பண்டார் செரி பகவான் மசூதி
Author: Camera Operator: PH2 JACOB JOHNSON, USN (public domain)
Author: Camera Operator: PH2 JACOB JOHNSON, USN (public domain)
'ப்ருனி' (Brunei) நாட்டை குறைந்த செலவில் பார்க்கவே உங்களுக்கு இந்த நாட்டின் சுற்றுலா குறிப்புக்களை தந்து உள்ளேன். 'மலேசியா' (Malaysia) நாட்டின் 'சபாஹ்' (Sabah) மற்றும் 'சராவக்' (Sarawak) போன்ற இடங்களை சென்று பார்ப்பதும் இங்கு போகவும் ஒரே அளவிலான செலவுதான் ஏற்படும்.
இது மிகச் சிறிய ஆனால் பணக்கார நாடாகும். இதன் அதிகாரபூர்வமான பெயர் 'நெகரா ப்ருனி தாருஸ்ஸலாம்' (Negara Brunei Darussalam) என்பதே. அதன் அர்த்தம் அமைதியான வசிப்பிடம். (Abode of Peace). இதன் தென்புறத்தில் 'மலேசியா'வின் 'சராவக்' , வடக்கில் 'தென் சைனா' (South China) போன்றவற்றுடன் எல்லைகளை வைத்து உள்ளது. இந்த நாட்டின் ஆளுநர் மற்றும் மன்னன் (Ruler and Head) 'சுல்தான் ஹசானால் போல்கியா' (Sultan Hassanal Bolkiah) என்பவர் ஆவர். 'ப்ருனி'யில் நான்கு மாகாணங்கள் உள்ளன. அவை 'பிலைட்' (Belait), 'டுடாங்' (Tutong), 'மவ்ரா' (Muara) மற்றும் 'டெம்புராங்' (Temburong) என்பவை ஆகும். 'ப்ருனி'யின் தலைநகரம் 'பண்டார் செரி பகவான்' (Bandar Seri Begawan) என்பதே. இது 'மவ்ரா' மாகாணத்தில் உள்ளது.
ப்ருனியின் வரலாறு 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளில் கொடி கட்டிப் பறந்த 'சுல்தானேட் ஆப் ப்ருனி' (Sultanate of Brunei) என்பவர்கள் ஆட்சி காலத்தில் துவங்கியது. அவர்களின் ஆதிக்கம் 'சபாஹ்' , 'சராவக்' , 'போர்னியோ'வின் (Borneo) தீவுகள் மற்றும் 'சுலு ஆர்ச்சிபீலகோ' (Sulu archipelago) போன்ற இடங்களிலும் பரவி இருந்தது. ஆனால் ஐரோப்பியர்கள் அந்த இடங்களில் வந்து குடியேறியதும் சுல்தான் ஆட்சியின் மகிமை குறைந்தது. 'ப்ருனி'யின் தலைநகரில் 'ஸ்பெயின்' (Spain) நாட்டினருடன் நடந்த சண்டையில் சுல்தானியர்கள் வெற்றிப் பெற்றாலும் அவர்களின் சில பகுதிகளை 'ஸ்பெயின்' நாட்டினரிடம் இழந்தார்கள். 19 ஆம் நூற்றாண்டில் அவர்கள் 'சராவாக்கை' சேர்ந்த 'வெள்ளை ராஜாஹ் '(White Rajahs) என்பவர்களிடம் நடந்த சண்டையில் தற்போது உள்ள சிறு பகுதியைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளையும் இழந்து விட்டார்கள். 1888 முதல் 1984 வரை 'ப்ருனி' பிரிட்டிஷ் (British) நாட்டினரின் கையில் இருந்தாலும் 1941 முதல் 1945 வரை அது 'ஜப்பானியர்'கள் (Japanese) கையில் விழுந்தது.
1960 ஆம் ஆண்டு அரசை எதிர்த்து நடந்த புரட்சியை (Rebellion) பிரிட்டிஷ் அரசின் துணையோடு முறியடித்து 'மலேசியாவின்' கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. 1984 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பிரிட்டிஷ் அரசிடம் இருந்தும் விடுதலை பெற்று சுதந்திர நாடாகியது (Independence).
1960 ஆம் ஆண்டு அரசை எதிர்த்து நடந்த புரட்சியை (Rebellion) பிரிட்டிஷ் அரசின் துணையோடு முறியடித்து 'மலேசியாவின்' கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. 1984 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து பிரிட்டிஷ் அரசிடம் இருந்தும் விடுதலை பெற்று சுதந்திர நாடாகியது (Independence).
ப்ருனி பற்றிய தகவல்கள்
(Fast Facts about Brunei )
அதிகாரபூர்வமான பெயர் : நெகரா ப்ருனி தாருஸ்ஸலாம்
தலைநகரம் : பண்டார் செரி பகவான் (83,500)
ஜனத்தொகை : 372,400
மொழிகள் : மலாய் (official), ஆங்கிலம் , சீன மொழி
நாணயம் : ப்ருனியன் டாலர் (BND)
மதம் : இஸ்லாம் (67%), புத்தமதம் (13%)
பரப்பளவு : 5,770 சதுர கிலோ மீட்டர் (2,228 சதுர மைல்)
உள்ள பகுதி: ஆசியா
நீங்கள் 'ப்ருனியில்' ஹோட்டல்களை முன்பதிவு செய்து கொள்ளும் முன் மற்ற ஹோட்டல் இணையதளங்களில் (hotel booking websites ) அதே அளவிற்கான அறைகளுக்கு என்ன கட்டணம் உள்ளது என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ப்ருனி ஹோட்டல் தேடுதல் (Brunei Hotel Search Engine ) மீது கிளிக் செய்து நீங்கள் அனைத்து ஹோட்டல்களின் விவரங்களையும் பார்க்கலாம். உங்கள் செலவை குறைத்துக் கொள்ள அது உதவும்.
ப்ருனிக்கு எப்போது செல்லலாம்
(When to visit Brunei )
'ப்ருனி'யில் நல்ல வெய்யில் மற்றும் புழுக்கமே அனைத்து மாதங்களிலும் இருக்கும். செப்டம்பர் (September) மாதம் முதல் ஜனவரி (Januvary) மாதம் வரை சிறிது ஈரப்பதமாக இருக்கும் . வருடம் முழுவதுமே அவ்வப்போது மழை பெய்தவாறு இருக்கும்.
ப்ருனியில் எந்த மாதிரியான உடைகளை அணியலாம்
(What to wear in Brunei )
இங்கு செல்ல வேண்டும் எனில் மெல்லிய உடைகளை (Light Weight) எடுத்துச் செல்ல வேண்டும். முக்கியமாக மழை கோட் மற்றும் குடை (Rain Coat and Umbrella) இரண்டையும் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். இந்த நாடு மதக் கட்டுப்பாடு மிக்க முஸ்லிம் நாடு என்பதினால் கண்டபடி உடை அணிவதை (dress decently) தவிர்க்க வேண்டும்.
ப்ருனிக்கு செல்ல வேண்டுமா
(Getting into Brunei )
இந்த நாட்டிற்குச் செல்ல 'ஏர் ஏஷியா' ( AirAsia) தரும் குறைந்த கட்டண விமான சேவை மூலம் செல்லலாம் .'மலேசியா'வின் 'சராவாக்'கில் இருந்து சாலை (Road) மூலமும் செல்லலாம். 'மிரி' (Miri), அல்லது 'லிம்பாங்' ( Limbang) என்ற இடங்களில் இருந்து பஸ்சிலும் செல்ல முடியும். அதற்கான கட்டணம் RM12.20. அந்த பஸ்கள் 'ப்ருனியின்' நகரான 'கவ்லா பிலைட்' (Kuala Belait) வரை செல்கின்றது. அதுவரை சென்று விட்டு அங்கிருந்து அந்த நாட்டின் தலைநகரமான 'பண்டார் செரி பகவானுக்கு' செல்லலாம்.
அமெரிக்க (U S National) நாட்டினர் 90 நாட்கள் வரை அங்கு தங்க விசா (No Visa) தேவை இல்லை . அது போல பிரிட்டிஷ் (UK National) நாட்டினர் 30 நாட்கள் வரையும், கனடா (Canada) நாட்டினர் 14 நாட்கள் வரையும் அங்கு தங்கினால் விசா பெறத் தேவை இல்லை.
அமெரிக்க (U S National) நாட்டினர் 90 நாட்கள் வரை அங்கு தங்க விசா (No Visa) தேவை இல்லை . அது போல பிரிட்டிஷ் (UK National) நாட்டினர் 30 நாட்கள் வரையும், கனடா (Canada) நாட்டினர் 14 நாட்கள் வரையும் அங்கு தங்கினால் விசா பெறத் தேவை இல்லை.
உள்ளூரை சுற்றிப் பார்க்க
(Budget Travel within in Brunei )
இந்த நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் குறைவு என்பதினால் சாலைகளும் அதிகம் இல்லை. பொதுவாக அனைவரிடமும் வாகனங்கள் உள்ளன என்பதினால் பொதுஜன வாகன சேவைகளும் குறைவாகவே உள்ளது. தலை நகரில் மினிபஸ்கள் (Mini Bus) செல்கின்றன. மொத்தத்தில் 'ப்ருனி' நகரை நடந்து சென்றே (By Walk) சுற்றிப் பார்க்க முடியும். டாக்சி கட்டணம் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு B$3.00 என்று உள்ளது. ஆனால் அதற்கு முன்போ, பின்போ போக வேண்டும் எனில் அதற்கான மேல் கட்டணம் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் B$0.20 ஆகும். எங்கு சென்றாலும் ஆரம்பக் கட்டணம் B$4.50. இந்த நாட்டில் மொத்தமே 40 டாக்சிகள் மட்டுமே உள்ளன என்பதினால் டாக்சிகள் கிடைப்பது கடினம். நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் செல்ல தூரப் பயண வண்டிகள் உள்ளன. அவை 'பண்டார் செரி பகவான்' முதல் 'செரியா' வரை செல்கின்றன.
ப்ருனியில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Brunei )
(1) பில்லியந்த் பாரேல் மொனுமென்ட்
(Billionth Barrel Monument )
(2) ஜெருடாங் பார்க்
( Jerudong Theme Park )
(3) கவுலா பாலாய்
(Kuala Balai )
(4) லுகான் இல்லக் ரேகரியேஷனல் பார்க்
(Luagan Lalak Recreational Park )
(5) பெரடாயன் பாரெஸ்ட் ரிசர்வ்
(Peradayan Forest Reserve )
(6) புலாவ் செரிலாங்
(Pulau Selirong )
(7) செரசா பீச்
(Serasa Beach )
(8) தாசிக் மேரிம்புன்
(Tasik Merimbun )
(9) உலு டெம்புராங் நேஷனல் பார்க்
(Ulu Temburong National Park )
மாகாணங்கள்
(Districts of Brunei )
(1) மவுரா
(Muara )
(Tutong )
(3) பிலைட்
(Belait )
(4) டெம்புராங்
(Temburong )
நகரங்கள்
(Towns in Brunei )
(1) பண்டார் செரி பகவான்
(Bandar Seri Begawan )
(2) பங்கார்
(Bangar )
(3) கவ்லா லுராஹ்
(Kuala Lurah )
(4) லாபி
(Labi )
(5) லபூ
(Labu )
(6) லுமுட்
(Lumut )
(7) செரியா
(Seria )
(8) டெலிசை
(Telisai )
No comments:
Post a Comment