சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள்
டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் (Turks and Caicos Islands ) மேற்கு இண்டிஸ்ல் உள்ள தீவுகள். கைகோஸ் அவற்றில் பெரிய தீவு டர்க்ஸ் இரண்டிலும் சிறியது. இந்த தீவுகள் முதலில் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கடல் கடந்த பிரதேசங்கள். இந்த இரண்டு தீவும் சேர்ந்து 430 சதுர கிலோமீட்டராக இருக்க 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி அவற்றின் ஜனத் தொகை 37,000 பேர்கள் . இத தீவு நாடுகளின் தலை நகரம் காக்பர்ன் டவுன் (Cockburn Town) என்பது. அது கிராண்ட் துர்க் தீவில் (Grand Turk Island) உள்ளது. இத தீவு தேசத்தில் அதிக ஜனத்தொகையைக் கொண்டது பிரோவிடயலன்ஸ் (Providenciales) என்ற தீவுதான். இது கைகோஸ் தீவு கூட்டத்தில் உள்ளது.
உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட இந்த நாட்டின் நேரம் ஐந்து மணி பின்னால் உள்ளது (UTC-5). வெயில் காலத்தில் அது நான்கு மணி நேரமாக குறையும். இந்த நாட்டின் தேசிய மொழி ஆங்கிலம். பேரரசி எலிஜிபத் II இந்த நாட்டின் அதிபர். ஆனால் அவருடைய ஆட்சியின் கீழ் உள்ள இதை ஒரு ஆளுநர் நிர்வாகிக்கின்றார். இந்த நாட்டின் நாணயம் அமெரிக்க டாலர். இங்கு யுரோ மற்றும் பிரிட்டிஷ் பவுண்ட் ஏற்கப்படுவது இல்லை. சாலையில் வாகனங்களை இடதுபுறம் ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் தொலைபேசி எண் +1-649
கிராண்ட் துர்க் தீவில் கடற்கரை ஒளி விளக்கு
Author: TampAGS (Creative Commons Attribution 3.0 Unported)
டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளின் பொருளாதாரம் அந்த நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளைப் பொறுத்தே உள்ளது. அதைத் தவிர இந்த நாடு வெளிநாடுகளின் முதலீடுகள் மூலமும் வருமானத்தை பெருக்கிக் கொள்கின்றது.
டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளின் புவியல் ஆராய்வுப்படி லுகயான் ஆர்சிபீலகோ (Lucayan Archipelago) மற்றும் பகமாஸ்சை(Bahamas) உள்ளடக்கியது. இந்த தீவுக் கூட்ட நாட்டில் எட்டு பெரிய தீவுகளும் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறிய தீவுகளும் உள்ளன.

இந்த நாடுகளில் வருடம் முழுவதுமே ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலையே உள்ளது. ஜனவரி மாதங்களில் சற்று குளிராக இருக்கும். இந்த நாட்டின் தட்பவெட்ப நிலையின் அளவு 16.8°C (62.2°F) என இருக்கும் என்றாலும் ஜூன் ஜூலை மாதங்களில் அது 29.9°C (85.8°F) என்ற அளவில் இருக்கும்.
டர்க்ஸ் தீவின் பெயர் துர்கிஷ் பிஸ் காக்டஸ் {Turkish fez cactus (Melocactus communis)} என்பதில் இருந்து வந்தது. லுகாயன் மொழியில் காக்டஸ் என்பதின் அர்த்தம் சரம் போன்ற தீவுகள். லுகாயன்ச்ஸ் என்பவர்கள் வெஸ்ட் இண்டீஸ்சை சேர்ந்த மக்கள்.
1492 ஆம் ஆண்டு கிரிஸ்டோபர் கொலம்பஸ் (Christopher Columbus ) என்பவரே முதலில் இங்கு வந்துள்ளார். அதே நூற்றாண்டில் ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் அங்கு வந்து அங்கிருந்த மக்களை ஹிஸ்பனியலா (Hispaniola) எனும் தீவில் வேலை செய்யும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டார்கள். 17 ஆம் நூற்றாண்டுவரை அவர்களில் பலர் வியாதிகளினால் மடிந்தார்கள். அதனால் அந்த நாட்டின் ஜனத்தொகை வெகுவாகக் குறைந்தது. 1765 முதல் 1783 வரை இந்த தீவுகள் ஸ்பானிஷ் நாட்டினரிடம் இருந்து பிரிடிஷர் வசம் சென்றது.

1775-1783 ஆண்டுகளில் ஏற்பட்ட அமெரிக்க புரட்சியினால் மக்கள் நாட்டை விட்டு தப்பி ஓட 1799 ஆம் ஆண்டு அந்த தீவுகளை பிரிட்டிஷ் அரசு கைபற்றியது. 1841 ஆம் ஆண்டு கிழக்கு கைகோஸ் பகுதியில் ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்த கப்பல் தரை தட்டி விட்டதினால் அதில் இருந்த பெரும்திரளான மக்கள் அங்கு இறங்க வேண்டி இருந்தது. அதில் இருநூறுக்கும் மேற்பட்ட அடிமைகள் இருந்தார்கள். அந்த ஆப்ரிக்க நாட்டு அடிமைகள் தரை இறங்கிய கப்பலில் இருந்து குதித்து கிழக்கு கைகோஸ் பகுதிக்கு தப்பிச் சென்று விட்டார்கள். அங்கு அடிமைகளை வைத்துக் கொள்வது தடை செய்யபட்டு இருந்தது.
1962 ஆம் ஆண்டு ஜமைக்கா விடுதலை அடைந்தவுடன் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளும் காலனி ஆகி 1973 ஆம் ஆண்டுவரை பகமாஸ்சுடன் இணைந்து இருந்தது. ஆனால் சமீக காலமாக இந்த தீவுகள் அரசியல் ஸ்திரமின்மையினால் அவதிப்பட்டது. கனடா நாடு தன நாட்டுடன் இணையுமாறு அதற்க்கு அறைகூவல் விடுத்தாலும் அங்கிருந்த பெருவாரியான மக்களுக்கு அதில் ஆர்வம் இல்லை என்பதினால் அது நிறைவேறவில்லை. 2009 ஆம் ஆண்டு அங்கிருந்த அரசாங்கத்தின் மீது பெருவாரியான ஊழல் புகார் எழுந்ததினால் அந்த அரசை விலக்கி விட்டு அந்த நாட்டின் நிர்வாகியாக கவர்னரை பிரிட்டிஷ் அரசு நியமித்து உள்ளது.
இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Turks and Caicos Islands )
இந்த தீவுகளின் நாட்டிற்கு செல்ல வேண்டும் எனில் கைகோஸ் தீவில் உள்ள பிரோவிடயலன்ஸ் விமான நிலையத்துக்கு {Providenciales International Airport (PLS)} சென்று அங்கிருந்து மற்ற இடங்களை அடையலாம். மியாமி மற்றும் JFK ஏர்போர்ட் போன்ற இடங்களில் இருந்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் விமான சேவை மற்றும் டொரோண்டோ, மொண்ட்ரியல், ஒட்டவா போன்ற இடங்களில் இருந்து கனடா மற்றும் பிரிட்டிஷ் விமான சேவை மூலம் இங்கு செல்ல முடியும்.
இந்த தீவு நாடுகளின் பெரிய நகரங்கள்
(Major Cities in Turks and Caicos Islands )
- காக்பர்ன் டவுன்- தலை நகரம்
- ப்ளூ ஹில்ல்ஸ்
- பாட்டில் கிரீக்
- காக்பர்ன் ஹார்பர்
No comments:
Post a Comment