthanbul), புச்சரேஸ்ட்(Bucharest) மற்றும் 'வியன்னாவில்(Vienna) ' இருந்து 'சோபியா'விற்கு ரயில்மூலம் செல்ல முடியும்.
நீர்நிலையில் தண்ணீர் அருந்தும் ஆடுகள்
Author: Evgeni Dinev (public domain)
Author: Evgeni Dinev (public domain)
பல்கேரியாவின் மிகப் பெரிய நகரங்கள்
(Major Cities in Bulgaria )
(1) சோபியா- தலை நகரம்
(Sofia - capital )
(2) பர்காஸ்
(Burgas )
(3) கப்ரவோ
(Gabrovo )
(4) ப்லோவ்டிவ்
(Plovdiv )
(5) ரௌஸே
(Rousse )
(6) வர்ணா
(Varna )
(7) வெளிகோ தர்னவோ
(Veliko Tarnovo )
யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Bulgaria Cultural )
(1) பயனா சர்ச்
{Boyana Church (1979) }
(2) மந்தாரா ரைடேர்
{Madara Rider (1979) }
(3) ராக் ஹெவன் சர்செஸ்
{Rock-Hewn Churches of Ivanovo (1979) }
(4) த்ராஷியன் தோம்ப் ஆப் கசன்லாக்
{Thracian Tomb of Kazanlak (1979)}
{Ancient City of Nessebar (1983) }
(6) ரிலா மோனாச்த்ரி
{Rila Monastery (1983) }
(7) த்ராஷியன் தோம்ப் ஆப் ஸ்வெஷ்டரி
{ Thracian Tomb of Sveshtari (1985) }
இயற்கை
(Natural)
(1) பிரின் நேஷனல் பார்க்
{Pirin National Park (1983) }
(2) ஸ்ரேபானா நேசர் ரிசர்வ்
{Srebarna Nature Reserve (1983) }
No comments:
Post a Comment