நுகுயலோபா அரண்மனையில் நடைபெறும் கட்டிட வேலை
Author: Tau'olunga (Creative Commons Attribution 3.0 Unported)
டோங்கா (Tonga ) என்ற நாடு தெற்கு பசிபிக் கடலில் உள்ளது. இது 176 தீவுகளைக் கொண்ட நாடு. இந்த நாட்டின் பரப்பளவு 700,000 சதுர கிலோ மீட்டர். ஆனால் அதில் டோங்கா தீவு மட்டும் 748 சதுர அடிகளைக் கொண்டு உள்ளது. மன்னராட்சியில் உள்ள இதன் தலைவர் ஜார்ஜ் டிபோவ் V ( King George Tupou V) என்பவர். ட்டன்காவின் ஜனத்தொகை 104,000 . இந்த நாட்டின் தலை நகரம் மற்றும் மிகப் பெரிய நகரம் நுகுயலோபா (Nuku'alofa).
டோங்கா ஹோட்டல்கள்
(Guide to TongaHotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Tonga) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
தோங்காவை பற்றிய விவரங்கள்
(More about Turkmenistan )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் பதிமூன்று மணி நேரம் அதிகம் (UTC+13). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் பாங்கோ {Pa'anga (TOP)} . தொலைபேசி எண் கோட் IDD +676. மின் சக்தியின் அளவு 230V/50Hz (ஆஸ்த்ரேலியன் மின் சாதன பிளக்குகள்).
டோங்கா ஐந்து மாகாணங்களாக உள்ளது. அவை யியுவா, ஹாப்பை, நியுவாஸ், டோங்கடாபூ மற்றும் வவாயூ ('Eua, Ha'apai, Niuas, Tongatapu and Vava'u) போன்றவை. இந்த நாட்டின் தலை நகரம் டோங்கடாபூவில் உள்ளது. இந்த நாட்டின் தட்ப வெட்ப நிலை வருடம் முழுவதும் ஒரே சீராகவே உள்ளது. பிப்ரவரி மாதங்களில் இதன் வெட்ப நிலை 29°C (84°F) இருக்க ஜூலை மாதங்களில் இது 17°C (63°F) என்ற அளவில் உள்ளது .
ஆயிரம் வருடங்களாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டு உள்ள டோங்காவில் 1616 ஆம் ஆண்டில் முதலில் வந்து இறங்கிது ஐரோப்பியாவை சேர்ந்த டட்ச்(Dutch) தேசத்தினரான வில்லியம் சௌடின் ( Willem Schouten ) மற்றும் ஜாகப் டி மைரீ (Jacob Le Maire ) என்பவர்களே. அதன் பிறகு அங்கு வந்தவர்கள் 1643 ஆம் ஆண்டில் அபெல் தசமன் ( Abel Tasman), 1773 , 1774 மற்றும் 1777 ஆம் ஆண்டுகளில் ஜேம்ஸ் குக் (James Cook ) போன்றவர்கள் .
1845 ஆம் ஆங்கு அந்த நாட்டில் இருந்த இளம் வீரர் ஒருவர் உள்ளூர் மக்களைத் திரட்டி தானே மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அவர் தனது பெயரை ஜார்ஜ் சியோசி {George (Jioji)} என்று வைத்துக் கொண்டார் . அங்கு வந்த கிருஸ்துவ மதபோதகர்களின் ஆலோசனையை ஏற்று அந்த நாட்டை மன்னர் ஆட்சி கொண்ட நாடாக மாற்றினார். இந்த நாடு 1900 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசுடன் ஒரு நல்லெண்ண ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அவர்களது பாதுகாப்பை பெற்றுக் கொண்டது . 1970 ஆம் ஆண்டுடன் அந்த ஒப்பந்தம் முடிவடைந்ததும் இந்த நாடு காமன்வெல்த் நாடுகளுடன் இணைந்து கொண்டு பிரிட்டிஷ் நாட்டு மன்னரை தனது நாட்டின் தலைவராக ஏற்றுக் கொண்டது.

21 ஆம் நூற்றாண்டில் இந்த நாட்டின் அரசியல் அமைப்பில் தனது நாட்டின் கலாசாரத்தை பராமரிக்க எண்ணம் கொண்டு பத்திரிகை சுதந்திரத்தை கடுமையாக்கியது. இதனால் 2006 ஆம் ஆண்டு பெரும் புரட்சி ஏற்பட்டு நாட்டில் பிரதமர் ஆட்சி மலர்ந்தது.
டோங்காவிற்கு செல்ல வேண்டுமா
இங்கு செல்ல வேண்டும் எனில் உங்களிடம் திரும்பச் செல்லும் பயணச் சீட்டு இருக்க வேண்டும். முதலில் ஒரு மாதத்துக்கு மட்டுமே விசா தருவார்கள். அதன் பின் தேவை என்றால் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் எனில் டோங்காவில் உள்ள பாமோதூ விமான நிலையத்துக்கு {Fua'amotu Airport (TBU) is the international airport} சென்று அங்கிருந்து போக வேண்டும். ஆக்லாந்து , சிட்னி மற்றும் பிஜி போன்ற இடங்களில் இருந்து இந்த நாட்டிற்கு விமான சேவைகள் உள்ளன.

டோங்காவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places in Tonga )
(Places in Tonga )
- யியுவா
- ஹாப்பை
- நியுவாஸ்
- டோங்கடாபூ
- வவாயூ
No comments:
Post a Comment