துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, November 5, 2011

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - ஒன்றிணைந்த அராபிய எமிரேட்ஸ்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
 ஒன்றிணைந்த  அராபிய எமிரேட்ஸ்
(Read Original Article in :- United Arab Emirates )


 டெர்மினல்  2 டில் A380  துபாய்  இன்டர்நேஷனல்  ஏர்போர்ட்
Author: Simisa (Creative Commons Attribution ShareAlike 3.0)

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுக்காக இந்த தளத்தில் செய்திகளை தந்து உள்ளேன்.
ஹோட்டல்கள்
(Guide  Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Dubai) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும். இந்த கூட்டமைப்பில் துபாய் மட்டுமே மிகப் பெரிய நகரமாக உள்ளது. சந்தர்பம் கிடைக்கும்போது மேலும் பல விவரங்களைத் தருகிறேன்.

துபாய் , ஒன்றிணைந்த அராபிய எமிரேட்ஸ்

அராபிய வளைகுடாவில் ஏழு எமிரேட்ஸ்கள் (முஸ்லிம் தலைவர்கள்) சேர்ந்து உருவாக்கியதே UAE என்பது.  இந்த எமிரேட்ஸ் எனப்படும் கூட்டமைப்பில்  அபுதாபி , துபாய், ஷார்ஜாஹ், அஜ்மான், உம் அல் குயெயின், ரச அல் கைமாஹ் மற்றும் புஜைரா (Abu Dhabi, Dubai, Sharjah, Ajman, Umm al-Quwain, Ras al-Khaimah and Fujairah) போன்ற நகரங்கள் அடங்கி உள்ளன. இவற்றின் தலை நகரம் அபுதாபி . இதுவே அந்த கூட்டமைப்பின் பொருளாதார, அரசியல், கலை  மற்றும் தொழில்சாலைகளில் வளம் பெற்ற இடம் ஆகும்.   
சிறிய நாடு என்றாலும் உலகின் ஏழாவது மிகப் பெரிய எண்ணை வளம்  மிக்க இடம் ஆகும். இந்த நாட்டின் GDP US$46,584 மற்றும் உலகில் மிக அதிக தனி நபர் வருமானத்தில் 14 இடத்தை வகிக்கின்றது. 
UAE பழமைக் கோட்பாடு சார்ந்த அராபிய வாழ்கை முறைக்கு மாறுபட்ட மிக அதிக நாகரீகமான அராபிய நாடு.   இந்த உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு மிக அதிக உயரமான கட்டிடங்களை 2010 ஆம் ஆண்டு துபாய் நகரில் கட்டி உள்ளார்கள். ஐரோப்பிய உணவகங்களின் பாணியில் மக்டோனால்ட் போன்ற பல கடைகள் உள்ளன.  நாகரீக உலகுடன் ஒத்துப் போகும் வகையில் 2006 ஆம் ஆண்டில் பண்டைய காலத்து பாணியில் இருந்த சௌக்ஸ் (Souks) கடைகள்  இடித்துத் தள்ளப்பட்டன.

துபாய்க்கு செல்ல வேண்டுமா
(Budget travel to Dubai )

கீழ்கண்ட நாடுகளை சேர்ந்தவர்களுக்கு 30 நாள் விசா (Visa) தரப்படுகின்றது.
 ஆஸ்திரேலியா , அண்டொரா  , ஆஸ்திரியா , ப்ருனெய் , பெல்ஜியம் , கனடா , டென்மார்க் , பின்லாந்த் , பிரான்ஸ் , ஜெர்மனி , க்ரீஸ்  , ஹாங் காங் , ஐஸ்லேன்ட்  , இர்லாந்து , இத்தாலி , ஜப்பான் , லிச்ட்டேன்ச்டீன் , லுக்ஸ்யெம்பௌர்க்  , மலேசியா , மொனாகோ , நெதர்லாண்ட்ஸ் , நியூ சிலாந்து , நார்வே , போர்துகல் , சான்  மரினோ , சிங்கப்பூர் , சவுத்  கொரியா , ஸ்பெயின் , ஸ்வீடன் , ஸ்விட்சர்லாந்து , யுனைடெட் ஸ்டேட்ஸ்  ஆப்  அமெரிக்கா  மற்றும்  வாடிகன் . மற்ற நாடுகளில் உள்ளவர்கள் முன்னதாகவே விசாவை பெற்று இருக்க வேண்டும்.
UAE யை பொறுத்தவரை மருந்துகள், போதைப் பொருட்கள் போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. கோட்டின், வாலியம், ராபிடுச்சின் போன்ற மருந்துகள் அங்கு தடை செய்யப்பட்டு உள்ளவை. அந்த மருந்துகளை நீங்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்றால்  என்றால் உங்களிடம் தகுந்த மருத்துவருடைய சான்று இதழ் தேவை.இல்லை என்றால் உங்களை திரும்ப அனுப்பி விடுவார்கள் அல்லது சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்.
UAE க்கு செல்ல வேண்டும் எனில் அந்த நாட்டின் தேசிய சேவை விமானங்களில் செல்லலாம். உலகெங்கும் இருந்தும் இங்கு செல்ல விமான சேவைகள் உள்ளன. குறைந்தக் கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டும் எனில் ஏர் அராபியா விமானங்களில் பயணம் செய்யலாம்.  பிற நகரங்களுக்கு பயணம் செய்ய நல்ல சொகுசான பஸ் வசதிகள் உள்ளன. அவையே சிறந்தது. துபாய், ஷார்ஜாஹ் மற்றும் அபு துபாயில் நிறைய டாக்சிக்கள் ஓடுகின்றன.  

 ஷேக் சயேத்  மசூதியின்  உட்புறக் காட்சி , Abu Dhabi
Author: Frank Haas (Creative Commons Attribution 3.0 Unported)


UAE யில் உள்ள நகரங்கள்
(Places of Interest in United Arab Emirates )
1) அபு  தாபி
தலை நகரம் மற்றும் இரண்டாவது பெரிய நகரம்
2) துபாய்
வர்த்தக நகரம்
3) ஷர்ஜாஹ்
UAE யின் மூன்றாவது மிகப் பெரிய நகரம்
4) ஹட்டா
சிறிய நகரம் 
5) அஜ்மான்
UAE யின் மிகச் சிறிய நகரம்
6) புஜைராஹ்
நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரம் 

சுற்றுலா இடங்கள்
(Tourist Destinations in the United Arab Emirates )
1) புர்ஜ்  காலிபா  
உலகின் மிக அதிக உயரமான கட்டிடம்
2) லிவா  ஓசிஸ்
மிகப் பெரிய அளவிலான மணல் குன்றுகள் உள்ள பாலைவனச் சோலை 
3) சகி  துபாய்
உலகின் மூன்றாவது  பனி நடைக் கட்டை உள்ள இடம் (பனி சறுக்கல்)

No comments:

Post a Comment