மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள சிறிய குடியரசு டோகோ (Togo) . இதன் எல்லை மேற்கில் கானா (Ghana ), வடக்கில் புர்கினா பாஸ்கோ ( Burkina Faso) மற்றும் கிழக்கில் பெனின் (Benin ) போன்ற நாடுகளுடன் உள்ளன. தெற்கில் கல்ப் ஆப் குயனாவின் (Gulf of Guinea) கடற்கரை இதை தொட்டபடி உள்ளது. டோகாவின் பரப்பளவு 56,785 சதுர கிலோ மீட்டர். இதன் ஜனத்தொகை 6.6 மில்லியன் . தலைநகரம் லோம் ( Lomé). நாட்டின் பேசும் மொழி பிரெஞ்ச் (French) .
டோகோவின் ஹோட்டல்கள்
(Guide to Togo Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Togo) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
டோகோ பற்றிய விவரங்கள்
(More about Togo )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தை போலவே உள்ளது (கிரீன்விச் நேரம் ) . வாகனங்களை வலது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் CFA பிரான்க் {CFA franc (XOF)} என்பது . தொலைபேசி எண் கோட் IDD +228. மின் ஓட்ட அளவு 127-220V/50Hz (ஐரோப்பியா மின் சாதனங்கள் )
டோகோ கடற்கரை
2009 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP of $2.865 பில்லியன். இந்த நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. இந்த நாட்டின் சுமார் 65% சதிவிகித மக்கள் தொழிலாளிகள். இங்கு விளைபவை காபி, பருத்தி மற்றும் கோகோ போன்றவை .
அதை சுற்றி உள்ள நாடுகளைப் போலவே இங்கும் பல இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் குடியேறி உள்ளார்கள். அவர்களில் பெரும்பான்மையினோர் 16 ஆம் நூற்றாண்டுகளில் அடிமைகளாக இருந்த மினா (Mina) எனும் பிரிவை சேர்ந்தவர்கள். 1884 ஆம் ஆண்டுகளில் இது ஜெர்மானியர்களின்(German) பாதுகாப்பில் இருந்தது. 1905 ஆம் ஆண்டுவரை டோகோலாந்த் என அழைக்கப்பட்ட இந்த ஜெர்மனிய காலனி முதலாவது உலக யுத்தம் முடிந்ததும் பிரிடிஷார் (British) மற்றும் பிரான்ஸ் (France) வசம் சென்றது.
தபெர்ம பள்ளத்தாக்கில் வீடுகள்
இரண்டாவது உலக யுத்தம் முடிந்ததும் பிரிட்டிஷ் வசம் இருந்தப் பகுதிகள் 1957 ஆம் ஆண்டு கானா (Ghana) என ஆயிற்று. 1959 ஆம் ஆண்டு பிரான்ஸ் வசம் இருந்தப் பகுதிகள் சுயாட்சி கொண்ட குடியரசாக மாறியது. அதன் பின் அங்கு கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. அந்த நாட்டின் தலைவரான சில்வானச்ஸ் ஒலிம்பியோ (Sylvanus Olympio) என்பவர் சார்ஜென்ட் எடின்னி யாடிமா ஞாசிங்பே (Sergeant Etienne Eyadema Gnassingbe) என்பவரால் கொலை செய்யப்பட்டார். அடுத்து சார்ஜென்ட் எடின்னி யாடிமா ஞாசிங்பே 38 வருடங்கள் கொடுங்கோல் ஆட்சி புரிந்த அதிபராக இருந்தார்.
டோகோவின் வூடு பிடிஷ் மார்கெட்டில் ஒரு காட்சி
2005 ஆம் ஆண்டு அவர் இறந்ததும் அவருடைய மகன் பாவ்ரீ ஞாசிங்பே ஆட்சியில் அமர்ந்தாலும் பொதுமக்களின் நெருக்கடியினால் அவர் பதவியை விட்டு விலகி தேர்தலை சந்திக்க வேண்டி இருந்தது. ஆனால் அந்த தேர்தல் வன்முறையினால் 400 க்கும் அதிகமானவர்கள் உயிர் இழந்தார்கள். 40,000 டோகோலிய மக்கள் நாட்டை விட்டு தப்பி ஓடினார்கள். தற்போது இந்த நாட்டின் பிரதமராக அந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாவ்ரீ ஞாசிங்பே உள்ளார்.
டோகோவிற்கு செல்ல வேண்டுமா
( Visiting Togo )
மேற்கத்தைய நாடுகளில் உள்ள அனைவருக்கும் இங்கு செல்ல விசா தேவை. விசாவின் கட்டணம் ஒரு வார பயணத்துக்கு 15,000 CFA மற்றும் ஒரு மாத பயணக் கட்டணம் 30,000 CFA . கானாவில் உள்ள அக்கரா (Accra) என்ற இடத்தில் இருந்து லோம் (Lome) என்ற விமான நிலையத்துக்கு செல்ல விமான சேவை உள்ளது. அல்லது கானாவில் இருந்து பஸ்சிலும் செல்ல முடியும்.
முக்கிய நகரங்கள்
(Major Cities in Togo )
(Major Cities in Togo )
- லோம் - தலைநகரம்
- அனேஹோ
- அடக்பமே
- படௌவ்
- டபாங்
- கரா
- க்பலிமே
- சொகொடே
No comments:
Post a Comment