பூட்டான் : திம்பு
(Read Original Article in :-Thimphu Travel Guide)
(Read Original Article in :-Thimphu Travel Guide)
'திம்பு' (Thimphu) நகரம் பூடானின் தலை நகரம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 உயரத்தில் உள்ள இந்த நகர ஜனத்தொகை 80,000 ஆகும். இந்த நகரம் 'திம்பு சுவா நதி' (Thimphu Chuu) அல்லது 'வாங் சுவா நதி' (Wang Chuu) என்று அழைப்படும் நதியின் மேற்குப் பக்கத்தில் உள்ளது.
திம்புவின் ஹோட்டல்கள்
'திம்புவில்' தங்கும் இடங்கள் கிடைப்பது கஷ்டம். ஆகவே நீங்கள் நல்ல ஹோட்டலை தேட வேண்டும் என்பதினால் உங்களுக்கு உதவுவதற்காக அனைத்து ஹோட்டல்களின் கட்டணங்கள், விலாசம் போன்ற விவரங்களை ஹோட்டல்ஸ் இன் திம்பு (hotels in Thimphu) என்ற தளத்தில் காணலாம்.
திம்புவைப் பற்றிய மேல் விவரங்கள்
'பூடான்' நாட்டின் பொருளாதாரத்தில் (conomy) தம்பு முக்கிய பங்கு வகிக்கின்றது. அரசாங்கத்தின் பல கட்டடங்கள் மற்றும் 'டிசென்சொலிங்' அரண்மனையும் (Dechencholing Palace) இங்குதான் உள்ளன.
தட்பவெட்ப நிலை
மே -ஜூன் (May -June) மாதங்களில் அதிகமாக வேர்க்கும் (Humid) . வெயிலும் அதிகம். ஆனால் அதே போல குளிர் காலத்திலும் (Winter) குளிர் அதிகம். ஆகவே பூடானுக்கு செல்ல சிறந்த காலம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களே (Sept -Oct) . அப்போதுதான் அங்கு வெப்ப நிலை 10°C to 23°க என்ற அளவில் இருக்கும்.
திம்புவிற்கு செல்ல
'திம்புவில்' சர்வதேச விமான நிலையம் இல்லை. ஆகவே அங்கிருந்து சுமார் 54 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'பரோ' (Paro) விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து திம்புவிற்கு செல்ல வேண்டும். உங்கள் சாமான்களை அங்கிருந்து நீங்கள் தங்கும் இடத்துக்கு கொண்டு வர உங்களுடைய சுற்றுலாப் பயண திட்ட மையமே ஏற்கும்.
உள்ளூரை சுற்றிப் பார்க்க நீங்கள் உள்ளூரை சுற்றிப் பார்க்க வேண்டுமானால் நடந்தே செல்லாம். அல்லது டாக்ஸி, பஸ் போன்றவற்றிலும் பிரயாணம் செய்யலாம்.
திம்புவில் பார்க்க வேண்டிய இடங்கள்
Places of Interest in Thimphu
(1) பொடானிகல் கார்டன்
( Botanical Gardens )
திம்புவில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூங்கா
(2) சங்கங்க லகாங்
(Changangkha Lhakhang )
மிகப் பழைமையான ஆலயம்
(3) காரனேஷன் பார்க்
(Coronation Park )
நகரத்தின் ஸ்டேடியத்துக்கு அருகில் நதிக் கரையில் உள்ள பூங்கா
(4) நேஷனல் பால்க் ஹெரிடேஜ் மியூசியம்
(National Folk Heritage Museum )
பூடான் நாட்டின் கிராமிய வாழ்கையைக் காட்டும் காட்சியகம்
(5) நேஷனல் மெமோரியல் சொர்டேன்
(National Memorial Chorten)
திபெத் நாட்டுப் பாணியில் அமைக்கப்பட்டு உள்ள ஸ்தூபி. இங்கு வந்து மக்கள் வணங்குகிறார்கள்.
(6) சிம்டோகா சோங்
(Simtokha Dzong )
1629, ஆம் ஆண்டு கட்டப்பட்ட முதலாம் மடாலயம்
(7) டாக்கின் பிரசர்வ்
(Takin Preserve )
ஆடும் அல்ல, மாடும் அல்லாத பூடான் நாட்டுப் பிராணியைக் காக்கும் இடம்
(8) டெக்ஸ்டையில் மியூசியம்
(Textile Museum )
பூடான் நாட்டு துணிகள் மற்றும் திரை சீலைகள் விற்பனை நிலையம்
(9) த்ராஷீ சோயீ சோங்
(Trashi Chhoe Dzong )
மத மற்றும் நிர்வாக அமைப்பு இடங்களைக் கொண்ட மடாலய அரண்மனை
(10 ) சன்தொபெரி லக்ஹாங்
(Zangthoperi Lhakhang )
1960' ஆம் ஆண்டு கட்டப்பட்ட அற்புதமான கலை அழகு கொண்ட ஆலயம்
(11) சோரிக் சுசும் எனும் பண்டைய கால கலை பள்ளி
(Zoric susum School of Traditional Ats)
1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கலை கல்விக் கூடம்
1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கலை கல்விக் கூடம்
No comments:
Post a Comment