பசுபிக் கடலில் உலகல சிறிய சுதந்திர நாடே துவாலு (Tuvalu). இதன் முடியாட்சித் தலைவராக எலிஜிபெத் ராணி II உள்ளார். இந்த நாட்டின் பரப்பளவு 29 சதுர கிலோ மீட்டர் . ஜனத்தொகையோ 10500 மட்டுமே. வாடிகன் சிட்டி (0.44 சதுர கிலோ மீட்டர் ), மொனாகோ (1.95 சதுர கிலோ மீட்டர் ) மற்றும் நவ்ரூ (21 சதுர கிலோ மீட்டர் ) போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகில் மிகக் குறைவான ஜனத்தொகையைக் கொண்ட நாடு இது. இந்த நாட்டின் தலை நகரமும் மிகப் பெரிய நகரமும் புனபுடி (Funafuti) என்பது.
இந்த நாட்டின் நேரம் உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட நேரத்தை விட 12 மணி நேரம் (UTC+12) அதிகமானது. இங்கு பேசப்படும் மொழிகள் துவாலுவன் மற்றும் ஆங்கிலம் (Tuvaluan and English). நாட்டின் நாணயம் துவாலுவன் டாலர் ( Tuvaluan dollar). ஆனால் இங்கு ஆஸ்திரேலியாவின் டாலரும் (Australian dollar) அதிக உபயோகத்தில் உள்ளது. வாகனங்களை இடதுபுறமாக ஓட்ட வேண்டும். மின்சாரத்தின் அளவு 240V/50Hz. தொலைபேசி எண் கோட்:IDD +688.
இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த இந்த நாடு பிற நாடுகளின் பொருளாதார உதவியுடன்தான் நிற்க வேண்டி உள்ளது.இங்குள்ள துவாலு மக்கள் பாஸ்பேட் சுரங்களில் வேலை செய்கிறார்கள். ஆனால் அந்த தாதுப் பொருள் வற்றி விடும்போது அங்கேயே இருக்க வேண்டி உள்ளது. இந்த நாட்டிற்கு ஆஸ்திரேலியா , நியூ சிலாந்து , யுனைடெட் கிங்டம் , ஜப்பான் மற்றும் சவுத் கொரியா போன்ற நாடுகள் நிதி உதவி செய்கின்றன.
இந்த நாட்டில் சுற்றுலா பயண திட்டங்கள் குழந்தை பருவத்தில்தான் உள்ளது. இங்குள்ள பெரும்பாலோனோர் அரசாங்க அலுவலகங்களில்தான் வேலை செய்கிறார்கள். போலினேஷியன் என்பவர்களே சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வந்து குடியேறியவர்கள். இந்த நாட்டை 16 ஆம் நூற்றாண்டில் முதலில் ஐரோப்பியர்களே கண்டு பிடித்தார்கள். எட்வர்ட் எல்லிஸ் (Edward Ellice) என்பவற்றின் பெயரிலேயே முதலில் இதை எல்லிஸ் தீவு என அழைத்தார்கள். 1978 ஆம் ஆண்டு அக்டோபரே மாதம் ஒன்றாம் தேதியன்று இந்த நாடு சுதந்திரம் அடையும் வரை இது பிரிட்டிஷ் அரசின் ஆட்சியில் இருந்தது.
போங்கபாலே தீவு
Author: Angela K. Kepler (public domain)
இந்த நாட்டிற்கு வருகை தரும் பயணிகள் மூன்று மாதம்வரை இங்கு தங்கலாம். இந்த நாட்டிற்குள் செல்ல வேண்டும் எனில் புனபுடி விமான நிலையத்துக்கே {Funafuti International Airport (FUN) } முதலில் செல்ல வேண்டும். சுவா மற்றும் பிஜியில் இருந்து ஏர் பசிபிக் விமான சேவை உள்ளது.
No comments:
Post a Comment