துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, November 5, 2011

பூடான் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

பூடான் சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read The original Article in :- Bhutan Budget Travel )


பூடானில் சிறுவர்கள்
Author: Steve Evans (Creative Commons Attribution 2.0 Generic)

'பூடான்' (Bhutan) நான்கு பக்கங்களிலும் நிலப்பரப்பால் சூழ்ந்த பகுதி ஆகும். தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் 'இந்தியா'வுடனும் (India) , தெற்கு மற்றும் வடக்கில் 'திபெத்' (Tibet) மற்றும் 'சீனா'வுடனும் (China) தனது எல்லையை வைத்துக் கொண்டு உள்ளது. இதன் பரப்பளவு 38,394 சதுர கிலோ மீட்டர் (14,824 சதுர மைல் ). 2010 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் ஜனத்தொகை 700,000, தனிநபர் வருமானம், அதாவது GDP 1880 .
பூடானின் தலை நகரம் 'திம்பூ' (Timphu). இதன் அதிபராக மன்னர் உள்ளார்.  இது மன்னர் (King) ஆட்சிக்கு உட்பட்ட நாடு (Monarchy). இந்த நாட்டின் மன்னர் 'ஜிக்மே கேசர் நேம்யேல் வாங்சுக்' (Jigme Khesar Nemgyel Wangchuck) என்பவர். பிரதமர் 'ஜிக்மே Y. தின்லே' என்பவர் (Jigme Y. Tinley).
'பூடானின்' வடக்குப் பகுதி முழுவதும் இமயமலையினால் (Himalayas)  சூழப்பட்டு உள்ளது. அவற்றின் உயரம் சுமார் 7000 மீட்டர் வரை உள்ளது. 'பூடானின்' மிக உயரமான மலைகளில் 7553 மீட்டர் உயரமான 'குலா காங்கரி' (Kula Kangri) மற்றும் 7570 மீட்டர் உயரமான 'கங்கர் பென்ஸும்' (Gangkhar Puensum) என்ற இரண்டும் உள்ளன. அது போல தெற்கு 'பூடானும்' இமயமலைக் காடுகளினால் (Himalayan Forest) சூழப்பட்டுள்ள பகுதியாகும். இந்தக் காட்டுப் பகுதியில் உள்ள மலைகளின் சராசரி உயரம் (Height) 1500 மீட்டர் ஆகும்.
'பூடான்' அரசாங்க நாணயம் (Currency) 'நகுல்ட்ரம் ' (Ngultrum) என்பது. அதனுடன் சேர்த்து 'இந்திய' நாணயமும் அங்கு நடைமுறையில் உள்ளது. இந்த நாடு சிறியது என்றாலும் இதன் வளர்ச்சி நல்ல முறையில் உள்ளது. 2005 ஆம் ஆண்டு 8 % அளவில் இருந்த இந்த நாட்டின் வளர்ச்சி 2007 ஆம் ஆண்டில் 14 % தாக உயர்ந்துள்ளது.
1987 ஆம் ஆண்டு 'பிரிட்டிஷ்' நாட்டு (British) பத்திரிகை (Journalist) நிருபர் ஒருவர் இந்த நாட்டின் வளர்ச்சி மிகக் குறைவாக உள்ளது என்றதற்கு அந்த நாட்டின் மன்னர் கூறினார் ' பொருளாதார வளர்ச்சியை விட நாட்டு மக்களின் மன மகிழ்ச்சியின் வளர்ச்சியே முக்கியமானது'. அது முதல் மேற்கத்திய (Europian) பத்திரிகையாளர்களும் பார்வையாளர்களும் (psychologists) அந்த நாட்டின் பொருளாதார மற்றும் மன மகிழ்ச்சியின் வளர்ச்சியை ஆராயத் துவங்கினார்கள். அவர்கள் ஆராய்ச்சியின்படி பூடான் நாட்டு மக்களில் 45 % மக்கள் மிக மிக மகிழ்ச்சியாகவும், 52 % மக்கள் மகிழ்ச்சியாகவும், 3 % சதவிகிதத்தினர் மட்டும் மகிழ்ச்சி இல்லாமல் உள்ளதாகவும் தெரிய வந்தது.
'பூடானுக்கு' செல்பவர்கள் கையில் அதிக பணம் இல்லாமல் செல்ல முடியாது. 'இந்தியர்கள்' (India) மற்றும் 'பங்களாதேசத்தினருக்கு' (Bangaladesh) அங்கு செல்ல விசா தேவை இல்லை. விசா தேவையானவர்கள் 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். விமான நிலையத்துக்கு சென்று இறங்கியப் பின் விசாவிற்கு (Visa) விண்ணப்பித்தால் அது கிடைக்காது. 14 நாட்களுக்கான விசாவின் கட்டணம் US$20, அதற்கு முன்னதாகவே நாட்டிற்கு சுற்றுலா செய்து கொண்டதற்கான அத்தாட்சி  பத்திரமும் தேவை. அந்த சுற்றுலா பயணத்திற்கான திட்டத்தை உள்ளூரில் உள்ள சுற்றுலா அலுவலகம் மூலமே செய்து கொள்ள வேண்டும். அதற்கான கட்டணம் US$200 ஆகும். உள்ளூரில் உள்ள ஏஜெண்டுக்களின் மூலமே சுற்றுலா பயண முன் பதிவு செய்து கொண்டாலும் அதற்கான கட்டணத்தை பூடான் அரசே நிர்ணயித்து உள்ளது.
'பூடானுக்கு' செல்ல வேண்டும் என்றால் 'இந்தியா' அல்லது 'தாய்லாந்துக்குச்' (Thailand) சென்றுவிட்டு அங்கிருந்து 'பூடானுக்கு' செல்லலாம். 'நேபாளம்' (Nepal)  மற்றும் 'தாய்லாந்து' நாட்டிற்குச் சென்றால் அங்கிருந்து 'பூடானுக்கு' செல்ல விசாவிற்கு ஏற்பாடு செய்வார்கள்.
'பூடானின்' ஒரே சர்வதேசிய விமான நிலையம் 'பரோ' விமான நிலையம் (Paro Airport) ஆகும். அங்கு செல்ல  'டுறுக் ஏர்' (Druke Air) என்ற தேசிய விமான சேவை உள்ளது.
பாரோவின் இயற்கை காட்சிகள்
Author: Jean-Marie Hullot (Creative Commons Attribution 2.0 Generic)
 

பூட்டானில் உள்ளூர் சுற்றுலா

'பூடானுக்கு' செல்பவர்களின் பெட்டி படுக்கைகளை இறக்கவும், அதை கொண்டு செல்லவும் சுற்றுலா திட்ட அமைப்பே ஏற்பாடு செய்து விடும். ஏன் எனில் நீங்கள் கொடுக்கும் சுற்றுலா கட்டணத்தில் (Tour package) அவை அடக்கம். உள்ளூரில் அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் மினிபஸ் அல்லது 4 WD வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள். உள்ளூரில் தனியாக செல்பவர்கள் அங்குள்ள வாகன ஓட்டிகளிடம் கேட்டுக் கொண்டால் அவர்கள் உங்களை பல இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்கள். அதற்கான சிறு தொகையை அவர்குக்கு அன்பளிப்பாக தர வேண்டும். 

புனாகா சோங் எனும் இடம்
Author: Jean-Marie Hullot (Creative Commons Attribution 3.0 Unported

 
பூடானின் முக்கிய நகரங்கள்
(Principal Cities of Bhutan )

(1) திம்பு
(Thimphu )
1961 ஆம் ஆண்டு முதல் இதுவே பூடானின் தலை நகரம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த நகரம் பெரும் வளர்ச்சியை அடைந்து உள்ளது.
(2) பரோ
(Paro)
பூடானில் ஒரு நகரம்
(3) ஜகார்
(Jakar)
'ஜகார் சோங்' (Jakar Dzong) எனும் இடத்தில் உள்ள 'பும்தாங்' (Bumthang ) மாவட்டத்தில் உள்ள சிறிய நகரம்
(4) புனகா
(Punakha)
புனகா மாவட்டத்தில் உள்ள நகரம். முன்னர் இதுவே தலை நகரமாக இருந்தது.

பூடானில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Sights in Bhutan )
(1) குர்ஜி லக்ஹாங்
(Kurje Lakhang)
பூடானின் முதலாம் புத்தர் தலம். இங்குதான் குரு 'ரின்போச்சே' (Rinpoche) என்பவர் தியானத்தில் அமர்ந்து இருந்தார். ஆகவே இது ஒரு புனிதத் தலம்.
(2) தக்சாங் மடாலயம்
(Taktsang Monastry)
1200 மீட்டர் உயர மலை மீது உள்ள மடாலயம். தனது இரண்டாவது பயணத்தின் போது குரு 'ரின்போச்சே' இங்கு வந்தாராம்.
(3) சிங்கே சோங்
(Singye Dzong )
இது திபெத் (Tibet) நாட்டின் அருகில் உள்ளதால் இந்த இடத்தக்க்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. இத மழைப் பள்ளத்தாக்கில் உள்ள 'எஷி ஸோன்கல்' என்பவர் அமைத்து உள்ள ஆலயத்துக்கும் தனது இரண்டாம் விஜயத்தில் 'ரின்போச்சே' சென்றாராம்.
(4) ஜம்பே லக்ஹாங்
ஒரே நாள் இரவில் சோங்க்டேன் என்ற மன்னனால் (King Songten) கட்டப்பட்ட 108 மாடாலயங்களில் இதுவும் ஒன்று.
(5) டாம்சிங் லக்ஹாங்
'டேர்தான் பத்மா லிங்கப்பா' (Terton Padma Lingpa) என்பவர் கட்டிய மடாலயம்
(6) லாவ்ட்ராக் கர்ச்சூ லக்ஹாங்
பூடானின் மிகப் பெரிய மடாலய கல்லூரி
(7) புனாகா சோங்
புனாக்காவில் சப்ட்ருங் காவாங் நம்ஜியால் (Zhabdrung Ngawang Namgyal) என்பவர் கட்டிய அரண்மனை
(8) ரின்புங் சோங்
1993 ஆம் ஆண்டு சிறிய புத்தர் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்ட பூடானின் அரண்மனை
(9) சாகர் சோங்
பூடானின் 'பும்டாங்' (Bumthang ) மாகாணத்தில் உள்ள அரண்மனை

No comments:

Post a Comment