'பூடானில்' (Bhutan) 'குரு ரின்போச்சே' (Guru Rinpoche) என்பவர் AD 746 ஆம் ஆண்டு தியானம் செய்த புனித மடாலயமே 'குர்ஜே லக்ஹாங்' (Kurje Lhakhang) என்ற மடாலயம் . இந்த நாட்டின் மிகப் பழைய மடாலயம் இதுவே ஆகும்.
'குர்ஜே லக்ஹாங்' அல்லது 'குர்ஜே மடாலயம்' (Kurjey Monastery) எனப்படும் இது 'பும்தாங்' (Bumthang) மலைப் பள்ளத்தாக்கில் உள்ளது.
'பூடானில்' ஆட்சி செய்து வந்த 'சென்டப் காப்' (Sendah Gyab) என்ற மன்னன் தனது நாட்டில் இருந்த தீய ஆவி சக்திகள் (evil spirits) தமது மக்களை துன்புறுத்தி வருவதை தடுக்க 'குரு ரின்போச்சே'யை அழைத்தார். அது மட்டும் அல்லாமல் 'ஷேல்ஜிங் கார்போ' (Shelging Karpo) என்ற காவல் தேவதை அந்த மன்னனின் சக்தியை எடுத்துக் கொண்டு போய்விட அவன் நோயுற்றான்.
ஆகவே 'குரு ரின்போச்சே' அங்கு வந்து 'டிராக்மார் டோர்ஜி செஸ்பா' (Dragmar Dorji Tsegpa) எனப்பட்ட சிவப்புக் குகையில் கடுமையான தவம் செய்து அந்த தீய ஆவிகளை துரத்தி அடித்தாராம். அதுவே தற்போது 'குர்ஜே லக்ஹாங்' எனப்படும் மடாலயம் ஆகும்.
No comments:
Post a Comment