ஆப்ரிக்காவின் ஒரு பெரிய நாடு சூடான் (Sudan). இதை சூடான் குடியரசு என்று அழைக்கின்றார்கள். இதன் பரப்பளவு 2,505,813 சதுர கிலோ மீட்டர். ஆனால் தென் சூடான் பகுதி இந்த நாட்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதியன்று பிரிந்தப் பின் இதன் பரப்பளவு 1,886,068 சதுர கிலோ மீட்டர் என ஆகிவிடும். இந்த நாட்டின் எல்லைகள் வடக்கில் எகிப்து (Egypt) ,தென்மேற்கில் லிப்யா (Libya) , மேற்கில் சாட் (Chad ) தென்மேற்கில் சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரிபப்ளிக் (Central African Republic) , தெற்கில் தென் பகுதி சூடான் குடியரசு (Republic of Southern Sudan) , கிழக்கில் ஏரிட்ரியா (Eritrea) போன்ற நாடுகளுடன் உள்ளன. வடகிழக்கில் சிவப்புக் கடல் உள்ளது. இந்த நாட்டின் ஜனத் தொகை 36 மில்லியன். தலை நகரம் கார்டோம் (Khartoum) என்பது .
சூடான் ஹோட்டல்கள்
(Guide to Sudan Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Sudan) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
ஓம்டுர்மன் எனும் இடத்தில் மகடி டோம்ப்
Author: Petr Adam Dohnálek (Creative Commons Attribution-Share Alike 3.0 Czech Republic)
சூடான் நாட்டின் மற்ற விவரங்கள் Author: Petr Adam Dohnálek (Creative Commons Attribution-Share Alike 3.0 Czech Republic)
(More Details On Sudan )
தென் சூடான் குடியரசின் பகுதியும் (Republic of Southern Sudan ) அனைத்து பக்கங்களிலும் பிற நாட்டு நிலத்தினால் சூழப்பட்டு உள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு 619,745 சதுர கிலோ மீட்டர், ஜனத்தொகை 8.5 மில்லியன் மற்றும் தலை நகரம் ஜுபா (Juba) என்பது. இந்த நாட்டின் எல்லைகள் வடக்கில் சூடான் குடியரசு ( Republic of Sudan), மேற்கில் சென்ட்ரல் ஆப்ரிகன் ரிபப்ளிக் (Central African Republic ) தென் மேற்கில் காங்கோ ஜனநாயக குடியரசு (Democratic Republic of the Congo), தெற்கில் உகாண்டா ( Uganda) தென்மேற்கில் கென்யா (Kenya) போன்ற நாடுகள் உள்ளன.
இரண்டு சூடான் நாடுகளுமே கிழக்கு ஆப்ரிக்காவின் நேரத்தையே பின்பற்றுகின்றன. உலக நாடுகளின் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பொதுவான நேரத்தைவிட இந்த நாடுகளின் நேரம் மூன்று மணி அதிகமானது (UTC+3). தொலைபேசி எண் கோட் +249. சாலையில் வண்டிகளை வலதுபுறமாக ஓட்ட வேண்டும். நாட்டின் நாணயம் சுடானிஸ் பவுண்ட் {Sudanese pound (SDG)}.
2010 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP of $65.742 பில்லியன், தனிநபர் வருமான GDP $1,638. இந்த நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை இருந்தாலும் நாடு முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரம் எண்ணை ஏற்றுமதியை பொறுத்தே உள்ளது. இங்கு எரிபொருள், தங்கம், வெள்ளி மற்றும் பிற தாதுப் பொருட்கள் நிறைய கிடைக்கின்றன.
எல் குறு எனும் இடத்தின் டோவேகோடே
Author: Bertramz (Creative Commons Attribution 3.0 Unported)
Author: Bertramz (Creative Commons Attribution 3.0 Unported)
தென் சூடானின் செல்வம் 85% எண்ணை வளத்தில் இருந்தே வருகின்றது. ஆகவே இரண்டு நாடுகளும் அந்த செல்வத்தை பங்கு போட்டுக் கொள்ளும் வகைக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டு உள்ளன.
சூடானில் உணவு செய்யும் பெண்மணி
Author: Dominik HES (Creative Commons Attribution-Share Alike 3.0 Czech Republic)
Author: Dominik HES (Creative Commons Attribution-Share Alike 3.0 Czech Republic)
சூடானின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இந்த நாட்டின் கலாச்சாரம் எகிப்த் தேசத்துடன் ஓத்து உள்ளது. இந்த நாட்டை பண்டைய எகிப்தியர் குஷ் (Kush) என அழைத்தார்கள். முன்னர் பல வருடங்களாக எகிப்த் மற்றும் குஷ் நாட்டினர் ஒருவர் மீது ஒருவர் படையெடுத்து நாட்டைக் கைபற்றிய வண்ணமே இருந்துள்ளார்கள்.
AD 540 ஆம் ஆண்டுகளில் பைசண்டைன் அரசியான தியோடோரா என்பவர் அனுப்பிய மத மாற்றக் குழுவினர் நுபியா என்னும் மன்னன் ஆண்ட கிழக்கு சூடானில் இருந்தவர்களை கிருஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்தார்கள்.ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அராபியர்களின் தொடர்ப்பினால் அங்கிருந்த மக்களுக்கு இஸ்லாம் மதத்தினருடன் கலப்புத் திருமணங்கள் நடைபெற முஸ்லிம் மதத்தினரும் பெருகினார்கள்.
1820 ஆம் ஆண்டுகளில் சூடானை முஹமாத் அலி பாஷா (Muhammad Ali Pasha) என்ற எகிப்து தேசத்து மன்னர் ஆண்டு வந்தார் . அந்த மன்னன் ஓட்டமான் சுல்தானின் (Ottoman Sultan) கீழ் இருந்தாலும், தானே எகிப்து மன்னனைப் போல காட்டிக் கொண்டார். 1882 ஆம் ஆண்டில் பிரிடிஷ் (Ottoman Sultan)அரசினர் எகிப்து மற்றும் சூடானில் தலையிடத் துவங்கினார்கள்.
1885 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மற்றும் எகிப்து அரசுகளை எதிர்த்து முஹமாத் அஹ்மத் இபின் அபிட் அல்லாஹ் (Muhammad Ahmad ibn Abd Allah) என்பவர் கிளர்ச்சி செய்து சூடானின் ஆட்சியைக் கைப்பற்றினார். 1899 ஆம் ஆண்டுவரை அந்த நாட்டை ஆண்டுவந்த மக்டிஷ்ட் (Mahdist ) என்பவர் தோற்கடிக்கப்பட்டு இந்த நாட்டில் எகிப்து-பிரிட்டிஷ் அரசு அமைந்தது. 1956 ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ் குடியேற்ற (Colony) நாடாக இருந்த சூடான் ப்விடுதலை அடைந்தது.
ப்ளூ நைல் பால்ஸ்
விடுதலை அடைந்த சூடானில் 1955 ஆண்டு முதல் 1972 வரை உள்நாட்டு புரட்சிகள் வெடித்தன. அதன் பின் தெற்கு மற்றும் வடக்கு சூடானை சேர்ந்த மக்களிடையே உள்நாட்டு சண்டைகள் தோன்றின. 2005 ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் தேதி அவர்கள் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் அடிப்படையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டில் பொது வாக்கு எடுப்பு நடந்தது. அதன்படி வடக்கு மற்றும் தெற்கு சூடான் இரு பகுதிகளாகப் பிரிந்தன.
சூடானுக்கு செல்ல வேண்டுமா
( Visiting Sudan )
சூடானின் பல பகுதிகள் பாதுகாப்பு இல்லாதவை. அங்கு செல்லும் பயணிகளை கடத்திச் சென்று பணம் பறிப்பார்கள். ஆகவே தற்போது உள்ள நிலைமையில் பயணிகள் அங்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அங்கு சீரான நிலைமை அடைந்தப் பின் அங்கு செல்லலாம்.
இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Sudan )
(Major Cities in Sudan )
- கார்டோம் -தலை நகரம்
- ஓம்டுர்மன் - பெரிய நகரம்
- அல் உபய்யிட்
- கஸ்ஸால
- மிரோவ
- நையலா
- போர்ட் சூடான்
பார்க்கக் கூடிய இடங்கள்
(Places of Interest in Sudan )
(Places of Interest in Sudan )
- நுபியன் பிரமிட்ஸ்
- ஓல்ட் தோன்கோலா
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Sudan )
(UNESCO World Heritage Sites in Sudan )
கேபெல் பர்கல் அண்ட் தி சைட்ஸ்
ஆப் தி நேபடன் ரீஜன் (2003)
No comments:
Post a Comment