பல்கேரியா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
பயானா சர்ச்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
பயானா சர்ச்
பயானா சர்ச்சில் காணப்படும் கிழக்கு ஐரோபியாவின் மத்தியக் காலத்தை சேர்ந்த ஓவியக் கலையை பிரதிபலிக்கும் மிகு நேர்த்தியான சுவர் கோல ஓவியம் (frescoes) நன்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆகவே பல்கேரியாவில் மூன்று மையங்களில் ஒருமையமாக இந்த இடம் யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World Hertage Site)Heritage Site) ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டு அக்டோபர் (October) மாதம் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை எகிப்து (Egypt) நாட்டில் நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மற்ற இரண்டு புராதான சின்ன மையங்கள் 'மடாறா ஹார்ஸ்மான்' (Madara Horseman) மற்றும் கசன்லாக் த்ரேஷியன் டோம்ப் (Thracian tomb of Kazanlak).
'பயானா' சர்ச்சில் காணப்படும் சுவர்கோல ஓவியங்கள் 1259 ஆம் ஆண்டில் வரையப்பட்டவை. அவை பல நூற்றாண்டுகளுக்கு முதலில் வரையப்பட்டு இருந்த ஓவியங்கள் மீதே அந்த ஓவியங்கள் மீண்டும் வரையப்பட்டவை. இங்குள்ள 89 விதமான ஓவியங்களில் 240 மனித உருவங்களைக் காட்டும் (Human Images) ஓவியங்கள் உள்ளடக்கி உள்ளன. அவற்றை வரைந்தவர் 'செர்ஸ்கோ' கிராமத்தை சேர்ந்த 'சபோனாஷா' (Subonosha, Sersko) என்பவரும் அவருடைய சீடருமான 'டிமிடார்' (Dimitar) என்பவர்களே.
11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டு இருந்த சுவர் கோல ஓவியங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அப்படியே பாதுகாக்கப்பட்டு வைத்துள்ளனர். ஆனால் 1259 ஆம் ஆண்டில் வரையப்பட்டு உள்ளவை புகழ் பெற்றவை. அவற்றைத் தவிர 1882 ஆம் ஆண்டு, 14, மற்றும் 16 -17 ஆம் நூற்றாண்டுகளில் மேலும் பல ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. அவற்றையும் நேர்த்தியாக பாதுகாத்து வந்துள்ளார்கள்.
பயானா சர்ச்சில் 10 -11 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டு உள்ள கவிகைக் கூரை அரை வட்டஒதுக்கிடம் (one-apse cross-vaulted ) புகழ் பெற்றது. அதனுடன் 13 ஆம் நூற்றாண்டில் அந்தக் கட்டிடத்தில் இன்னும் சில பகுதிகளை 'சேபஸ்டோக்ரேடர் கோலான்' என்ற மன்னர் சேர்த்தார். அந்த பின் சேர்க்கை பகுதிகள் இரண்டு அடுக்கான கல்லறைகளைக் (Tomb) கொண்டவை. அந்த பின்செற்கைப் பகுதியின் கீழ் பகுதியில் குடும்பத்தினர் சமாதிகள் இருக்க மேல் பகுதியில் குடும்ப கல்லறைக் கூடத்திலுள்ள தொழுமிடம் (Family Chapel) அமைக்கப்பட்டு இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் அந்த ஊர் சமுதாய மக்கள் கொடுத்த நன்கொடை மூலம் இன்னும் சில பகுதிகள் சேர்க்கப்பட்டன.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription தேடைல்ஸ்)
உள்ள இடம் : N 42 38 60 E 23 16 0
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1979
பிரிவு : கலை
தகுதி : II, III
சுற்றிலும் இதை சேர்ந்த காலி இடத்தையும் சேர்த்து மொத்த 13.55 ஹெக்டைர் பரப்பளவு நிலத்தில் சுமார் 0.68 ஹெக்டைர் நிலத்தில் இந்த சர்ச் அமைந்து உள்ளது.
இது உள்ள இடம்
(Location Map)
பயானா சர்ச்சிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Boyana Church )
நீங்கள் இந்த சர்ச்சை சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) அல்லது பஸ் எண் 64 (Bus No. 64) மூலம் போகலாம் . சோபியாவின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
(Visiting Boyana Church )
நீங்கள் இந்த சர்ச்சை சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) அல்லது பஸ் எண் 64 (Bus No. 64) மூலம் போகலாம் . சோபியாவின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
கலோயன் மற்றும் அவர் மனைவி
தேசிஸ்லவாவின் ஓவியங்கள்
Author: Kandi (public domain)
தேசிஸ்லவாவின் ஓவியங்கள்
Author: Kandi (public domain)
பல்கேரியாவின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels worldwide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment