சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள்
திரினிடாட் மற்றும் டோபாகோ
(Read Original Article in :- Discover Trinidad and Tobago)
பர்லடுவியர் பே - திரினிடாட் மற்றும் டோபாகோ
திரினிடாட் மற்றும் டோபாகோ (Trinidad and Tobago ) தென் கரீபியன் பகுதியில் உள்ள தீவு நாடு. இது இரண்டு பெரிய தீவுகளையும் பல துணைத் தீவுகளையும் கொண்ட நாடு ஆகும். அவை அனைத்தையும் சேர்த்தால் இந்த நாட்டின் பரப்பளவு 5,128 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இந்த நாட்டின் ஜனத்தொகை 1.31 மில்லியன் (2011 ஆண்டு கணக்கின்படி ). இந்த நாட்டின் தேசிய மொழி ஆங்கிலம். இதன் தலை நகரம் திரினிடாட் தீவில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயின் (Port of Spain) என்பதே. இந்த தேசத்தின் மிகப் பெரிய நகரம் சான் பெர்னாண்டோ (San Fernando) என்பது.
திரினிடாட் மற்றும் டோபாகோ ஹோட்டல்கள்
(Guide to Trinidad and Tobago Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Trinida and Tobaco) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்து கொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
திரினிடாட் மற்றும் டோபாகோ நாட்டின் விவரம்
(Details Of Trinidad and Toboco)
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் நான்கு மணி குறைவானதாகும் (UTC-4). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் திரினிடாட் மற்றும் டோபாகோ டாலர் {Trinidad and Tobaco dollar (TTD)} . தொலைபேசி எண் கோட் +1-868 . மின் ஓட்ட அளவு 115V/60Hz (வடக்கு அமெரிக்க மின் பிளக்குகள்).
சர்வதேச பொருளாதார மையம் , போர்ட் ஆப் ஸ்பெயின்
கரீபியன் நாடுகளில் மிகவும் செழிப்பான நாடு திரினிடாட் மற்றும் டோபாகோ. 2010 ஆம் ஆண்டில் இதன் GDP $21.195 பில்லியன் , தனிநபர் வருமான GDP of $16,167. இந்த நாட்டின் பொருளாதாரம் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிகல் பொருட்களின் தொழில்சாலைகளை நம்பியே உள்ளது. இவற்றைத் தவிர சுற்றுலா திட்டங்களும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வலு சேர்கின்றன. திரினிடாட் மற்றும் டோபாகோ நாட்டின் தட்ப வெட்ப நிலை வருடம் முழுவதும் ஒரே சீராகவே உள்ளது.
திரினிடாட் மற்றும் டோபாகோவின் ஒரு கடற்கரை
இங்கு 1498 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் தேதியன்று கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher Columbus ) இங்கு வந்து இறங்கினார்.1797 ஆம் ஆண்டு சார் ரால்ப் அபிர்க்ரோம்பி (Sir Ralph Abercromby) என்ற ஸ்பானிஷ் நாட்டு கவர்னர் இந்த நாட்டை ஆக்ரமித்துக் கொண்டார். 1802 ஆம் ஆண்டு இந்த நாட்டை பிரிடிஷார் வசம் ஒப்படைத்தார்கள். அது முதல் நிறைய ஆங்கிலேய மக்கள் இங்கு வந்து குடியேறினார்கள்.
திரினிடாட் மற்றும் டோபாகோ 1962 ஆண்டில் சுதந்திரம் அடைந்தது.1976 ஆம் ஆண்டு இது குடியரசாகியது. பெரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்வதின் மூலம் நிறைய செல்வம் கிடைப்பதினால் இந்த நாடு விவசாயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
புக்கு ரீப்
இந்த நாட்டிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Trinidad and Tobago )
திரினிடாட் மற்றும் டோபாகோ நாட்டிற்கு செல்பவர்களிடம் திரும்பச் செல்லும் விமான பயணச் சீட்டும், அங்கு சென்றால் தங்குவதற்கு தேவையான அளவிற்குப் பணமும் உள்ளது என்பதற்கான அத்தாட்ஷி இருந்தால் மட்டுமே அங்கு செல்ல விசா கிடைக்கும். யுனைடெட் ஸ்டேட்ஸ் , கனடா , சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் விசா பெறத் தேவை இல்லை.
திரினிடாட் மற்றும் டோபாகோ நாட்டிற்குச் செல்ல வேண்டும் எனில் முதலில் பியார்கோ விமான நிலையத்துக்கு {Piarco International Airport (POS)} சென்று அங்கிருந்து வேண்டும். இது திரினிடாட் தீவில் உள்ளது. திரினிடாட் மற்றும் டோபாகோ நாட்டில் டோபோகோ தீவிலும் சர்வதேச விமான நிலையம் உள்ளது {Crown Point International Airport (TAB)}.
திரினிடாட் மற்றும் டோபாகோவின் முக்கிய நகரங்கள்
( Major Cities in Trinidad and Tobago)
- போர்ட் ஆப் ஸ்பெயின் - தலைநகரம்
- சண் பெர்னாண்டோ -மிகப் பெரிய நகரம்
- ஸ்கார்பொரோவ் - டோபோகோவின் தலை நகரம்
- சகுரமாஸ்
- பிரின்சஸ் டவுன்
- டோகோ
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Trinidad and Tobago)
- காரோனி பறவைகள் சரணாலயம்
- லா ப்ரியா பிட்ச் லேக்
- லாபினோட் ஹிஸ்டாரிகல் சைட்
- ராக்போரௌவ்
Casino Games Online | Goyangfc
ReplyDeletePlay your favorite slot games online for real money 메이플캐릭터슬롯 at Goyangc. 슬롯 머신 the betmove free slot machines we've 뉴포커디펜스 got, and all of 벳 our favourite