பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
நோட்ரி டேம் கதீட்ரல்
(Read original Article in : Notre Dame Cathedral )
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
நோட்ரி டேம் கதீட்ரல்
(Read original Article in : Notre Dame Cathedral )
'தூர்னை' (Tournai) எனும் இடத்தில் உள்ள 'நோட்ரி டேம் கதீட்ரல்' (Notre Dame Cathedral ) அல்லது அவர் லேடி ஆப் கதீட்ரல் (Our Lady of Flanders' Cathedral of Tournai ) அல்லது கதீத்ரலே நோட்ரி டேம் டி தூர்னை என்பது 'பெல்ஜியத்தின்' (Belgium) ரோமன் கத்தோலிக்க தேவாலயம் யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World Hertage Site) ஏற்றுக் கொள்ளப்பட்ட இடம். 2000 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் 27 ஆம் தேதி முதல் டிசம்பர் (December) மாதம் 2 ஆம் தேதி வரை நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதற்க்குக் காரணம் இரண்டு உள்ளன. முதலாவது கோதிக் (Gothic architecture) கட்டிடக் கலை துவக்கப்படும் முன்னர் 12 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் 'இல்லி டி பிரான்ஸ்' (Ile de France) , ரைன்லான்ட் (Rhineland), மற்றும் நோர்மான்டி (Normandy) போன்ற இடங்களின் கட்டிடக் கலைகளை ஒன்றிணைத்து அமைக்கப்பட்டதே இந்த தேவாலயம். இரண்டாவதாக கோதிக் கலை தேவாலயங்கள் அமைக்கப்படும் முன்னரே வடக்கு 'சைனி' (Seine) கலையில் கட்டப்பட்டுள்ள பிரும்மாண்டமான கட்டடங்கள் இவை என்பது.
நோட்ரி டேம் கதீட்ரல்
Author: Jean-Pol GRANDMONT (Creative Commons Attribution 2.0)
நோட்ரி டேம் கதீட்ரல்
Author: Jean-Pol GRANDMONT (Creative Commons Attribution 2.0)
நோட்ரி டேம் கதீட்ரல்
Author: Jean-Pol GRANDMONT (Creative Commons Attribution 2.0)
நோட்ரி டேம் கதீட்ரலில் என்ன பார்க்கலாம்
(What to See in Notre Dame Cathedral)
12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள இந்த தேவாலயம் அதற்க்கு முன்னர் போடப்பட்டு இருந்த அடித்தளத்தின் மீது கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடத்தின் அமைக்கு மூன்று முற்றிலும் மாறுபட்ட(distinct ) அமைப்புக்களைக் கொண்டது. நடுப்பகுதி ரோமனிஸ்கியூ (Romanesque style) அமைப்பிலும், சிலுவை வடிவான திருக்கோயிலின் குறுக்குக் கைப்பகுதி (transept ) இடை மாறுபாட்டுக் காலக் (Transitional style) கலையிலும், பாடற் குழுவுக்குரிய பகுதி (choir) முற்றிலும் கோதிக் கலை அமைப்பிலும் உள்ளன. தேவாலயத்தின் குறுக்குக் கைப்பகுதியின் ஐந்து ஆலய மணிக் கோபுரங்களும், தேவாலயத்தின் ஒதுக்கிடத்தின் வடிவுள்ள பகுதி (apsidal) போன்றவையும் தனித்தன்மை வாய்ந்தவையாக உள்ளன.
உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )
இருப்பிடம் : N 50 36 21.7 E 3 23 21.3
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2000
பிரிவு : கலை
தகுதி : II, IV
'நோட்ரி டேம் கதீட்ரல்' உள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும் எனில் நீங்கள் 'ப்ருச்சில்ஸ்சில்' (Brussils) தங்கி இருக்க வேண்டும். 'ப்ருச்ஸ்சில்ஸ்'சிற்குச் சென்றப் பின் அங்கிருந்து ரயில் அல்லது பஸ் மூலம் இந்த இடத்துக்கு செல்லலாம். 'ப்ருச்சில்ஸ்சில்' சர்வதேச விமான நிலையம் (Brussils International Airport) உள்ளது. ப்ருச்சில்ஸ்சில் உள்ள ஹோடல்களைக் காண ஹோட்டல் மீது கிளிக் செய்யவும். ப்ருச்சில்ஸ்சில் தென் பகுதியில் எக்ஸ்பிரெஸ்வே (expressway) E19 மூலம் 'ஹல்லே' (Halle) வரை சென்று அந்தப் பாதையை விட்டு 21 எண் அருகில் வெளியேறி எக்ஸ்பிரெஸ்வே (expressway) E429 மூலம் தூர்னைக்கு செல்லலாம்.
No comments:
Post a Comment