சுற்றுலாப் பயணக் குறிப்புக்கள்
செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ்
( Read Original Article in :-
Discover Saint Kitts and Nevis )
(Guide to Saint Kitts and Nevis Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Saint Kitts and Nevis) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
(More about Saint Kitts and Nevis )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் நான்கு மணி நேரம் குறைவானது (UTC-4). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் கிழக்கு கரீபியன் டாலர் { East Caribbean dollar (XCD)} . தொலைபேசி எண் கோட் IDD +1-869.
பஸ்செடேர்ரே - தலை நகரம்
செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ்
( Read Original Article in :-
Discover Saint Kitts and Nevis )
ப்ரிம்ஸ்டோன் ஹில் போர்டரேஸ் , செயின்ட் கிட்ஸ்
Author: Ukexpat (Creative Commons Attribution 3.0 Unported
Author: Ukexpat (Creative Commons Attribution 3.0 Unported
செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் (Saint Kitts and Nevis) என்பது இரண்டு தீவுகளை உள்ளடக்கிய நாடு. இவை மேற்கு இண்டீஸ் என்பதின் லீவர்ட் தீவுப் பகுதியில் உள்ளன.(Leeward Islands in the West Indies). இந்த தீவு தேசங்களுக்கும் ராணி எலிசிபேத் II (Queen Elizabeth II) என்பவரே முடியாட்சித் தலைவராக உள்ளார். இந்த தீவு தேசத்தின் பரப்பளவு 261 சதுர கிலோ மீட்டர் (104 சதுர மைல் ) மற்றும் நாட்டின் ஜனத்தொகை 2011 ஆண்டு கணக்கின்படி 51,300. இந்த நாட்டின் தலை நகரம் செயின்ட் கிட்ஸ் தீவில் உள்ள பாஸ்சேட்டேரி (Basseterre) என்பது.
செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ்
ஹோட்டல்கள்(Guide to Saint Kitts and Nevis Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Saint Kitts and Nevis) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ்
பற்றிய விவரங்கள்(More about Saint Kitts and Nevis )
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் நான்கு மணி நேரம் குறைவானது (UTC-4). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் கிழக்கு கரீபியன் டாலர் { East Caribbean dollar (XCD)} . தொலைபேசி எண் கோட் IDD +1-869.
இந்த நாட்டின் பொருளாதாரம் சுற்றுலா, பிற தொழில் சாலைகள், விவசாயம் மற்றும் மின்சார விளக்குகள் செய்வது போன்றவற்றை சார்ந்து உள்ளது. அது மட்டும் அல்லாமல் கரும்பு சாகுபடியும் மேற்கு இண்டீஸ் போல பெருமளவு உள்ளது. ஆகவே இந்த தீவு தேசத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாய நிலங்களை பெரிதளவு காணலாம் .
2009 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின் GDP of $557 மில்லியன் மற்றும் தனி நபர் வருமானம் GDP $10,315. செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் தீவுகளில் முதலில் ஐரோப்பியர்கள் வருகை தருவதற்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வந்து குடியேறியவர்கள் கலினகோ (Kalinago) எனும் மலை ஜாதியினர். 1493 ஆம் ஆண்டில் இந்த தீவை கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christopher Columbus) என்பவர் கண்டு பிடித்தார். 1538 ஆம் ஆண்டு இங்கு வந்து குடியேற முயற்சி செய்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹுகினாட் (French Huguenots) என்பவர்களை ஸ்பானிஷ் (Spanish) மக்கள் முடியடித்தார்கள் .
1623 ஆண்டில்தான் இங்கு ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அப்போது பிரான்ஸ் நாட்டினரும் ஆங்கிலேயர்களும் இந்த தீவை தாக்குல் பங்கிட்டுக் கொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் 1629 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் இங்கு வந்து அந்த நாடுகளின் கூட்டு முயற்சியை முறியடித்தாலும் மீண்டும் 1713 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இந்த தீவு தேசம் விழுந்தது. ஆங்குல்லியா (Anguilla) என்ற தீவையும் சேர்த்து செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் தீவு தேசங்கள் தனியாட்சி உரிமை பெற்றாலும் ஆங்குல்லியா 1971 ஆம் ஆண்டில் இந்தக் கூட்டணி ஆட்சியில் இருந்து விலகிக் கொண்டது.
செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் நாட்டிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Saint Kitts and Nevis )
இந்த தீவு தேசத்திற்கு செல்ல விசா தேவை இல்லாத நாடுகள்:
புர்டோ ரிகோ , US வெர்ஜின் தீவுகள் , ஆஸ்திரியா , பஹ்ரைன் , பெல்ஜியம் , டென்மார்க் , எகிப்த் , பின்லாந்த் ,பிரான்ஸ் , ஜெர்மனி , கிரீஸ் , ஐஸ்லந்து , ஐரிலாந்து , இஸ்ரேல் , இத்தாலி , ஜோர்டான் , குவைத் , லிஸ்ட்டேன்ச்டீன் , மொனாகோ , நெதர்லாண்ட்ஸ் , நார்வே, ஓமன் , கத்தார் , சவுதி அரேபியா , சவுத் கொரியா , ஸ்பெயின் , ஸ்வீடன் , தைவான் , துர்கி , மற்றும் யுனைடெட் அரப் எமிரேட்ஸ் போன்றவை. யுனைடெட் ஸ்டேட்ஸ் நாட்டினர் குறைந்த பட்ஷம் ஆறு மாத விசாவிற்கு புகைப்படத்துடன் கூடிய தனது விசா படிவங்களை வாஷிங்டனில் உள்ள செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் தூதரகத்துக்கு வேண்டும். அதற்கான கட்டணம் $50 மற்றும் தபால் கட்டணமாக $5 அல்லது விரைவு தபால் கட்டணமாக $15.75 போன்றவற்றை இணைத்தே அனுப்ப வேண்டும்.
சன் ஜோன் , புர்டோ ரிகோ, மியாமி மற்றும் நியூயார்க் சிட்டி .போன்ற இடங்களில் இருந்து இந்த தீவு தேசம் செல்ல விமான சேவைகள் உள்ளன.
இந்த தீவு தேசத்தின் மிகப் பெரிய நகரம்
(Major Towns in Saint Kitts and Nevis )
(Major Towns in Saint Kitts and Nevis )
பஸ்செடேர்ரே - தலை நகரம்
யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Saint Kitts and Nevis )
(UNESCO World Heritage Sites in Saint Kitts and Nevis )
ப்ரிம்ஸ்டோன் ஹில் அரண்மனைக்
கோட்டை நேஷனல் பார்க் (1999)
No comments:
Post a Comment