துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Wednesday, December 28, 2011

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - செசெல்லேஸ்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
செசெல்லேஸ்
( Read Original Article in :- Seychelles  Travel Guide)



  பிராஸ்லின்  தீவின் ஒரு காட்சி  
Author: Tobi 87 (Creative Commons Attribution 3.0 Unported)

செசெல்லேஸ் (Seychelles) என்ற தீவு தேசம் இந்தியக் கடல் பகுதியில் உள்ளது.  இது சோமாலிய (Somalia) நாட்டின் தென்கிழக்கிலும் , இந்தியாவின் ()India தென்மேற்கிலும் அமைந்து உள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு 451 சதுர கிலோ மீட்டர்.  2011 ஆண்டின் கணக்கின்படி இதன் ஜனத்தொகை  84,000 .நாட்டின் தலை நகரம் விக்டோரியா (Victoria). இதன் தேசிய மொழிகள் ஆங்கிலம், பிரென்ச் மற்றும் செசெல்லோயிஸ் கிரிடோல்  போன்ற மூன்றுமே (French, English and Seychellois Creole).
செசெல்லேஸ்  ஒரு குடியரசு நாடு.  இந்த நாட்டின் நேரம் உலக நாடுகள் ஒப்புக்கொண்டு உள்ள பொதுவான நேரத்தைவிட நான்கு மணி நேரம் (UTC+4) அதிகமானது. யுனைடெட் கிங்டம் போலவே வண்டிகளை இடது புறமே ஓட்ட வேண்டும்.  இந்த  நாட்டின் நாணயம் செசெல்லேஸ்  ரூபாய் (Seychellois rupee) ஆகும்.  சர்வதேச தொலைபேசி எண் கோட்  IDD  +248.

செசெல்லேஸ் ஹோட்டல்கள்
(Guide to seychelles Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Sechilles) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.

அஞ்சே சௌர்ஸ் டி அர்கேன்ட் ,கடற்கரை
Author: Tobi 87 (Creative Commons Attribution 3.0 Unported)

செசெல்லேஸ்  பற்றிய பிற விவரங்கள்
(More about செய்செல்லெஸ்)
செசெல்லேஸ் தீவு கிரனைட் கற்களினால் ஆன 42 தீவுகள் . மேலும் இங்கு பவழப் பாறைத் தீவுகளும் உள்ளன. அவற்றில் மிகப் பெரிய தீவுகள் மகே, பிராஸ்லின், சில்ஹௌட்டி மற்றும் லா டிகுயட்(Mahé, Praslin, Silhoutte Island and La Digue) போன்றவை உண்டு. இந்த நாட்டின் தட்ப வெட்ப நிலை 24°C (75.2°F) முதல்  30°C (86°F) வரை உள்ளது.  ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்  சற்று குளிராக உள்ளது.   
செசெல்லேஸ்  நாட்டைப் பொறுத்தவரை இங்கு ஏலக்காய், வனிலா மற்றும் கோப்ரா போன்ற பொருட்கள்  பயிராகின்றன. அவைகளே இந்த நாட்டின் பொருளாதார வளர்சிக்கு காரணம். கடந்த சில வருடங்களாக இந்த நாடு சுற்றுலாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.  இந்த நாட்டின் GDP $919 மில்லியன்.


மஹே நகரின் விக்டோரியா

செசெல்லேஸ் தீவு அராபியா மற்றும் ஆஸ்ட்ரோனேஷியா ( Arabia and Austronesia) போன்ற நாடுகளில் இருந்து கடல் கடந்து வந்தவர்கள்  குடியேறிய இடம்.  1502 ஆம் ஆண்டில் முதன் முதலாக வாஸ்கோடகாமா (Vasco da Gama) தலைமையில் இங்கு வந்தது ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த போர்த்துகேயர்கள் (Portuguese) வந்தார்கள்.
1756 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கப்டன் நிகோலஸ் மோர்பி (Captain Nicholas மொரபி) செசெல்லேஸ் நாட்டை பிடித்திக் கொண்டு அதற்கு அத்தாட்சியாக ஒரு கல்லை நட்டார்.  பிரான்ஸ் (France) நாட்டை சேர்ந்த மன்னன் லூயிஸ் XV (King Louis XV) என்பவர் ஆட்சியில் இருந்த அமைச்சரான சியான் மோரியவு டி செசெல்லேஸ் (Jean Moreau de Séchelles) என்பவர் பெயரில் இந்த நாட்டை அமைத்தார். 1814 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் (Paris) ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி இந்த நாடு பிரிடிஷார் வசம் சென்றது. 1976 ஆம் ஆண்டு இந்த நாடு சுதந்திரம் அடைந்தது.  1979 முதல்  1991 வரை இந்த நாடு ஒரே ஒரு அரசியல் கட்சித் தலைமையில் சோஷியலிச நாடாக (socialist one-party state) இருந்தது. 1993 ஆம் ஆண்டு புதிய அரசியல் சாசன அமைப்பு உருவாயிற்று. தற்போது அந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் தலைவராக ஒருவரே உள்ளார்.  


அன்சி கோகஸ் கடற்கரை
செசெல்லேஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Seychelles )

குறைந்தது  ஆறு மாத அவகாசமுள்ள  பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு விசா (Visa) தேவை இல்லை. இந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் எனில் செசெல்லேஸ் சர்வதேச விமான நிலையத்துக்கே {Seychelles International Airport (SEZ)} சென்று இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். இங்கு  லண்டன் , பாரிஸ் , ஜோஹன்ஸ்பர்க்  மற்றும்  சிங்கப்பூர்   போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.

செசெல்லேஸ் நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Towns in Seychelles)
விக்டோரியா 

செசெல்லேஸ் தீவுகள்
(Seychelles Islands)
  1. லா  டிகியூ 
  2. இன்னேர்  காரோல்லினிஸ்
  3. மஹே
  4. பிரஸ்லின்
  5. சில்ஹௌட்டி தீவு

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Seychelles)
  1. அல்டப்ரா   அடோல்  (1982)
  2. வல்லி  டி  மை  நேச்சர்  ரிசர்வ் (1983)

No comments:

Post a Comment