துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, January 3, 2012

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - சயோ டோமி அண்ட் ப்ரின்ஸ்சிப்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
சயோ டோமி அண்ட் ப்ரின்ஸ்சிப்
(Read Original Article in :-



சயோ டோமி  கடற்கரைப் பகுதி
Author: jmaximo (Creative Commons Attribution 2.0 Generic)

சயோ டோமி அண்ட் ப்ரின்ஸ்சிப் (São Tomé and Príncipe)  என்பது மத்திய ஆப்ரிக்காவில் கல்ப் ஆப் கௌனியாவில் (Gulf of Guinea) உள்ள தீவு  தேசம். இது இரண்டு தீவுகளை உள்ளடக்கியது.   அவை  சயோ டோமி  மற்றும்  ப்ரின்ஸ்சிப்  என்பன.  இரண்டு தீவுகளின் பரப்பளவும் 1,001 சதுர கிலோ மீட்டர்.  அவை இரண்டும் 140 கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ளன.  கபான் (Gabon) கடற்கரையில் இருந்து  250 மற்றும்  225 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டும் உள்ளன. இந்த நாட்டின் தலை நகரமும்  சயோ டோமியில் உள்ள சயோ டோமி  என்ற நகரமே.

சயோ டோமி அண்ட் ப்ரின்ஸ்சிப் ஹோட்டல்கள்
(Guide to Sao Tome and Principe Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (Hotels in Sao Tome and Principe) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.

சயோ டோமி அண்ட் ப்ரின்ஸ்சிப் பற்றிய பிற விவரங்கள்
(More on São Tomé and Príncipe )

இந்த நாட்டின் ஜனத்தொகை 163,000. ஜனத்தொகை பிரகாரம் இந்த நாடு சிசேசலஸ் நாட்டை விட சிறியது. மேலும் பிரிட்டிஷ் கடல்கடந்த நாடுகள், அமெரிக்காவின் ஆதரவு பெற்ற நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரவணைப்பில் உள்ள நாடுகள் என அனைத்தையும் விட சிறியது மட்டும் அல்ல போர்த்துகேசிய மொழி பேசும் நாடுகளில் கூட இது மிகவும் சிறிய நாடுதான். 

சயோ டோமியில் அரசர் அரண்மனை
Author: Henryk Kotowski (Creative Commons Attribution 3.0 Unported)

சயோ டோமி அண்ட் ப்ரின்ஸ்சிப் என்ற இந்த குடியரசில் நாட்டில் பிரதமர் மற்றும்  ஜனாதிபதி என இரண்டு தலைவர்களுமே உள்ளனர். இந்த நாட்டின் நேரமும் உலக நாடுகள் ஒப்புக் கொண்டு உள்ள பொதுவான நேரத்தைக் (UTC +0) கொண்டதே. சாலையில் வாகனங்களை வலது புறம் ஓட்ட வேண்டும்.  மின்சக்தியின் அளவு 220V/50Hz.

நில நடுக்கோட்டின் (Equator) வடக்குப் பகுதியில் இந்த நாடு அமைந்து உள்ளது.  சரியாகக் கூறினால் சயோ டோமி அண்ட் ப்ரின்ஸ்சிப்பின்  அகஷரேகை 0°20' என்பது . இந்த நாட்டின் சீதோஷ்ண நிலை  வெப்ப மண்டலப் பகுதிக்கே உரிய  வகையில் உள்ளது. இதன் தட்ப வெட்ப நிலை சாதாரணமாக  27°C (80.6°F) என்ற அளவில் உள்ளது. அக்டோபர் முதல் மே மாதம் (October to May) வரை மழைக் காலம்.  இந்த நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி உள்ளது.  இதன் முக்கிய ஏற்றுமதிப் பொருள் கோகோ (Cocoa).  2009 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்த நாட்டின்  GDP of $191 மில்லியன் , தனி நபர் வருமான GDP of $1,174. 


ல்ஹியூ  டஸ்  ரோல்ஸ்சில்  பிரியா  டி   சாண்டோ  அன்டோனியோ  
1470 ஆம் ஆண்டு  போர்த்துகீசியர் வரும்வரை இதில் யாரும் வசிக்கவில்லை.21-12-1471 அன்று சயோ டோமி   கண்டுபிடிக்கப்பட்டது.  17-01- 1472 வில் ப்ரின்ஸ்சிப் கண்டு பிடிக்கப்பட்டது.  முதலில்  ப்ரின்ஸ்சிப்பின்  பெயர் சந்தா அன்டயோன் என இருந்தது. 1502 ஆம் ஆண்டே அதன் பெயர் மாற்றப்பட்டது.
1493 ஆம் ஆண்டுதான் இங்கு குடியேற்றம் துவங்கியது.  இங்கு இருந்த எரிமலை பிழம்பு (Volcanic) போன்ற மணல் கரும்பு சாகுபடிக்கு (Sugar Cane) ஏற்றதாக இருந்தது.  அதனால் இங்கு நிறைய சக்கரை தொழில்சாலைகள் தோன்ற ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து அடிமைகள் வரவழைகப்பட்டார்கள்.  19 ஆம் நூற்றாண்டுகளில் காபி மற்றும் கோகோ (Coffee and Cocoa) போன்றவை பயிரிடப்பட்டன. அவையே இன்று இந்த நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை ஆகிவிட்டன.

சயோ டோமி அண்ட் ப்ரின்ஸ்சிப்பின் நில நடுக் கோடு
Author: © Husond

இந்த நாடு 1975 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி போர்த்துகீச நாட்டில் இருந்து விடுதலை பெற்றது.  1990 ஆம் ஆண்டு வரை ஒரு கட்சி ஆட்சி மட்டுமே  இருந்த இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை மாற்றி எதிர் கட்சிகளும் செயல்பட அனுமதித்தார்கள்.  இந்த நாட்டின் ஆட்சி ஜனநாயக நெறி முறையைக் கொண்டது என்றாலும் அதைக் கவிழ்க்க பல  முயற்சிகள் நடைபெற்றன.
சயோ டோமி அண்ட் ப்ரின்ஸ்சிப் நாட்டிற்குச் செல்ல வேண்டும் எனில் முதலில் விசா (Visa) பெற வேண்டும். ஆனால் முதலிலேயே அந்த நாட்டு தூதரகத்துடன் தொடர்புக் கொண்டு அனுமதி பெற்று இருந்தால்  அந்த நாட்டிற்கு  சென்று விசாவை பெறலாம்.  இந்த நாட்டிற்குச் செல்ல லிஸ்பனில் இருந்து வாரம் இருமுறை சயோ டோமிக்கு செல்லும் போர்த்துகேசிய விமான சேவை உள்ளது.

இந்த நாட்டின் பெரிய நகரங்கள்
(Major Cities in São Tomé and Príncipe )
  1. சயோ டோமி
  2. சந்தா அன்டோனியோ

No comments:

Post a Comment