துவக்க உரை
'உலகச் சுற்றுலா குறிப்பு'க்களை 'திமோதி தே' என்பவர் ஆங்கிலத்தில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். நீங்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து உலக நகரங்கள், அங்கு சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றின் தகவல்களை பற்றித் தெரிந்து கொள்ளலாம். சிறிய நகரங்கள் முதல் மிகச் சிறிய குக்கிராமம் வரை அனைத்து இடங்களைப் பற்றிய தகவல்களையும் அவர் முடிந்த அளவு உலகச் சுற்றுலா குறிப்பில் தந்து உள்ளார். 'திமோதி தே
' கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமிழ் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் அவருடைய கட்டுரைகளை தமிழாக்கம் செய்து 17.7.2011 முதல் அவற்றை வெளியிடத் துவங்கி உள்ளேன் ---சாந்திப்பிரியா

This is Tamil version of Timothy Tye's ''My World Travel Guides'' meant to guide people traveling around the world. Timothy Tye's original articles in English can be read by visiting his website http://www.my-world-travelguides.com/
Since the contents are only translated from Timothy Tye's original 'My world Travel Guides' into Tamil, Santhipriya is not responsible for authenticity of the contents.


Read hundreds of other articles written by me (Santhipriya) in the following websites
http://santhipriyaspages.blogspot.com/
http://shirdisaibabatamilstories.blogspot.com/
http://www.durkadevi.com/Shanthipriya Articles
http://mahavamsa.org/mahavamsa/mahavamsam/
http://murugan.org/tamil.htm
http://www.davidgodman.org/sitetranslations.shtml
http://villagegods.blogspot.com/
(In village Gods See Tamil version in comments under each article )


Saturday, August 27, 2011

போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா -சுற்றுலா பயணக் குறிப்புகள்

போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா
சுற்றுலா பயணக் குறிப்புகள் 
(Read Original Article in :- Bosnia and Herzegovina) 



திரேபின்ஸ்சிக்கா நதி   
Author: Marijan (public domain)
'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' (Bosnia and Herzegovina) என்பது தென் ஐரோபியப் பகுதியின் நாடு (Southern Europe).  இதன் பரப்பளவு  51,209 சதுர கிலோ மீட்டர் (19,772 சதுர மைல்). இந்த நாட்டின் எல்லைகள் வடக்கில் 'க்ரோஷியா' (Croatia), தெற்கு மற்றும் மேற்கில் 'செர்பியா' (Serbia ), தென்கிழக்கில் 'மோண்டினேக்ரோ' (Montenegro) என்ற நாடுகளுடன் உள்ளன.  இந்த நாடு பிற நாடுகள் மற்றும் மாவட்டங்களால் சூழப்பட்ட நிலப் பரப்பாகவே (Landlocked) உள்ளது.  ஆனால் சுமார் 26 கிலோமீட்டர் நிலப்பரப்பான 'நியும்' (Neum) எனும் பகுதியில்  மட்டும் 'ஆர்டியாற்றிக் ' கடற்கரை (Adriatic Sea)  உள்ளது.  
'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' நாட்டின் நிலங்கள் மலை அடிவார சறுக்கு அல்லது இறங்கு முகப்  பகுதிகளிலேயே உள்ளது என்றாலும் சில இடங்கள் மட்டும் தட்டையான (Flat) நிலப்பரப்பாக உள்ளது. இங்குள்ள தெற்குப் பகுதிகளின் சீதோஷ்ண நிலை மத்திய தரைக் கடல் (Mediterranean) பகுதிகளில் உள்ள சீதோஷ்ண நிலையை ஓத்து உள்ளது என்றாலும் மற்ற இடங்கள் ஆசியாவின் மற்ற துணைக் கண்டங்களில்  (Continental) உள்ள சீதோஷ்ண நிலையிலேயே உள்ளது. இந்த நாட்டின் ஜனத்தொகை 4.7 மில்லியன்  (2011 ஆண்டின் கணக்கின்படி ). சுமார் 48 % மக்கள் 'போஸ்னியாக்'(Bosniak) என்ற பிரிவினர், மற்ற  37 % மக்கள் 'க்ரோட்ஸ்' (Croats ) என்பவர்கள். நாட்டின் தலை நகரம் 'சரஜீவோ' (Sarajevo).
மோஸ்தர் ஓல்ட் டவுன்  காட்சி
Author: Ramirez (Creative Commons Attribution 3.0 Unported)

உலக நாடுகளின் பொதுவான நேரத்தை (Coordinated Universal Time) விட வெயில் காலத்தில் இரண்டு மணி நேரம் கூடுதலாகவும், பிற காலத்தில் ஒரு மணி நேரம் கூடுதலாகவும் இந்த  நாட்டின் நேரம் அமைந்து உள்ளது.  இந்த நாட்டின் அதிகாரபூர்வமான நாணயம் 'கன்வேர்டபில் மார்க்' (Convertible Mark). சாலையின் வலதுபுறமே வண்டிகளை ஓட்ட வேண்டும்.  2011 ஆண்டு கணக்கின்படி நாட்டின் GDP என்பது  $18.3 பில்லியன், தனி நபர் வருமானம் $8,450 . சர்வதேச தொலைபேசி எண் கோட் +387.
பஞ்சா லுகாவில்  உள்ள ஆர்த்தடாக்ஸ் சர்ச்
Author: Rade Nagraisalović (Creative Commons Attribution 3.0 Unported)


'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா'  நாடு மிகவும் சிக்கலான அரசியல் நிலையில் அமைந்துள்ள இரண்டு தனித்தன்மை (two separate entities) வாய்ந்த ஆனால் ஒன்றிணைந்த கூட்டாட்சி குடியரசு நாடுகளில் (Federal republic) ஒன்றாகும். இந்த இரண்டு கூட்டு நாட்டின் மொத்த  நிலப்பரப்பில் 51 சதவிகித நிலப்பரப்பில்  'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' அமைந்து இருக்க 49 சதவிகித நிலப்பரப்பில் 'ரிபப்ளிகா ஸ்ரப்ச்க' (Republika Srpska) என்ற குடியரசு அமைந்துள்ளது.
புதிய கற்காலம் முதல் (Neolithic age) இங்கு மனிதர்கள் வாழத் துவங்கினார்கள். AD 9 ஆம் நூற்றாண்டில் ரோம மன்னர்கள் (Roman Empire) இங்கு ஆட்சி செய்தார்கள்.  9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் இந்த கூட்டாட்சி குடியரசான  'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' வில் இருந்து செர்பியா (Serbia) மற்றும் 'க்ரோஷியா'(Croatia) என்ற இரண்டு நாடுகளும் வெளியேறின. இடையில் 'ஓத்தமான்ஸ்' (Ottomans) என்ற பிரிவினர்  'போஸ்னியா'வின் மீது படை எடுத்து அதைக் கைப்பற்றி  1463 முதல்  1878 வரை ஆண்டார்கள்.  அதன் பின் இந்த நாட்டை 'ஆஸ்ட்ரோ ஹங்கேரியர்கள்' (Austro-Hungarian) என்பவர்கள் ஆண்டார்கள்.
1914 ஆம்  ஆண்டு ஜூன் (June) மாதம் 28 ஆம் தேதியன்று   'ஆஸ்ட்ரோ ஹங்கேரிய' நாட்டு இளவரசரான 'அர்ச்டியூக் பிரான்க் பெர்டினன்ட்' என்பவர் 'சரஜிவோவில்' கொல்லப்பட்டபோது முதலாம் உலக யுத்தம் (World War I) துவங்கியது. ஆனால் அந்த யுத்தத்தினால் இந்த நாட்டிற்கு எந்த விதமான சேதமும்  எற்படவில்லை. அந்த யுத்தம் முடிந்தப் பின் 'செர்பியா' (Serbia) , 'க்ரோஷியா' மற்றும்  'ஸ்லோவானியர்கள்' (Slovens) மூவரும்
'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா'  நாட்டுடன் ஒன்றிணைந்து  'யுகோஸ்லாவியா' (Yugoslavia)  என்ற புதிய நாட்டை தோற்றுவித்தார்கள் (to form Yugoslavia). ஆனால் நடந்து முடிந்த இரண்டாம் உலக யுத்தத்தின் (World War II) போது  'யுகோஸ்லாவியா'வை நாசி (Nazi) படையினர் பிடித்துக் கொண்டார்கள். 'போஸ்னியாவை' 'க்ரோஷியா'(Croatia) நாட்டுடன் இணைத்தார்கள். 
ஆனால் இரண்டாம் உலக யுத்தம் (World War II) நடந்து முடிந்தப்  பின்னர் மீண்டும் 'யுகோஸ்லாவியா' சோஷியலிச கூட்டாட்சி குடியரசு நாடு (Socialist Federal Republic of Yugoslavia) என்பது ஆறு நாடுகளை உள்ளடக்கிக் கொண்டு உருவாயிற்று.  மீண்டும் அந்த நாட்டின் பிரதமரான 'டிடோ' (Tito) என்பவர் மரணம் அடைய மற்றும் சோவியத் யூனியனின் (Soviet Union) வீழ்ச்சி போன்றவை   'யுகோஸ்லாவியா'  என்ற நாட்டு அமைப்பை  சிதறிப் போகச் (disintegration) செய்தது. அதில் இருந்து 'க்ரோஷியா'(Croatia) மற்றும் 'ஸ்லோவேனியா' (Slovenia) நாடுகள் வெளியேறி சுதந்திரப் பிரகடனம்  (declared Independence) செய்து கொண்டன. ஆனால் 'போஸ்னியா'விலோ மூன்று பிரிவு மக்கள் அடங்கிய ஆட்சியில்  இருந்து 'செர்ப் ஜனநாயகக் கட்சி' (Serb Democratic Party) மட்டும் வெளியேறி 'ரிபப்ளிகா ஸ்ரப்ச்க' (Republika Srpska) என்ற நாடு ஒன்று சேருவதற்கு  முன்னோடியாக 'செர்பியன் குடியரசு போஸ்னிய மற்றும் ஹெர்சிகோவினா' (Serbian Republic of Bosnia and Herzegovina) என்ற நாட்டை  1992 ஆம் ஆண்டு ஜனவரி (Januvary) மாதம் 9 ஆம் தேதியன்று  நிறுவினார்கள்.
இக்மான் ஸ்கை மலை சரிவுப் பகுதி   Author: Xe0us (Creative Commons Attribution 3.0 Unported)

'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா' நாடு 1992 95 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டுக் கலவரத்தை (civil war) சந்தித்தது.  'ஸ்ரேப்ரினிகா' எனும் இடத்தில் நடந்த 'செர்பியர்கள்' அல்லாதோரை விரட்டும் வகையில் நடந்தப்  படுகொலையில் 8000 'போஸ்னிய' இளைஞ்சர்களும் பிற  மக்களும்  கொல்லப்பட்டார்கள். அதனால் 'நேடோ' (Nato) பன்னாட்டுப் படையினர் மற்றும் 'க்ரோஷியா', 'போஸ்னிய' படையினர் நடத்திய தாக்குதலினால் 'செர்பியர்கள்' பின் வாங்கி ஓடி பேச்சுவார்த்தைக்கு (negotiations) தயார் ஆயினர்.
1995 ஆம் ஆண்டு 'ஓஹியோ' (Ohio) நாட்டின் 'டேடன்' (Dayton) என்ற நகரில்  1995 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் 14 ஆம் தேதியன்று ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தில்  'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா'வை சேர்ந்த 'அலிசா இசைட்பிகோவிக்' (Alija Izetbegović) , 'க்ரோஷியா'வை சேர்ந்த 'பரஞ்சோ டுட்மன்' (Franjo Tuđman) மற்றும் 'செர்பியாவை' சேர்ந்த 'ஸ்லோபோடன் மிலோசெவிக்' (Slobodan Milošević) போன்ற மூன்று நாட்டின் ஜனாதிபதிகளும் கையெழுத்து இட்டார்கள்.  அதற்கிடையில் சுமார் 100,000 பேர்கள் மாண்டுவிட்ட அந்த உள்நாட்டு  யுத்தம் முடிவுக்கு வந்தது.  அடுத்த ஐந்து ஆண்டுகளில் போர் குற்றங்களுக்காக (war crimes) யுகோஸ்லாவியா' நாட்டினரால் (Yugoslav authorities) 'மிலோசெவிக்'   கைது செய்யப்பட்டு 'வியன்னாவுக்கு' (Vienna) கொண்டு வரப்பட்டு சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார். ஆனால் விசாரணை நடை பெற்றுக் கொண்டு இருந்த நேரத்தில்  2006 ஆம் ஆண்டு மார்ச் (March) மாதம் 11 ஆம் தேதியன்று அவர் சிறையில் மரணம் அடைந்து கிடந்ததினால் (discovered dead ) விசாரணை முற்றுப் பெறாமலேயே ( without a verdict) முடிவு அடைந்தது.   

மேலிருந்துப் பார்த்தால் தெரியும் போசிடேல்ஜ் பகுதி
Author: Mediha (Creative Commons Attribution 3.0 Unported)



'போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா'விற்குச் செல்ல வேண்டுமா
( Visiting Bosnia and Herzegovina )
'ஆஸ்திரேலியா' (Australia) , 'கனடா'(Canada), 'ஜப்பான்'(Japan), 'மலேஷியா'(Malaysia), 'நியூசிலாந்' (New Zealand), 'சிங்கப்பூர்'(Singapore), 'அமெரிக்கா' (United States), 'அல்பானியா'யைத் (Albania) தவிர பால்கன் நாடுகள் (Balcan Countries) போன்றவர்கள் இந்த நாட்டுக்கு செல்ல விசா தேவை இல்லை. அது போல 'க்ரோஷியா' (Croatia) மற்றும் 'செர்பியா' (Serbia) நாட்டை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் (Passport) கொண்டு வரத் தேவை இல்லை. அவர்களிடம் அடையாள அட்டை (ID) மட்டும் இருந்தால் போதும்.

ஜஜ்சீ நீர்வீழ்ச்சி
Author: Micki (Creative Commons Attribution 3.0 Unported)


விமானம் மூலம்
(By Plane)
இந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் என்றால் 'சரஜீவோ' விமான நிலையத்துக்கே ( Sarajevo Airport (SJJ)) முதலில் செல்ல வேண்டும். 'ஆம்ஸ்டர்டாம்' (Amsterdam), 'கொபென்ஹெகம்' ( Copenhagen), 'இஸ்தான்புல்' (Istabul), 'பிராகு' (Prague) மற்றும் 'ஸ்கொப்சே' (Skopje) போன்ற இடங்களில் இருந்து தேசிய விமான சேவை (National carrier BH Airlines) உள்ளது.  மேலும் 'க்ரோஷியா' ஏர்லயின்ஸ் (Croatia Airlines) சரஜிவோவில் இருந்து 'சாப்ரேக்' (Zabreg)  என்ற இடத்துக்கு செல்லும் விமான சேவையை வைத்து உள்ளது. அங்கிருந்து  'ப்ருச்சில்ஸ்' (Brussels), 'பிரான்க்பர்ட்' ( Frankfurt) 'லண்டன்' (London), 'முனிச்' (Munich), 'பாரிஸ்' (Paris) மற்றும் 'ஜுரிச்' (Zurich) போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்.

 
இந்த நாட்டின் பெரிய  நகரங்கள்
(Major Cities in Bosnia and Herzegovina)

(1) சரஜீவோ- தலை நகர்
(Sarajevo - capital )
(2) பஞ்சா லுகா- ரிபுப்ளிக்கா  ஸ்ரப்ச்காவின் தலை நகரம்
( Banja Luka - capital of Republika Srpska)
(3) பீகாக்
(Bihać)
(4) போஜ்னிகா
 (Fojnica)
(5) மெடுகோரே
(Međugorje)
(6) மோஸ்தர்
(Mostar)
(7) நியும்
(Neum)
(8) துஸ்லா
(Tuzla)
(9) ஜேனிகா
(Zenica)

யுனெஸ்கோ புராதான சின்ன மையங்கள்
(UNESCO World Heritage Sites in Bosnia and Herzegovina)

(1) ஓல்ட் பிரிட்ஜ் ஏரியா ஆப ஓல்ட் சிட்டி ஆப் மோஸ்தர்
{(Old Bridge Area of the Old City of Mostar (2005) }
(2) மேஹ்மத் பஸா சோகொலோவிக் பிரிட்ஜ் இன் விசிகார்ட்
{Mehmed Paša Sokolovic Bridge in Višegrad (2007) }

போஸ்னியா - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்
(Read Original Article in : Mehmed Paša Sokolovic Bridge)


மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்
Author: Julian Nitzsche (Creative Commons Attribution ShareAlike 2.5)

'மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்'  (Mehmed Paša Sokolovic Bridge) என்பது 'வைஸ்க்ராடில்' (Višegrad) உள்ள 'டிரினா' (Drina) எனும் நதி மீது அமைக்கப்பட்டுள்ள பாலம். 2007 ஆம் ஆண்டு 'நியூசிலாந்தில்' (News Zealand)  உள்ள 'கிரிஸ்ட்சர்ச்' (Christchurch) ஜூன் (June) மாதம் 23 ஆம் தேதி முதல் ஜூலை (July) மாதம் 2 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன மைய அங்கத்தினர் (World  Heritage Committee) கூடிய கூட்டத்தில் 'போஸ்னியா- ஹெர்சிகோவினா'வில் (Bosnia - Hersigovina) உள்ள இந்த மையத்தை யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக அங்கீகரித்தார்கள். 'மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்'  பாலத்தின் கட்டிடக் அமைப்பு  'ஓட்டமான்' (Ottomon) மன்னர்கள் காலத்தை சேர்ந்த பண்டைய கால அற்புதமான கட்டிடக் கலை அமைப்பை   எடுத்துக் காட்டும்  விதத்தில் இருந்ததினால் இந்த அங்கீகாரத்தைப் பெற்றது. 
மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்
Author: Aleksandar Bogicevic (Creative Commons Attribution ShareAlike 3.0)

மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்
Author: Julian Nitzsche (Creative Commons Attribution ShareAlike 3.0)
மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ் 
மையத்தில் என்ன பார்க்கலாம்
(What to See in Mehmed Paša Sokolovic Bridge)
இந்த மையத்தில் உள்ள பாலம்  12.2 ஹெக்டயர் நிலம் வெற்றிடமாக  (Buffer)  இருக்க  மொத்த  1.5 ஹெக்டயர் நிலப்பரப்பில் மேலும் கீழும் சரிந்து ஓடும் நதியின் மீது கட்டப்பட்டு உள்ளது.
கால ஓட்டத்தில் (ages) முக்கியமாக  1896 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் இரண்டு உலக யுத்தங்களினாலும் (Two World wars) 'மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ்'  எனப்படும் அந்தப் பாலம் பழுதடைந்தது (Damaged).  1950 ஆம் ஆண்டு இந்த பாலம் மீண்டும் சீரமைகப்பட்டாலும் முன்னர் அதில் காணப்பட்ட  வடிவமைப்பில்  அதிக மாற்றம் செய்யவில்லை.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)

உள்ள இடம் : N 43 46 53.2 E 19 17 16.89
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2007
பிரிவு  : கலை
தகுதி : II, IV

மேஹ்மத் பஸா சொகொலோவிக் பிரிட்ஜ் உள்ள இடத்தை
பெரிய அளவில் காண தரை படத்தின் மீது கிளிக் செய்யவும்

இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Mostar )

இந்த மையத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் சரஜிவோவில் தங்கிக் கொள்ள வேண்டும். அங்கிருந்து நீங்கள் தங்கி உள்ள ஹோட்டல் மூலமோ இல்லை தனி வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டோ அங்கு செல்லலாம். 'சரஜிவோவில்' இருந்து 'வைஸ்க்ராடுக்கு' செல்ல நிறைய பஸ்கள் உள்ளன.
போஸ்னியா -ஹீர்சிகோவினிய (Hotels in Bosnia-Herzegovina ) வில் உள்ள தாங்கும் ஹோட்டல்களைப் பற்றி அறிய அதன் மீதே கிளிக் செய்யவும். அல்லது ஹோட்டல்ஸ் வோர்ட்வைட் (hotels worldwide.) என்பதில் பார்க்கவும்.

மோஸ்ட்டர் - யுனெஸ்கோ புராதான சின்ன மையம் : மோஸ்டரின் பழைய பாலம்

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
மோஸ்டரின் பழைய பாலம்
(Read Original Article in :- Old Bridge of Mostar)



Stari Most, Mostar, Bosnia Herzegovina
ஸ்டேரி மோஸ்ட், மோஸ்டர்
Author: Mhare (Creative Commons Attribution ShareAlike 2.5)

'மோஸ்டரின்' பழைய பாலம் (Old Bridge of Mostar) என்பது 'போஸ்னியா-ஹேர்சிகோவினா'வின் (Bosnia-Herzegovina) பழைய நகரமான 'மோஸ்ட்டரின்' பண்டைய  பண்பாட்டை (Multi Cultural) எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து உள்ளது. 'நேரேட்வா' நதிக்கு (Neretva River) இடையே அமைந்துள்ள பாலம் 'ஓட்டமன்' ஆட்சிக்கு முன்னர் (Pre -Ottaman), கிழக்கு ஓட்டமன் பகுதிகள் (eastern Ottoman), மத்திய தரைக்கடல் (Mediterranean) மற்றும் கிழக்கு ஐரோப்பிய (western European) போன்ற அனைத்து இடங்களிலும் கட்டப்பட்டு உள்ள கட்டிடக் கலைகளின் தொகுப்பாக உள்ளது. இன்றைக்கு அதை 'ஸ்டேரி மோஸ்ட்' (Stari Most) அதாவது 'பழைய பாலம்' (Old Bridge) என்று அழைக்கின்றார்கள். 1557 ஆம் ஆண்டில் முதலில் அங்கிருந்த உறுதியற்ற (Unstable) உடையும் நிலையில் இருந்த மரப் பாலத்திற்கு மாற்றாக இந்த பாலத்தை 'சுலைமான்' என்ற பேரரசர் (Suleiman the Magnificent) கட்டினார்.
இதை வடிவமைத்தவர் 'ஓட்டமானை' சேர்ந்த கட்டிடக் கலைஞ்சரான 'மிமார் ஹேருட்டின்' (Mimar Hayruddin) என்பவர் ஆவார். இதைக் கட்ட ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று. நதியில் இருந்து 24 மீட்டர் உயரத்தில் (above the river) அமைந்துள்ள இந்த பாலம் 30 மீட்டர் நீளமும், நான்கு மீட்டர் அகலமும் கொண்டது .  இரண்டு முனைகளிலும் அதாவது வடகிழக்கில் 'ஹெலிபிஜா' கோபுரம் (Helebija Tower) மற்றும் தென் மேற்குப் பகுதியில் 'தாரா' என்ற கோபுரத்தையும் (Tara Tower) கட்டி பாலத்தை பலப்படுத்தி உள்ளார்கள். இந்த இரண்டு கோபுரங்களையும் பாலத்தை பாதுகாப்பவர் (bridge keepers) என்ற அர்த்தம் தரும் சொலான 'மோஸ்டாரி' (mostari) என அழைத்தார்கள். அதுவே பின்னர் 'மோஸ்ட்டர்' என ஆயிற்று.
1993 ஆம் ஆண்டு நவம்பர் (November) மாதம் ஒன்பதாம் தேதியன்று 'போஸ்னிய' கலவரத்தின் போது இந்த பாலத்தை 'க்ரோஷிய' (Crotia) பாதுகாப்புப் படையினர் நாசம் செய்தார்கள். { அந்த நேரத்தில் 'க்ரோஷியப்' படைத் தலைவராக இருந்த 'ஸ்லோபோடன் ப்ரல்ஜாக்' (Slobodan Praljak) என்பவர் பாலத்தை உடைத்த யுத்தக் குற்றத்திற்காக யுகோஸ்லாவியா (Yugoslavia) சர்வதேச நீதி மன்றத்தில் (International Criminal Tribunal) தற்போது குற்றவாளியாக நிறுத்தப்பட்டு உள்ளார்}. அங்கு யுத்தம் நின்று விட்டப் பின் அந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவும், அதனுடன் முன்னர் இருந்த பழைய பாலத்தை சீரமைக்கவும் யுனெஸ்கோ நிறுவனம் ஒரு விஞ்ஞான குழுவை அனுப்பியது. புதுப்பிக்கப்பட்ட அந்த பாலம் 2004 ஆம் ஆண்டு ஜூலை (July) மாதம் 23 ஆம் தேதியன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. ஆகவே 'தென் ஆப்ரிக்கா'வின் (South Africa) 'டர்பன்' (Durban) நகரில்  2005 ஆம் ஆண்டு ஜூலை (July) மாதம் 10 முதல் 17 ழாம் தேதிவரை கூடிய உலக புராதான சின்ன மையத்தின் அங்கத்தினர்கள் (World Heritage Committee) கூட்டத்தில் பழைய நகரமான 'மொன்ஸ்டேரை' யுனெஸ்கோ புராதான சின்ன அமைப்பாக ( UNESCO World Heritage Site) அங்கீகரித்தார்கள். மீண்டும் புதுப்பிக்கப்பட்டாலும் அந்த பழைய பாலம் தனித் தன்மை (exceptional ) கொண்டது என்றும் பலவிதமான  கலாச்சாரம், வாழ்கை முறை, மதக் கோட்பாடு போன்றவற்றைக் கொண்டவர்கள்  ஒன்று சேர்ந்து (coexistence of communities) வாழ்ந்த அந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள உலக சின்னம் (universal symbol) எனக் கருதுகிறார்கள்.
 ஸ்டேரி மோஸ்ட் எனும் மோஸ்டரின் பழைய பாலத்தைப் (Stari Most, the Old Bridge of Mostar) பற்றிய செய்தியை பூமியின் ஆவணப் படவர்ணனை (Earthdocumentary) என்ற என்னுடைய இணையதளத்திலும் காணலாம்.
Mostar Old Town Panorama
ஸ்டேரி மோஸ்ட்
பழைய மோஸ்டர் சிறு நகரம்
Author: Ramirez (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic) 

Stari Most, Mostar, Bosnia Herzegovina
ஸ்டேரி மோஸ்ட்
Author: Staff Sgt. Samuel Bendet (public domain)

Stari Most, Mostar, Bosnia Herzegovina
ஸ்டேரி மோஸ்ட்
Author: Christian Bickel (Creative Commons Attribution 2.0)

Stari Most, Mostar, Bosnia Herzegovina
ஸ்டேரி மோஸ்ட்
Author: Peccafly (public domain)

Neretva River, Mostar
நேரிட்வா நதி (31 December 2006)
© Timothy Tye using this photo

Tim at the Stari Most, Mostar
ஸ்டேரி மோஸ்ட்தில் டிம் (31 December 2006)
© Timothy Tye using this photo


உலக புராதான மைய விவரம்
(World Heritage Site Inscription Details)

உள்ள இடம் : N 43 20 53.2 E 17 48 39.3
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2005
பிரிவு : கலை
தகுதி : VI

ஸ்டேரி மோஸ்ட் உள்ள இடத்தை பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்.

இங்கு செல்ல வேண்டுமா
(Visiting Mostar )

இந்த மையத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்றால் சரஜிவோவில் தங்கிக் கொள்ள வேண்டும். அங்கிருந்து நீங்கள் தங்கி உள்ள ஹோட்டல் மூலமோ இல்லை தனி வாகனத்தை ஏற்பாடு செய்து கொண்டோ அங்கு செல்லலாம். சரஜிவோவில் இருந்து மோஸ்டருக்கு செல்ல நிறைய பஸ்கள் உள்ளன. 'க்ரோஷியாவில்' உள்ள 'ப்ளோஸ்' (Ploce) அல்லது 'துப்ரோன்விக்' (Dubrovnik) போன்ற இடங்களில் இருந்தும் அங்கு செல்லலாம்.
போஸ்னியா -ஹீர்சிகோவினிய (Hotels in Bosnia-Herzegovina ) வில் உள்ள தாங்கும் ஹோட்டல்களைப் பற்றி அறிய அதன் மீதே கிளிக் செய்யவும். அல்லது ஹோட்டல்ஸ் வோர்ட்வைட் (hotels worldwide.) என்பதில் பார்க்கவும்

Thursday, August 25, 2011

போட்ஸ்வானா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்

போட்ஸ்வானா சுற்றுலா பயணக் குறிப்புக்கள்
(Read Original article in :- Botswana ) 


போட்ஸ்வானா போப்பா பால்ஸ்

போட்ஸ்வானாவும் தென் ஆப்ரிக்காவின் (South Africa) ஒரு நாடுதான். இதன் பரப்பளவு 581,730 சதுர கிலோமீட்டர் (224,610 சதுர மைல் ). இதன் எல்லைகள் வடகிழக்கில் ஜிம்பாவே (Zimbabwe), தெற்கில் தென் ஆப்ரிக்கா (South Africa), மேற்கில் நாம்பியா (Nambia), மற்றும் வடக்கில் ஜாம்பியா (Zambia ) போன்றவற்றுடன் உள்ளன. இந்த நாட்டின் 70 % இடம் காலஹாரி (Kalahari) எனும் பாலைவனப் பகுதியாக உள்ளது.
காலஹாரி பாலைவனம்

இந்த நாட்டின் ஜனத்தொகை 2 மில்லியன் (2011 ஆண்டு கணக்கின்படி ). இதன் தலை நகரம் 'கபரோன்' (Gaborone) என்பதே.  இந்த நாட்டின் நேரம் உலக நாடுகளின் பொதுவான நேரத்தை (Coordinated Universal Time) விட இரண்டு மணி நேரம் அதிகமாக உள்ளது. நாட்டின் அதிகாரபூர்வமான நாணயம் 'புலா' {Pula (BWP)} . இந்த நாட்டின் சர்வதேச தொலைபேசி எண் கோட் +267. சாலையில் இடது பக்கமாக வண்டிகளை ஓட்ட வேண்டும். 'போட்ஸ்வானா'வில் உள்ள மக்களை 'மோட்ஸ்வானா' (Mostwana) என அழைக்கின்றார்கள். காரணம் 'போட்ஸ்வானா' என்பது பன்மைப் (Plural) பெயராம். ஆகவே 'மோட்ஸ்வானா' என்பது ஒருமைப் பெயராம்.
2010 ஆண்டின் கணக்கின்படி இந்த நாட்டின் GDP என்பது $12.5 பில்லியன் மற்றும் தனி நபர் வருமானம் $15,450. பிரிட்டிஸ் (British) அரசில் இருந்து விடுதலைப் பெற்றபோது இந்த நாட்டின் GDP என்பது $70 தாக மட்டுமே இருந்தது. அதற்குப் பின்னால் இந்த நாட்டின் வருடாந்தர வளர்ச்சி 9 % ஆக வளர்ந்து வந்துள்ளது.  இந்த நாட்டில் நல்ல முறையில் ஆட்சி (Good Governance) நடந்து வருவதே இதற்குக் காரணம்.
ஓக்கவாங்கோ ஆற்றுக் கழிவுமுக நிலம்

 'போட்ஸ்வானா'வின் பொருளாதாரம் (Economy) பராம்பரிய பழக்கமான வைரக் கற்களின் (Diamond) ஏற்றுமதி (Export) மற்றும் சுற்றுலாப் பயணிகளினால்தான் (Tourism) வளர்ந்து வந்துள்ளது.  தற்போது இந்த நாடு புதிய தொழில் நுட்ப விஞ்ஞான ஆராய்ச்சிகளும் (Innovation Technology and Research) மாற்று (Diversifying) தொழிலகங்கள் அமைப்பதிலும் முனைந்து உள்ளது.
 1885 ஆம் ஆண்டு மார்ச் மாதம் (March) 31 ஆம் தேதி முதல் பிரிட்டிஷ் அரசாங்க ஆட்சியின்  கீழ் வந்த இந்த நாட்டின் முந்தையப் பெயர்  'போட்ஸ்வானா' 'பெசுவனாலாண்ட் ப்ரோடேக்டோரேட்' (Bechuanaland Protectorate) என்பதே.  1910 ஆம் ஆண்டு 'ஒன்றுபட்ட ஐக்கிய தென் ஆப்ரிக்கா' (Union Of South Africa) அமைக்கப்பட்டவுடன் 'பெசுவனாலாண்ட் ப்ரோடேக்டோரேட்' வையும் அங்கிருந்த மக்களின் கருத்தைக் கேட்டறிந்து தென் ஆப்ரிக்க நாட்டுடன் (South Africa ) இணைத்துக் கொள்ள முயன்றார்கள். ஆனால் அதற்கு பிரிட்டிஷ்  அரசு சம்மதிக்கவில்லை. 1948 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா இன ஒதுக்கீட்டுக் கொள்கையை (Apartheid) நிறைவேற்றி குடியரசு நாடுகளின் (Commonwealth) அமைப்பில் இருந்து 1961 ஆம் ஆண்டு  வெளியேறியவுடன் (Withdrew) 'பெசுவனாலாண்ட் ப்ரோடேக்டோரேட்' டை இணைக்கும்   எண்ணம் முற்றிலுமாக தடைபட்டது.
1964 ஆம் ஆண்டு ஜூன் (June) மாதம் 'போட்ஸ்வானியா'விற்கு விடுதலை தந்து அந்த நாட்டை அவர்களே சுயமாக (self-governing) ஆளுவதற்கு வழி செய்ய முடிவெடுத்த பிரிட்டிஷ் அரசாங்கம்  முதலில் அந்த நாட்டின் தலை நகரத்தை (Capital) 'மபிகேங்' (Mafikeng) என்ற நகரில் இருந்து கபோரோன் (Gaboron) என்ற நகருக்கு மாறியது. அதன் பின்னர் 'போட்ஸ்வானாவின்' அரசியல் சாசனம் (Constitution) 1965 ஆம் ஆண்டு வரையப்பட்டு அங்கு பொது ஜனத் தேர்தலை நடத்தி முடித்து 1966 ஆம் ஆண்டு செப்டெம்பர் (September) மாதம் 30 ஆம் தேதியன்று  முதல் முழு சுதந்திரம் பெற்ற (Full Independnce) நாடாக அதை பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
சோடில்லோ மலைப் பகுதியில் பாறையில் சித்திரங்கள்

'போட்ஸ்வானா'வின் தேசிய மொழி (Official Language) ஆங்கிலம். ஆனால் உள்ளூர் மொழியான 'செட்ஸ்வானாவை' பலரும் பேசுகிறார்கள். இங்குள்ள மக்களில் 70% மக்கள்  ஆங்க்லிகன், மேதொடித்ஸ், தென் ஆப்ரிக்க ஒன்றிணைந்த கிருஸ்துவ சபையின் அங்கத்தினர்கள் போன்ற கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள்.  (Anglicans, Methodists and members of the United Congregational Church of Southern Africa).

'போட்ஸ்வானா'வுக்கு செல்ல வேண்டுமா 
(Visiting Botswana )

'ஆஸ்திரேலியா' (Australia), 'கனடா' (Canada), 'ஹாங்காங்' ( Hong Kong), 'மலேசியா' (Malaysia), 'நெதர்லாந்' (Netherlands),  'சிங்கப்பூர்' (Singapore), 'பிரிட்டன் எனும் யுனைடெட் கிங்டம்' (United Kingdom ) மற்றும் 'அமெரிக்கா எனும் யுனைடெட் ஸ்டேட்ஸ்'  (United States) போன்ற நாடுகளில் உள்ளவர்களைத் தவிர மற்ற நாட்டினருக்கு விசா தேவை.
'சிர் சிரிட்ஸ்சீ காமா சாவதேச விமான நிலையத்தில்'  {Sir Seretse Khama International Airport (GBE)} இறங்கியே 'போட்ஸ்வானாவுக்கு' செல்ல வேண்டும். இந்த விமான நிலையம்  இந்த நாட்டின் தலை நகரமான 'கபோரோன்' எனும் நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  தென் ஆப்ரிக்கா மற்றும்  'ஜிம்பாவேயில்'(Zimbabwe)  இருந்து மட்டுமே இந்த விமான நிலையத்துக்கு வருவதற்கான விமான சேவைகள் உள்ளன். 
போட்ஸ்வானாவின் வரிக் குதிரைகள்
Author: Pharaoh Hound (Creative Commons Attribution 3.0 Unported)


போட்ஸ்வானாவின் பெரிய நகரங்கள்
(Major Cities in Botswana)

(1) கபோரோன்- தலை நகரம்
(Gaborone - capital)
(2) பிரான்சிஸ்டவுன்
(Francistown)
(3) கான்ஸ்சி
(Ghanzi)
(4) க்வீடா
(Gweta)
(5) கான்யீ
(Kanye)
(6) கசானீ
(Kasane)
(7) மவுன்
(Maun)
(8) நட்டா
(Nata )
(9) சபோங்
(Tsabong)

போட்ஸ்வானாவில் பார்க்கக் கூடிய இடங்கள்
(Places of Interest in Botswana)

(1) சோபே நேஷனல் பார்க்
(Chobe National Park)
(2) காலஹாரி பாலைவனம்
(Kalahari Desert)
(3) க்காலகாடி  டிரான்ஸ்பிரான்டியர்  பார்க்
(Kgalagadi Transfrontier Park)
(4) மோரிமி நேஷனல் பார்க்
(Moremi National Park)
(5) ஓக்கவாங்கோ டெல்டா
(Okavango Delta)

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Botswana)

சோடில்லோ
(Tsodilo (2001)

போட்ஸ்வானா - யுனெஸ்கோ புராதான மையம் : சோடில்லோ

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
சோடில்லோ
(Read Original Article in :- Tsodilo)


Rock paintings of Tsodilo, Botswana
சோடிலோவில் பாறைகளில் ஓவியங்கள்
Author: Joachim Huber (Creative Commons Attribution 2.0)

இந்த உலகத்திலேயே மிக அதிக அளவிலான பாறை மீதான (Rocks) ஓவியங்கள் (Paintings) 'போட்ஸ்வானா'வில் (Botswana ) 'சோடிலோ'வில்தான் (Tsodilo) உள்ளது. 'காலஹாரி' பாலைவனப் (Kalahari Desert) பகுதியில் சுமார் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 4500 க்கும் அதிகமான ஓவியங்கள் பாறைகள் மீது வரையப்பட்டு உள்ளன். இந்த ஓவியங்கள் 100,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதில் இருந்து அப்போது இருந்திருந்த மக்களின் வாழ்கை முறையை (human activities) அறிந்து கொள்ள முடிந்தது. அந்த இடம் புனிதமானது என்றும் (Sacred site) தமது மூதையோர்களின் ஆவிகள் (ancestral spirits) உள்ள இடம் என அந்த நகர மக்கள் கருதுகிறார்கள்.
2001 ஆம் ஆண்டு டிசம்பர் (Disember) மாதம் 11 முதல் 16 ஆம் தேதிவரை நடைபெற்ற உலக புராதான சின்ன மைய அங்கத்தினர் (World Heritage Committee ) கூட்டத்தில் இந்த இடத்தை யுனெஸ்கோ புராதான சின்ன மையமாக (UNESCO World Heritage Site) அங்கீகரித்தார்கள். அங்கிருந்த ஓவியங்கள் அந்த காலத்தில் கரடுமுரடான இடங்களில் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த மக்களின் மத மற்றும் வாழ்கை நிலையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது என்பதற்காகவே சோடிலோவின் இந்த இடம் அப்படிப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றது.
'சோடில்லோவைப்' பார்க்கும் வரை ஆராய்ச்சியாளர்களுக்கு அஹ்தனை வருடங்களுக்கும் முன்னர் எந்த அளவிற்கான அளவில் ஆன்மீக நம்பிக்கைக் கொண்ட சடங்குகளை (Spiritual Rituals) மக்கள் செய்து வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. அப்படிப்பட்ட மத சடங்குகள் ஐரோப்பியாவில் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டுமே நடந்துள்ளதாக நம்பி இருந்தார்கள். ஆனால் 'சோடில்லோவில்' 70,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பாறை ஓவியத்தில் (enormous stone sculpture) மிகப் பெரிய மலைப்பாம்பின் உருவம் செதுக்கப்பட்டு இருந்ததைக் கண்டார்கள். அதைக் கண்ட பின்னரே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த மக்களும் ஓவியக் கலையில் எத்தனை உயர்வான நிலையில் (sophistication) இருந்து உள்ளார்கள் என்பது தெரிய வந்தது.
சோடில்லோ மலையில் நான்கு மலை முட்டுக்கள் உள்ளன. அவற்றில் அதிக உயரமானது 1400 மீட்டர் உயரமாக உள்ளது. அந்த மலைகளை ஆண் (Male) , பெண் (Female), குழந்தை (Child) மற்றும் பெயர் இல்லாதது (Unnamed) என்கிறார்கள். பெரும்பாலான ஓவியங்கள் பெண் மழைப் பகுதியில்தான் உள்ளது. அவற்றில் முக்கியமானவை திமிங்கிலம் (Whale), இரண்டு காண்டா மிருகங்கள் (Rhinos) மற்றும் ஒரு சிங்கம் (Lion) போன்றவை.

Rock paintings of Tsodilo, Botswana
சோடிலோவில் பாறை மீது சித்திரங்கள்
Author: Joachim Huber (Creative Commons Attribution 2.0)
Rock paintings of Tsodilo, Botswana
சோடில்லோவில் பாறை மீது சித்திரங்கள்
Author: Joachim Huber (Creative Commons Attribution 2.0)

உலக புராதான மைய விவரம்
(World Heritage Site Inscription Details)

உள்ள இடம் : S 18 45 0 E 21 43 60
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2001
பிரிவு : கலை
தகுதி : I, III, VI
இது உள்ள  இடத்தை பெரிய அளவில் பார்க்க 
தரைபடத்தின் மீது கிளிக் செய்யவும்

சோடில்லோவிற்கு செல்ல வேண்டுமா
(Visiting Tsodilo)

'ஒகவங்கோவின்' (Okavango) ஆற்று கழிமுகப் பகுதியில் 'சோடில்லோ' உள்ளது. அதைத் தவிர அங்கு 'காலஹாரி' பாலைவனப் பகுதியும் 'மக்கடிக்காடி' ஏரியும் (Makgadikgadi Lake) உள்ளது.
இந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால் 'போட்ஸ்வானா'வின் தலநகரான 'கபரோனில்' தங்கி இருக்க வேண்டும். அங்கிருந்து ஏதாவது சுற்றுலா நிறுவனத்துடன் தொடர்ப்புக் கொண்டு அவர்கள் மூலமோ அல்லது தனியாக வண்டியை ஏற்பாடு செய்து கொண்டோ அங்கு செல்லலாம். தற்போது 'கபரோனில்' சுற்றுலாப் பயணிகள் கட்டணக் குறைவான தங்கும் இடத்தை (hotel) முன் பதிவு செய்து கொள்ள மொகொலோடி பாக்பேக்கர்ஸ் (Mokolodi Backpackers) என்ற தளத்தில் தொடர்புக் கொள்ளலாம்.

அங்கு செல்வது எப்படி
(Getting there)

அங்கு செல்ல வேண்டும் எனில் 'போட்ஸ்வானா'வில் தங்கிக் கொள்ள ஹோடேல்ஸ் இன் போட்ஸ்வானா (hotels in Botswana) என்பதின் மீதோ அல்லது ஹோடேல்ஸ் வோர்ல்ட்வைட்(hotels worldwide) என்ற தளத்தின் மீதோ கிளிக் செய்து அதில் முன் பதிவு செய்து கொண்டு அதற்குப் பின்னர் அங்கு போகவும்.

Tuesday, August 23, 2011

புர்கினா பாசோ - சுற்றுப் பயண குறிப்புகள்

புர்கினா பாசோ சுற்றுப்  பயண குறிப்புகள் 
(Read Original Article in :- Burkina Faso)



புர்கினா பாசோவில் உள்ள சின்தவ் எனும் இடத்தில் இயற்கையாக
அமைந்து உள்ள கல்பாறையின் காட்சி

Author: Stefan Dressler (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

மத்திய மேற்கு ஆப்ரிக்காவில் (central-western Africa ) உள்ளதே 'புர்கினா பாசோ'  (Burkina Faso) .  இதன் எல்லை வடக்கில் 'மாலி' (Mali) , தென் கிழக்கில் 'பெனின்' (Benin) , தென் கிழக்கில் 'கோடி டெல்வோரே' (Côte d'Ivoire ) , கிழக்கில் 'நைஜெர்'  (Niger)  மற்றும் தெற்கில்  'டோகோ'  (Togo) மற்றும் 'கானா' (Ghana) போன்ற நாடுகளுடன் உள்ளன. இந்த நாட்டின் பரப்பளவு    274,200 சதுர கிலோமீட்டர்  (105,869 சதுர மைல் ) . நாட்டின் ஜனத்தொகை 15.8 மில்லியன்  (2011 கணக்கின்படி ). நாட்டின் தலை நகரம் 'ஒகாடவுகவ்' (Ouagadougou)
இந்த நாட்டை நிர்வாகிப்பது ஜனாதிபதி (President) மற்றும் பிரதம மந்திரி (Prime Minister)  ஆவர். வண்டிகளை சாலையின் வலது புறமாக ஓட்ட வேண்டும். மின்விசை அளவு 220V 50Hz , ஆனால் இங்கு ஐரோப்பிய பாணி  மின்செருகிகளைதான் (Plug) பயன்படுத்த முடியும். இந்த நாட்டின் சர்வதேச தொலைபேசி எண்  கோடு+226.  நாட்டின் நாணயம் மேற்கு ஆப்ரிக்காவின் (West African )  நாணயமான CFA (XOF) என்பதே.

டேனகவ்ரவ்  மலையில் பண்டை காலத்தைய வீடு
Author: Marco Schmidt (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

2009 ஆம் ஆண்டு கணக்கின்படி நாட்டின் GDP  $8.105 பில்லியன் , தனி நபர் வருமானம்  $1,314. தேசிய மொழி 'பிரெஞ்ச்' (French) என்றாலும் சுமார் 90 % சதவிகித மக்கள் உள்ளூர் மொழிகளையே (Indegenous Languages) பேசுகிறார்கள். 14,000 BC ஆண்டிலேயே இங்கு மனிதர்கள் இருந்து உள்ளார்கள். 16 ஆம் நூற்றாண்டில் 'வகடகோ' (Wagadogo) என்று அன்று அழைக்கப்பட்ட இன்றைய தலை நகரான 'ஒகாடவுகவ்'  மற்றும் 'யடிங்கா' ( Yatenga ) என்பதை 'மோச்சி' என்ற (Mossi) பிரிவினர் ஆண்டு வந்தார்கள். 1896 ஆம் ஆண்டு அவர்களை துரத்தி விட்டு  'பிரெஞ்ச்' நாட்டினர் இந்த  இடத்தைப் பிடித்துக் கொண்டார்கள்.
1915 -16 ஆம் ஆண்டுகளில் 'பிரெஞ்ச்' குடியேற்ற (Colonial) அரசின் எதிராக ஆயுதங்களை (Armed Revolt) ஏந்திய  புரட்சி நடந்தது. பல முறை அந்த யுத்தத்தில் 'பிரெஞ்ச்' நாட்டினர் தோல்வி அடைந்தாலும் முடிவாக அவர்களே ஆட்சியை பிடித்துக் கொண்டார்கள். 1919 ஆம் ஆண்டு 'பிரெஞ்ச்' நாட்டினரின் அதிக அதிகாரம்  கொண்ட நிர்வாகத்தை  அமைத்து  நிறுவி, வரும் காலத்தில் அப்படிப்பட்ட புரட்சிகள் எழாமல் (Future Uprising) இருக்க தேவையான அனைத்தையும் செய்தார்கள். பின்னர் 1932 ஆம் ஆண்டில் இந்த நாட்டை மூன்று பகுதிகளாக பிரித்து அவற்றை 'பிரெஞ்ச்' நாட்டை சேர்ந்த 'சூடான்'  (Sudan), 'நைஜெர்'  (Niger) மற்றும் 'கோடி டெல்வோரே'  என்ற நாடுகள் தம் நாடுகளுடன் இணைத்துக் கொண்டார்கள். 
பன்போரா நீர் வீழ்ச்சி
Author: Marco Schmidt (Creative Commons Attribution ShareAlike 2.5 Generic)

இரண்டாம் உலக யுத்தம் ( World War II) முடிந்ததும் மீண்டும் அந்த நாட்டின் அரசை  நேரடியாக 'பிரெஞ்ச்' அரசு எடுத்துக் கொண்டது. 1958 ஆம் ஆண்டு டிசம்பர் (December) மாதம் பதினோராம் (11) தேதி அதை அதிக அதிகாரம் படைத்த 'பிரெஞ்ச்' நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்கள் என்றாலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னால் அதாவது  1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் (August) மாதம் ஐந்தாம் தேதி அந்த நாடு முழு சுதந்திரம் (Independence)  அடைந்தது.  
'ஆப்ரிக்காவில்' (African Countries)  இருந்த பல நாடுகளைப் போலவே இந்த நாட்டிலும் சிறிது காலம் அரசாங்கத்தின் நிலையற்ற தன்மை (Instability) , கிளர்ச்சி (Coup) போன்றவை நடந்து கொண்டே இருந்தன. நடந்தேறிய அரசியல் கிளர்ச்சியில் 'தளபதி  சங்கரா' (Captain Sankara) என்பவர் 1983 ஆம் ஆண்டு அந்த நாட்டின் அதிகாரத்தை எடுத்துக் கொண்டார். அதன்பிறகு நடந்த கிளர்ச்சியில்  அவர் கைது செய்யப்பட்டாலும், சில மாதங்களிலேயே  மீண்டும் அவர் ஆட்சியை பிடித்தார். 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட்(August) மாதம் 4 காம் தேதியன்று அந்த நாட்டின் பெயரை 'தூய்மையானவர்கள்  உள்ள நாடு' (Land Of Honest People)  என்ற அர்த்தத்தை தரும் 'புர்கினா பாசோ' எனப் பெயரிட்டார். அதன் பின் நடைபெற்ற புரட்சியில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர்  (October) மாதம் 15 ஆம் தேதி அவர் கொல்லப்பட்டார். அவர் உடலை பல துண்டுகளாக வெட்டி (dismembered) எறிந்து  அழித்தார்கள். அவருடைய குடும்பத்தினர் தப்பி ஓடினார்கள். இன்று அந்த நாடு ஏழ்மை நிலையில் உள்ள நாடாக உள்ளது. அரசியல் ஸ்திரத் தன்மை இல்லை. ஆனாலும் இந்த நாட்டிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு  எந்தப் பிரச்சனையும் இல்லை.
இந்த நாட்டிற்குச் செல்ல விசா (Visa) தேவை. இங்கு செல்ல வேண்டும் எனில் அந்த நாட்டின் தலைநகரமான  'ஒகாடவுகவ்'வில்  உள்ள விமான நிலையத்துக்கு சென்று அங்கிருந்து ஊருக்குள் செல்லலாம். 'ஏர் புர்கினா' (Air Burkina)  என்ற தேசிய விமான சேவை நல்ல விமானங்களை இயக்குகின்றது. விமான நிலையத்தில் உள்ள இராணுவத்தினரே உங்கள் பெட்டிகளை  தூக்கிக் கொண்டு செல்ல உதவுவார்கள். அதைக் கண்டு வியப்படைய வேண்டாம். அதற்கான கட்டணமாக அவர்களுக்கு  பெட்டி ஒன்றுக்கு  US$1 பணம் தரவேண்டும்.
கோரம் கோரம் கடைவீதியில் விற்பனைக்கு
சோங்கே  எனும் மண் பானைகள்

Author: C. Hugues (Creative Commons Attribution 2.0 Generic)
 


நாட்டின் மிகப் பெரிய நகரங்கள்
(Major Cities in Burkina Faso)
(1) ஒகாடவுகவ்  -தலை நகர்
(Ouagadougou - capital)
(2) பான்பாரோ
(Banfora )
(3) போபோ டவ்லஸ்சோ
(Bobo-Dioulasso)
(4) டிடவ்கோ
(Dédougou )
(5) கவ்வா
(Gaoua)
(6) கொவ்டவ்கோ
(Koudougou)
(7) ஒவ்ஹிகவ்யா 
(Ouahigouya)

புர்கினா பாசோவில் பார்க்க வேண்டிய இடங்கள்
(Places of Interest in Burkina Faso)
(1) W நேஷனல் பார்க்
(W National Park)

யுனெஸ்கோ புராதான சின்ன மையம்
(UNESCO World Heritage Sites in Burkina Faso )
லோரோபினி சிதைவு மையம்
(Ruins of Loropéni (2009)

புர்கினா பாசோ - யுனெஸ்கோ சின்ன மையம்- லோரோபினி சிதைவுகள்

யுனெஸ்கோ புராதான சின்ன மையம் 
லோரோபினி சிதைவுகள்
(Read Original Article In :-Ruins of Loropeni) 
 

'புர்கினா பாசோ'வின் (Burkina Faso) 'லோரோபினி'யில் (Loropéni ) உள்ளது பாறைக்கல்  சிதைவுகளாகவே  (pre-colonial stone ruins) உள்ளன .  இந்த இடம் நாட்டின் தென் பகுதியில் உள்ள 'கவ்வா' (Gaoua) எனும் இடத்தில் உள்ள 'லோபியோ' (Lobi) என்றப் பகுதியில் உள்ளது.  இந்த சிதைவுகளைப் பற்றி அதிக செய்திகள் கிடைக்கவில்லை என்றாலும் இந்த சிதைவுகள் 'கான்' (kaan) என்ற இனத்தவரின் மன்னனாக (King) இருந்த 'கான் ல்யா'  (Kaan lya) என்பவரின் அரண்மனை (Palace) சுவர்கள் என்கிறார்கள்.
சின்டவ்வில் ஒரு காட்சி. ஆனால் இது லோரோபினி சிதைவுகள் அல்ல Author: Wegmann (Creative Commons Attribution 3.0 Unported)

இப்படிப்பட்ட பத்து (10) இடங்களை பாதுகாக்கப்பட்ட மையமாக ஏற்றுக் கொண்டு உள்ளார்கள். சஹாராவிற்கு அப்பால் இருந்த  வர்த்தக சாலை (Sahara trade route) இருந்தப் பகுதியில்  காணப்படுவதால்  இந்த சிதைவுகள் அங்கிருந்த தங்க சுரங்கத்தைப் (mining of gold ) பாதுகாக்கவே அமைக்கப்பட்டு இருந்த மதில் சுவராக  (Fortress) இருக்கும்  என்கிறார்கள்.14 முதல் 17 ஆம் நூற்றாண்டுவறை அங்கு கிடைத்த உலோகத்தின் அளவு  (தங்கம்) உச்சகட்டத்தை அடைந்து உலோகம் கிடைப்பது அறிதாகியதும் அந்த இடத்தைக் கைவிட்டுவிட்டுச் சென்று இருக்கலாம் என்கிறார்கள் .
ஆகவே 2009 ஆம் ஆண்டு ஜூன்  (June ) மாதம் 22 முதல் 30 ஆம் தேதிவரை கூடிய உலக  புராதான சின்ன மைய அங்கத்தினர்கள் (World Heritage Committee ) கூட்டத்தில் 'லோரோபினியை' யுனெஸ்கோ (UNESCO World Heritage Site) புராதான சின்ன மையமாக அங்கீகரித்தார்கள். இது மட்டுமே அந்த நாட்டின் யுனெஸ்கோவின்  அங்கீகாரம் பெற்ற பகுதியாக உள்ளது.
அதற்கு அங்கீகாரம் கிடைத்ததின்  காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே   தங்க உலோகம் வெட்டி எடுக்கப்பட்ட தொழில் நடந்து வந்த ஏழு நூற்றாண்டுகளும் அந்த இடம் சீரிய முறையில் பாதுகாப்பு அரண் அமைத்து பாதுகாத்து வந்து உள்ளது  என்பதே. ஆனால் இந்த மையம் ஆப்ரிக்க நாட்டின் வேறு இடங்களான 'நைஜீரியா' (Nigeria) போன்றவற்றில் உள்ள அரண் அமைத்து பாதுகாக்கப்பட்ட நகரங்களை  விட வித்யாசமானது.

உலக புராதான சின்ன மைய விவரம்
(World Heritage Site Inscription Details)

உள்ள இடம் : N 10 15 0 W 3 34 60
அங்கீகரிக்கப்பட்ட வருடம் : 2009
பிரிவு : கலை
தகுதி : III
இந்த இடம் உள்ள தரை படத்தைப் பெரிய அளவில்
பார்க்க படத்தின் மீதே கிளிக் செய்யவும்


இங்கு செல்வது எப்படி
(Visiting Ruins of Loropéni )

இந்த இடத்தை சென்றுப் பார்க்க  'கவ்வா'  நகரில்  தங்க வேண்டும். அங்கிருந்து சுற்றுலா மைய அலுவலகங்கள் எதையாவது தொடர்புக் கொண்டு அவர்கள் மூலம் இங்கு செல்லலாம் அல்லது நீங்களே வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு போகலாம்.