துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, November 5, 2011

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - ஜாம்பியா

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
ஜாம்பியா
(Read Original Article in : Discover Zambia )



விக்டோரியா பால்ஸ்சில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
Author: Ian Restall (public domain)  

தென் ஆப்ரிகாவில் உள்ள இன்னொரு நாடு ஜாம்பியா (Zambia ). இதன் பரப்பளவு 752,618 சதுர கிலோமீட்டர். 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி இதன் ஜனத்தொகை 13 மில்லியன் . இதன் எல்லைகள் வடக்கில் காங்கோ ஜனநாயக நாட்டுடனும் ( Democratic Republic of the Congo )   வட கிழக்கில்
தான்சனியாவுடனும் ( Tanzania ), கிழக்கில்  மலாவி (Malawi) தென் கிழக்கில் மொசாம்பிக் (Mozambique) மற்றும் தெற்கில் போஸ்ட்வானா (Botswana ), நாம்பியா (Namibia ) மற்றும் தெற்கில் அங்கோலா (Angola) வுடன் உள்ளது. இந்த நாட்டின் தலை நகரம் லுசாகா ( Lusaka).
ஜாம்பியாவின் ஹோட்டல்கள். Guide to Zambia Hotels இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Zambia) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.


விக்டோரியா பால்ஸ்
Author: Kounosu (Creative Commons Attribution 3.0 Unported)

ஜாம்பியாவைப் பற்றிய விவரங்கள்
(Details on Zambia )

ஜாம்பியாவின் நேரம் உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட  இரண்டு மணி நேரம்  அதிகம் (UTC+2). வாகனங்களை இடதுபுறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் அமெரிக்க டாலர். பேசும் மொழிகள் ஆங்கிலம், பெம்பா, லுண்டா,நியாஞ்சா  போன்றவை (English, Bemba, Lunda and Nyanja).  தொலைபேசி எண் கோட் IDD +260. இங்குள்ள மக்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் கிருஸ்துவர்கள்.
18 ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக இங்கு ஐரோப்பியர்கள் வந்தார்கள். அதில் டேவிட் லிவிங்ஸ்டோன் (David Livingstone) என்பவர் முக்கியமானவர்.இந்த நாட்டின் பெயரை 1888 ஆம் ஆண்டு  இந்த நாட்டின் பெயர் சுரங்கத் தொழிலை குத்தகைக்கு எடுத்த பிரிட்டிஷ்  சவுத் ஆப்ரிக்கா  கம்பெனி  (BSA Company)யை சேர்ந்த  செசில் ரோடெஸ்  என்பவர்  மூலம்  அமைந்தது. முதலில் வடகிழக்கு மற்றும் வட மேற்கு ரொடிஷியா என இருந்த பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு  1911 ஆம் ஆண்டில் வடக்கு ரொடிஷியா என ஆனாலும் அதில் இருந்து பிரிந்த தென் ரொடிஷியா இன்று ஜிம்பாவே (Zimbabwe) என ஆகிவிட்டது.     


லுசாகா  

1924 ஆம் ஆண்டு வட ரொடிஷியா, தென் ரொடிஷியா மற்றும் ந்யாசலாந் (Northern Rhodesia, Southern Rhodesia and Nyasaland) போன்ற மூன்றும் இணைந்து மலாவி (Malawi) என ஆயிற்று.  மீண்டும் வடக்கு ரொடிஷியா 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியன்று ஜாம்பியா குடியரசு என ஆயிற்று.
சுரங்கத் தொழிலில் மிக முன்னேற்றம் கொண்டுள்ள இந்த நாட்டில் உள்நாட்டுக் குழப்பங்களும்  அண்டை நாடுகளான ஜிம்பாவே, அங்கோலா, மொசாம்பிக் போன்றவையுடன் யுத்தங்களும் தொடர்ந்து கொண்டு இருந்தாலும் 21 ஆம் நூற்றாண்டில்தான் இந்த நாடு வளர்ச்சி அடையத் துவங்கி உள்ளது.

 சிபடா எனும் இடத்தில் உள்ள கறிகாய் கடைகள்  
Author: Brian Dell (public domain)

ஜாம்பியா  ஜனாதிபதி ஆட்சின் கீழ் உள்ள  ஜனநாயக நாடு . இந்த நாட்டின் பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்ற இருவருமே ஒருவரே ஆகும். இங்கு வறண்ட சூழ்நிலை நிலவுகின்றது.  நவம்பர் முதல் ஏப்ரல் வரை மழைக் காலம். மே முதல் அக்டோபர் வரை வறண்ட காலமாக உள்ளது. 
ஜாம்பியாவுக்கு செல்ல விசா தேவை (Visa). ஆனால் இரிலாந்த் ( Ireland) , மலைசியா (Malaysia), சிங்கப்பூர் (Singapore) மற்றும் தென் ஆப்ரிக்க (South Africa) நாடுகளில் உள்ளவர்களுக்கு விசா தேவை இல்லை.   
இந்த நாட்டிற்கு சென்று வரும் பயணிகள் அங்கு சுற்றுலாப் பயணம் செய்யத் தேவையான வசதிகள் இல்லை என்கிறார்கள். ஆகவே குறைந்த அளவில்தான் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்கிறார்கள். இங்கு செல்ல வேண்டும் எனில் லுசாகா விமான நிலையத்துக்கு {Lusaka International Airport (LUN)} சென்று அங்கிருந்து ஊருக்குள் செல்ல வேண்டும். லண்டன் ஹீத்ரோவ் (London-Heathrow) விமான நிலையத்தில் இருந்து இங்கு செல்ல விமான சேவை உள்ளது. 

ஜாமியாவின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Zambia )
  1. லூசாக  -தலை நகரம்
  2. சின்கோல
  3. சிப்ட
  4. கப்வே
  5. காசாம
  6. கிட்வே
  7. லிவிங்ஸ்டோன் 
  8. முபுலிர
  9. ந்டோல

பார்க்கக் கூடிய இடங்கள்  
(Places of Interest in Zambia )
  1. ப்ளூ  லகூன்  நேஷனல்  பார்க்
  2. கபேவ் நேஷனல்  பார்க் 
  3. லோசின்வர்  நேஷனல்  பார்க்
  4. லோவேர்  சம்பேசி  நேஷனல்  பார்க்
  5. நோர்த்  லோங்க்வா  நேஷனல்  பார்க்
  6. நசும்பு  நேஷனல்  பார்க்
  7. சவுத்  லோங்க்வா  நேஷனல்  பார்க்
  8. வெஸ்ட்  லுங்க  நேஷனல்  பார்க்

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Zambia )
மோசி -ஓ -துன்யா  / விக்டோரியா  பால்ஸ் 

No comments:

Post a Comment