கொமொரோஸ் (Comoros ) என்ற நாடு கிழக்கு ஆப்ரிக்கக் கடற்கரைப் பகுதியில் உள்ள தீவுக் கூட்டம். இந்த தீவின் அதிகாரபூர்வமான பெயர் ஒன்றிணைந்த கொமிரேஸ் (Union des Comores) என்பது. இது மொசம்பிக் (Mozambique) நாட்டின் வடகிழக்கு மற்றும் மடகாஸ்கரின் (Madagascar) வட மேற்குப் பகுதிகளின் இடையில் உள்ளது. ஆப்ரிக்காவின் மூன்றாவது மிகச் சிறிய இந்த நாட்டின் பரப்பளவு 1,660 சதுர கிலோ மீட்டர் .
2011 ஆம் ஆண்டு கணக்கின்படி கொமொரோஸ் நாட்டின் ஜனத்தொகை 800,000. ஆப்ரிக்காவில் ஒரே இடத்தில் அதிக அளவிலான மக்கள் வசிக்கும் நகரங்களைக் கொண்ட நாடு இது. இந்த நாட்டின் GDP of US$532 மில்லியன், மற்றும் தனி நபர் வருமானம் GDP US$798 .
இங்குள்ளவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம் மதத்தினர். இங்கு அரபு நாட்டவரின் செல்வாக்கு மற்றும் அவர்களுடன் வியாபார சேவைகள் அதிக அளவில் உள்ளது. 1912 ஆம் ஆண்டு இது பிரான்ஸ் (France) ஒரு அங்கமாகி 1978 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அதற்க்கு முன் இங்கு அதிக அளவிலான அரசியல் குழப்பங்கள் இருந்தன. தற்போதும் அந்த நாட்டின் அரசியல் நிலைமை குழப்பமாகவே உள்ளது. இந்த நாடு விடுதலை அடைந்தது ஆட்சியில் இருப்பவர்களை அகற்ற குறைந்தது 20 முறை பல்வேறு விதமான புரட்சிகள் நடந்தன.
இந்த நாடு நான்கு தீவுகளாக உள்ளது. அவை நகாஜிட்ஜா {Ngazidja (Grande Comore)}, மவாலி { Mwali (Mohéli)), நசவானி {Nzwani (Anjouan)}, மற்றும் மயோர் {Maore (Mayotte)} என்பன. இந்த நாட்டின் மரோனி என்ற தலைநகரம் கிராண்ட் கமோரில் உள்ளது. இந்த நாடு வெப்ப மண்டலப் பகுதிக்குரிய தட்பவெட்ப நிலையைக் கொண்டு உள்ளது. மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வறண்ட பூமியாக இருக்கும் இதன் தட்பவெட்ப நிலை 19°C (66°F) என்ற அளவிலும் மார்ச் மாதத்தில் இந்த வெட்ப அளவு 30°C (86°F) வரையிலும் செல்லும்.
இங்கு செல்ல வேண்டுமா
(Going to the Comoros )
நைரோபியில் (Nairobi) இருந்து கென்யா (Kenya ) ஏர்வேச்ஸ் மூலம் இங்கு செல்ல முடியும். நைரோபியில் இருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் செல்ல விமான சேவைகள் உள்ளன.
கொமொரோசை சுற்றிப் பார்க்க
(Getting around in the Comoros )
இந்த தீவு நாட்டை சுற்றிப் பார்க்க ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கட்டணம் ஒரு நாளைக்கு €30 (KMF 15,000) என்ற அளவில் உள்ளது. இங்கு பொதுஜன பஸ் வசதிகள் இல்லை.
கொமொரோசை சுற்றிப் பார்க்க
(Getting around in the Comoros )
இந்த தீவு நாட்டை சுற்றிப் பார்க்க ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கட்டணம் ஒரு நாளைக்கு €30 (KMF 15,000) என்ற அளவில் உள்ளது. இங்கு பொதுஜன பஸ் வசதிகள் இல்லை.
இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Comoros )
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Comoros )
மொஹிலி
(Major Cities in Comoros )
- மரோனி- தலை நகரம்
- டோமோனி
- பம்போணி
- நிவ்மசௌவ்
- மெட்ஸ்அமோடவ்
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Comoros )
மொஹிலி
No comments:
Post a Comment