துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Sunday, September 11, 2011

பெல்ஜியம் -யுனெஸ்கோ புராதான சின்ன மையம் :பிலாண்டின்-மோரிடுஸ்-மியூசியம்

பெல்ஜியம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
பிலாண்டின்-மோரிடுஸ்-ஹவுஸ் / அலுவலகம் / மியூசியம் 
(Read original Article in : Plantin-Moretus Museum
 
'பிலாண்டின்-மோரிடுஸ்-மியூசியம்' ( Plantin-Moretus Museum ) என்பது மறுமலர்ச்சி (Renaisaance) மற்றும் போரக்கியூ (Borque) காலத்தில் இருந்த அச்சடிக்கும்  மற்றும் பிரசுராலயம் இருந்த  (Printing and Publishing) அலுவலகம் ஆகும்.  'பெல்ஜியத்தின்' (Belgium)  'ஆண்ட்வெர்ப்' ( Antwerp) எனும் இடத்தில் இருந்த அந்த இடத்தை மியூசியமாக மாற்றிவிட்டார்கள்.  இந்த இடம் யுனெஸ்கோவின் புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site) ஏற்றுக் கொள்ளப்பட்ட இடம். 
முதலில் 'பிலாண்டின்- மோரிடுஸ்-மியூசியம்' என அழைக்கப்பட்ட இந்த இடத்தின் பெயரை யுனெஸ்கோ புராதான சின்ன அமைப்பு 'பிலாண்டின் மோரிடுஸ் ஹவுஸ் / அலுவலகம் / மியூசிய வளாகம் ' (Plantin-Moretus House-Workshops-Museum Complex) அமைத்தது.  16,17,மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் விளங்கிய உலக  வணிகவியல், தொழில் நுட்ப வேலைபாடுகல், எண்ணங்கள், நம்பிக்கைகள், இலக்கியங்கள், மற்றும் கலை போன்றவற்றுக்கு ஏற்ப தன் பணியில் செயல்பட்டதே இதன் அங்கீகாரத்திற்கான காரணம்.  
 
பிலாண்டின்  மோரிடுஸ் ஹவுஸ் / அலுவலகம் / மியூசியம் 
Author: Klaus Graf (Creative Commons Attribution ShareAlike 2.5)

அச்சகம் , பிலாண்டின் மோரிடுஸ் மியூசியம்
Author: Riopelle (public domain)

வாசகசாலை , பிலாண்டின் மோரிடுஸ் மியூசியம்

'பிலாண்டின்-மோரிடுஸ்-மியூசியத்தின்' வரலாறு
('History of the Plantin-Moretus Museum )

1549 ஆம் ஆண்டு  'கிறிஸ்தோபர் பிலாண்டின்' (Christoffel Plantin) எனும் புத்தகங்களை பைண்டிங் (Binder) செய்பவர் 'டி குல்டேன் பிரேஸ்சர்' (De Gulden Passer)  எனும் பெயரில் அச்சகத்தை (The Golden Compass) அமைத்தார். 1576 ஆம் ஆண்டு அவர் தனது அலுவலகத்தை 'விரிடாக்மார்கெட் ஸ்கொயர்' '(Vridagmarkt Square) என்ற இடத்துக்கு மாற்றினார். அதுவே இன்று  'பிலாண்டின்-மோரிடுஸ்-மியூசியமாக' உள்ளது. 
1543-1610 ஆம் ஆண்டுகளில் அவருடைய மருமகனான 'ஜான் I மோரிடுஸ்' (Jan I Moretus) என்பவர் அந்த அலுவலகத்தை நிர்வாகித்தார். அவர் அப்போது அந்த தொழிலில் பல கஷ்டங்களை சந்தித்தார். அந்த அச்சகத்தின் பெயரை  'மொயரிண்டோர்ப்' பைபிள் (Moerentorf Bible) என மாற்றி 18 ஆம் நூற்றாண்டில் அதை அதிகாரபூர்வ 'கத்தோலிக்க' பைபிள் (Catholic Bible ) அச்சடிக்கும் இடமாக ஆக்கினார். அதைத் தவிர அவர்  வார்த்தை அகராதிகள் மற்றும் பிற வெளியீடுகளையும் ( dictionaries and other publications) அச்சடித்து வந்தார்.   
1876 ஆம் ஆண்டுவரை அந்த அச்சகம் 'மோரிடுஸ்' குடும்பத்தினர் கைகளில் இருந்தது. அதன் பின் 'எட்வர்ட் மோரிடுஸ்' (Edward Moretus)  அதை 'அன்ட்வேர்ப்பில்' விற்று விட்டார். அதையே அவர்கள் 'பிலாண்டின்-மோரிடுஸ்-மியூசியமாக' மாற்றினார்கள்.  அதன்  முதலாம் காப்பாளரான  'மாக்ஸ் ரூசெச்ஸ்' (Max Rooses) என்பவர் பல மிகப் பழமையான பிரதிகளைக் (Old prints) கொண்ட காட்சியகமாக  மாற்றி அமைத்தார்.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details )

இருப்பிடம் : N 51 13 06.0 E 4 23 52.0
அங்கீகாரம் பெற்ற வருடம் : 2005
பிரிவு : கலை
தகுதி : II, III, IV, VI

இங்கு செல்ல வேண்டும் எனில் நீங்கள் 'அன்ட்வேர்ப்பில்' (Antwerp) தங்கி இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
மியூசியம் பிலாண்டின்-மோரிடுஸ்
(Museum Plantin-Moretus)
விரிடாக்மார்கெட் 22
(Vrijdagmarkt 22)
2000 அன்த்வேர்ப்
(2000 Antwerp)
பெல்ஜியம்
(Belgium )
தொலைபேசி எண் : +32 03 221 14 50
Email: museum.plantin.moretus@stad.antwerpen.be

அன்ட்வேர்பிற்கு செல்வது எப்படி
(Getting In Antwerp )

'அன்ட்வேர்ப்'  விமான நிலையத்துக்கு {Airport (ANR)} லண்டன் (London), லிவெர்பூல் ( Liverpool), ஜெர்சி (Jersey) மற்றும் மான்செஸ்டர் (Manchester) போன்ற இடங்களில் இருந்து  'சிட்டி ஜெட்' (CityJet) விமான சேவை  என்ற அமைப்பு விமானங்களை செலுத்துகின்றது. இல்லை என்றால்  'ப்ருச்சில்ஸ்' (Brussels) மற்றும் 'ஆம்ஸ்டர்டாமில்' (Amsterdam) இருந்து ரயில் மூலம் பயணிக்கலாம். 'ப்ருச்சில்ஸ்' விமான நிலையத்தில் இருந்து  'அன்ட்வேர்பிற்கு' தேசிய ரயில் சேவை உள்ளது.  அதில் 1 மணி 50 நிமிடத்தில் சென்றடையலாம். அதில் முன் பதிவு செய்து கொள்ள பெல்ஜிய இணையதளத்திற்கு (Belgian  Railway) செல்லவும்.

No comments:

Post a Comment