'ஸ்டோக்லேட் ஹவுஸ்' (Stoclet House) அல்லது 'பலேஸ் ஸ்டோக்லேட்' (Palais Stoclet) என்பது 'பெல்ஜியத்தின்' (Belgium) 'ப்ருச்சில்ஸ்'சில் உள்ள ஒரு வீடு. அதை வடிவமைத்தவர் 'ஆஸ்திரியா'வை (Austrian) சேர்ந்த 'ஜோசப் ஹோப்மான்' (Joseph Hoffmann) மற்றும் கலைப் பொருட்களை சேகரித்து வந்த 'அடல்பி ஸ்டோக்லேட்' (Adolphe Stoclet) என்பவர்கள் . 1905 முதல் 1911 ஆண்டுகளில் பொருட்செலவை பார்க்காமல் அளவிடற்கரிய 'நோவியாவூ' கலையை (Art Nouveau) கருவாகக் கொண்டு (Conceptual) அமைக்கப்பட்ட 'ஸ்டோக்லேட் ஹவுஸ்' யுனெஸ்கோ உலக புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site ) 2009 ஆம் ஆண்டு ஜூன் (June) மாதம் 22 முதல் 30 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன மைய அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
இந்தக் கட்டிடத்தின் எழில் மிகுத் தோற்றம், கட்டிடத்தின் மூலக் கரு, அலங்காரங்கள், தோட்டத்தின் அமைப்பு மற்றும் அதற்குள் அமைக்கப்பட்டு உள்ள அலங்காரப் பொருட்கள் (furnishing) போன்ற அனைத்துமே முழுமையான கலைத் தன்மை கொண்டவை ("total work of art"), டேகோ (Art Deco) கலைக்கு வழி வகுத்தவை என்பதினால் இந்த அங்கீகாரம் கிடைத்தது.
ஸ்டோக்லேட் ஹவுஸ்
Author: Jean-Pol Grandmont (Creative Commons Attribution ShareAlike 2.5)
ஸ்டோக்லேட் ஹவுஸ்
Author: Jean-Pol Grandmont (Creative Commons Attribution ShareAlike 2.5)
ஸ்டோக்லேட் ஹவுஸ்
Author: Els Diederen (Creative Commons Attribution ShareAlike 3.0)
'ஸ்டோக்லேட் ஹவுஸ்' என்ற கட்டிடம் 'அவென்யூ டேறுவிரன், வௌளுவீ-செயின்ட்-பிர்ரே, ப்ருச்சில்ஸ்' (Avenue de Tervueren, in Woluwe-Saint-Pierre, Brussels) என்ற இடத்தில் உள்ளது. 'ஜோசப் ஹோப்மன்' என்பவர் வடிவமைத்த இதைக் கட்டியவர் 'வெய்னர் வேர்க்ஸ்டட்' என்பவர்(Wiener Werkstätte). கட்டிடத்தின் வெளி அமைப்பு நவீன பாணியில் இருக்க உட்புறங்களில் 'வியன்னா'வை சேர்ந்த விடுதலை வீரரும் (Vienna Secession movement) 'ஆஸ்திரியா'வின் (Austrian) பிரபலமான ஓவியருமான (Painter) 'குஸ்தாவ் க்ளிம்ப்ட்' (Gustav Klimt) மற்றும் 'ஜெர்மனியை' (German) சேர்ந்த சிற்பியான (Sculptor) 'பிரான்க் மேட்ஸ்நேர்' (Franz Metzner) போன்றவர்களின் வேலைபாடுகளும் உள்ளன.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : N 50 50 6 E 4 24 58
அங்கீகாரம் பெற்ற வருடம் : 2009
பிரிவு : கலை
தகுதி : I, II
இங்கு செல்வது எப்படி
(Visiting the site )
இங்கு செல்ல வேண்டும் எனில் நீங்கள் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கி இருக்க வேண்டும். 'ப்ருச்ஸ்சில்ஸ்'சின் கிழக்குப் பகுதியில் பெரும் பணக்காரர்கள் நிறைந்தப் பகுதியில் இந்தக் கட்டிடம் உள்ளது. நகரத்தின் மையப் பகுதியில் உள்ள சாலையில் 'மோன்ட்கோமேர்ரி' ரயில் நிலையத்தின் (Metro station is Montgomery) அருகில் உள்ளது.
ப்ருச்சில்ஸ்சில் உள்ள ஹோடல்களைக் காண ஹோட்டல் மீது கிளிக் செய்யவும்.
ப்ருச்சில்ஸ்சில் உள்ள ஹோடல்களைக் காண ஹோட்டல் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment