'பல்கேரியா'
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ராக் ஹெவன் சர்செஸ்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
ராக் ஹெவன் சர்செஸ்
ஆப் ஐவனோவா
(Read Original article in :-
(Read Original article in :-
'ராக் ஹெவன் சர்செஸ் ஆப் ஐவனோவா' (Rock-Hewn Churches of Ivanovo) என்ற இடம் பல தேவாலயங்கள்,தொழுகை இடங்கள் மற்றும் மடாலயங்கள் நிறைந்த பகுதியாகும். (churches, chapels and monasteries ). அவை அனைத்தும் பாறைகளைக் குடைந்து ஏற்படுத்தப்பட்டவை. இந்த இடம் 'பல்கேரியா'வின் (Bulgaria) 'ரௌஸ்சீ' (Rousse) எனும் பகுதியின் தெற்குப் பக்கத்தில் உள்ள 'ருசென்ஸ்கீ' லோம்' நதியின் (Rusenski Lom river) 32 மீட்டர் உயரத்தில் மலை சரிவுப் பகுதியின் பாறைகள் நிறைந்த பகுதியில் உள்ளது. இங்குள்ள அனைத்து தேவாலயங்கள்,தொழுகை இடங்கள் மற்றும் மடாலயங்களின் அமைப்பும் மற்ற இடங்களில் காணப்படும் மத ரீதியான அமைப்பில் இல்லாமலும், அவற்றுக்குள் உள்ள சுவர் கோல ஓவிய காட்சிகள் மத்தியக் கால ஓவியங்களை ஒத்திருப்பதாகவும் உள்ளன.
'ராக் ஹெவன் சர்செஸ் ஆப் ஐவனோவா' என்பவை யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World Hertage Site) என ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டு அக்டோபர் (October) மாதம் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை 'எகிப்து' (Egypt) நாட்டில் நடைபெற்ற உலக புராதான சின்ன அமைப்பின் அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
1220 ஆம் ஆண்டில் பல்கேரியாவை சேர்ந்த துறவிகள் (Monks) இந்த இடங்களில் வந்து குடியேறத் துவங்கினார்கள். 17 ஆம் நூற்றாண்டில் அங்கு தங்கியவர்கள் கோடாரிகளினால் பாறைகளை வெட்டி (hew) தனி அறைகளையும், மடாலயம், தொழுகை இடம் போன்றவற்றையும் இங்கு அமைத்தார்கள். அவர்களுக்கு 'ஐவன் அலெக்ஸாண்டர்' (Ivan Alexander) மற்றும் ஐவன் எஸின் II (Ivan Asen II) போன்றவர்கள் அதற்குத் தேவையான பண உதவிகளை தாராளமாக செய்தார்கள். பாறைகளுக்குள் குடைந்து அமைக்கப்பட்டு உள்ள தேவாலயங்களில் காணப்படும் 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளை சேர்ந்த சுவர் கோல ஓவிய காட்சிகள் அற்புதமானவை.
ஐவனோவா தேவாலயங்களுக்குள் உள்ள
சுவர் கோல ஓவிய உருவங்கள்
Author: Klearchos Kapoutsis (Creative Commons Attribution 2.0)
சுவர் கோல ஓவிய உருவங்கள்
Author: Klearchos Kapoutsis (Creative Commons Attribution 2.0)
பாறைகளை குடைந்து அமைக்கப்பட்டு உள்ள 'ராக் ஹெவன் சர்செஸ் ஆப் ஐவனோவா' என்பவற்றில் புகழ் பெற்றவை புதைந்து போன தேவாலயம் (Buried Church) எனப்படும் 'செயின்ட் அர்ச்சங்கேல்' தொழுகை இடம் (St Archangel Michael Chapel), 'பேப்திஸ்டேரி' ( Baptistery), 'கோஸ்போதேவ் டோல் சாப்பெல்' (Gospodev Dol Chapel), 'செயின்ட் தியோடர் சர்ச்' (St Theodore Church) , மற்றும் அங்குள்ளவற்றில் பிரதான தேவாலயமான 'ஹோலி மாதர் ஆப் காட் சர்ச்' (Holy Mother of God Church) போன்றவை ஆகும். அந்த காலகட்டத்தில் அங்கு 40 தேவாலயங்கள் இருந்ததாகவும் தற்போது அவற்றில் சிலவற்றையே தற்போது பாதுகாத்து வருவதாகவும் கூறுகிறார்கள். இந்த இடம் 'ரூசே' மாகாணத்தின் (Ruse Province) 'ரூசே' (Ruse) எனும் நகரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'ஐவனோவா' கிராமத்தில் உள்ளது.
உலக புராதான சின்ன மைய விவரம்:
(World Heritage Site Inscription Details )
உள்ள இடம் : N 43 43 0 E 25 58 0
அங்கீகாரம் பெற்ற வருடம் : 1979
பிரிவு : கலை
தகுதி : II, III
'ராக் ஹெவன் சர்செஸ் ஆப் ஐவனோவா'வை
பார்க்க வேண்டுமா
(Visiting Rock Hewn Ivonova Churches )
நீங்கள் இந்த இடத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) மூலம் இங்கு போகலாம். சோபியாவின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
பல்கேரியாவின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels world wide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
(Visiting Rock Hewn Ivonova Churches )
நீங்கள் இந்த இடத்துக்கு சென்று பார்க்க வேண்டும் என்றால் 'சோபியா'வில் தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து டாக்ஸி (Taxi) மூலம் இங்கு போகலாம். சோபியாவின் ஹோட்டல்களில் (hotels in Sofia) முன் பதிவு செய்து கொள்ள 'சோபியாவின் ஹோட்டல்களில்' மீதே கிளிக் செய்யவும்.
பல்கேரியாவின் ஹோட்டல்களைப் பற்றிய விவரம் அறியவும் முன் பதிவு செய்து கொள்ளவும் ஷோடேல்ஸ் இன் பல்கேரியா (Hotels in Bulgaria) அல்லது உலக நாடுகளில் ஹோட்டல்கள் (hotels world wide) என்பதின் மீது கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment