சான் மரினோ (San Marino ) என்பது இத்தாலிய (Italy) நாட்டினால் சூழப்பட்டு உள்ள சிறிய நாடு. இதன் பரப்பளவு 61.2 சதுர கிலோ மீட்டர். ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளான வாட்டிகன் ( Vatican City) மற்றும் மொனாகோ (Monaco) நாடுகளை விட சிறிய நாடு இது.மேலும் உலகின் மிகப் பழமையான குடியரசான இந்த நாடு AD 301 முதல் மரினஸ் (Marinus) எனும் பெயரில் இருந்துள்ளது.
சான் மரினோ ஹோட்டல்கள்
(Guide to San MarinoHotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in San marino) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
சான் மரினோ பற்றிய பிற விவரங்கள்
(More on San Marino )
வரலாற்று கதையின்படி இந்த நாட்டை அர்பியை சேர்ந்த மரினுஸ் (Marinus of Arbe) எனும் கல் உடைக்கும் நபர் AD 301 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று நிறுவினார். இதன் அரசியல் அமைப்பு சாசனம் 1600 ஆம் வருடத்தை சேர்ந்தது.
ஆல்பின் மழைப் பகுதியின் கிழக்குப் பகுதியில் இந்த நாடு அமைந்து உள்ளது. இதன் நாணயம் யுரோ, மற்றும் இத்தாலியின் பல பழக்க வழக்கங்களைக் கொண்டு உள்ளது. உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு உள்ள பொதுவான நேரத்தை விட இந்த நாட்டின் நேரம் ஒரு மணி நேரம் அதிகம் (UTC+1) . வெயில் காலத்தில் அது இரண்டு மணி நேரம் அதிகமாக உள்ளது.
2011 ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் ஜனத்தொகை 31,700 (. நாட்டின் தலை நகரம் சான் மரியோ என்பது. வாகனங்களை வலது புறம் ஓட்ட வேண்டும். தொலைபேசி எண் கோட் IDD +378. மின் விசையின் அளவு 230V/50Hz .
சான் மரியோவின் இன்னொரு காட்சி
இந்த நாட்டின் தனி நபர் வருமானம் மிகவும் அதிகமானது. 2008 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP $1.44 பில்லியன். இந்த நாடு ஐரோப்பிய யூனியனின் ஒரு அங்கத்தினர் நாடாக இல்லை என்றாலும் இதன் நாணயம் யூரோ ஆகும். மேலும் இந்த நாடு தன்னுடைய நாட்டு பாணியில் யூரோவின் நாணயத்தை வடிவமைத்துக் கொள்ள உரிமை பெற்று உள்ளது. ஆகவே இந்த நாட்டின் யூரோ நாணயம் சேர்க்கும் பழக்கமுடைய பொதுமக்கள் விரும்பும் நாணயமாக உள்ளது. யூரோ நாணயங்களைப் போலவே இந்த நாட்டின் தபால் தலைகளை இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பெரிய அளவில் வாங்கிச் செல்வதினால் இந்த நாட்டிற்கு வருமானம் ஈட்டும் ஒன்றாக உள்ளது.
இந்த நாட்டிற்கு செல்ல வேண்டுமா
(Visiting San Marino )
சான் மரினோவிற்கு செல்ல விமான சேவைகளோ இல்லை ரயில்களோ இல்லை. வாகனங்களில் சாலை வழியேதான் அங்கு செல்ல முடியும். சோதனை சாலைகளும் கிடையாது என்பதினால் இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் வாகனங்களைக் கட்டணம் இன்றி நிறுத்த முடிகின்றது.
சான் மரினோவில் பார்க்க வேண்டிய இடம்
(Places of Interest in San Marino )
சான் மரினோ அரண்மனை
யுனெஸ்கோவின் உலக புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in San Marino )
சான் மரினோ ஹிஸ்டாரிக் சென்டர்
அண்ட் மவுண்ட் டிடனோ (2008)
(Places of Interest in San Marino )
சான் மரினோ அரண்மனை
யுனெஸ்கோவின் உலக புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in San Marino )
சான் மரினோ ஹிஸ்டாரிக் சென்டர்
அண்ட் மவுண்ட் டிடனோ (2008)
No comments:
Post a Comment