பல்கேரியா
'ரிலா மடாலயம்' (Rila Monastery) அல்லது 'செயின்ட் ஐவன் ஆப் ரிலா' மடாலயம் (Monastery of Saint Ivan of Rila) என்பது 'பல்கேரியா'வின் (Bulgaria) மிகப் பெரிய, பழமைக்கோட்பாடு சார்ந்த கிழக்கு (Eastern Orthodox monastery) பல்கேரியா மடாலயம் ஆகும். 'சோபியா'வின் (Sofia) தெற்கு பக்கத்தில் 117 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'ரில்ஸ்கா நதிப்' (Rilska River) பள்ளத்தாக்கில் 'ரிலா' மலைகள் (Rila Mountains) மீது அமைந்துள்ளது இந்த மடாலயம். கடல் மட்டத்தில் இருந்து 1,147 மீட்டர் உயரத்தில் மடாலயம் உள்ளது. 'ஸ்பார்டா' (Spartan) நாட்டை சேர்ந்த 'பல்கேரியா' துறவியான 'ரிலாவின் ஹேர்மிட் ஐவான்' {(Hermit Ivan of Rila (also known as St John of Rila)} என்பவர் கட்டிய இந்த மடாலயம் புனிதமானதாக ஏற்கப்பட்டது. மத்திய காலத்தில் இந்த மடாலயம் 'பல்கேரியா' மக்களிடம் ஆன்மீக மற்றும் சமூக ஒழுக்கத்தை (spiritual and social) வளர்ப்பதில் பெரும் பங்காற்றியது.
ரிலா மடாலயம்
Author: Stefan Senkel (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Stefan Senkel (Creative Commons Attribution ShareAlike 3.0)
'ரிலா மடாலயம்' யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site) ஏற்கப்பட்டது. இதற்கான முடிவு 1983 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 'இத்தாலி ' (Italy) நாட்டில் நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் எடுக்கப்பட்டது. 1834 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் இந்த வளாகத்துக்குள் இருந்த பல கட்டிடங்கள் அங்கு ஏற்பட்ட தீவிபத்தினால் (Fire) புதுப்பிக்கப்பட்டன. அந்த தீ விபத்தில் பல புராதான வேலைபாடுகள் அமைந்த கட்டிடப் பகுதிகள் நாசமுற்றன. இந்த மடாலயம் 'ஸ்லேவிக்' (Slavic) கலாச்சாரத்தை எடுத்துக் கட்டும் விதத்தில் அமைந்து உள்ளது.
ரிலா மடாலயத்தில் துறவிகளின் அறைகள்
Author: CdaMVvWgS (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: CdaMVvWgS (Creative Commons Attribution ShareAlike 3.0)
இந்த 'ரிலா' மாடாலயத்தைக் கட்டிய ரிலாவின் 'செயின்ட் ஜான்' (St John of Rila) என்பவர் இந்த மடாலயத்தின் அருகில் இருந்த ஒரு குகையில் (Cave) தனிமையாக கடும் துறவி வாழ்கையை (Ascetic) மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். இந்த மடாலயாம் அந்தத் துறவியின் சீடர்கள் அங்கு வந்து கல்வி கற்கும் விதத்தில் இருக்குமாறு அமைக்கப்பட்டது. இந்த துறவிக்கு 'பல்கேரியா' நாட்டு அரசிடம் (Bulgarian regime) இருந்து பெரும் அளவிலான ஆதரவு கிடைத்து வந்ததினால் இது 'பல்கேரியா'வின் ஆன்மீக மற்றும் கலாச்சார மையமாக ஏற்கப்பட்டது.
ரிலா மடாலயத்தின் இன்னொரு தோற்றம் Author: Stefan Senkel (Creative Commons Attribution ShareAlike 3.0)
'ரிலா மடாலயத்தில்' உள்ள பழமையான கட்டிடங்கள் சில 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை . 1334 மற்றும் 1335 ஆம் ஆண்டுகளில் 'டவர் ஆப் ரிலியூ ' (Tower of Riliyu) என்பது கட்டப்பட்டவுடன் 1343 ஆம் ஆண்டு அதன் பக்கத்தில் ஒரு தொழுகை இடமும் கட்டப்பட்டது. 'மவுண்ட் அதோஸ்சை' (Mount Athos) சேர்ந்த 'ரோசிகன் மடாலயத்தின்' (Rossican Monastery) ஆதரவினால் 'ரிலா மடாலயம்' 15 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் 1833 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்தினால் அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டியதாயிற்று. அதற்க்கான நன்கொடைகளை 'பல்கேரியா'வின் செல்வந்தர்கள் (wealthy Bulgarians) அளித்தார்கள். இந்த மடாலயம் சுற்றி உள்ள வெற்றிடங்களான 1289.7 ஹெக்டயர் இடங்களையும் சேர்த்து 10.7 ஹெக்டயர் பரப்பளவில் உள்ளது.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
இருப்பிடம் : N 42 7 0 E 23 23 60
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1983
பிரிவு : கலாச்சாரம்
தகுதி : VI
ரிலா மடாலயத்தின் இன்னொரு தோற்றம்
Author: Rusalina (Creative Commons Attribution ShareAlike 3.0)
Author: Rusalina (Creative Commons Attribution ShareAlike 3.0)
இந்த மடாலயம் உள்ள இடம்
(Location Map)
(Location Map)
இந்த மடாலயம் உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்
இந்த மடாலயம் உள்ள
(Rila Monastery )
நீங்கள் இந்த இடத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) மூலம் இங்கு போகலாம். 'சோபியா'வின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
'பல்கேரியா'வின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels world wide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
'பல்கேரியா'வின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels world wide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment