துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Wednesday, December 28, 2011

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - செனேகல்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
செனேகல்
( Read Original Article in :- Discover Senegal)


காசமான்ஸ்சில் எலின்கினே போர்ட்
Author: Ji-Elle (public domain)
மேற்கு ஆப்ரிக்காவின் ஒரு நாடே செனேகல் (Senegal) என்பது. இந்த நாட்டின் பரப்பளவு 196,723 சதுர கிலோ மீட்டர். இதன் ஜனத்தொகை  13.7 மில்லியன்.  இந்த நாட்டின் தலை நகரம் தக்கார் (Dakar). இந்த நாட்டின் வடக்கில் மௌருடானியா (Mauritania)  கிழக்கில் மாலி (Mali), தென்கிழக்கில் குனியா(Guinea) மற்றும் தெற்கில் குனியா பிசாவு (Guinea-Bissau)   போன்ற நாடுகளுடன் எல்லையைக் கொண்டு உள்ளது.  காம்பியா (Gambia) என்ற நாட்டை இது மூன்று பக்கங்களில்  சூழ்ந்து உள்ளது.  மேற்க்கில் அட்லாண்டிக் கடலை (Atlantic Sea) நோக்கி அமைந்து உள்ளது.

செனேகல்  ஹோட்டல்கள்
(Guide to Senegal Hotels )

 
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Senegal) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.


பாவ்பாப்  ஆக்கிய மரங்கள்
Author: Myriam Louviot (Creative Commons Attribution 3.0 Unported
 

செனேகல் பற்றிய விவரங்கள்
(More on Senegal ) 

 
செனேகல் உலக நாடுகள் பொதுவாக ஒப்புக் கொண்டு உள்ள நேரத்தையே (UTC+0) தானும் கொண்டு உள்ளது. இந்த நாட்டின் நாணயம்  CFA பிரான்க்  (XOF) என்பது . மின் ஓட்ட அளவு  230V/50Hz . சர்வதேச தொலைபேசி எண் கோட் IDD +221.
2010 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP   $13.472 பில்லியன். தனி நபர் வருமான GDP of $1,026.  இந்த நாட்டில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி தனித் தனியே உள்ளார்கள். இது  குடியரசு நாடு. பிரெஞ்ச் மொழியே தேசிய மொழியாகும். இங்கு பேசப்படும் மற்ற உள்ளூர் பாஷைகள்  வோலோப் (Wolof) மற்றும் சொனின்கே (Soninke) போன்றவை.


செயின்ட் -லூயிஸ்சின் ஒரு காட்சி  

வரலாறு தோன்றும் முன்னரே இங்கு மனிதர்கள் இருந்துள்ளார்கள்.  இந்த நாட்டை கண்டுபிடித்தபோது  இங்கு வர்த்தகம் செய்ய போர்த்துகீசியர்கள். டட்ச் தேசத்தினர் மற்றும் பிரிடிஷர்கள் ( Portuguese, Dutch and British) போன்ற ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டாலும் இறுதியாக பிரேஞ்ச் தேசத்தின் ஒரு குடியரசாகவே இது மாறியது. 


செர்ரீ கிராமத்தில் ஒரு காட்சி
1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த நாடு  முந்தைய பிரேஞ்ச் நாட்டு சூடானுடன் (French Sudan) இணைந்து மாலி (Mali Federation) கூட்டு அங்கத்தை உருவாக்கியபோது இது 1960 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  20 ஆம்  தேதியன்று விடுதலை அடைந்தது.  ஆனால் இரண்டே மாதங்களில் அந்தக் கூட்டணி உடைந்து மாலி மற்றும் செனேகல் தனித்தனியான நாடுகளாக ஆயிற்று. 
செனேகல் நாட்டில் டிசம்பர் முதல் ஏப்ரல் (Dec till April) வரை சீதோஷ்ண நிலை 25.7°C (78.3°F) என்ற அளவில்  வறண்ட நிலையிலும் ஜூன் முதல் அக்டோபர் (June till October) முடிய சீதோஷ்ண நிலை 30°C (86°F) அளவில் மழை காலமாகவும் இருக்கும்.

இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Senegal )

இந்த நாட்டிற்கு செல்ல ஐரோப்பிய நாடுகளின் கூட்டணி மற்றும்  இஸ்ரேல் , ஜப்பான், மௌரிடானியா , மொரோக்கோ , மலேசியா , சவுத்  ஆப்ரிக்கா , தைவான்  மற்றும் யுனைடெட்  ஸ்டேட்ஸ் போன்ற நாடுகளில்  உள்ளவர்களுக்கு 90 நாட்கள்வரை அங்கு தனி இருக்க விசா (Visa) தேவை இல்லை.

தலைநகரமான தகருக்கு (Dakar)   பாரிஸ் , மிலன் , லிஸ்போன் , நியூ  யார்க்  சிட்டி , காசப்ளன்க, நைரோபி  மற்றும்  ப்ருச்செல்ஸ் போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.

பெரிய நகரங்கள்
(Major Cities in Senegal )
  1. தகர் - தலைநகரம்
  2. கபௌண்டினே
  3. கோலக்
  4. கேடோகௌ
  5. செயின்ட் -லூயிஸ்
  6. தம்பகொண்ட
  7. திஸ்
  8. தௌப
  9. ஜிகுன்சோர்

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Senegal )

  1. கோரி தீவு
  2. நியோகொலோ -கோபா நேஷனல் பார்க்
  3. டௌட்ஜ் நேஷனல் பர்ட் சரணாலயம்
  4. செயின்ட் -லூயிஸ் தீவு
  5. ஸ்டோன் சர்கிள் ஆப் செனேகாம்பியா

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - செசெல்லேஸ்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
செசெல்லேஸ்
( Read Original Article in :- Seychelles  Travel Guide)



  பிராஸ்லின்  தீவின் ஒரு காட்சி  
Author: Tobi 87 (Creative Commons Attribution 3.0 Unported)

செசெல்லேஸ் (Seychelles) என்ற தீவு தேசம் இந்தியக் கடல் பகுதியில் உள்ளது.  இது சோமாலிய (Somalia) நாட்டின் தென்கிழக்கிலும் , இந்தியாவின் ()India தென்மேற்கிலும் அமைந்து உள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு 451 சதுர கிலோ மீட்டர்.  2011 ஆண்டின் கணக்கின்படி இதன் ஜனத்தொகை  84,000 .நாட்டின் தலை நகரம் விக்டோரியா (Victoria). இதன் தேசிய மொழிகள் ஆங்கிலம், பிரென்ச் மற்றும் செசெல்லோயிஸ் கிரிடோல்  போன்ற மூன்றுமே (French, English and Seychellois Creole).
செசெல்லேஸ்  ஒரு குடியரசு நாடு.  இந்த நாட்டின் நேரம் உலக நாடுகள் ஒப்புக்கொண்டு உள்ள பொதுவான நேரத்தைவிட நான்கு மணி நேரம் (UTC+4) அதிகமானது. யுனைடெட் கிங்டம் போலவே வண்டிகளை இடது புறமே ஓட்ட வேண்டும்.  இந்த  நாட்டின் நாணயம் செசெல்லேஸ்  ரூபாய் (Seychellois rupee) ஆகும்.  சர்வதேச தொலைபேசி எண் கோட்  IDD  +248.

செசெல்லேஸ் ஹோட்டல்கள்
(Guide to seychelles Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Sechilles) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.

அஞ்சே சௌர்ஸ் டி அர்கேன்ட் ,கடற்கரை
Author: Tobi 87 (Creative Commons Attribution 3.0 Unported)

செசெல்லேஸ்  பற்றிய பிற விவரங்கள்
(More about செய்செல்லெஸ்)
செசெல்லேஸ் தீவு கிரனைட் கற்களினால் ஆன 42 தீவுகள் . மேலும் இங்கு பவழப் பாறைத் தீவுகளும் உள்ளன. அவற்றில் மிகப் பெரிய தீவுகள் மகே, பிராஸ்லின், சில்ஹௌட்டி மற்றும் லா டிகுயட்(Mahé, Praslin, Silhoutte Island and La Digue) போன்றவை உண்டு. இந்த நாட்டின் தட்ப வெட்ப நிலை 24°C (75.2°F) முதல்  30°C (86°F) வரை உள்ளது.  ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்  சற்று குளிராக உள்ளது.   
செசெல்லேஸ்  நாட்டைப் பொறுத்தவரை இங்கு ஏலக்காய், வனிலா மற்றும் கோப்ரா போன்ற பொருட்கள்  பயிராகின்றன. அவைகளே இந்த நாட்டின் பொருளாதார வளர்சிக்கு காரணம். கடந்த சில வருடங்களாக இந்த நாடு சுற்றுலாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.  இந்த நாட்டின் GDP $919 மில்லியன்.


மஹே நகரின் விக்டோரியா

செசெல்லேஸ் தீவு அராபியா மற்றும் ஆஸ்ட்ரோனேஷியா ( Arabia and Austronesia) போன்ற நாடுகளில் இருந்து கடல் கடந்து வந்தவர்கள்  குடியேறிய இடம்.  1502 ஆம் ஆண்டில் முதன் முதலாக வாஸ்கோடகாமா (Vasco da Gama) தலைமையில் இங்கு வந்தது ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த போர்த்துகேயர்கள் (Portuguese) வந்தார்கள்.
1756 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கப்டன் நிகோலஸ் மோர்பி (Captain Nicholas மொரபி) செசெல்லேஸ் நாட்டை பிடித்திக் கொண்டு அதற்கு அத்தாட்சியாக ஒரு கல்லை நட்டார்.  பிரான்ஸ் (France) நாட்டை சேர்ந்த மன்னன் லூயிஸ் XV (King Louis XV) என்பவர் ஆட்சியில் இருந்த அமைச்சரான சியான் மோரியவு டி செசெல்லேஸ் (Jean Moreau de Séchelles) என்பவர் பெயரில் இந்த நாட்டை அமைத்தார். 1814 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் (Paris) ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி இந்த நாடு பிரிடிஷார் வசம் சென்றது. 1976 ஆம் ஆண்டு இந்த நாடு சுதந்திரம் அடைந்தது.  1979 முதல்  1991 வரை இந்த நாடு ஒரே ஒரு அரசியல் கட்சித் தலைமையில் சோஷியலிச நாடாக (socialist one-party state) இருந்தது. 1993 ஆம் ஆண்டு புதிய அரசியல் சாசன அமைப்பு உருவாயிற்று. தற்போது அந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் தலைவராக ஒருவரே உள்ளார்.  


அன்சி கோகஸ் கடற்கரை
செசெல்லேஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Seychelles )

குறைந்தது  ஆறு மாத அவகாசமுள்ள  பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு விசா (Visa) தேவை இல்லை. இந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் எனில் செசெல்லேஸ் சர்வதேச விமான நிலையத்துக்கே {Seychelles International Airport (SEZ)} சென்று இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். இங்கு  லண்டன் , பாரிஸ் , ஜோஹன்ஸ்பர்க்  மற்றும்  சிங்கப்பூர்   போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.

செசெல்லேஸ் நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Towns in Seychelles)
விக்டோரியா 

செசெல்லேஸ் தீவுகள்
(Seychelles Islands)
  1. லா  டிகியூ 
  2. இன்னேர்  காரோல்லினிஸ்
  3. மஹே
  4. பிரஸ்லின்
  5. சில்ஹௌட்டி தீவு

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Seychelles)
  1. அல்டப்ரா   அடோல்  (1982)
  2. வல்லி  டி  மை  நேச்சர்  ரிசர்வ் (1983)

Tuesday, December 27, 2011

சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள் - சைரா லியோன்

சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள்
சைரா லியோன்
( Read Original Article in :- Discover Sierra Leone)



சைரா லியோன் நகரின் கடற்கரை  காட்சி
Author: Annabel Symington (Creative Commons Attribution 2.0 Generic)

சைரா லியோன் (Sierra Leone) மேற்கு ஆப்ரிக்காவின் (West Africa) மற்றொரு சிறிய நாடு. இந்த நாட்டின் எல்லை வடக்கிலும் கிழக்கிலும் குயினாவுடனும்  (Guinea) தென் கிழக்கில் லைபீரியாவுடனும் ( Liberia ) உள்ளது .  தென்மேற்கில் இதன் எல்லை அட்லாண்டிக் கடலுடன் (Atlantic Ocean) உள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு 71,740 சதுர கிலோ மீட்டர், மற்றும் 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி  ஜனத்தொகை  6.2 மில்லியன் . நாட்டின் தலை நகரம் பிரீடவுன் (Freetown) என்பது.
சைரா லியோன் நாட்டின்  மொழி ஆங்கிலம். இந்த நாட்டின் நேரம் உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ள பொதுவான நேரத்தைக் கொண்டு உள்ளது ( UTC+0).  Sierra Leone is on the Coordinated Universal Time (UTC+0). English is the official language in Sierra Leone, although the locals also speak ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட கிரியோல் அல்லது  கிரியோ (Krio) எனப்படும் உள்ளூர் மொழி என்றாலும் இந்த நாட்டின் தெற்கில் மேண்டே (Mende) எனப்படும் மொழியையும், வடக்கில் டேம்னி (Temne) எனும் மொழியையும் பேசுகிறார்கள். வாகனங்களை இங்கு வலப்புறமே ஓட்ட வேண்டும். மின்விசை அளவு  220V/50Hz.  சர்வதேச தொலைபேசி எண்  IDD +232. இங்குள்ள பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் (Muslims). ஆனால் பெருமளவில் கிருஸ்துவர்களும் (Christian) உள்ளனர்.  


கம்பை  ராக்  ஷெல்ட்டர்

இந்த நாடு ஏழ்மை நாடு. 2009 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP of $1.877 பில்லியன் , தனிநபர் வருமான GDP $311.
இந்த நாட்டில் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் இருந்து உள்ளார்கள். போர்துகீசியரே (Portuguese) முதலில் இங்கு வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்து இந்த நாட்டின்  அமைப்பை வரைபடம் எடுத்தப் பின் இந்த நாட்டின் பெயரை சிங்கங்கள் நிறைந்த மலைப் பகுதி என்ற அர்த்தம் தரும் சைரா டி லியானோ  (Serra de Leão) த என்று வைத்தார்கள். அதுவே பின்னர்  சைரா லியோன் என ஆயிற்று.


பிரீடவுன்

முன்னர் அங்கு அடிமையாக இருந்து தப்பி ஓடி பிரிட்டிஷ் படையினரை தஞ்சம் அடைந்து இருந்த ஆப்ரிக்க கருப்பு அமெரிக்க  அடிமைகளின் புனர் வாழ்வு கொடுக்க  1792   ஆண்டில்  சைரா லியோன் கம்பனி என்பது ஏற்படுத்தப்பட்டு பிரீடவுன்  (Freetown) அமைக்கபட்டது. 1808 ஆம் ஆண்டு முதல் அந்த அடிமைகள் விடுதலை  பெற்றார்கள். 
சைரா லியோன் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 தேதிவரை பிரிட்டிஷ் அரசினரால ஆளப்பட்டு வந்து இருந்தது. 1971 ஆம் ஆண்டு இந்த நாடு விடுதலை அடைந்தது.  1991 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு சண்டைகளில் 50,000 மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இன்று ஆப்ரிக்காவின் ஸ்திரமற்ற நாடுகளில் சைரா லியோன் நாடும் ஒன்றாக உள்ளது.  இங்குள்ள தென் ஆப்ரிக்கப்  பகுதியில்  இருந்துதான் ஐரோபியாவிற்கு போதைப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. 


 காம்பை பகுதியில் பண்டைக் கால வீடு





இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Sierra Leone )


இந்த நாட்டிற்குச் செல்ல விரும்பும் பயணிகள் மஞ்சள் காமாலை நோய் தடுப்பு ஊசி  போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் வைத்து இருந்தால் மட்டுமே விசா (Visa) கிடைக்கும். கிழக்கு ஆப்ரிக்காவின் பொருளாதார கூட்டுறவு சமூக நாடுகளை சேர்ந்திராத {Economic Community of West African States (ECOWAS) } நாட்டு மக்கள் இங்கு செல்ல  விசா வாங்க வேண்டும்.
இந்த நாட்டிற்குச் செல்ல பிரீடவுன் லுங்கி விமான நிலையத்துக்கே { Freetown-Lungi International Airport (FNA)} முதலில்  சென்று அங்கிருந்துதான் மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும். லண்டன் ஹீத்ரோவ் ,  பாரிஸ் -சார்லஸ்  தே  குல்லே ,  ப்ருச்சில்ச்ஸ்  போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.


இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Sierra Leone )


  1. பிரீடவுன்  - தலைநகர்
  2. போ
  3. போனதே
  4. கேனிமா
  5. மகேனி
  6. கொய்து
  7. கபாலா  

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - சாலமன் தீவுகள்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
சாலமன் தீவுகள்
( Read Original Article In :-
Discover Solomon Islands )


பினுயலோவ, சாலமன் தீவு ,  பின்புறம்  எரிமலை கக்கிய நெருப்பின் புகை  
Author: Pohopetch (Creative Commons Attribution 3.0 Unported)

பாபுவா நியூ குயினாவின் (Papua New Guinea)  கிழக்குப் பகுதியில் உள்ள தீவுக் கூடமே சாலமன் தீவுகள் (Solomon Islands). முன்னர் பிரிட்டிஷ் நாட்டினரின் குடியேற்றப் பகுதியாக இருந்த இந்த தீவுகளின் தலைவர் பேரரசி எலிஜிபத் II (Queen Elizabeth II) என்பவரே. இந்த நாட்டின் பரப்பளவு  28,400  ச்ஜ்ஹதுற கிலோ மீட்டர் மற்றும் ஜனத்தொகை 525,000. நாட்டின் தலை நகரம் ஹோனியாரா (Honiara).

சாலமன் தீவுகளின்  ஹோட்டல்கள்
(Guide to Solomon Island Hotels )

இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Solomon Islands) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.

சாலமன் தீவுகளைப் பற்றிய விவரங்கள்
(More on Solomon Islands )

சாலமன் தீவு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தீவுகளை உள்ளடக்கியது.  இங்குள்ள மக்கள் ஆயிரம் வருடங்களாக பாபுவான் (Papuan) மொழியைப் பேசுபவர்கள். அங்கு வந்து குடியேறியவர்களில் 4000 BC யை சேர்ந்த ஆஸ்த்ரோநேஷியர்கள் (Austronesians) உள்ளார்கள். அதன் பிறகு அங்கு வந்து குடியேறியவர்கள் போலிநேஷியர்கள் (Polynesians ).


ஹோனியாராவில் கௌடல்கனால் அமெரிக்கன்  மெமோரியல்
Author: W.wolny (public domain)

இங்கு முதலில் வந்து இறங்கியவர் ஸ்பானிஷ் (Spanish) நாட்டை சேர்ந்த அல்வாரோ டி மேன்டனா  டி நைரா (Álvaro de Mendaña de Neira ) என்பவரே.  அவர் பேரு நாட்டில் இருந்து 1568 ஆம் ஆண்டு இங்கு வந்து இங்கிருந்தவர்கள் மனிதர்களை வேட்டை ஆடி  நர மாமிசம் (headhunting and cannibalism) உண்பவர்களாக இருந்ததைக் கண்டார்.
1893 ஆம் ஆண்டு இந்த தீவுகள் பிரிடிஷார் காப்பாட்சியில் British protectorate) இருந்தது.  அப்போது மதமாற்ற பிரிவினர் இங்கு வந்து இங்குள்ளவர்களை கிருஸ்துவ மதத்திற்கு மாற்றினார்கள்.  1976 ஆம் ஆண்டு தன்னாட்சி உரிமைப் பெற்று (self-government) ஆட்சி அமைத்த சாலமன் தீவு 1978 ஆம் ஆண்டு முழுமையான (Full independence) சுதந்திரத்தைப் பெற்றது.  ஆனால் அதன் பின் உள்நாட்டுக் குழ்ஹப்பங்கள் தோன்றி பல இனங்களுக்கு இடையே உள்நாட்டு சண்டைகள் நடைபெற்றன.


தண்ணீரில் கிஸோ கடைவீதி 

இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Solomon Islands )

இந்த நாட்டிற்குச்  சென்று அங்கேயே விசா (Visa) பெற அனுமதிக்பட்டு உள்ள நாடுகள் வருமாறு:
அமெரிக்கன்  சமோவா , அன்டோர்ரா  , அன்டிகுவா அண்ட்  பர்புட , அர்ஜென்டினா  , அருபா , ஆஸ்திரேலியா , ஆஸ்திரியா , பஹமாஸ் , பார்படோஸ் , பெலிஸ் , போனிரே , பிரேசில் , பிரிட்டிஷ்  வெர்ஜின் தீவுகள் , ப்ருனெய் , கனடா , கேய்மன் தீவுகள் , சிலி , குக்  தீவுகள் , குரகவோ  , செக் ரிபப்ளிக் , டென்மார்க் , டொமினிக்கா , டொமினிக்கன்  ரிபப்ளிக் , பிஜி , பின்லாந்த் , பிரான்ஸ்  , பிரெஞ்சு  பொலினேசிய , ஜெர்மனி , கானா , கிரீஸ்  , கிரெனட , கோதேலூபே , கோம் , குயான , ஹங்கேரி ,ஐஸ்லாந்து , அயர்லாந்து , இஸ்ரேல் , இத்தாலி , ஜப்பான் , குவைத் , லைச்டேன்ஸ்டீன் , லக்ஸம்பெர்க்  , மலேசியா , மால்டிவேஸ் , மால்டா  , மார்ஷல்  தீவுகள் , மார்டின்க்கியூ, பிடரடேத்  ஸ்டேட்ஸ்  ஆப  மைக்ரோனேசிய , மொனாகோ , மொன்திசெர்ராத் , நவரூ  , நெதர்லாண்ட்ஸ் , நியூ  கலேடோனியா , நியூ சிலாந்து , நியூ , நோர்போல்க் தீவு , நார்தேர்ன்  மரியான தீவுகள் , நார்வே , பலு , பபுவா  நியூ  கினியா , பராகுவே, பெரு , பிட்சைர்ன்  தீவுகள் , போலன் , போர்டுகள் , புர்டோ  ரிகோ , சபை , செயின்ட்  கிட்ட்ஸ்  அண்ட்  நெவிஸ் , செயின்ட்  லூசியா, செயின்ட்  வின்சென்ட்  அண்ட்  தி  கிரெனடின்ஸ் , சமோவா  , சன்  மரினோ , சிங்கப்பூர் , ஸ்லோவாகியா , ஸ்லோவேனியா , ஸ்பெயின் , சுரினமே , ஸ்வீடன் , ஸ்விட்சர்லாந்து , தைவான் , தாய்லாந்த் , டோங்க , திரினிடட்  அண்ட்  டோபாகோ , யுனைடெட்   கிங்க்டம் , யுனைடெட்   ஸ்டேட்ஸ் , உருகுவே  , உஸ்பெகிஸ்தான்   , வனதூ மற்றும்  வால்லிஸ்  அண்ட்  புட்டுன .

இந்த தீவு தேசத்துக்கு செல்ல ஹோனியாரா சர்வதேசிய விமான நிலையம் {Honiara International Airport (HIR)} மட்டுமே உள்ளது. பிரிஸ்பனில் (Brisbane) இருந்து அங்கு செல்ல விமான சேவைகள் உள்ளன. 

நாட்டின் முக்கிய நகரங்கள்
(Important Towns of Solomon Islands )  

ஹோனியார  - தலைநகரம் 


யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
( UNESCO World Heritage Sites in Solomon Islands)

ஈஸ்ட்  ரேன்னெல்  (1998)

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - சூடான்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
சூடான்
(Read Original Article in :- Discover Sudan)


மேரோ  பிரமிட்ஸ்
Author: Fabrizio Demartis (Creative Commons Attribution 2.0 Generic)

ஆப்ரிக்காவின் ஒரு பெரிய நாடு சூடான் (Sudan). இதை சூடான் குடியரசு என்று அழைக்கின்றார்கள். இதன் பரப்பளவு  2,505,813 சதுர கிலோ மீட்டர். ஆனால் தென் சூடான் பகுதி இந்த நாட்டில் இருந்து 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்பதாம் தேதியன்று பிரிந்தப் பின் இதன் பரப்பளவு  1,886,068 சதுர கிலோ மீட்டர் என ஆகிவிடும்.  இந்த நாட்டின் எல்லைகள் வடக்கில் எகிப்து  (Egypt) ,தென்மேற்கில் லிப்யா (Libya) , மேற்கில் சாட் (Chad ) தென்மேற்கில் சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரிபப்ளிக் (Central African Republic) , தெற்கில் தென் பகுதி சூடான் குடியரசு  (Republic of Southern Sudan) , கிழக்கில் ஏரிட்ரியா  (Eritrea) போன்ற நாடுகளுடன் உள்ளன. வடகிழக்கில் சிவப்புக் கடல் உள்ளது. இந்த நாட்டின் ஜனத் தொகை 36 மில்லியன். தலை நகரம் கார்டோம் (Khartoum) என்பது .

சூடான்  ஹோட்டல்கள்
(Guide to Sudan Hotels )

இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Sudan) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.


கலப்ஷா  ஆலயம்


ஓம்டுர்மன் எனும் இடத்தில் மகடி டோம்ப்
Author: Petr Adam Dohnálek (Creative Commons Attribution-Share Alike 3.0 Czech Republic)


சூடான் நாட்டின் மற்ற விவரங்கள்
(More Details On Sudan )

தென் சூடான் குடியரசின் பகுதியும்  (Republic of Southern Sudan ) அனைத்து பக்கங்களிலும் பிற நாட்டு நிலத்தினால் சூழப்பட்டு உள்ளது. இந்த நாட்டின் பரப்பளவு   619,745 சதுர கிலோ மீட்டர்,  ஜனத்தொகை  8.5 மில்லியன் மற்றும் தலை நகரம் ஜுபா (Juba) என்பது. இந்த நாட்டின் எல்லைகள் வடக்கில் சூடான் குடியரசு ( Republic of Sudan), மேற்கில்  சென்ட்ரல் ஆப்ரிகன் ரிபப்ளிக் (Central African Republic ) தென் மேற்கில் காங்கோ ஜனநாயக குடியரசு (Democratic Republic of the Congo), தெற்கில் உகாண்டா  ( Uganda)   தென்மேற்கில் கென்யா (Kenya) போன்ற நாடுகள் உள்ளன.
இரண்டு சூடான் நாடுகளுமே கிழக்கு ஆப்ரிக்காவின் நேரத்தையே பின்பற்றுகின்றன.  உலக நாடுகளின் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள பொதுவான நேரத்தைவிட இந்த நாடுகளின் நேரம் மூன்று மணி அதிகமானது (UTC+3). தொலைபேசி எண் கோட் +249. சாலையில் வண்டிகளை வலதுபுறமாக ஓட்ட  வேண்டும்.  நாட்டின் நாணயம்  சுடானிஸ் பவுண்ட் {Sudanese pound (SDG)}.
2010 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP of $65.742 பில்லியன், தனிநபர் வருமான GDP $1,638. இந்த நாட்டில்  அரசியல் ஸ்திரமின்மை இருந்தாலும் நாடு முன்னேற்றம் அடைந்து வருகின்றது.  இந்த நாட்டின் பொருளாதாரம் எண்ணை  ஏற்றுமதியை பொறுத்தே உள்ளது.  இங்கு எரிபொருள், தங்கம், வெள்ளி மற்றும் பிற தாதுப் பொருட்கள் நிறைய  கிடைக்கின்றன.

எல்  குறு எனும் இடத்தின் டோவேகோடே  
Author: Bertramz (Creative Commons Attribution 3.0 Unported)

தென் சூடானின் செல்வம் 85%  எண்ணை வளத்தில் இருந்தே வருகின்றது. ஆகவே  இரண்டு நாடுகளும் அந்த செல்வத்தை பங்கு போட்டுக் கொள்ளும் வகைக்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டு உள்ளன.  

சூடானில் உணவு செய்யும் பெண்மணி
Author: Dominik HES (Creative Commons Attribution-Share Alike 3.0 Czech Republic)

சூடானின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. இந்த நாட்டின் கலாச்சாரம் எகிப்த்  தேசத்துடன் ஓத்து உள்ளது. இந்த நாட்டை பண்டைய எகிப்தியர் குஷ் (Kush) என அழைத்தார்கள். முன்னர் பல வருடங்களாக எகிப்த் மற்றும் குஷ் நாட்டினர் ஒருவர் மீது ஒருவர் படையெடுத்து நாட்டைக் கைபற்றிய வண்ணமே இருந்துள்ளார்கள்.
 AD 540 ஆம் ஆண்டுகளில்  பைசண்டைன் அரசியான தியோடோரா என்பவர் அனுப்பிய மத மாற்றக் குழுவினர் நுபியா என்னும் மன்னன் ஆண்ட கிழக்கு சூடானில் இருந்தவர்களை  கிருஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்தார்கள்.ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு அராபியர்களின் தொடர்ப்பினால் அங்கிருந்த மக்களுக்கு  இஸ்லாம் மதத்தினருடன் கலப்புத் திருமணங்கள் நடைபெற முஸ்லிம் மதத்தினரும் பெருகினார்கள். 
1820 ஆம் ஆண்டுகளில் சூடானை முஹமாத் அலி பாஷா (Muhammad Ali Pasha) என்ற எகிப்து தேசத்து மன்னர் ஆண்டு வந்தார் . அந்த மன்னன் ஓட்டமான் சுல்தானின்  (Ottoman Sultan) கீழ் இருந்தாலும், தானே எகிப்து மன்னனைப் போல காட்டிக் கொண்டார். 1882 ஆம் ஆண்டில் பிரிடிஷ்  (Ottoman Sultan)அரசினர்  எகிப்து மற்றும் சூடானில் தலையிடத் துவங்கினார்கள். 
1885 ஆம் ஆண்டு பிரிட்டிஷ்  மற்றும் எகிப்து   அரசுகளை எதிர்த்து  முஹமாத் அஹ்மத் இபின் அபிட் அல்லாஹ் (Muhammad Ahmad ibn Abd Allah) என்பவர் கிளர்ச்சி செய்து சூடானின் ஆட்சியைக் கைப்பற்றினார்.  1899 ஆம் ஆண்டுவரை அந்த நாட்டை ஆண்டுவந்த  மக்டிஷ்ட் (Mahdist ) என்பவர் தோற்கடிக்கப்பட்டு  இந்த நாட்டில் எகிப்து-பிரிட்டிஷ் அரசு அமைந்தது.  1956 ஆம் ஆண்டுவரை பிரிட்டிஷ்  குடியேற்ற (Colony) நாடாக இருந்த சூடான் ப்விடுதலை அடைந்தது.

ப்ளூ  நைல்  பால்ஸ்


விடுதலை அடைந்த சூடானில் 1955 ஆண்டு முதல்  1972 வரை உள்நாட்டு புரட்சிகள் வெடித்தன. அதன் பின் தெற்கு மற்றும் வடக்கு சூடானை சேர்ந்த மக்களிடையே உள்நாட்டு சண்டைகள் தோன்றின. 2005 ஆம் ஆண்டு ஜனவரி ஐந்தாம் தேதி அவர்கள் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் அடிப்படையில்  2011 ஆம் ஆண்டு ஜனவரியில் நாட்டில் பொது வாக்கு எடுப்பு நடந்தது. அதன்படி வடக்கு மற்றும் தெற்கு சூடான் இரு பகுதிகளாகப் பிரிந்தன. 

சூடானுக்கு செல்ல வேண்டுமா
( Visiting Sudan )
சூடானின் பல பகுதிகள் பாதுகாப்பு இல்லாதவை. அங்கு செல்லும் பயணிகளை கடத்திச் சென்று பணம் பறிப்பார்கள். ஆகவே தற்போது உள்ள நிலைமையில் பயணிகள் அங்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அங்கு சீரான நிலைமை அடைந்தப் பின் அங்கு செல்லலாம்.  

இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Sudan )

  1. கார்டோம்   -தலை நகரம்
  2. ஓம்டுர்மன்  - பெரிய நகரம்
  3. அல்  உபய்யிட்
  4. கஸ்ஸால
  5. மிரோவ    
  6. நையலா
  7. போர்ட்  சூடான்

பார்க்கக் கூடிய இடங்கள்  
(Places of Interest in Sudan )
  1.  நுபியன்  பிரமிட்ஸ்
  2. ஓல்ட்  தோன்கோலா 

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Sudan )

கேபெல்  பர்கல்  அண்ட்  தி  சைட்ஸ்  
ஆப்  தி  நேபடன்   ரீஜன்   (2003) 

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - சுரினமே

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
சுரினமே
(Read Original Article in :- Discover Suriname)


சுரினமே நதியில் இருந்து பார்த்தால் தெரியும் பரமரிபோ
Author: Mark Ahsmann (Creative Commons Attribution 3.0 Unported)
தென் ஆப்ரிக்காவின் மிக சிறிய நாடே சுரினமே (surinamae). இதன் பரப்பளவு 163,821 சதுர கிலோ மீட்டர். ஜனத்தொகை அரை மில்லியன் மக்கள் இருக்கும். இந்த நாடு மேற்கில் குயன்னாவுடனும் (Guyana ) தெற்கில் பிரஸ்சில் (Brazil ) கிழக்கில் பிரெஞ்ச் குயனாவுடனும் (French Guiana ) தனது எல்லைகளைக் கொண்டு உள்ளது. வடக்கில் அட்லாண்டிக் கடலை நோக்கி அமைந்து உள்ளது.

சுரினமே ஹோட்டல்கள்
(Guide to Suriname Hotels )

இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Suriname) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.


பரமரிபோவில் நிதி அமைச்சகம் மற்றும் நீதி மன்றம் 
சுரினமேயையைப்  பற்றிய விவரங்கள்
(More about Suriname )

உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட இந்த நாட்டின் நேரம் மூன்று  மணி குறைவானது (UTC-3).  வாகனங்களை இடது  புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் சுரினமே டாலர்  {Suriname Dollar(SRD} . தொலைபேசி எண் கோட் +597 .
இந்த நாட்டின் தேசிய மொழி  டச் (Dutch) . நாட்டின் தலை நகரம் மற்றும் மிகப் பெரிய நகரமும் பரிமரிபோ (Parimaribo) என்பது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் கடற்கரைப் பகுகுதிகளில்தான் வசிக்கின்றார்கள்.  தென் பகுதி பெரும்பாலும் அடர்ந்த காட்டுப் பிரதேசமாக  உள்ளது. பகுயிஸ் (Bakhuys) மற்றும்வான் ஆஷ்ச் வான் விஜேக் (Van Asch Van Wijck) மழைத் தொடர்கள் புகழ் பெற்றவை.  இங்குள்ள மிக உயர்வான மலை  1286 மீட்டர் உயரமான ஜுலியெனடோப் (Julianatop) என்பது.


கொம்பே  பஜார்  பலசரக்குக் கடை

2009 ஆம் ஆண்டு கணக்கின்படி சுரினமேயின்  GDP of $2.962 பில்லியன் , மற்றும் தனிநபர் வருமான  GDP  $5,675.
சுரினமே நதிக் கரையில் மார்ஷல் கிரீக் (Marshal Creek) எனும் காலனியை முதலில் அமைத்தவர்கள் ஆங்கிலேயரே (English) . ஆனால் அதை டட்ச் ஆட்சியினர் (Dutch) நிர்வாகிக்க அதன் பெயர் டட்ச் குயானா( Dutch Guiana) என இருந்தது.இந்த நாட்டின் ஆங்கிலப் பெயர் சுரினாம் (Surinam) என்று இருக்க டச்சில் அதை சுரினமே (Suriname) என அழைத்தார்கள்.


கரோனி எனும் இடத்தில் உள்ள சுரினாமியர்களின் வீடு  

இந்த நாட்டிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Suriname )

இந்த நாட்டிருக்குள் செல்ல விசா (Visa) தேவை இல்லாத நாடுகள்  அன்டிகுவா அண்ட்  பார்புட , பஹமாஸ் , பார்படோஸ் , பெலிஸ்  , பிரேசில் , சிலி , டொமினிக்கா , காம்பியா , கிரெனடா , குயான , ஹாங்காங் , இஸ்ரேல் , ஜமைக்கா , மலேசியா , மோன்த்செரத் , நெதர்லாண்ட்ஸ்  அண்டில்லஸ் , பிலிப்பின்ஸ் , செயின்ட்  கிட்ட்ஸ்  அண்ட்  நெவிஸ் , செயின்ட்  லூசியா , செயின்ட்  வின்சென்ட்  அண்ட்  தி  கிரெனடின்ஸ் , சிங்கப்பூர் , திரினிடட்  அண்ட்  டோபாகோ , மற்றும்  வெனேசுலா.
ட்ரினிடாட் போன்ற இடங்களுக்கு சுரினாம் விமான சேவை உள்ளது (Surinam Airways ). ஆம்ஸ்டர்டம்  விமான நிலையத்தில் இருந்து  பரமரிபோ போன்ற இடங்களுக்கும் KLM விமான சேவை உள்ளது. 

இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Suriname )
  1. பரமரிபோ  - தலை நகரம்
  2. அல்பின
  3. ஜோடேன்சவன்னே
  4. பரனம்

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
( UNESCO World Heritage Sites in Suriname )
  1. சென்ட்ரல்  சுரினமே  நேசர் ரிசர்வ்
  2. ஹிஸ்டரிக்  இன்னேர்  சிட்டி  ஆப  பரமரிபோ 

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் --- கோர்சிகா

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
கோர்சிகா
( Read original Article in :- 



கல்வி எனும் இடத்தின் காட்சி
 Author: Phazore (Creative Commons Attribution 3.0 Unported)

மத்திய தரைக் கடல் பகுதியை (Mediterranean Sea) சார்ந்த  பகுதியில் உள்ள கோர்சிகா (Corsica ) பிரான்ஸ் (France) நாட்டின் 26 மாகணங்களில் ஒன்றாகும். இந்த இடம் பிரான்ஸ் நாட்டின் பகுதி  இல்லை என்றாலும், அந்த நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட நிலப்பரப்பாகும். 


போர்ட் அஜாசியோ
Author: Ripnel Patricia (Creative Commons Attribution 3.0 Unported)

பிரான்ஸ் நாட்டின் நிலப்பரப்பில் இருந்து இந்த பகுதியை பிரிப்பது லிகூரியன் கடல் ஆகும் (Ligurian).  இது முதலில் கோர்சிகன் குடியரசு எனும் சுதந்திர நாடாகவே இருந்தது. ஆனால் 1769 ஆம் ஆண்டில் இது பிரான்ஸ் நாட்டு ஆட்சியின்  கீழ் வந்தது.  இத தீவின் பரப்பளவு  8,680 சத்திர கிலோ மீட்டர், மற்றும் 2011 ஆண்டின் கணக்கின்படி இதன் ஜனத்தொகை  302,000 . இந்த தீவின் தலை நகரம் அஜாசியோ . இது நெப்போலியன் போனபார்டே (Napoléon Bonaparte) பிறந்த இடம்.

கோர்சிகாவின் கடல் பகுதி 1,000 சதுர கிலோ மீட்டர். அதாவது 183 கிலோ மீட்டர் தூரமும் 83 கிலோ மீட்டர் அகலமும் ஆகும். இந்த தீவு மழைப் பகுதியில் அமைந்து உள்ளது. 2,000 மீட்டர் உயரமான மலையில் சுமார் 20 மலை உச்சிகள் உள்ளன. 

இந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் எனில் அஜாசியோ, பஸ்டிகா இல்லை என்றால் கல்விக்கு சென்று அங்கிருந்து பிற இடங்களை அடையலாம்.


கான்ப்றேரி  செயிண்டே -க்ரோயக்ஸ்  , காலேன்சன
Author: Pierre Bona (Creative Commons Attribution 3.0 Unported)
கோர்சிகாவின்  நகரங்கள்
(Cities in Corsica )
  1. அஜாசியோ  - தலை நகர்
  2. பாஸ்டிய
  3. போனிபாசியோ
  4. கல்வி
  5. கார்கேசே
  6. கோர்டே
  7. போர்டோ -வெச்சியோ
  8. செயின்ட் -ப்லோரென்ட்
 
லெஸ்  பிளஸ்  பியுக்ஸ்  வில்லேஜஸ் 
டி பிரான்ஸ் உறுப்பினர்கள்  
(Les Plus Beaux Villages de France )
  1. பியானோ
  2. சன்ட் அந்தோனினோ 

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - குக் தீவுகள்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
குக் தீவுகள்
( Read Original Article in :- 
  Discover Cook Islands )


குக் தீவுகள் (Cook Islands) எனும் தீவு தேசம் தென் பசிபிக் கடலில் உள்ளது.  இது தனியான ஆட்சியைக் கொண்டு நியூசிலாந்துடன் கூட்டமைப்பை  வைத்துள்ளது.  இந்த நாட்டின் பரப்பளவு  240 சதுர கிலோ மீட்டர் மற்றும் 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த தீவு நாட்டின் ஜனத்தொகை  20,000 ஆகும். இந்த நாட்டின் தலை நகரம் ராரோடோங்கா (Rarotonga) தீவில் உள்ள அவாறு (Avarua) என்பதே.

குக் நாட்டில் ஹோட்டல்கள்
(Guide to Cook Islands Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Cook Islands) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்து கொள்ள இதன் மீது கிளிக் செய்யவும். இதன் மூலம் நீங்கள் குறைந்த கட்டணத்தில்  நல்ல ஹோட்டலை தேர்ந்து எடுக்க முடியும்.
இந்த தீவு நாடு 15 தீவுகளை உள்ளடக்கி உள்ளது.  இந்த பதினைந்து தீவுகளும் 2.2 மில்லியன்  அளவிலான கடல் பகுதியில் அங்கும் இங்குமாக உள்ளது.  இந்த தீவு தேசம் இரண்டு பகுதி தீவுகளாகவும், இரண்டு பவழத் தீவுகளாகவும் அதாவது வடக்கு குக் தீவு மற்றும் தெற்கு   குக் தீவு  என்று உள்ளது. இந்த தீவுகள் அனைத்தும்  எரிமலையின் விளைவினால் (volcanic activities) ஏற்பட்டவை. 

ஐடுடகிஸ் லகூனில் உள்ள  மோடு  மைனா தனித்து வேறு ஆகி உள்ள  பகுதி   
Author: Mr Bullitt (Creative Commons Attribution 3.0 Unported)

குக் தீவுகளின் நேரம்  உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட  பத்து  மணி நேரம்  குறைவானது  (UTC-10). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். தொலைபேசி எண் கோட் IDD +682.  மின் விசை அளவு 240V/50Hz (ஆஸ்திரேலியன் மின் சாதனம் ).
இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலாவைப் பொறுத்து உள்ளது.  மேலும் இங்கு இயற்கை வளங்கள் இல்லை என்பதினால் இது மற்ற நாடுகளின் உதவியை எதிர்பார்த்தே  இருக்க வேண்டிய நிலையில் உள்ளது. பெரும் அளவிலான  நிதி உதவி நியூசிலாந்தில் இருந்து வருகின்றது.  2005 ஆம் ஆண்டு எதிர்பார்ப்பின்படி  நாட்டின் GDP  $183.2 மில்லியன் அளவை எட்டி  இருக்கும் எனவும், தனி நகர் வருமானம் $9,100 என்ற அளவில் இருக்கும் எனவும் எதிர்பார்த்தார்கள் .
குக் தீவில் போலினிஷியர்கள் (Polynesians) ஆறாம் நூற்றாண்டில் வந்து குடியேறினார்கள். அவர்களை முதலில் அடையாளம் கண்டு கொண்டது ஸ்பானிஷ் நாட்டினர்தான்.  1606 ஆம் ஆண்டில் போர்த்துகீசிய - ஸ்பானிஷரான பெட்ரோ  பெர்னான்டஸ் தே கிவுரிச்ஸ் (Portuguese-Spaniard Pedro Fernández de Quirós) என்பவரே முதலில் இந்த நாட்டில் உள்ள ரகஷன்காவில் (Rakahanga) வந்து இறங்கினார்.  

குக்  தீவு-ராரோடோங்கா 
Author: Tristanb (Creative Commons Attribution ShareAlike 3.0)

19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த மதபோதகர்கள் இங்கு வந்தார்கள். அதனால் பலரும் கிருஸ்துவ மதத்தில் இணைந்தார்கள். அதனால் இந்த நாடு1888 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பின் கீழ் இருந்தது. 1901 ஆம் ஆண்டு உள்ளூர் மக்களின் எதிர்ப்பையும் மீறி அந்த பாதுகாப்பு பொறுப்பை  நியூசிலாந்திற்கு கொடுத்துவிட்டது. 1965 ஆம் ஆண்டுவரை இந்த நாடு நியூஸிலாந்தின்  பொறுப்பில் இருந்தப் பின் சுயாட்சி உரிமை பெற்றது.  தற்போது கொள்கை அளவில் இந்த நாடு சுயாட்சி பெற்ற தனி நாடு என ஒப்புக் கொள்ளப்பட்டாலும் இது நியூசிலாந்தின் கூட்டமைப்புடன் இயங்கும்  நாடே.
இந்த நாட்டிர்க்குச் செல்ல ராரோடோங்கா விமான நிலையத்துக்கே {Rarotonga International Airport (RAR)} சென்று இறங்கிவிட்டு அங்கிருந்து பிற இடங்களுக்கு செல்லலாம். இங்கு செல்ல விமான சேவையை வைத்துள்ள நாடுகள் ஆக்லாந்த் (Auckland), பிஜி (Fiji), லாஸ் ஏன்சிலஸ் ( Los Angeles) போன்றவை .

முரி  பீச் , ராரோடோங்க  

தென் குக் பகுதியில் நகரங்கள் 
(Southern Cook Islands )
  1. ஐடுடகி
  2. மங்கியா
  3. மனுஏ  
  4. ராரோடோங்க
  5. பல்மேர்ஸ்டன் தீவு 
  6.  
வடக்கு குக் பகுதியின் நகரங்கள்
(Northern Cook Islands)
  1. மனிஹிகி
  2. நச்சுவ்
  3. பென்ர்ஹின் தீவு
  4. புகபுக்க
  5. ரகஹங்கா
  6. சுவார்ரோவ்









சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - கொமொரோஸ்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
கொமொரோஸ்
( Read Original Article in :-  Discover Comoros )
 


கொமொரோஸ்சில் ஒரு காட்சி
Author: Christophe Laborderie (Creative Commons Attribution 2.0 Generic)

கொமொரோஸ் (Comoros ) என்ற நாடு கிழக்கு ஆப்ரிக்கக் கடற்கரைப் பகுதியில் உள்ள  தீவுக் கூட்டம்.  இந்த தீவின் அதிகாரபூர்வமான பெயர்  ஒன்றிணைந்த கொமிரேஸ் (Union des Comores) என்பது.  இது மொசம்பிக் (Mozambique) நாட்டின் வடகிழக்கு மற்றும் மடகாஸ்கரின் (Madagascar)  வட மேற்குப் பகுதிகளின் இடையில் உள்ளது. ஆப்ரிக்காவின் மூன்றாவது மிகச் சிறிய இந்த நாட்டின் பரப்பளவு   1,660 சதுர கிலோ மீட்டர் .


மொரோனி , கொமொரோஸ்
Author: Woodlouse (Creative Commons Attribution 2.0 Generic)

2011 ஆம் ஆண்டு கணக்கின்படி கொமொரோஸ் நாட்டின் ஜனத்தொகை 800,000. ஆப்ரிக்காவில் ஒரே இடத்தில் அதிக அளவிலான மக்கள் வசிக்கும் நகரங்களைக் கொண்ட நாடு இது.  இந்த நாட்டின்  GDP of US$532 மில்லியன், மற்றும் தனி நபர் வருமானம் GDP US$798 .

இங்குள்ளவர்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம் மதத்தினர். இங்கு அரபு  நாட்டவரின் செல்வாக்கு மற்றும் அவர்களுடன் வியாபார சேவைகள் அதிக அளவில் உள்ளது.  1912 ஆம் ஆண்டு இது பிரான்ஸ் (France)  ஒரு அங்கமாகி 1978 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. அதற்க்கு முன் இங்கு அதிக அளவிலான அரசியல் குழப்பங்கள் இருந்தன.  தற்போதும் அந்த நாட்டின் அரசியல் நிலைமை குழப்பமாகவே உள்ளது. இந்த நாடு விடுதலை அடைந்தது ஆட்சியில் இருப்பவர்களை அகற்ற  குறைந்தது 20 முறை பல்வேறு விதமான  புரட்சிகள் நடந்தன.


கிராண்டே கமோரேயின் ஒரு காட்சி 
Author: Woodlouse (Creative Commons Attribution 2.0 Generic)

இந்த நாடு நான்கு தீவுகளாக உள்ளது.  அவை நகாஜிட்ஜா {Ngazidja (Grande Comore)}, மவாலி { Mwali (Mohéli)), நசவானி {Nzwani (Anjouan)}, மற்றும் மயோர் {Maore (Mayotte)} என்பன.  இந்த நாட்டின் மரோனி என்ற தலைநகரம் கிராண்ட் கமோரில் உள்ளது. இந்த நாடு வெப்ப மண்டலப் பகுதிக்குரிய தட்பவெட்ப நிலையைக் கொண்டு உள்ளது. மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வறண்ட பூமியாக இருக்கும் இதன் தட்பவெட்ப நிலை  19°C (66°F) என்ற அளவிலும் மார்ச் மாதத்தில் இந்த வெட்ப  அளவு  30°C (86°F) வரையிலும் செல்லும்.

இங்கு செல்ல வேண்டுமா
(Going to the Comoros )

நைரோபியில் (Nairobi) இருந்து  கென்யா (Kenya )  ஏர்வேச்ஸ் மூலம் இங்கு செல்ல முடியும்.  நைரோபியில் இருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் செல்ல விமான சேவைகள் உள்ளன.

கொமொரோசை சுற்றிப் பார்க்க
(Getting around in the Comoros )
இந்த தீவு நாட்டை சுற்றிப் பார்க்க  ஒரு வாடகை காரை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.  இதற்கான கட்டணம் ஒரு நாளைக்கு  €30 (KMF 15,000)  என்ற அளவில் உள்ளது. இங்கு பொதுஜன  பஸ் வசதிகள் இல்லை. 


மொஹிலியில் பவழங்கள் 

இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in Comoros )
  1. மரோனி- தலை நகரம்
  2. டோமோனி
  3. பம்போணி
  4. நிவ்மசௌவ்
  5. மெட்ஸ்அமோடவ் 

பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Comoros )
மொஹிலி  

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - கிருஸ்துமஸ் தீவு

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
கிருஸ்துமஸ் தீவு
(Read Original Article in :-  


சிவப்பு நண்டுகள்
Author: Takamaxa, Terence (Creative Commons Attribution 3.0 Unported)

இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு நாடே கிருஸ்துமஸ் தீவு. இது ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள ஒரு சிறு நாடு. ஆஸ்திரேலியாவில் இருந்து இது 2600 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜகார்தாவில் இருந்து 360 கிலோ மீட்டர் தொலைவிலும் காகோஸ் தீவில் இருந்து 975 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்த நாட்டின் ஜனத்தொகை ஆயிரத்துக்கும் குறைவானதே. இதன் தலை நகரம் பிளையிங் பிஷ் கோவ் (Flying Fish Cove) என்பது. இந்த நாட்டின் நேரம் உலக நாடுகளின் பொதுவான நேரத்தை விட ஏழு மணி நேரம் (UTC+7) அதிகம். ஆஸ்திரேலிய டாலரே இந்த நாட்டின் நாணயம். இங்கு வசிக்கும் மக்களில் 70 சதவிகித மக்கள் சீனர்கள், 20 சதவிகிதம் ஐரோப்பியர்கள் மற்றும் 10 சதவிகித மக்கள் மலாய் நாட்டினர். இந்த நாட்டின் தொலைபேசி எண் கோட் + 61 .
அப்போட்ஸ் பூபி (பாபாசுல அப்போட்டி )
Author: orangeisland (Creative Commons Attribution 2.0 Generic)

இந்த தீவை 1643 ஆம் ஆண்டில் முதலில் கண்டு பிடித்தது காப்டன் வில்லியம் மினோர்ஸ் (Captain William Mynors) என்பவர் ஆவார்.  1857 ஆம் ஆண்டு சிலர் இந்த நாட்டை ஆராய அமேத்ய்ஸ்ட் என்ற கப்பலில் இங்கு  வந்தார்கள். 1887 ஆம் ஆண்டில் HMS பிளையிங் பிஷ் என்ற கப்பலில் வந்த காப்டன் மக்ளீர் (Caption Maclare) இங்கு தரை தடைப்பட்டு இருந்த அந்தக் கப்பலை கண்டுபிடித்தார். அதனால் அவர் பெயரில் இந்த நாட்டின் அந்த நகரம் பிளையிங் பிஷ் கோவ் என்ற  பெயரைப் பெற்றது.
1890 ஆம் ஆண்டுகளில் இந்த தீவில் இருந்த பாஸ்பேட் சுரங்கத் தொழிலில் ஈடுபட சிங்கப்பூர், மலாய், மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டார்கள். இரண்டாம் உலக யுத்தத்தின் போது இங்கிருந்த அனைத்து மக்களும் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது இந்தத் தீவில் இருந்த இந்திய சிப்பாய்கள் கலவரத்தில் ஈடுபட்டு ஐந்து பிரிட்டிஷ் படையினரைக் கொன்று விட்டு மற்றவர்களை சிறைப் பிடித்தபோது இந்தத் தீவு ஜப்பானியர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததும் இதை ஆஸ்திரேலியாவின் வசம் ஒப்படைத்தார்கள். 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் இந்த தீவு அகதிகளை சிறை வைத்து இருந்த இடமாக பயன்படுத்தப்பட்டது.
பூன் சான் எனும் இடத்தில் ஒரு கட்டிடம்
Author: Takamaxa (public domain)

இந்த நாட்டின் பொருளாதாரம் பாஸ்பேட் சுரங்கத் தொழிலையே பெரும்பாலும் நம்பி உள்ளது. காசியோ (Casio) எனப்படும் கேளிக்கை விடுதியைக் (Holiday resort) கட்ட முயன்ற முயற்சிகள் தோல்வி அடைந்தன. இங்குள்ள விலங்குகளில் குறிப்பிட்ட ஒரு வித நோயைப் பறப்பும் பறவை, தேங்காய் மர நண்டுகள், சிவப்பு நண்டுகள், ஊர்வன போன்றவை உள்ளன.  ஆகவே இயற்கை  காட்சிகளைக் காண விரும்புபவர்கள் இங்கு வருகிறார்கள்.

இங்கு செல்வது எப்படி 
(Visiting Christmas Island )
பெர்த் (Perth) நகரில் இருந்து வாரம் இருமுறை செல்லும் விமான சேவை உள்ளது. கோலாலம்பூர் (Kuala Lumpur) மற்றும் சிங்கப்பூரில் (Singapore) இருந்தும் மலேஷியா விமான சேவைகள் உள்ளன.
 
இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Towns in Christmas Island )

பிளையிங் பிஷ் கோவ்- தலை நகரம்
டிரம்சைட்  
பூன்  சான்
செட்ல்மென்ட்
சில்வர்  சிட்டி 

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - ஸ்வாசிலாந்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
ஸ்வாசிலாந்
(Read original article in : Discover Swaziland)



ஸ்வாசிலாந்து காட்சி
Author: Sara Atkins (Creative Commons Attribution 2.0 Generic)

ஸ்வாசிலாந் (Swaziland ) தென் ஆப்ரிக்காவில் உள்ள சிறிய நாடு. இதன் தலைவராக ம்வாட்டி III என்ற (King Mswati III) மன்னர் உள்ளார். இந்த நாட்டின் பரப்பளவு 17,364 சதுர கிலோ மீட்டர். 2011 ஆம் ஆண்டு கணக்கின்படி இதன் ஜனத்தொகை 1.2 மில்லியன். இந்த நாட்டின் மேற்கு பக்கத்தில் தென் ஆப்ரிகாவும் (South Africa) கிழக்கில் மொசாம்பிக்கும் (Mozambique)தமது எல்லைகளைக் கொண்டு உள்ளன. இந்த நாட்டின் தலைநகரம் லோமம்பா (Lobamba ) என்றாலும் ஆளுமையின் வசதிக்காக ம்பானே என்ற (Mbabane) என்பதே இதன் துணை தலைநகரமாக உள்ளது. ஆங்கிலம் மற்றும் ஸ்வாதி மொழிகளே பேசப்படுகின்றன.

ஸ்வாசிலாந் ஹோட்டல்கள்
(Guide to Swaziland Hotels )

இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Turkmenistan) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.

ஸ்வாசிலாந் பற்றிய விவரங்கள்
(More about Swaziland )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் இரண்டு மணி நேரம் அதிகம் (UTC+2). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் லிலாங்கினி என்பது. தொலைபேசி எண் கோட் IDD +268


ஸ்வாசிலாந்தின்  பண்டைகால ஒரு வீடு

ஸ்வாசிலாந்தின் பொருளாதாரம் பலவகைப்பட்டது. 2009 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP of $2.983 பில்லியன் . இந்த நாடு லிசோதொவில் (Lesotho) உள்ள டிராகன்ஸ்பேர்க் மலைப் பகுதிகள் (Drakensberg Mountains), ஜிம்பாவே ( Zimbabwe) கென்யாவில்   மலைப் பள்ளத்தாக்குகள்  போன்ற இடங்களின் இடையே சென்று டர்கி (Turkey) நாடு வரை இந்த நாட்டின் நிலப்பரப்பு உள்ளது.  நவம்பர் முதல் மார்ச் வரை இந்த நாட்டின் தட்ப வெட்ப நிலை 20°C (68°F) வரையிலும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை   13°C (55.4°F) என்ற அளவிலும் உள்ளது.


ஒரு நடனத் திருவிழாவில் மன்னர்  ம்வாட்டி III 
Author: Amada44 (public domain)

இந்த நாட்டில்  200,000 வருடங்களுக்கு மேலாக அதாவது கற்காலம் முதல் மனிதர்கள்  இருந்து இருக்கின்றார்கள் என்று ஆதாரங்கள் கிடைத்து உள்ளன. ஒரு அளவிற்கு இந்த நாடு பிரிட்டிஷ் நாட்டின் ஆதரவுடன் இருந்தாலும் இது தென் ஆப்ரிக்க குடியரசின் கீழ் உள்ளது. 1899-1902 ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டாவது போயர் யுத்தத்தில் அங்கிருந்த  மக்களை பேரரசரான ந்வானே V என்பவர் (Ngwane V) தன்னுடைய ஆதரவில் வைத்துக் கொண்டு இருந்தார். 20 ஆம் நூற்றாண்டின் முன் பகுதியில் இந்த நாடு பிரிட்டிஷ் நாட்டின் ஆட்சியில் இருந்தாலும் அதன் பின் 06 -09 -1964 அன்று இந்த நாடு சுதந்திரம் பெற்றது.

இந்த நாட்டிற்கு  செல்ல கீழ் கண்ட நாடுகளில் உள்ளவர்கள் விசா பெறத் தேவை இல்லை:-  include the citizens of Andorra, Australia, Austria, Bahamas, Barbados, போஸ்னியா  மற்றும்  ஹெர்சகோவின , போட்ஸ்வன , பிரேசில் , கனடா , சிலி , கிரோஷியா  , ச்ய்பிருஸ்  , செக் ரிபப்ளிக் , எஸ்டோனியா , பிஜி , பின்லாந்த் , பிரான்ஸ் , கம்பியா , ஜார்கியா , ஜேர்மனி , கானா , கிரெனடா , குயான , ஹங்கேரி ,  ஐஸ்லேன்ட்  , இஸ்ரேல் , இத்தாலி , ஜமைக்கா , ஜப்பான் , கென்யா , லட்விய , லெசோத்தோ , லிதோனியா , மடகஸ்கார் , மலவி , மலேசியா , மால்டா  , மருஷயுஸ்  , மொனாகோ , மொசாம்பிக்  , மயன்மார் , நமிபியா , நவரூ  , நியூசிலாந்து , நோர்வே , பாபுவா   நியூ  கினியா , போலந்து , ரஷ்யா , சமோவா  , சான்  மரினோ , செர்பியா , செய்செல்லெஸ் , சீரற  லியோன்,  சிங்கப்பூர் , ஸ்லோவாகியா , ஸ்லோவேனியா , சாலமன்  தீவுகள் , சவுத்  ஆப்ரிக்கா , சவுத்  கொரியா , ஸ்பெயின் , ஸ்வீடன் , ஸ்விட்சர்லாந்து , தைவான் , உகண்டா , உக்ரைனே , யுனைடெட்   ஸ்டேட்ஸ் , உருகுவே  , ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே .
கீழ் கண்ட நாட்டினருக்கு அங்கு சென்றதும் விசா தரப்படுகிறது:- பெல்ஜியம் , டென்மார்க் , கிரீஸ் , ஐயர்லேன்ட்  , லக்ஸ்செம்பெர்க்  , நெதர்லாண்ட்ஸ் , போர்துகல்    மற்றும் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் உள்ளவர்கள்.

மான்சினி எனும் நகரில் இருந்து ஒரு கிலோ தொலைவில்தான் மட்சபா விமான நிலையம் {Matsapha   Airport (MTS)) உள்ளது. அங்கு சென்றுதான் நகருக்குள் செல்ல முடியும். இந்த விமான நிலையத்துக்கு  ஜோஹன்னேச்பர்க், டர்பன் மற்றும் கேப் டவுன் போன்ற இடங்களில் இருந்து இந்த நாட்டின் விமான  நிலையம் செல்ல விமான சேவைகள் உள்ளன.

இந்த நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Cities in Swaziland )
  1. ம்பபனே  -தலைநகரம்
  2. லோபம்ப  -அரசு  தலைநகரம்
  3. பிக்  பேன்ட்
  4. மன்சினி
  5. பிக்க்ஸ்  பீக் 
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Swaziland )
  1. ஹ்லனே  ராயல்  நேஷனல்  பார்க்
  2. மலோலோட்ஜா நேச்சுரல் ரிசர்வ்
  3. ம்க்ஹைய  கேம்  ரிசர்வ்
  4. மலைவுல  நேசர் ரிசர்வ்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - தாஜிகிஸ்தான்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
தாஜிகிஸ்தான்
(Read Original Article in :- 


தாஜிகிஸ்தான் மலைப் பகுதி
Author: Oleg Brovko (Creative Commons Attribution 2.0 Generic)

மத்திய ஆசியாவில் நான்கு பக்கமும் நாடுகளினால் சூழப்பட்டு உள்ள  நாடு தாஜிகிஸ்தான் (Tajikistan). இது மலைப் பிரதேசம். இதன் எல்லைகள் வடக்கில் கிரைசிஸ்தான் (Kyrgyzstan), கிழக்கில் சைனா (China ) , தென் கிழக்கில் பாகிஸ்தான் (Pakistan ) , தெற்கில் ஆப்கானிஸ்தான் ( Afghanistan ) மற்றும் மேற்கில் உஸ்பெகிஸ்தான் (Uzbekistan) போன்றவைகளுடன் உள்ளன.  இந்த நாட்டின் பரப்பளவு  143,100 சதுர கிலோ மீட்டர். நாட்டின் ஜனத்தொகை 2011 ஆண்டு கணக்கின்படி  8 மில்லியன் . இதன் தலை நகரம் மற்றும் மிகப் பெரிய நகரம் துஷான்பே ( Dushanbe).

தாஜிகிஸ்தான் ஹோட்டல்கள்
(Guide to Tajikistan Hotels )

இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Tajikistan) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.

மலைப் பகுதியில் மவுன்டினி ஏரி
தாஜிகிஸ்தானைப்  பற்றிய விவரங்கள்
(More about Tajikistan )

உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் ஐந்து மணி அதிகம் (UTC+5). வாகனங்களை வலது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் சோமோனி {Somoni (TJS)} . தொலைபேசி எண் கோட் IDD +992. மின் சக்தியின் அளவு  220V/50Hz.  தேசிய மொழி தாஜிக் (Tajik ). ஆனால் பேசுவதற்கு ரஷிய மொழியையும் பயன்படுத்துகிறார்கள்.  இந்த குடியரசு நாட்டை பிரதமரும், ஜனாதிபதியும் நிர்வாகிக்கிறார்கள்.  


கொர்ஷேனிவிகோய் மலை வழிப் பாதை    
மத்திய ஆசியாவில் கிரைஜிஸ்தானைப் போலவே இந்த நாடும் ஏழ்மை நிலையில் உள்ள நாடு ஆகும். சோவியத் ரஷியா  வீழ்ந்ததும் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையினால் இந்த நாடு முன்னேறவில்லை. ஆனால் மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டு வந்துள்ள இந்த நாட்டின் GDP  2009 ஆம் ஆண்டு கணக்கின்படி $4.982 பில்லியன் என இருந்தது.
4,000 BC வருடம் முதலே இங்கு மனிதர்கள் இருந்து உள்ளார்கள். 7 அல்லது  6  ஆம்  நூற்றாண்டு  முதல்  புத்தமதம் இங்கு இருந்திருந்தாலும், 7 ஆம் BC க்கு முன்னரே இஸ்லாமிய மதமும் இங்கு இருந்துள்ளது. 19 ஆம் நூற்றாண்டில் இந்த நாட்டை ரஷ்யர்கள் எடுத்துக் கொண்டார்கள். ரஷ்ய நாடு வீழ்ச்சி அடைந்ததும் தாஜிகிஸ்தான் நாட்டினர் விடுதலைக்காக போல்ஷிவிக் (Bolsheviks) என்ற பிரிவினருடன் சண்டைப் போட்டு தோற்றுப் போனார்கள். இதனால் 1924 ஆம் ஆண்டு தாஜிக் சோவியத் சோஷலிச குடியரசு மலர்ந்தது. 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கபட்டதும் இந்த நாடு சுதந்திரம் அடைந்தது. ஆனால் அதுவரை சோவியத் யூனியனின் ஆதரவில் இருந்து வந்த இந்த நாட்டில் உள்நாட்டுக் குழப்பங்களும்  யுத்தமும் பல பிரிவினர்களிடையே ஏற்பட்டது.  2006 ஆம் ஆண்டுவரை நீடித்து வந்த அந்த குழப்பமான நிலை மாறத் துவங்கி தற்போது நாடு முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கி உள்ளது.  


இஸ்மாயில்  சொமோனி  மோனுமென்ட் , துஷான்பே
இந்த நாட்டிற்குச் செல்ல வேண்டுமா
(Visiting Tajikistan )

இந்த நாட்டிற்கு செல்ல விசா (Visa) தேவை இல்லாத நாடுகள்: - ஆர்மேனியா, அஜெர்பைஜன் , பெலாருஸ் , ஜார்கியா , கசகஹஸ்தான்  , கிரைஜிச்தான் , மோல்டோவ , மொங்கோலியா , ரஷ்ய  மற்றும்  உக்ரைன்.  மற்ற நாட்டினருக்கு விசா தேவை. விசா கட்டணம்  US$25. அதை முன்னதாகவே பெற்றுக் கொள்ள வேண்டும். எந்த நாட்டில் தாஜிக் தூதரகங்கள் இல்லையோ அவர்கள் அங்கு சென்று விமான நிலையத்தில் அதைப் பெற்றுக் கொள்ளலாம்.
துஷான்பே விமான நிலையமே {Dushanbe Airport (DYU)) இந்த நாட்டின் நுழை வாயில். மத்திய ஆசியாவில் இருந்து சின்ன விமானங்கள் இங்கு செல்கின்றன. பிரான்க்பர்ட் (Frankfurt) மற்றும் துபாய்  போன்ற விமான நிலையங்களுக்கு செல்ல விமான சேவை உள்ளது. 

நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Towns in Tajikistan )
  1. துஷான்பே  - தலைநகரம்
  2. இஸ்பார
  3. இஷ்டரவ்ஷன் 
  4. க்ஹோர்யுக்
  5. கொனிபோடோம்
  6. குலோப்
  7. கூர்க்ஹோன்தெப்ப
  8. டுர்சுன்சாட

பார்க்க வேண்டிய இடங்கள்  
(Places of Interest in Tajikistan )
  1. பாமிர் மலைப் பகுதி 
  2. பெஞ்சிகேன்ட் சிதைவுகள்
  3. செரவ்ஷன்

யுனெஸ்கோ புராதான சின்ன மையம் 
(UNESCO World Heritage Sites in Tajikistan )
ப்ரோடோ -அர்பன்  சைட் ஆப்  சரஸ்ம்    (2010)