துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Tuesday, December 27, 2011

சுற்றுலா பயணக் குறிப்புக்கள் - துர்க்மேனிஸ்தான்

சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
துர்க்மேனிஸ்தான்
( Read Original Article in :-Turkmenistan Travel Guide )
 

அஷ்கபட் , துர்க்மெனிஸ்தான்
Author: Thepulin (public domain)

துர்க்மெனிஸ்தான் (Turkmenistan) மத்திய ஆசியாவில் மிகப் பெரியதும், அதிக ஜனத்தொகையைக் கொண்டதுமான  நாடு.  இந்த நாட்டின் பரப்பளவு  488,100 சதுர கிலோ மீட்டர். இதன் ஜனத்தொகை  5.1 மில்லியன் .  நாட்டின் தலை நகரம் அஷ்கபட் (Ashgabat).
முதலில் சோவியத் யுனியனுடன் இணைந்து இருந்த இந்த நாடு 1991 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது.  இதன் எல்லைகள் வட மேற்கில் காசஹஸ்தானுடனும் (Kazakhstan)  வடக்கில் உஸ்பெகிஸ்தானுடனும் ( Uzbekistan ), தென் கிழக்கில் ஆப்கானிஸ்தானுடனும் (Afghanistan ) தெற்கில் இரானுடனும் (Iran ) உள்ளன.


சுல்தான்  டேகேஷ்  மசோலம்  கொன்யி  உர்கிச் 

துர்க்மெனிஸ்தான் ஹோட்டல்கள்
(
Guide to Turkmenistan Hotels )
இங்குள்ள ஹோட்டல்களின் (hotels in Turkmenistan) விவரங்கள், விலாசம், எப்படி செல்வது, தொலைபேசி எண், கட்டணம் போன்றவற்றை அறிந்து கொண்டு அதில் பதிவு செய்துகொள்ள இதன் மீது கிளிக் செய்யவும்.

துர்க்மெனிஸ்தானைப் பற்றிய விவரங்கள்
(More about Turkmenistan )

உலக நாடுகளின் பொதுவான நேரத்தைவிட இந்த நாட்டின் நேரம் ஐந்து மணி அதிகம் (UTC+5). வாகனங்களை வலது புறமாக ஓட்ட வேண்டும். இந்த நாட்டின் நாணயம் துர்க்மென் நியூ மினாட் {Turkmen new manat (TMT)} . தொலைபேசி எண் கோட் IDD +993.


குறளுக்  திமுர்  மினரெட் 

துர்க்மெனிஸ்தான் ஜனாதிபதி ஆட்சி முறையில் உள்ள நாடு என்பது கூறப்படும் செய்தி என்றாலும் அங்கு எதேச்சிகார அரசே உள்ளது. 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதிவரை இந்த நாட்டை சாகும்வரை ஆளும் உரிமையை எடுத்துக் கொண்ட சபர் முராட் நியசோவ் (Saparmurat Niyazov) என்பவரே ஆண்டு வந்தார்.  அதன் பின் 2007 ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம் 11 ஆம் தேதியன்று குர்பன்குலி  பெர்டிமுகமேடோவ் ( Gurbanguly Berdymukhammedov) என்பவர் பதவி ஏற்றார். 
துர்க்மெனிஸ்தான்  வட கொரியாவைப் போன்ற ஆட்சியைக் கொண்டு உள்ளது. இங்குள்ள ஆட்சியாளர் தன்னை தானே பெருமைபடுத்திக் கொள்பவர். அவருடைய சிலைகள் சாலை முழுவதும் வைக்கப்பட்டு இருக்கும். அவரை எதிர்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.  தற்போது உள்ள ஆட்சியாளர் முந்தய ஆட்சியாளரின் தற்பெருமை நிலையை மாற்றி அமைக்கும் பணியில் மெல்ல மெல்ல ஈடுபடுகிறார்.
இங்கு செல்ல துர்க்மெனிஸ்தான் விமான சேவை உள்ளது. பிரான்கபர்ட்டில்  இருந்து லுப்தான்ஸா  விமான சேவையும் லண்டனில் இருந்து துர்க்மெனிஸ்தான் விமான சேவையும் அஷ்கபாத் வரை உள்ளன.
இந்த நாட்டிற்குள் நுழையும் முன் விசாவை (Visa) பெற்று இருக்க வேண்டும். அதற்கான ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம் $12 . டிப்தீரியா , ஹெபடிடிஸ்  A மற்றும்  B, மீச்லஸ் , மும்ப்ஸ் , போலயோ , ருபெல்ல , டெடனஸ் , மற்றும்  வரிசெல்ல போன்ற வியாதிகளுக்கான வாக்சிநேஷன் செய்து அதற்கான சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்.


டர்வாசா  பிளமிங்  கிரேடர்

இந்த நாட்டின் முக்கிய நகரங்கள்
(Major Cities in turkmenisthaan)
  1. அஷ்கபட் - தலைநகர்
  2. பல்கனபட்
  3. டசொகுஸ்
  4. துர்க்மேனபட்
  5. துர்க்மேன்பஷி
பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Turkmenistan)
  1. அல்டின் தேபே
  2. அனவ்
  3. டார்வ்சா பிளமிங் கிரேடர்
  4. கோனூர் தேபே
  5. ஜெயடுன்
  6. காவ் அட் அனடர்கிரவுண்ட் சுல்புர் லேக்
  7. மேர்வ்
  8. நமஸ்க தப்பே
  9. நிஸ்ஸ

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Turkmenistan)
  1. ஸ்டேட் ஹிஸ்டாரிகல் அண்ட் கல்டுரல் பார்க் "ஏன்ஸியன்ட் மேர்வ் " (1999)
  2. குன்யா -உர்ஜென்ச் (2005)
  3. பார்த்தியன் போர்தரேஸ் ஆப் நிஷா (2007)

No comments:

Post a Comment