இரிக்கி தீவில் சுற்றுலா பயணிகள் தங்கும் வீடுகள்
Author: Phillip Capper (Creative Commons Attribution 2.0 Generic)
Author: Phillip Capper (Creative Commons Attribution 2.0 Generic)
பசிபிக் கடலில் தென் கிழக்குப் பகுதியில் உள்ளதே வனுவதூ (Vanuatu) எனும் தீவு நாடு. இதன் பரப்பளவு 12,190 சதுர கிலோமீட்டர். ஜனத்தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி 245,000. ஆஸ்திரேலியாவில் இருந்து வடமேற்கில் 1,750 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. இதன் தலை நகரம் போர்ட் விலா (Port Vila) என்பது.
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Vanuatu ) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
வனுவதூவைப் பற்றிய விவரங்கள்
(More on Vanuatu)
இந்த நாட்டின் நேரம் உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ள நேரத்தை விட பதினோரு மணி நேரம் அதிகம் (UTC+11). வாகனங்களை வலது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் வானத்து வடூ (VUV). தொலைபேசி எண் கோட் IDD +678.
வனுவதூ என்பது 82 சிறு தீவுகளைக் கொண்டது. இவை அனைத்துமே கடல் அடியில் எழுந்த சீற்றங்களினால் ஏற்பட்டவை. இங்குள்ள மிகப் பெரிய தீவுகள் எஸ்பிரிடூ சாண்டோ, மலாகுலா, இபாடே, எர்ரோமாங்கோ (Espiritu Santo, Malakula, Efate and Erromango) போன்றவை. இதன் தலைநகரமான போர்ட் விலா என்பது இபாடே தீவில் இருக்க நாட்டின் 1,879 மீட்ட உயரமான மலை எஸ்பிரிடூ சாண்டோவில் உள்ளது.
இந்த நாட்டின் தட்ப வெட்ப நிலை 20°C (68°F) முதல் 32°C (90°F) வரை உள்ளது . டிசம்பர் முதல் ஏப்ரல் வரை மழைக் காலம். இந்த தீவுகளில் அடிக்கடி புயல் வீசும்.
இந்த நாட்டின் தட்ப வெட்ப நிலை 20°C (68°F) முதல் 32°C (90°F) வரை உள்ளது . டிசம்பர் முதல் ஏப்ரல் வரை மழைக் காலம். இந்த தீவுகளில் அடிக்கடி புயல் வீசும்.
பெண்டேகோஸ்ட் தீவினர் கீழே குதிக்கும் ஒரு சடங்கு
வனுவதூவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மைக்ரோனேஷியா( Micronesia ) வை சேர்ந்தவர்கள் வசித்து வந்தாலும் 1605 ஆம் ஆண்டு இங்கு ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த பெர்னாண்டஸ் டி குரோஸ் ( Fernandes de Queirós ) என்பவரே முதலில் வந்தார். 19 ஆம் நூற்றாண்டில் இந்த தீவுகளில் பலவற்றை பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடினாலும் 1940 ஆம் ஆண்டு இங்கு தேசிய உணர்ச்சி தோன்றியது. ஆனாலும் 1970 ஆண்டில்தான் முதலில் அரசியல் கட்சி தோன்றியது. 1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் தேதியன்று இது பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் நாட்டில் இருந்து சுதந்திரம் அடைந்தது.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் காமன் வெல்த் நாடுகளை சேர்ந்தவர்கள் இங்கு செல்ல விசா தேவை இல்லை. பிரிஸ்பேன், சிட்னி, மெல்போர்ன் , ஆக்லாந் , நாடி, நௌமியா, போர்ட் விலா ( Brisbane, Sydney, Melbourne, Auckland, Nadi and Nouméa from Port-Vila) போன்ற இடங்களில் இருந்து இங்கு செல்ல விமான சேவைகள் உள்ளன
இந்த நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Cities in Vanuatu )
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Vanuatu )
செப் ரோய் மட்ட�s டொமைன் (2008)
(Major Cities in Vanuatu )
- போர்ட் -விலா - தலை நகரம்
- லுகன்வில்லே
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Vanuatu )
செப் ரோய் மட்ட�s டொமைன் (2008)
No comments:
Post a Comment