பல்கேரியா
'பல்கேரியாவின்' (Balgeria) மிகப் பெரிய நகரம் மற்றும் தல நகரம் 'சோபியா' (Sofia (София) என்பது. இது 'பல்கேரியா'வின் மத்திய மேற்குப் பகுதியில் உள்ளது. இதன் பரப்பளவு 1,345 சதுர கிலோமீட்டர் (519.3 மைல் ). 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி நகரின் ஜனத்தொகை 1.3 மில்லியன். உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இரண்டு மணி நேரம் அதிகம் (UTC+2). வெயில் காலத்தில் அது மூன்று மணி நேரம் அதிகமாக உள்ளது. நகரின் சர்வதேச தொலைபேசி எண் : (+359) 02.
சுற்றிலும் பெரிய மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் (Valley) உள்ளது 'சோபியா' நகரம். இங்குள்ள 'விஷோதா' மலை மலை முகட்டுத் திரள் (Vitosha mountain massif) உள்ள இடத்தின் உயரம் 2,290 மீட்டர் (7,513 அடி ). ஜூலை மற்றும் ஆகஸ்ட் (July to August) மாதங்களில் வெயில் அதிகம். அதன் அளவு 27°C (81°F) வரை உள்ளது . அது போல குளிர் காலமான ஜனவரியில் (January) இங்குள்ள சீதோஷ்ண நிலையின் அளவு -6°C (21°F) வரை உள்ளது. நவம்பர் முதல் மார்ச் (November till March) பனிப் பொழிவும் அதிகமாக உள்ளது. இங்கு நிறைய பார்க்குகள் உள்ளன. வனப்பகுதி போன்ற பார்க்குகளும் நிறைய உள்ளன (parks and parklands) . இங்குள்ள மக்கள் மலை மீது நீண்ட நடப் பயணம் செய்வதை (Hiking) விரும்புகிறார்கள். மலை மீது உள்ள பனிச் சறுக்கலில் (Ski) நின்றவாறு நகரின் அழகைக் காணலாம்.
ச்வேடி செட்மொசிச்லேனிட்சி சர்ச்
Author: Plamen Agov - studiolemontree.com (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Plamen Agov - studiolemontree.com (Creative Commons Attribution 3.0 Unported)
ஹோலி சைனோத் பாலஸ்
Author: Plamen Agov - studiolemontree.com (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Plamen Agov - studiolemontree.com (Creative Commons Attribution 3.0 Unported)
AD 809 ஆம் ஆண்டில் 'செர்டிகா' முதலாம் பல்கேரிய மன்னர் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது அதன் பெயர் 'ஸ்ரேடிட்' (Sredet) என இருந்தது. ஆனால் முதன் முதலில் 'சோபியா' அமைக்கப்பட்ட ஆண்டு 1376. இதன் அர்த்தம் கிரேக்க மொழியில் (Greek) 'மெய் அறிவு அல்லது விவேகம்' (Wisdom) என்பதே. 1382 ஆம் ஆண்டு இந்த நகரம் ஓட்டன்மான் (Ottaman) அரசின் கீழ் வீழ்ந்தது. அதை 'துர்கி' நாட்டினர் (Turks) 1878 ஆம் ஆண்டுவரை ஆண்டார்கள்.
அப்போது 'சோபியா'வை 'ருமிலியா' (Rumelia) என்ற மாகாணத்தின் தலைநகராக்கினார்கள். 'ஓட்டமான்' ஆட்சியின்போது இங்கு இஸ்லாமிய வாழ்கை முறையை (Islamic lifestyle) கொண்டு வந்தார்கள். ஆகவே பல மசூதிகள், குளியல் இடங்கள், நீர் வீழ்ச்சிகள் ( mosques, fountains and bathhouses ) போன்றவை அமைக்கப்பட்டன. கிருஸ்துவ மதத்தை (Christians) சேர்ந்தவர்கள் அடக்குமுறைக்கு (Persecution) ஆளானார்கள்.
விமான நிலையத்தின் புதிய டெர்மினல் எனும் முனைப் பகுதி
Author: Spartakus79 (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Spartakus79 (Creative Commons Attribution 3.0 Unported)
சோபியாவுக்கு செல்ல வேண்டுமா
(Visiting Sofia)
இங்கு செல்ல வேண்டும் எனில் 'சோபியா' விமான நிலையத்துக்கு {Bulgaria Sofia Airport (SOF)} சென்று அங்கிருந்து பஸ் அல்லது டாக்சிகள் மூலம் நகருக்குள் செல்லலாம். இரண்டு டெர்மினல் (Terminals) முனைகளையும் இணைக்கும் வகையில் சிறிது தூரப் பிரயாண வண்டி பாதை உள்ளது. டெர்மினல் I முனையில் குறைந்தக் கட்டண விமான சேவைகளான 'ஈசி ஜெட்' (Easy Jet) மற்றும் 'ஜெர்மன்விங்க்ஸ்' (Germanwings) மற்றும் 'விஸ்' (Wizz) போன்ற விமான சேவைகள் உள்ளன. டெர்மினல் II டில் முக்கியமான விமான சேவை உள்ளது. நீங்கள் கொண்டு செல்லும் பேட்டியின் அளவு 40 cm x 40 cm x 60 cm என்பதைவிட பெரியதாக இருந்தால் அதற்கு மேற்கொண்டு தனியாக கட்டணம் (need an extra ticket) செலுத்த வேண்டும்.
விமான நிலையத்தில் இருந்து பல ஹோட்டல்களுக்கும் (Hotels) செல்ல சிறிது தூரப் பிரயாண வாகனங்கள் உள்ளன. இதற்கான கட்டணம் 10-12 லிவா (leva) மட்டுமே.
சோபியாவை சுற்றிப் பார்க்க
(Exploring Sofia )
'சோபியா' நகருக்குள் சுற்றிப் பார்க்க நிறைய ட்ராம் வண்டிகள், பஸ்கள் போன்றவை உள்ளன. ஒரு வழிப் பயணத்துக்கான கட்டணம் ஒரு லிவா மட்டுமே. ஆனால் 10 பயண சீட்டுக்களை (Tickets) ஒரே நேரத்தில் வாங்கினால் அதன் கட்டணம் 8 லிவா மட்டுமே. அது போல பல வகைகளிலும் செல்லும் வாகனங்களில் பயணிக்க ஒரு நாளைக்கான பயணச் சீட்டு நான்கு லிவாவிற்கும், ஐந்து நாளைக்கான பயணச் சீட்டு 15 லிவாவிற்கும் கிடைக்கின்றது.
சோபியாவின் முக்கிய சுற்றுலா இடங்கள்
(Places of Interest in Sofia, Bulgaria )
(1) அலெக்ஸாண்டர் நெவ்ஸ்கி மெமோரியல் சர்ச்
(Aleksandûr Nevski Memorial Church )
(2) ஆர்கலாஜிகல் மியூசியம்
(Archaeological Museum )
(3) ஸ்வேதா நெடேல்யா சர்ச்
(Church of Sveta Nedelya )
(4) ஸ்வேதா சோபியா சர்ச்
(Church of Sveta Sofia )
(5) விடோஷா மலை
(Mount Vitosha)
(6) நேஷனல் ஆர்ட் காலரி
(National Art Gallery)
(7) நேஷனல் காலரி ஆப் ப்பாரின் ஆர்ட்
(National Gallery of Foreign Art )
(8) நேஷனால் ஹிஸ்டரி மியூசியம்
(National History Museum)
(9) ரஷியன் சர்ச்
(Russian சர்ச்)
(10) சோபியா சைனகாக்
(Sofia Synagogue)
No comments:
Post a Comment