சோமோவாவின் உப்பொலோ தீவின் கடற்கரை
Author: Stephen Glauser (Creative Commons Attribution 2.0 Generic)
தென்பசிபிக் கடற்கரைப் பகுதியில் உள்ள சிறிய தீவு நாடு சோமோவா (Samoa ). இந்த நாட்டின் தற்போதையப் பெயர் சுதந்திர சோமோவா குடியரசு. முதலில் இந்த தீவு தேசத்தின் பெயர் மேற்கு சோமோவா மற்றும் ஜெர்மானிய சோமோவா (Western Samoa and Germany Samoa) என இருந்தது. நாட்டின் பரப்பளவு 2,831 சதுர கிலோ மீட்டர். அமேரிகன் சோமொவாவை (American Samoa) சேர்த்து அமைந்து உள்ள தீவு தேசம் இது.
சோமோவாவின் ஹோட்டல்கள்
(Guide to Somoa Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Somoa) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
சோமோவாவின் ஹோட்டல்கள்
(Guide to Somoa Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Somoa) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.
சோமோவாவைப் பற்றிய விவரங்கள்
(More about Somoa)
இந்த நாட்டின் ஜனத்தொகை 183,000. பல தீவுகளை உள்ளடக்கி உள்ள இந்த நாட்டின் முக்கிய தீவுகள் உபொலு மற்றும் சவை (Upolu and Savai'i) என்பன. இந்த இரண்டிலும் மிகப் பெரியது சவை என்றாலும் நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 24% இங்கு வசிக்கிறார்கள். தீவு தேசத்தின் தலை நகரம் அபியா (Apia) என்பது. அது உபொலு தீவில் உள்ளது.
உபொலு தீவின் லிபாஆகா எனும் கிராமம்
Author: Stephen Glauser (Creative Commons Attribution 2.0 Generic)
உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் பதினோரு மணி நேரம் குறைவானது (UTC-11). வாகனங்களை இடது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் தலா {Tala (WST) } . தொலைபேசி எண் கோட் IDD +685.
இந்த நாட்டின் வருமானம் விவசாயம் மற்றும் மீன் பிடிக்கும் தொழிலை நம்பி உள்ளது. இங்கு தேங்காய், கோகோ, வாழைப் பழங்கள் போன்றவை பெரும் அளவில் விளைகின்றன. நாட்டின் GDP of $558 மில்லியன்.
இந்த நாட்டின் வருமானம் விவசாயம் மற்றும் மீன் பிடிக்கும் தொழிலை நம்பி உள்ளது. இங்கு தேங்காய், கோகோ, வாழைப் பழங்கள் போன்றவை பெரும் அளவில் விளைகின்றன. நாட்டின் GDP of $558 மில்லியன்.
இந்த தீவில் அடிக்கடி எரிமலை வெடிப்பு ஏற்படுகின்றன. எரிமலையின் தீப்பிழம்பினால் ஏற்படும் லவாவின் மைதானம் வழியேதான் சாலை அமைந்து உள்ளது. இங்குள்ள மிக யுரரமான மலையின் அளவு 1,858 மீட்டர் (6,096 ft). அது சவை தீவின் மத்தியில் உள்ளது.
சோமோவாவின் சீதோஷ்ண நிலை வருடம் முழுவதும் ஒரே சீராக உள்ளது. வெப்ப நிலை 23°C முதல் 30°C (73°F-86°F) வரை உள்ளது . ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் மழையாக உள்ளது.
சோமோவா கடந்த 3000 வருடங்களாக மனிதர்கள் வாழ்ந்துள்ள இடமாக உள்ளது. 1722 ஆம் ஆண்டு இங்கு வந்த முதல் ஐரோப்பியர் டச் நாட்டை சேர்ந்த ஜெகப் ரகேவீன் (Dutchman Jacob Roggeveen ) என்பவரே. அதன் பின் பிரான்ஸ் (Frannce) நாட்டை சேர்ந்த லூயிஸ் அண்டோயின் டி பவுகேன்வெல்லி ( Louis-Antoine de Bougainville ) என்பவர் 1768 ஆம் ஆண்டு இங்கு வந்தார். இதை கடற் பயணம் செல்லும் இடம் என அழைத்தார்.
சோமோவா தீவின் ஒரு நீர்வீழ்ச்சி
Author: Neil (Creative Commons Attribution 2.0 Generic)
1830 ஆம் ஆண்டு முதல்தான் மதப் பிரசாரகர்களும் வியாபாரிகளும் இந்த தீவு தேசத்திற்கு வந்தார்கள். மதப் பிரச்சாரத்தை லண்டனை சேர்ந்த ஜான் வில்லியம்ஸ் என்பவர் துவக்கினார். 20 ஆம் நூற்றாண்டில் இந்த தேசத்தை அமேரிகம் சோமோவா மற்றும் ஜெர்மன் சோமோவா என பிரித்தார்கள்.
இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஜெர்மன் சோமோவாவை நியூசிலாந் வசம் வந்தது (New Zealand). அவர்கள் வசம் இந்த தீவு தேசம் இருந்தபோது இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1918 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏழாம் தேதியன்று எந்தவிதமான தொற்றுநோய் தடுப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் வந்த ஆக்லாந் (Auckland) நாட்டை சேர்ந்த SS துலுனி எனும் கப்பலை தரை இறங்க சம்மதித்ததினால் இந்த தீவில் அந்த நாட்டில் இருந்து வந்த நோய் தாக்கியதில் இந்த தீவு தேசத்தின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் உயிர் இழந்தார்கள்.
அது போல 1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதியன்று நியூசிலாந்து நாட்டு ஆட்சிக்கு எதிராக அமைதியாக வந்த போராட்ட வீரர்களை துப்பாக்கி சூடு நடத்தி அடக்கியதில் பத்து பேர் உயிர் இழந்தார்கள், ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தார்கள். அதன் பின் 1962 ஆம் ஆண்டு ஜனவர் மாதம் முதல் தேதியன்று இந்த தீவு தேசம் சுதந்திரம் பெற்றது. 2002 ஆம் ஆண்டு இந்த தீவு தேசத்துக்கு விஜயம் செய்த நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஹெலன் கிளார்க் (New Zealand prime minister Helen Clark ) நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்தார்.
அபியா சோமோவா ஆலயம்
இந்த தீவு தேசம் தனது பெயரை மேற்கு சோமோவா என்பதில் இருந்து சோமோவா என மாற்றிக் கொண்டபோது அமெரிகன் சோமோவா அதற்கு எதிர்ப்பை தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி முதல் இந்த நாட்டின் சாலைகளில் வாகனங்களை இடதுபுறமாக செலுத்த வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்து தன்னுடைய தொடர்ப்புக்களை நியூசிலாந்து நாட்டுடன் மேலும் பெருக்கிக் கொண்டது.
சோமோவாவிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Samoa ) சோமோவாவிற்கு செல்ல வேண்டும் எனில் அங்குள்ள அபியா (Apia) நகரின் கிழக்கில் உள்ள பாகால்லி {Fagalii Airport (FGI)} எனும் விமான நிலையத்துக்கே செல்ல வேண்டும். இங்கு செல்ல பொலிநீஷியன் ஏர்லைன்ச்ஸ், ஏர் நியூசிலாந், பொலிநீஷியன் ப்ளூ மற்றும் ஏர் பசுபிக் (Polynesian Airlines, Air New Zealand, Polynesian Blue and Air Pacific) போன்றவற்றின் விமான சேவைகள் உள்ளன. ஆக்லாந்து , பிரிஸ்பேன் , மெல்பெர்ன் , சிட்னி மற்றும் டவுன்ஸ்வில்லே போன்ற இடங்களில் இருந்து விமான சேவைகள் உள்ளன.
அபியா
நாட்டின் பெரிய நகரம்
(Major Towns in Somoa )
(Major Towns in Somoa )
அபியா
No comments:
Post a Comment